Skip to main content

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 6

6
தனது விஸ்தாரமான ஆக்ஸ்போர்ட் அறிவு உலகைவிட்டு முற்றிலுமாக நீங்கி குடியரசுத்துணைத்தலைவர் என்கிற கட்டுக்குள் அடங்கவேண்டுமா என்கிற தயக்கமும் அவரிடம் முதலில் ஏற்பட்டது. சிலர் ஒலிம்பிக்கில் விளையாட செல்வர்- சிலர் அதில் வர்த்தகம் செய்வர்- மற்றவர் பார்க்க செல்வர். தான் மூன்றாவது ரகம் என்றார். ராஜ்யசாபாவில் அமர்ந்து மற்றவர் பேசுவதை detached ஆக கேட்டுக்கொண்டிருப்பது சரிப்படுமா என்பதும் ஒரு காரணம். ஆனால் நேரு டெல்லியைவிட்டு துணைத்தலைவர் வெளிவந்தால் அவருக்கு பிரதமர், குடியரசுத்தலைவருக்குரிய ப்ரொடோகால் என முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.
மாஸ்கோ அனுபவங்களையும் அவர் கணக்கில்கொண்டு இந்திய ஆன்மாவை அழிக்காமல்  Liberty- economic equity- social justice என்கிற இணைப்புகொண்ட சமுக புரட்சி என  ராதாகிருஷ்ணன் வற்புறுத்தினார். அது கம்யூனிச சித்தாந்தத்தை எத்ர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகவும் விளங்கும் என்றார். நேருவால் அது சாத்தியமாகும் என்றார். நேரு நமது முன்னேற்றம் மிக மெதுவாக நகர்கிறது- அதை துரிதகதிக்கு மாற்றவேண்டும் என ஏற்கிறேன் என்றார். நேரு மறைந்த 1964வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் அவர்கள் இருவரும் நெருக்கமாக செயல்பட்டனர். அனைத்து விஷயங்களிலும் இருவருக்கும் ஒத்த நிலைப்படுகள் இருக்கவில்லை. ராதாகிருஷ்ணன் உடன்நிற்பார் என்கிற நம்பிக்கையுள்ள அம்சங்களில் நேரு அவரை கலந்து ஆலோசிப்பார். They took pleasure in each other's intellectual vitality, grace of mind and verbal skills and relished being themselves despite high office  என்பது கோபால் பார்வை.
 அவர்கள் அறிவுத்தரத்திற்கேற்ற பிறர் டெல்லியில் இல்லை என்ற உணர்வும் இருவரிடத்திலும் இருந்தது. பொதுவாக அவர்கள் இருவரையும் life enhancing persons என மற்றவர் மதித்ததாகவும் கோபால் சொல்கிறார். இருவருக்கும் இடையே நேருவின் கடைசி ஆண்டுகளில் பாசப்பிணைப்பு கூடுதலாகவே இருந்தது. இராதாகிருஷ்ணனின் வெளிப்படையான பேச்சு சிலநேரங்களில் காங்கிரசாரிடம் அதிர்வுகளை உருவாக்கியது.  The slowness of Evoultion is the cause of all revoultions   என்று அவர் பேசியபோது அவர்மீது விமர்சனம் எழுந்தது. நேரு அவரை காத்திட வரவில்லை. உணர்ச்சிவசப்பட்ட ராதாகிருஷ்ணன் தான் ராஜினாமா செய்துவிடுகிறேன் என்றார். நேரு  அவரை அழைத்து என் முன்னிலையில் எந்த விமர்சனமும் எழவில்லை என்பதை தெளிவுபடுத்தி அவரை சமாதானப்படுத்தினார்.
உள்நாட்டு பிரச்சனைகளில் அவர் பிரதமருக்கு துணையாக பலநேரங்களில் நின்றார். காஷ்மீர் பிரச்சனை சியாமாபிரசாத்- நேரு இணக்கத்திற்கு அவர் முயற்சித்தார். ஆனால் நேரு ஏற்காத நிலையில் சியாமா ஸ்ரீநகரில் மரணம்  என்கிற துக்கம் எழுந்தது. ஆந்திரா பிரச்சனை, கல்வி குறித்த முடிவுகள், கிருஷ்ணமேனன், சி டி தேஷ்முக் அமைச்சரவை சேர்ப்பு- வேறுபாடுகள் போன்றவற்றில் ராதாகிருஷ்ணன் சேவை அவசியம் என நேரு கருதினார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்த எம் சி சாக்லா போன்றவர்கள் காபினட்டில் நேரு இடம்பெற செய்யவேண்டும் என்கிற ஆலோசனையை ராதாகிருஷ்ணன் தந்தார்.
ராஜ்யசப்பவில் மணிக்கணக்காக உட்கார்வதால் தலைவலி உருவாகி அவதிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேருவிடம் 1955ல் துணைத்தலைவர் பொறுப்பையும் ராஜ்யசபா சேர்மன் பொறுப்பையும் பிரித்துவிடுங்கள் என்றார். நேரு இசைந்தாலும் அதற்கு ஏற்பு பொதுவாக இல்லாமல் போனது. சில நேரங்களில் கடுமையான காய்ச்சல் இருந்தபோதும் அவர் ராஜ்யசபா விவாதங்களை முறைப்படுத்த அமரவேண்டிய நிலை இருந்தது. சில நேரங்களில் தான் பாரபட்சமற்றவன், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என்கிற வகையில் நிருபிக்கும் நிலை ஏற்பட்டது, பிரதமர் உரையைக்கூட அவைக்குறிப்பிலிருந்து நீக்க அவர் தயங்கவில்லை. நாடாளுமன்ற லோக்சபாவின் நடைமுறையிலிருந்து மாறி எதிர்கட்சியினரையும் அவர் தலைமை தாங்கிட வழிவகுத்தார்.
அவர் மேற்கு நாடுகள் ருஷ்யாவை ஒழித்திட ஹிட்லர் பாணியை கையாள்வதாக சாடியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. லூயி பிஷர் சோவியத் இம்பீரியலிசம்தான் ஹிட்லரிசம் என பதிலடி தந்தார். ஸ்டாலின் மறைவின்போது மார்ச் 1953ல் ராஜ்யசபவில் அவர் ஸ்டாலின் நினைவை பகிர்ந்தபோது வலதுசாரி நண்பர்கள் அதை ரசிக்கவில்லை. அவர் கம்யூனிசத்தின் பக்கம் இழுக்கப்பட்டுவிட்டார் என சந்தேகப்பட்டனர். 1955ல் அவரது இரு படைப்புகளான  Recovery of Faith, East and West  வெளியாயின.  creative religion free of doctrine  என்பதை அவர் பேசினார். தனிநபரின் சுதந்திரம் மனிதகுல ஒற்றுமை நோக்கித்தான் மதங்கள் என்றார். கிழக்கு மேற்கு என்பது வெறும் பூகோள விஷயமல்ல மனித குல முன்னேற்ற பாதையின் இரு சாத்திய வகைகள் என்றார்.
அய்க்கியநாடுகள் செக்ரடரி ஜெனரல் பொறுப்பிற்கு ராதாகிருஷ்ணன் எனில் சோவியத், அமெரிக்க இருநாடுகள் இசைவும் இருப்பதாக நேருவிற்கு தகவல்கள் வந்தன. அவர் விரும்பினால் அனுப்பலாம் என்றார் நேரு. ராதாகிருஷ்ணன் விருப்பமின்மையை தெரிவித்தார். அவர் அமெரிக்க கனடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது  what we want today is not the American way or the Russian way, but the Human way .. with faith, forberance and flexibility, the world could be made a better place  என உரை நிகழ்த்தினார். அய்நா தினம் அன்று அவர் உரை ஒலிப்பரப்பானது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிசம் பாற்கொண்டுள்ள ஈர்ப்பை குறிப்பிட்டார். தனக்கு அதில் நாட்டம் இல்லை என்றாலும் அதை புரிந்து கொள்ள நாடுகள் தவறக்கூடாது. நமது புரிதல் கம்யூனிச நாடுகள் தங்களை ஜனநாயகப்படுத்திகொள்ளக்கூட உதவும் என்றார். இதை நியாயார்க் டைம்ஸ் வெளியிட்டது.
அமெரிக்க சோவியத் நல்லுறவுகள் குறித்த அவரது கருத்துக்களை சில தீவிரவாதிகள் ஏற்கவில்லை என்பதை ஐஷ்னோவரே ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்ததாக அறிகிறோம்.  No soiety is static; no law is unchanging; and no constitution is permannet. Given time and patience, radical changes may happen both in human nature and in systems of society which reflect human nature  என தனது உரைகளின் ஊடே அவர் தெளிவிபடுத்தினார்.
1955 ஏப்ரலில் டெல்லிக்கு பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் வந்தபோது ராதாகிருஷ்ணன் தனது உரையில்   History is not what we remember but what we choose to remember; and India remembered the positive aspects of British rule and elected to forget the rest. Reentering the stream of world history, India had prefered to remain in the Commonwealth because it meant complete independence and informal association, sharing of ideals though not of allegiance, of purposes though not of loyalties, common decisions leading to better understanding and not binding decisions restricting independence.  மேற்கூறிய அவர் உரையில் இடம் பெற்ற வரிகள் அற்புதமானவை தெளிவான பார்வைகொண்டவை என பாராட்டைப் பெற்றன.
1956ல் அவர் சோவியத், கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றார். அங்கு  Religion of Communism  என்கிற விமர்சன பார்வையை வைத்தார்.  In communism there is little of the pursuit of truth, no passion for individual integrity and spiritual perfection, no faith in the inwardness of human life  என்பதை விமர்சனமாக வைத்தார். குருசேவ் சில முயற்சிகளை எடுப்பதை கவனிக்கவேண்டும் என்றார்.  Material progress unchecked by the higher values of mind and spirit would bring its own revenges, resulting in inner disquiet and impoverishment... any system which suppressed the individual conscience was un Marxist  என்கிற அறிவுரையை அவர் தந்தார்.  உரையை வானொலியில் கேட்டதாக குருசேவ் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தார். முதலில் எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள விழைகிறோம். மூன்று ஆண்டுகள் கழித்து வந்து பாருங்கள் சில மாற்றங்களை காண்பீர் என்றார். கீவ் ரேடியோவில் ராதாகிருஷ்ணன் உரையாற்றியபோது புகாரின் பெயரை குறிப்பிட்டார். கிண்டலாக இங்கும் இருகட்சி ஆட்சிமுறைதான் உள்ளது. ஒன்று ஆட்சியில் மற்றது சிறையில் என்றார்.
ராதாகிருஷ்ணன் துணைவியார் நவம்பர் 26 1956ல் இதயவலியால் மறைந்தார். சில ஆண்டுகளாகவே அவர் சென்னையைவிட்டு வெளியே வரமுடியாதநிலையில் இருந்தார். ராதாகிருஷ்ணன் டெல்லிக்கும் சென்னைக்கும் ஆக அலைந்து வந்தார். சடங்குகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. மனைவியின் விருப்பம் என்பதால் உடன்பட்டார். The end of a long chapter   என புத்தக மொழியிலேயே மனைவி மறைவு துக்கத்தை வெளிப்படுத்தினார். சிவகாமு கல்கத்தாவில் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். ராதாகிருஷ்ணனின் சில தொடர்புகள் குறித்த வலியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தாய்மை பண்புகளில் நிறைவடைந்துகொண்டார் சிவகாமு. அவர்கள் பிரியவில்லையே தவிர அவ்வுறவு certainly fractured என்கிறார் கோபால்.

1955 முதலே ராஜேந்திரபிரசாத் தான் விலகிவிடுவதாக நேருவிடம் தெரிவிக்கத்துவங்கினார். நேருவிற்கோ 1957ல் ராதாகிருஷ்ணனை குடியரசுதலைவர் ஆக்கிவிடலாம் என கருதினார். மெளலானா ஆசாத்திற்கு ராதாகிருஷ்ணன் மீது வருத்தம் இருந்தது. அவரின் கல்வி அமைச்சகம் சரியாக வேலை செய்யவில்லை என்கிற விமர்சனத்தை ராதாகிருஷ்ணன் வைத்தார் என்பதில் ஆசாத் வருத்தமாக இருந்தார். ராஜ்யசபாவில் கேள்வி வரும்போது ஆசாத் இருந்து பதில் அளிக்கவேண்டும்- உடல்நிலை என சொல்லி வராமல் இருக்கக்கூடாது என்றார் ராதாகிருஷ்ணன்.
ஆசாத் பிரசாத்திடம் அவரே குடியரசுத்தலைவராக தொடரவேண்டும் என்ற எண்ணத்தை தெரிவிக்க அதை ஆசாத்தும் நண்பர்களும் முடிவெடுக்கலாம் என மறைமுக ஒப்புதலை பிரசாத் தந்தார். இந்த பிரச்சாரத்தால் மனம் உடைந்தார் நேரு. பிரசாத்தா ராதாகிருஷ்ணனா என்கிற விவாதம் பொதுவெளியில் நடக்கத் துவங்கிவிட்டது. மார்ச் 1957 பிரசாத் நேரு சந்திப்பில் ஏதும் முடிவாகவில்லை. காங்கிரஸ்பார்லிமெண்டரி போர்ட் கூடியது. முன்னதாகவே பிரசாத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடந்தது. மொரார்ஜி ராதாகிருஷ்ணன் என்றார். ஆனால் கூட்டத்திற்கு வரவில்லை. பிரசாத் விரும்பினால் அவர்தான் என பந்த், ஜகஜீவன் தெரிவித்தனர். கூட்டத்தில் நேரு தன் கருத்திற்கு ஆதரவு இல்லை என உணர்ந்தார். மரபுகளுக்கு மாறாக இரண்டாம் முறை பிரசாத் என்பதும் ராதாகிருஷ்ணன் துணையாக தொடரலாம் என்பதும் எட்டப்பட்டது.
 நேரு ராதாகிருஷ்ணனுக்கு தனது முயற்சி-முடியாமை குறித்து தெரிவித்து இரண்டாம் முறை துணைத்தலைவராக நீடிக்க வேண்டினார். ராதாகிருஷ்ணன் அதற்கு  The prtexts of party pressures and importunities of friends admit of no answer and carry no conviction  என  கோபமாக பதில் அனுப்பினார். தன்னையாவது மரபான ஒரு முறை என்பதை பின்பற்ற அனுமதிக்கவேண்டும் என்றார். அனைவரும் தேசிய நலன்கருதி என அவரை வேண்டினர். நீங்கள் இல்லாத டெல்லி கற்பனை செய்யமுடியாது என இந்திரா தெரிவித்தார். மொரார்ஜி நேரில் சென்று நேருவை இவ்வாறு விட்டுவிட்டு செல்வது அழகல்ல, அவர் கண்ணீர் விடுகிறார் என சமாதானப்படுத்தினார். ராஜாஜி அவருக்கே உரிய கேலியுடன் வாழ்த்து தெரிவித்தார். பதவி ஏற்றவுடன் we seem to be victims of too many small loyalties  என்றார் ராதாகிருஷ்ணன்.
மே 1957ல் அவர் கம்போடியா வியட்நாம் சென்றார்.  சிகனோக், ஹோசிமின் சந்திப்புகள் பலன் தந்தன. ஹோசிமின் புரொடோகால் ஏதும் பார்க்காமல் விமானநிலயம் வந்தார். அவர் சீனாவில் அங்கிருந்த கொந்தளிப்பான நிலையிலும் மாவோவை சந்திக்க முடிந்தது, ராதாகிருஷ்ணனை பார்க்க மாவோ பெய்ஜிங் வந்தார். நீங்கள் மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்காமல் செயல்படும் நம்பிக்கையாக பார்க்கிறீர்கள்.. உங்கள் ஆட்சியில் சீனாவில் சோசலிசம் மனிதாபிமானம் கொண்டதாக ஜனநாயகம் நிறைந்தததாக மாறட்டும் என மாவோவிடம் தெரிவித்தார். தேசிய மக்கள் காங்கிரசில் ஜனநாயகம் குறித்து அவர் உரையாற்றினார்.

மாவோவுடன் தனி உரையாடலில் coexistence  என்பதில் நம்பிக்கை வைத்துள்ளீர்களா என கேட்டார் ராதாகிருஷ்ணன். அவர் ஆமாம் என்றார். ஒத்துப்போகிறவருடன் மட்டும் சேர்ந்து வாழ்வதா - ஒத்துப் போகாதவர்களுடனும் சேர்ந்து வாழ்வதா அது எனக்கேட்டார்.  Co existence meant converting in a friendly way the one who disagreed and not suppressing him என விளக்கம் தந்தார். மாவோ பதில் தரவில்லை. ராதாகிருஷ்ணனுக்கு ஒரு பழக்கம் இருந்தது, அவர் விடைபெறும்போது கன்னத்தில் தட்டிக்கொடுத்து விடைபெறுவார். ஸ்டாலினிடம், போப்பாண்டவரிடம் செய்த அதையே மாவோவிடமும் செய்தார். சுற்றி நின்றவர்கள் திடுக்கிட்டனர். மாவோ அதை புன்முறுவலுடன் ஏற்றார்.
உலகில் காணப்படும் நெருக்கடிகள்  narrow exclusiveness  காரணமாக வருகிறது என்றார் ராதாகிருஷ்ணன்.  A bad citizen is all right because he belongs to our state: a good alien cannot be all right because he doesn't  எனும் பார்வைதான் எங்கும் காணப்படுகிறது..  But he who despised the faiths of other peoples in fact despised his own..To convert the opponent, we must not always speak of his shortcomings but present to him his own higher and nobler side  என்றார். ராஜ்யசபா, குடியரசுத்துணைத்தலைவர், சுற்றுப்பயணங்கள்- சொற்பொழிவுகள் என்கிற கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் அவர் பிரம்ம சூத்திர உரை எழுதினார்.
ராஜேந்திர பிரசாத்திற்கு மூன்றாம் முறையும் விருப்பம் என்கிற செய்தி வலுவாக வரத்துவங்கியது அதற்கு சிலர் முயற்சியும் செய்தனர். ஆனால் நேரு கடுமையாக இருந்தார். ராஜ்யசபாவில் இருமுறைதான் என்கிற பில் ஒன்றை உறுப்பினர் கொணர்ந்தபோது நாம் வழக்கம் என்பதில் கறாராக இருக்கலாம் விலக்கி கொள்ளுங்கள் என நேரு வேண்டினார். பிரசாத் உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில் 1961ல் குடியரசுத்தலைவர் பதவியை  officiate  செய்தார் ராதாகிருஷ்ணன்.

ராஜ்யசாபாவில் புபேஷ்குப்தா  மிகசிறந்த உறுப்பினராக வலுவாக வாதம் புரிபவராக இருந்தார்.  அவர் கல்கத்தாவில் ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவர். ராதாகிருஷ்ணன் அவையில் கடிந்து கொண்டால் வகுப்பாசிரியருக்கு தரும் மரியதையை புபேஷ் தந்துவிடுவார். நேரு, புபேஷ், ராதகிருஷ்ணன் எனில் அவை களைகட்டும் என்கிறார் கோபால்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...