7
1962 மே மாதம் ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவரானார். தனக்கு
வந்த முதல் மெர்சி பெட்டிஷனை முன்வைத்து மரணதண்டனையை ஒழித்தால் என்ன என நேருவிடம் கேட்டார்.
நேருவும் அதற்கு நேர்மறையாக பதிலை தந்தார். அது உள்துறை மூலம் விவாதத்திற்கு போனது.
பொதுவாக கருணை மனுக்களை அவர் நிராகரிக்காமல் இருந்தார். president - public contact என்பதில் ஆர்வமாக இருந்தார்.
1962 அக்டோபரில்
சீனா துருப்புகள் லடாக் பகுதியில் என்கிறமிக முக்கிய பிரச்ச்னையில் பாதுகாப்பு அமைச்சர் மேனனை மாற்றிடுமாறு நேருவிடம் தெரிவித்தார். ஆனால் நேருவிற்கு கிருஷ்ணனேனனிடம்
நம்பிக்கை இருந்தது. அமெரிக்காவின் தூதர் பேராசிரியர் கால்பிரைத் அமெரிக்க அனைத்து
உதவிகளும் செய்யத்தயார் ஆனால் வேண்டுகோளே இல்லையே என்றார். மேனன் மேற்கு நாடுகளிடம்
செல்லக்கூடாது என்றார். கால்பிரைத் பேசுவதில் முழு உண்மையில்லை என்றார் நேரு. அக்டோபர்
28 1962 அன்று நேரு ஆமாம் நாம் தவறிவிட்டோம் என ராதாகிருஷ்னனிடம் ஏற்றுக்கொண்டார்.
நவம்பர் 7 அன்று மேனனின் ராஜினாமை ஏற்று அனுப்ப ராதாகிருஷ்னன் அறிவுறுத்தினார். மேனன்
விலகலை என்னதான் வருத்தம் இருந்தாலும் தேசநலன் கருதி ஏற்றுக்கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேருவின் ஏற்புடன் போர்முனைக்கு சென்றார், தளபதிகளுடன் வீரர்களுடன்
விவாதித்தார். மிக மோசமான அரசின் ஆயத்தமின்மை குறித்த பொது கருத்துடன் உடன்பட்டு பேசினார்.
இவ்வாறு வெளிப்படையாக எந்த நாட்டிலும் யாரும் பேசியிருக்கமாட்டர்கள் என்கிற கருத்துக்கள்
வெளியாயின. ராஜாஜி போன்றவர் தேவையில்லாமல் நேரு மீதான அதிருப்தியில் பிரசிடென்சியல்
அரசாங்கம் என சட்டதிருத்தம் கொணர்க எனப் பேசினர். புபேஷ் குடியரசுத்தலைவர் அன்றாட பாலிசிகளில்
தலையிடுவதாக நேருவிற்கு கடிதம் எழுதினார். நேரு அதை கண்டுகொள்ளவில்லை. குடியரசுத்தலைவ்ர்
குறித்து வெளிப்படையாக விவாதிப்பது ஆரோக்கியமனதல்ல என்றார் நேரு.
சீனாவுடனான யுத்தம் முடிந்த அடுத்த ஆண்டு ராதாகிருஷ்ணன் அமெரிக்கா,
பிரிட்டன் சென்றார். கென்னடியுடன் உரையாடினார். முதல்முறையாக ராதகிருஷ்ணன் வரும் ஹெலிகாப்டர்
ஒயிட் ஹவிசில் இறங்கிட அனுமதியை கென்னடி கொடுத்தார். அதேபோல் தங்கள் குடும்ப அறைக்கு
அழைத்து சென்று குழந்தைகளை அறிமுகம் செய்தார். கென்னடி மேனன் குறித்த தனது மதிப்பீடுகளை
சொன்னபோது ராதாகிருஷ்ணன் எவ்வித பதிலும் தரவில்லை. நீங்கள் நாட்டின் பிரதமர் ஆவிரா
என்றதற்கு நிச்சயம் இல்லை என்றார். அவரது அமெரிக்க உரைகள் பொதுவாக அதிகம் பத்ரிக்கைகளில்
வரவில்லை. ஏனேனில் எழுதி அவர் படிக்கவில்லை..
சீனா யுத்தத்திற்கு பின்னர் நேரு மிகவும் தளர்ந்தார். ஜனவரி
1964ல் அவருக்கு Stroke ஏற்பட்டது. ராதாகிருஷ்ணனுடன் தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டார். I am not exactly a religious person
althought I agree with much that religions have to say என்பார் நேரு. 1964 மே 23 அன்று உள்துறை செயலர்
குடியரசுத்தலைவரின் தனிஅதிகாரிக்கு நேரு உடல்நிலை மோசமானதை குறிப்பிட்டு மாற்று யோசிக்கவேண்டும் என்றார். காமராஜர் திட்டத்தில்
வெளியேறியிருந்த லால்பகதூரை ஜனவரியில் மீண்டும் நேரு இணைத்துக்கொண்டார். அவர் நேருவிற்கு
பின்னால் என்கிற உணர்வு பிரதமர், குடியரசுத்தலைவர் இருவருக்கும் இருந்தது. ராதாகிருஷ்ணன்
சாஸ்திரியிடம் உரிய தருணத்தில் எவ்வாறு உரிய முறையில் நடக்கவேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார்.
1964 மே 27 காலையில் நேரு சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்ற
செய்தியை இந்திரா தெரிவிக்க ராதாகிருஷ்ணன் சென்று பார்த்துவந்தார். மதியம் 1.50க்கு காபினட் செயலர் நேரு மறைவை அறிவித்தார்,
ராதாகிருஷ்ணன் நாட்டிற்கு மட்டுமல்ல தனக்கும் பெரும் இழப்பாக கருதினார். மாலை 4.30க்கு நந்தா பிரதமராக
பொறுப்பேற்றார். ராணுவ உயர் அதிகாரிகள் குடியரசு தலைவரை சந்தித்து ஜனநாயகம் நிலைபெற
தங்கள் உறுதிமொழியை தந்தனர். இது பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. குடியரசுத்தலைவரை
காமராஜர் சந்தித்து நந்தா இருமாதங்கள் கழித்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்
என்கிற விருப்ப செய்தியை தந்தார். ராதாகிருஷ்ணன் ஏற்கவில்லை. உடனடியாக தேர்ந்தெடுத்து
நாட்டிற்கு தெரிவிக்கவேண்டும் என்றார். நந்தா விலகி சாஸ்த்ரி பதவியேற்றார்.
கிருஷ்ணமேனனை அமைச்சரவையில் சேர்ப்பதில் உள்ள தடைகளை ராதாகிருஷ்ணன் சாஸ்த்ரியிடம் எடுத்துரைத்தார்.
இந்திரா ஆரம்பத்தில் தயங்கினாலும் அமைச்சரவையில் இணைந்தார். சாஸ்த்ரி வெளியுறவுத்துறையை
ஸ்வரன்சிங்கிற்கு ஒதுக்கினார். அதன் மூலம்
இந்திரா அதை பெறமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. இந்திராவிற்கு நந்தா பிரதமராக தொடர்ந்தால்
பரவாயில்லை என்ற எண்ணம் இருந்ததாக கோபால் பதிவு செய்கிறார்.
1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழத்தில் தீவிரமாக இருந்தது.
சாஸ்த்ரிக்கு ராதாகிருஷ்ணன் அறிவுரை எடுபடாத நிலையில் அமைச்சர்கள் ராஜினாமை ஏற்கும்படி
சாஸ்த்ரி தெரிவிக்க ராதாகிருஷ்ணன் சரியல்ல என அறிவுறுத்தினார். ராதாகிருஷ்ணன் மீதும்
இந்தி பிரச்சனையால் விமர்சனம் எழுந்து அவரது திருத்தணி பூர்வீக வீடு கொளுத்தப்பட்டது.
பொதுவாக வன்முறைகளை அவர் கண்டித்தாலும் அவை மூளாமல் இருக்க ஆட்சியாளர்கள் போதுமான நடவடிக்கைகளை
எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இந்திபிரச்சனையை கையாண்டதில் அவருக்கு அரசாங்கம்
மீது விமர்சனம் இருந்தது என்பது அப்போது வெளித்தெரியாமல் போனது.
நமது ராணுவ செலவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க சீனா,
பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்தவேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஷேக் அப்துல்லா,
ஜெயபிரகாஷ் , கம்யூனிஸ்ட்கள் இதை வரவேற்றனர்.
Both countries should demilitarise their minds என்பதை பாகிஸ்தான்
பிரசிடெண்ட் அயுப்கான் வரவேற்றார். ஆனால் நடைமுறையில்
காஷ்மீருக்குள் ஊடுருவல் என்பதை நிகழ்த்தினார் . பாகிஸ்தானுடன் போர் பிரச்சனையில் ராதாகிருஷ்ணன்
எகிப்தின் நாசர் போன்றவர்களை புரியவைக்க முயற்சித்தார்.
அரபுநாடுகளுக்கு இந்திய நியாயம் போய் சேரவில்லை என்பதை நாசர் கூறினார். டிட்டோ சீனா-
பாகிஸ்தான் நிலைப்பாட்டை கண்டித்தார். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை காஷ்மீர் என்றார்.
அமெரிக்காவோ கோசிஜினுக்கு சுதந்திர காஷ்மீர் அல்லது பொதுவாக்கெடுப்பு என்கிற நிலைக்கு
இந்தியாவை கொணர்க என்ற செய்தியை தந்தது. அதேநேரத்தில் தாஷ்கண்ட் கூட்டத்தில் பங்கேற்க
பாகிஸ்தானை வலியுறுத்தியது.
ராதாகிருஷ்ணன்
No war declaration, disengagement of troops, evacupation from the
occupied area , acceptance of ceasefire line with rectifications as the
international boundary என்ற பார்முலாவை சொன்னார். தாஷ்கண்ட் டெக்லரேஷன்
விவாதம் நடைபெறமுடியாமல் சாஸ்த்ரி மரணம் விடியற்காலை ஜனவரி11 1966ல் நிகழ்ந்தது. அடுத்த பிரதமர் தேர்வு என்கிற கடமையை குடியரசுத்தலைவர் எதிர்கொண்டார்.
நந்தா, மொரார்ஜி, இந்திரா, யஷ்வந்த்ராவ்
சவான் ஆகியோர் பிரதமர் விருப்பத்தில் இருந்தனர்.
நந்தாவின் போதாமை, சவானுக்கு டெல்லி சூழல் போதாமை,மொரார்ஜி
நண்பர் எனினும் பிடிவாதம் கொண்டவர் ஆகியவற்றை எடைபோட்டு ராதாகிருஷ்ணன் இந்திரா பொருத்தமானவர்
என கருதினார். வெளித்தெரியாமல் அதற்கான வேலைகளை செய்யவும் அவர் தவறவில்லை. அதே நேரத்தில்
குடியரசுத்தலைவர் பதவியின் கண்ணியம் காத்தல் என்பதையும் அவர் சாதுர்யமாக செய்தார்.
மேனன் நந்தாவிற்காக நிற்கிறார், காமராஜர் பிரதமராக விரும்பவில்லை என்ற செய்தியும்,
இந்திரா தன்னை முன்வைக்க காய்களை நகர்த்திகொள்ளலாம்
என்கிற செய்தியும் இந்திராவிற்கு அனுப்பப்பட்டது. தன்னை சந்திக்க வருபவர்களிடம் broadmind
உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்றார் ராதாகிருஷ்ணன். ஜனவரி 15 அன்று 8 முதல்வர்கள்
இந்திரா என்றனர். ராஜாஜி நந்தா ஓராண்டாவது இருக்கட்டும் என்றார். இருப்பதில். இந்திராதான்
என ராதாகிருஷ்ணன் ஆலோசனையை காமராஜர் அமுலாக்க முனைந்தார்.
இந்திரா என்பது ஏற்கப்பட்டவுடன் அமைச்சரவை உருவாக்கத்தில்
நந்தா, மேனன் கோரிக்கைகள் இருந்தன. அசோக் மேத்தாவை காமராஜர் விரும்பவில்லை. ஜெகஜீவன்ராம்
பெயர் அவர் மீதிருந்த சில குற்றசாட்டுக்களையும் மீறி இடம்பெறுவது சரியல்ல என்கிற ராதாகிருஷ்ணன்
அறிவுரையை இந்திரா ஏற்கவில்லை. இந்திரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்தாலும் அரசாங்க தவறுகளை
வழக்கம்போல் விமர்சிப்பவராக ராதாகிருஷ்ணன் இருந்தார். இந்திராவிற்கு கற்றுக்கொள்ள அவகாசம்
தேவை. பிரச்சனையில்லாமல் பார்த்துக்கொள்ளும்படி காமராஜரிடம் எடுத்துரைத்தார். காமராஜருக்கு
துணைபிரதமர் பதவி என்பதை இந்திரா ஏற்காமல் உள்துறை கொடுக்கலாம் என்றார் . காமராஜர்
பதில் ஏதும் தரவில்லை. அருனா ஆசாப் அலி சென்று இந்திராவிற்கு மொரார்ஜியே மேல் என சொன்னார்.
குடியரசுத்தலைவர் தேர்தல் நெருங்கியபோது மீண்டும் குடியரசுதலைவராக
ராதாகிருஷ்ணன் என ஹிரன்முகர்ஜி, ஜெயபிரகாஷ் போன்றவர் பேசினர். Only Sane Voice Available என்கிற புகழ் அவருக்கு கிட்டியது. மாதிரி
சர்வே அவரை 76 சத வாக்கு கொடுத்து அவரின் செல்வாக்கை காட்டியது. ஆனால் 1966 டிசம்பர்
4 அன்று தனது வலக்கை செயலிழக்க, பேச முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது. Speech Theraphy கொடுத்தனர். அவர் இந்திராவிடம்
ஜாகீர் ஹுசைன் பொறுப்பேற்கட்டும் என்றார். இந்திரா அமைதியாக இருந்து உதவ வேண்டினார்.
ஜனவரி 26 குடியரசு அணிவகுப்பிற்கு கூட செல்லமுடியாத அளவு அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
ராஜாஜியும், ஜனசங்கமும் அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக இருப்பதே நல்லது என்றனர்.
இந்திராவிற்கு சில நேரம் தன்னை மகள்போல் அறிவுரை கூறும் முறையில் அவர் உரிமை எடுத்துக்கொள்வதில்
சங்கடம் இருந்தது. ஜாகீர் என்றால் equation சரியாக இருக்கும் என நினைத்தார்.
காமராஜர் ராதாகிருஷ்ணன் என பேசியதில் இந்திராவிற்கு வருத்தம்
ஏற்பட்டது. ஜாகீருக்கு அவர் வாக்கு கொடுத்த நிலையில் இருந்தார். தனக்கு பெருகி வரும்
செல்வாக்கை கண்டு ராதாகிருஷ்ணன் There is
pressure on me to continue. I do not know what I will do என பேசத்துவங்கினார். சுதந்திராவின் மினுமசானி வேறு கருத்தில் இருப்பதை
அறிந்து இந்திரா ராதாகிருஷ்ணனை தாண்டி யோசிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். காங்கிரசில்
இருவேறு கருத்துக்கள்- எதிர்கட்சிகள் தலமைநீதிபதியை போடலாம் என பேசத்துவங்கியது ஆகிய சூழல்களை உணர்ந்து ராதாகிருஷ்ணன் தான் இல்லை என சொல்ல விழைந்தார்.
காமராஜர் அவசரப்படவேண்டாம் என சொன்னதால் அதை
உடன் வெளிப்படுத்தவில்லை.
ராதாகிருஷ்ணன் ஒருமித்த கருத்தில்தான் ’தனது பதவி ஏற்புகள்’
நிகழ்ந்துள்ளன. தேவையில்லாமல் தன்னை பலியாக்கவேண்டாம்
என்றார். ஆனால் காமராஜர் பொறுத்திருங்கள் என சொல்லிவந்தார். ஏப்ரல் 9 1967ல் Recent developments in connection with the
highset offices in the country have made me most unhappy and strengthened my
resolve to retire .. fed up என அறிவித்தார்.
சென்னைக்கு குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்தாலும்
தனிமையை உணர்ந்தார். The best fruits
which we can pluck from the tree of life turn to ashes in our mouth என்பதை அவர் உணர்ந்தவர். அவர் மெலிந்து ஒடுங்கினார்.
ஏப்ரல் 17 1975ல் அவர் மறைந்தார்.
யுனிவர்சல் மனிதனை உருவாக்காத மதம் யுனிவர்சல் நம்பிக்கையை
தரமுடியாது என்றவர் அவர். தன்னை அவர் அவ்வாறு தகவமைத்துக்கொண்டார். ஜனநாயகத்தின் மீது மிகுந்த
நம்பிக்கை கொண்டவராக இருந்தார். தனிமனித வளர்ச்சி என்பதை வலியுறுத்தினார். The indivudual is the final fact of life என்றார். தனது அரசியல் தத்துவம் என்பது civilised Individualism என்றார். அவருடன்
உரையாடுவது வகுப்பறையில் அற்புத உரைகேட்டதுபோல் இருக்கும் என அவரை அறிந்தவர்களின் பதிவு.
To
humanise society man should first be humanised- We have to chart our course by
the distant stars and not by dim street light என உச்சி காட்டுவார்.
நமது மக்கள் சிறந்த வாழ்க்கையும், மனிதாபிமான சூழலையும் பெற உரிமை உடையவர்கள் என்பதை
அழுத்தமாக சொல்லி வந்தார். அவரது இறப்பின் போது குடியரசுத்தலைவர் அகமதுவும்,பிரதமர்
இந்திராவும் வராத வருத்தத்தை கோபால் சொல்கிறார்.
1988ல் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டில் நினைவு மலர் ஒன்றை ராஜ்யசபா
வெளியிட்டது. அதில் குடியரசுத்தலைவராக இருந்த வெங்கட்ராமன் செய்தி பதிவானது. ராதாகிருஷ்ணன் ’ Teacher speker and writer of uncommon
Brilliance - His mind is finely tuned - Radhakrishan was rightly looked as an
Eastern savant who was equally at home in western philosophical thought. his
audiences and his were worldwide ’ என குறிப்பிட்டிருந்தார்.
விடுதலை தினமான 14-15, 1947ல் ராஜேந்திரபிரசாத், நேருவுடன்
ராதாகிருஷ்ணன் உரையாற்ற அந்த மிக முக்கிய வரலாற்றுத் தருணத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது.
அவர் உரையில் வாஷிங்டன், நெப்போலியன், கிராம்வெல், லெனின், முசோலினி, ஹிட்லர் ஆகியவர்கள்
பதவிக்கு ஆட்சிக்கு வந்ததை ஒப்பீடு செய்து விடுதலைக்கான பங்களிப்பில் காந்தியின் உயர்வை
எடுத்துக் கூறினார் . நமது வாய்ப்புகள் மிகப்பெரியவை. ஆனால் அதிகாரம் திறமையை கபளிகரம்
செய்தால் நாம் வீழ்வோம். திறமையை வளர்த்து வாய்ப்புகளை பயன்படுத்தும் கலையை கற்போம்.
இனி நாம் பிரிட்டிஷாரை குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என தனது எச்சரிக்கையை அவர் அத்தருணத்தில்
தரத்தவறவில்லை.
சிலவரிகளாவது எழுதாமல் இருந்தால் அந்நாளில் மிகவும் வருத்தம்
அடைவார். அவர் எவரையும் குருவாக கொள்ளவில்லை. தான் எவருக்கும் குரு என உரிமை பாராட்டவும்
இல்லை என கோபால் தன் தந்தை பற்றி சொல்கிறார் . உபநிடத பாடல் Don't do all things which your
teachers do; whatever blameless acts they do, follow them but others.
References:
1.RadhaKrishnan
A Biography- Saravapalli Gopal
2. The Ideal View of Life – Dr Radhakrishnan
3. Radhakrishnan Commemorative Vol- Rajya Sabha
Comments
Post a Comment