Skip to main content

Dr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன்

               - ஆர். பட்டாபிராமன்

இந்திய தத்துவ ஞானி என அறியப்பட்டவரும் பெரும் மேதையுமான இராதாகிருஷ்ணன் நேரடி அரசியல்வாதியாக இல்லையெனினும் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் உயர்ந்தவர். கல்வியாளர், தத்துவஞானி, தூதர், ராஜ்யசபாவை வழிநடத்தியவர், ராஜதந்திரி என்கிற பன்முகத்தன்மையுடன்  இருந்தவர்  .  தன்னைப்பற்றி அதிகம் பேசாதவராக இருந்தவர். அவரது படைப்புக்கள்தான் அவருக்காக பேசுகின்றன. தனது எழுத்துக்களே  தனது சுயசரிதையாக விளங்கட்டும் என கருதியவர். அவரது புதல்வர் திரு கோபால்  அவரது வாழ்வு குறித்து 1988ல் பெரும் புத்தகம் ஒன்றை நமக்கு அளித்துள்ளார். நேரு குறித்த சுயசரிதையும் எழுதியவர் கோபால்.

 பிரிட்டிஷார் வரவு அதன் காரணமாக கிறிஸ்துவ சமயம் பெற்ற அரசியல் ஒத்துழைப்பு  என்ற சூழல் இந்தியாவில் நிலவிய காலத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். இந்துயிசம் என்பது மத மற்றும் அரசியல் வழிப்பட்டு அறியப்படாமல் பல்வேறு செக்ட் அடிப்படையில் இந்து மத உணர்வு என இருந்த காலமது. முறைப்படுத்தப்பட்ட கிறிஸ்துவ சமயத்தை எதிர்கொள்ளவேண்டிய சவால்   battle for consciousness  உருவானது. காலனியாதிக்கத்தின் கொடுமையிலிருந்து மீள்வதற்கு வலுவான கருத்துக்களின் ஒருங்கிணைவு, நம்மிடம் என்ன இல்லை என்கிற முழக்கம் பழமையிலிருந்து சிறந்தவைகளை மீட்டுருவாக்கம் செய்வது- தேவைப்படலாயிற்று. சொந்த மண்ணிலும் ஆள்வோர் மண்ணிற்கு சென்றும் பிறரின் கலாச்சாரத்தை அந்நிய மொழியில் கற்கவேண்டிய நிலையும் நிலவியது.
திருத்தனியில் செப்டம்பர் 5 1888ல்  ஏழை பிராம்மணர் குடும்பம் ஒன்றில் இராதாகிருஷ்ணன் பிறக்கிறார். தாய் சீதம்மா, தந்தை சர்வபள்ளி வீராசாமிதான் செப் 20 1887ல் பிறந்ததாக இராதாகிருஷ்ணன் கருதினார். செப் 5 தான் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது. கோபால் எழுதும்போது வீராசாமி அவர் தந்தைதானா என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறார். அவருடன் உடன் பிறந்தததாக சொல்பவர்கள்ஒரே ஜீன்’ உடையவர்களா என்கிற சந்தேகமும் இருப்பதாக கோபால் சொல்கிறார். இராதாகிருஷ்ணன் தன் தாயை சற்று தூரத்திலேயே வைத்திருந்துள்ளார்.
ராதாகிருஷ்ணனின் மூதாதையர்கள் சென்னையிலிருந்து 200 மைல்கள் தொலைவில் உள்ள சர்வபள்ளி என்கிற கிராமத்திலிருந்து சென்னைக்கு அருகில் திருத்தணியில் 18 ஆம் நூற்றாண்டில் குடியேறியிருந்தனர்திருத்தணி ஆரம்ப பள்ளியில் அவர் சேர்க்கப்படுகிறார். 1896ல் அவர் திருப்பதி  கிறிஸ்துவ மெஷினரிக்கு அனுப்பப்படுகிறார். ஆரம்ப கல்வி காலத்தில் அவரிடம் அறிவுக்குணம் ஏதும் தென்படவில்லை. சராசரி மாணவராக இருந்துள்ளார்விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்தவில்லை. அவருக்கு படிப்பு உதவித்தொகை கிடைத்தது. பெற்றோருக்கு ஆங்கில அறிவு ஏதும் இல்லைசூழல் சரியில்லா நிலையில் அவர் வேலூருக்கு அனுப்பப்படுகிறார். அங்கு தூரத்து மாமா ஒருவர் பாதுகாப்பில் விடப்படுகிறார். மெட்ரிக் தேர்வில் வென்று கல்லூரி செல்கிறார். பைபிள் அவருக்கு மனப்பாடம் ஆகிறது. அதே நேரத்தில் விவேகானந்தர் உரைகள் அவரை ஈர்க்கிறது. சாவர்க்கர் எழுதிய முதல் இந்திய விடுதலைபோர் அவருக்கு கிடைக்கிறது.
புத்தக  படிப்பில் நாட்டம் ஏற்படுகிறது. வெல்லூரில் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்தது. அவரிடம் இந்தப் பழக்கம் இறுதி வரை தொடர்ந்தது. எதிலும் ஆழம் சென்று பார்த்தல், தனிமையாக, சற்று கூச்ச சுபாவத்துடன் இருத்தல் என்று அவர் காணப்பட்டார். புகையிலை, மது போன்ற எப்பழக்கமும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்ததில்லை. எளிய சைவ உணவை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. அவருக்கு கிடைத்த படிப்பு ஊக்க உதவித்தொகையை மிச்சம் செய்து நண்பர்கள் உபசரிப்பு, ஏழை மாணவர்களுக்கு உதவி என்பதற்கு செலவு செய்தார்.

ஆரம்பத்தில் அவருக்கு  செக்ஸ்  என்பதிலும் கூச்சம் இருந்தது. கழிப்பறைகளில் அவர் கண்ணில்படும் செக்ஸ் இலக்கியங்கள் அவருக்கு தொந்திரவு செய்தாலும் அதை குறித்து மாரல் உபதேசமோ, புகாரோ  அவர் செய்ததில்லை. அவரின் 16 வயதில் சிவகாமு என்கிற 10 வயது பெண்ணை மணம் முடிக்கின்றனர். அவர்கள் மணமாகி மூன்று ஆண்டுகள் கழிந்தபின்தான் சேர்ந்து வாழத்துவங்குகின்றனர். 1908ல் அவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில் 6 குழந்தைகள் பிறக்கின்றன. 1918வரை முரட்டு மீசையுடன் ராதாகிருஷ்ணன் இருந்ததாக கோபால் எழுதுகிறார்.
பத்மா என அழைக்கப்ப்ட்ட சிவகாமு தனக்கென எதிர்பார்ப்புகள் இல்லாதவராக கணவருக்கும் குடும்பத்திற்கும் பாடுபடக்கூடியவராக இருந்துள்ளார். இராதாகிருஷ்ணனுடன் அறிவார்ந்த வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடைபெறாவிட்டாலும் அவரின் அனைத்து மன உணர்வுகள், போராட்டங்கள் ஆகியவற்றில் ஆறுதலாக இருந்தவர்.  1904ல் ராதாகிருஷ்ணன் கணிதம், தத்துவம், வரலாறு பாடங்களுடன் மேல்படிப்பை கல்லூரியில் தொடர்ந்தார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் அவர் தத்துவம் பயின்றார்அவருக்கு உறவுக்காரர் ஒருவர் தான் படித்த புத்தகங்களை தருவதாக சொன்னதால் அவர் தத்துவம் எடுத்தார்ஆர்வம் காரணமாக இல்லை. செலவு சிக்கனம் அவரை அத்துறைக்கு அழைத்து வந்தது. 1949வரை ஏராள ஆய்வுகள், தத்துவம் குறித்த உரைகள் நிகழ்த்தி வந்தார். அவரே குறிப்பிட்டது போல  that career was the handiwork of power not of himself, call it Nature or God or whatever.  தனது வாழ்க்கை கண்ணிற்கு புலப்படாத சக்தியால்  உருவாக்கப்பட்டுவருகிறது என்கிற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
அவரை கல்லூரில் பதப்படுத்தியவர்களாக வில்லியம் ஸ்கின்னர். ஜி ஹாக் இருந்தனர். அவருக்கு பொறுமையை கற்றுத்தந்தனர். மிகச்சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தினர். 1906ல் தத்துவத்தில் தலைசிறந்த மாணவர் என்ற பாராட்டுடன் அவர் பட்டம் பெற்றார். தந்தை வீராசாமி, தாயார், சகோதரர்களுக்கு பணம் அனுப்பும் பொறுப்பு அவருக்கு வந்தது. வறுமையின் சூழலில் தனது எம் மேற்படிப்பை அவர் தொடர்ந்தார்
தனது மரியாதைக்குரிய ஹாக் பகவத்கீதையை கேவலமாக விளக்கியதால் சவலாக எடுத்துக் கொண்டு இந்து மதம் - நம்பிக்கைகள் குறித்து அவர் கற்க துவங்கினார். விவேகானந்தர் எழுத்துக்கள் தனக்கு தேசப்பற்றை தந்த அளவு மதம் குறித்த எழுச்சிகளை உருவாக்கவில்லை என்கிற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. பார்னெட் எழுதிய இந்துயிசம், வில்பெர்னிட்ஸ் எழுதிய பகவத்கீதை, சுவாமி அபேதானந்தாவின் வேதங்கள் உரைகளை அவர் தீவிரமாக படித்துணர்ந்தார். தனது ஆய்வுரையாக  The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions  என்பதை எழுதி முடித்தார். எவ்வித மாறுபாடுகளையும் காட்டாமல் ஹாக், வில்சன் மெச்டன் என்கிற பேராசிய பெருமக்கள் அவரை பாராட்டினர். பிற்காலத்தில் இந்த ஆக்கத்தை சிறுவயது முயற்சி என கருதி அதிகம் பாராட்டிக்கொள்ளவில்லை. அதில் அவர்  the evils of priestcraft which distorted the interpretation of scriptures were not a phenomenon restricted to India: more than half the wars, half the sins , misery and all the religious persecutions, massacres, burnings, torturings that have occurred in this world are attributable to its baneful influence என்று எழுதியிருந்தார்.
மனிதன் தனது உணர்வுகளை கட்டுக்குள் நிறுத்தி மேலான சுயமாக உருவாவது அவனின் கடமை என அவர் எழுதினார். ஒருமைத்தன்மை உணர வேதாந்த நன்னெறிகள் தேவை என்றார். வாய்ப்புகள் கதாநாயகனை உருவாக்கிவிடும். ஆன்மீக மதிப்புகளுடன் சமுக சேவை என்பதை நோக்கி அவர் நகரத்துவங்கினார். சர்வதேச சகோதரத்துவம்  வேதாந்த நெறியின் சாரம் என்றார். மானுட நலனுக்காக நிற்பது உள் அமைதிக்கான வழியாகும்.. மானுடத்தின் மீதான மதிப்புத்தான் இறை மரியாதை என குறிப்பிட்டார்.
1909ல் அவர் தனது முதுகலை முடித்தவுடன் ஆக்ஸ்போர்ட் அல்லது காம்பிரிட்ஜ் செல்ல விழைந்தார். ஆனால் குடும்பநிலை அவர் சென்னையைவிட்டு வெளிச்செல்ல முடியாமையை உருவாக்கியது. வேலைமுயற்சியும் சென்னையில் கைகூடவில்லை. ஸ்கின்னர் பரிந்துரையில் அவரின் கல்வித்தகுதிக்கும் குறைவான பள்ளி துணை ஆய்வாளர் பதவி தரப்பட்டது. உடனடியாக சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தற்காலிக காலி இடத்தில் மலையாள ஆசிரியர் என ரூ 60 சம்பளத்திற்கு வேலை கொடுக்கப்பட்டது.

சில மாதங்களில் 1910ல்  அரை சம்பளத்தில் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். சம்பளம் ரூ 37. கடும் நிதி பிரச்சனை ஏற்பட்டது. வாழை இலை வாங்கி அதில் போட்டு சாப்பிடாமல் தரையை சுத்தம் செய்து அதில் உணவிட்டு சாப்பிடும் அளவிற்கு சிக்கனமாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தனது கல்லூரி மெடல்களை அடகுவைத்து ஜீவனம் செய்யும் நிலையும் உருவாகியது. வாங்கியிருந்த கடனுக்கு வட்டி தரவில்லை என 1913ல் கோர்ட்டில் அவர் நிறுத்தப்பட்டார். தனி டியுஷன், புத்தகம் எழுதி  சம்பாதிப்பது என நாட்கள் நகர்ந்தன.  Essentials of Psychology  என்கிற புத்தகத்திற்கு காப்பிரைட் முழுமையாக ஆக்ஸ்போர்ட் பிரஸ்க்கு தந்து ரூ 500 பெற்றார். 1914 துவங்கி பிரசிடென்சியில் தத்துவத்துறை உதவி பேராசிரியர் ஆக பணிபுரிந்தார்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு