சிகாகோ மேதின தியாகிகள் -ஆர்.பட்டாபிராமன் மேற்கு சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4, 1886 இரவு கூடியிருந்த தொழிலாளர்களை போலீசார் அச்சுறுத்தி கலைத்துக்கொண்டிருந்தனர் . அங்கு டைனமிட் குண்டு வெடித்ததில் போலீஸ்காரர்கள் உயிர்ப்பலியும் காயமும் ஏற்பட்டது . கோபமடைந்த போலீசார் கண்மூடித்தனமாக சுட்டனர் . 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து , சிலர் உயிர் இழப்பும் நேர்ந்து அத்துப்பாக்கி சூடு முடிந்தது . ஹேமார்க்கெட் சம்பவத்திற்கு வழக்கு போடப்பட்டது. கண்துடைப்பு விசாரணை அமைக்கப்பட்டு அதில் ஆல்பர்ட் பார்சன்ஸ் , அகஸ்ட் ஸ்பீஸ் , சாமுவேல் பீல்டன் , மிஷேல் ஸ்க்வாப் . அடால்ப் ஃபிஷர் , ஜார்ஜ் எங்கெல் , லூயி லிங் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும் , ஆஸ்கர் நீபேவிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது . இரு அம்சங்கள் அப்போது அப்பகுதியில் கவ்வி பிடித்திருந்தன . உழைப்பவர்களுக்கு 8 மணிநேரம் மட்டுமே சட்டபூர்வ வேலை இருக்கவேண்டும் . மற்ற ஒன்று புரட்சிகர சோசலிச சிந்தனை. அதிலும் குறிப்பாக அனார்க்கிச