https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, April 21, 2017

May Day Martyrs Of Chicago சிகாகோ மேதின தியாகிகள் 2

ஆல்பர்ட் பார்சன்ஸ் (1848-87)

                        -ஆர்.பட்டாபிராமன்


ஆலபர்ட் பார்சன்ஸ் அலபாமா மாண்ட்கோமரியில் ஜூன் 24 1848ல் பிறந்தவர். தந்தை சாமுவேல் பார்சன்ஸ். பெரிய குடும்பம். தாயார் மதப்பற்றுடன் அருகாமை குடும்பங்களில் நல்ல பெயர் பெற்றவர். தந்தை பரோபகாரி என அறியப்பட்டவர். அவருடைய முன்னோர்கள்  300 ஆண்டுகளாக அமெரிக்காவாசிகள். தாய்வழி உறவினர் ஒருவர் ஜார்ஜ் வாஷிங்டனுடன் நின்று போராடியவர். தாய்வழி குடும்பத்திற்கு டாம்கின் குடும்பம் என பொதுப்பெயர். மற்றொரு முன்னவர் மேஜர் ஜெனரல் சாமுவேல் பார்சன்ஸ் 1776 புரட்சியில் காயமுற்றவர்.
ஆல்பர்ட் பார்சன்ஸ் தாய் தந்தை இருவரும் அவருக்கு 5 வயது முடியும் முன்பே மறைந்தனர். மூத்த அண்ணன் பத்ரிக்கையாளர். சிறுவயதிலேயே ரைபிள், பிஸ்டல் பிடிக்கும் வழக்கம் பார்சன்ஸ்க்கு ஏற்பட்டது. பிரிண்டிங் தொழிலை 7 ஆண்டுகள் பார்சன்ஸ் கற்றார்.  வர்ஜீனியாவில் கலகப்படை ஜெனரல் லே உடன் சேர விரும்பினார். மூத்தவர் ஒருவர் வயது போதாது என அறிவுரை வழங்கியதால் அது நடைபெறவில்லை. டெக்ஸாஸ் சென்று அண்ணனுடன் இணைந்தார். அங்கு குதிரைப்படை பிரிவில் சேர்ந்தார்.  அவரின் மற்ற ஒரு சகோதரர் மேஜர் கெனரல் பர்சன்ஸ்  அதன் தலைமை பொறுப்பில் இருந்தார். 15 வயதில் அவர் படையில் பார்சன்ஸ் இணைந்தார். தனது பண்ணை வருவாயிலிருந்து கல்வி கட்டணம் செலுத்தி வாகோ பல்கலைகழகத்தில் டெக்னிகல் கல்வி பயின்றார். Political Rights of colored People என்பதில் அங்கு உறுதியாக நின்றார். பத்த்ரிக்கை ஒன்றை துவங்கி அதற்காக வாதாடினார். அடிமைகள் பலர் நேயம் கொள்ளத்துவங்கினர். 1869ல் ஹவுஸ்டன் டெலிகிராப் பத்ரிக்கை நிருபர் ஆனார்.
பார்சன்ஸ் வருவாய் மதிப்பீட்டாளர், டெபுடி கலெக்டர் போன்ற பதவிகளில் அமர்த்தப்பட்டார். அரசாங்க உத்யோகங்களை 1873ல் ராஜினாமா செய்தார். 1872ல் ஸ்பானிஸ் பெண்ணை மணமுடித்து சிகாகோ வருகிறார். 1874ல் தொழிலாளர் பிரச்சனைகளில் ஆர்வம் செலுத்துகிறார். சிகாகோ தொழிலாளர்களுக்கு விபத்து காலங்களில் துயர் துடைக்கும் Relief and Aid Society ஒன்று இருந்தது. அது முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்காமல் பல நிதி முறைகேடுகளை செய்தது. தட்டிகேட்டவர்களை கம்யூனிஸ்ட்கள், திருடர்கள், குண்டர்கள் என விமர்சித்தது. பார்சன்ஸ் கணக்குகளை துருவி ஆராய்ந்து சமபந்தபட்ட்வர்களை அம்பலப்படுத்த துவங்கினார். இதைத்தொடர்ந்து தொழிலாளர்களுடன் நிற்பது என்ற முடிவிற்கு வந்தார்.
1876 தொழிலாளர் மாநாட்டு நடவடிக்கைகளை அவர் கூர்ந்து கவனித்தார். அங்கு  இருந்த வேறுபாடுகளையும்  புரிந்து கொண்டார்.  அமெரிக்க சோசியல் டெமாக்ரடிக் கட்சியில் அவர் இணைந்தார்.  ஜூலை 21, 1877ல் 30 ஆயிரம் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து மாடிசன் மார்க்கெட் பகுதியில் திரண்டனர். பார்சன்ஸ் பேச அழைக்கப்பட்டார். தொழிலாளர் வர்க்க கட்சிதான் அவர்களை காப்பாற்றும் என சொல்லி அக்கட்சியின் திட்டத்தை அங்கு பேசினார் பார்சன்ஸ். மறுநாள் அவர் வேலைபார்த்த பத்ரிக்கை அவரை வெளியேற்றியது. மேயர் ஹீத் பார்க்க விரும்புகிறார் என அழைத்து சென்றனர். போலிஸ் அதிகாரி பார்சன்ஸ் இடம்  மிரட்டும் தொனியில் கேள்விகளை அடுக்கினார்.  வேலைநிறுத்தம் என்கிற ஆயுதம்விட ஓட்டு எனும் ஆயுதம் பயன்படுத்தி பொறுப்பானவர்களை தேர்ந்தெடுங்கள் என தான் பேசியதை பார்சன்ஸ் சொன்னார். வனை லாகப்பில் தள்ளி தூக்கில் போடு என சிலர் அங்கு பேசத்துவங்கினர். சிலமணிநேரத்திற்கு பின்னர் பார்சன்ஸ்  அனுப்பபட்டார்.
தலைமை போலிஸ் அதிகாரி ’ஏய் பார்சன்ஸ் உனக்கு எச்சரிக்கை, உடன் இந்நகரைவிட்டு வெளியேறு. நீ செய்வதென்ன என எங்களுக்கு அறிக்கை வந்துகொண்டிருக்கிறது’ என மிரட்டி அனுப்பினார். அதிகார ஆட்டம் என்றால் என்ன என்பதை பார்சன்ஸ் அப்போது உணர்கிறார். தனது பத்ரிக்கை அலுவலகத்தில் பார்சன்ஸ் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது திடிரென ஆட்கள் வருகிறார்கள் அவரது கையை பிணைக்கிறார்கள். துப்பாக்கியைகாட்டி மிரட்டுகிறார்கள். மூளை சிதறிப்போகும். வெளியேறு என்கிறார்கள். கட்டயப்படுத்தி தெருவிற்கு இழுத்து தள்ளுகிறார்கள். பார்சன்ஸ் தனிமையில் மனம் ஒடிந்துபோனார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு வேலை தரக்கூடாது என Blacklist செய்யப்படுகிறார். அன்றாட வாழ்விற்கே  குடும்பத்திற்கு பெரும் கஷ்டம் உருவாக்கப்பட்டது.
1876 ல் அவருக்கு Knights of Labour அமைப்புடன் தொடர்பு எற்படுகிறது. இலிய்னாயிஸ் மாநிலத்தில் பெரும் சங்கமாக அது உருவெடுத்தது. அந்த அமைப்பில் சில முன்னணி பொறுப்புகளில் பார்சன்ஸ் அமர்த்தப்படுகிறார். சோசலிஸ்ட் லேபர் கட்சியிலும் அவர் முக்கிய தலைவராகிறார். முதலாளித்துவ கொடுமைகள் குறித்தும் ஆட்சியாளர் அராஜகத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்துதல் போதிக்கப்படுகிறது.
வாக்குப்பெட்டி தேர்தல்கள் வாழ்வை முன்னேற்றாது என்ற முடிவிற்கு சில தொழிற்சங்கங்கள் தலைவர்கள் வந்தனர். தொழிலாளர் நலன்களையும் இயற்கை வளங்களையும் திட்டமிட்டு சுரண்டுவதற்கு அரசாங்கம் என்பது சொத்து படைத்தவர்க்கான சாதனம் என்ற உரைகள் தரப்படுகின்றன. வேலை நேரத்தை குறைப்பதற்கோ, சம்பளத்தை உயர்த்துவதற்கோ இன்றைய அரசியல் உதவவில்லை. எங்கும் லஞ்சம் என்ற கருத்திற்கு பார்சன்ஸ் வந்தார். International Working People's Association,தொழிலாளர் காங்கிரஸ்களில் அவர் பங்கேற்காமல் இல்லை.அறிக்கைகள் தயாரிப்பதில் பிரச்சாரம் செய்வதில் பங்காற்றினார். கார்ல்மார்க்ஸ் உள்ளிட்டோர் துவங்கிய  முதலாம் அகிலம் கலைந்தவுடன் அனார்க்கிஸ்ட்களால் துவங்கப்பட்ட IWPAக்கு மானிபெஸ்டோவை ஆல்பர்ட் பார்சன்ஸ், ஸ்பீஸ், ஜோசப் ரெய்ஃப்கிராபர்  இணைந்து எழுதியதாக செய்திகள் உள்ளன.
உடைமை வர்க்கத்தின் சுரண்டல், மூலதன குவிப்பு அதன்மூலம் பெறும் அதிகாரம் குறித்து அவர்களது மானிபெஸ்டோ பேசியது. உழைப்பவரை ஓட்டாண்டியாக்கி, குற்ற மனிதர்களை உருவாக்கி, பெண்களை விபச்சாரிகளாக்கி பட்டினியில் வாட செய்யும் இம்முறையை தூக்கி எறிவோம் என பேசினர். இது நியாயமற்ற. பயித்தியக்காரத்தனமான் படுகொலை செய்திடும் சமுக முறை என்று பார்சன்ஸ் பேசத்துவங்கினார். அமெரிக்காவிலும் அய்ரோப்பா முழுமையும் பூர்ஷ்வாக்களுக்கு எதிரான பிராலிடேரியட் போராட்டம் என் பார்சன்ஸ் எழுதினார். நமது அரசியல் நிறுவனங்கள் போலீஸ்கள் சொத்துரிமைக்கு வாலாட்டி விசுவாசமாக இருக்கின்றனர் என்றார்.. FORCE அது ஒன்றே தொழிலாளரை காக்கும் என்றார்.
வர்க்க பாகுபாடுள்ள சமுகம் வீழட்டும். பேதமற்ற சமுகம் படைப்போம். நமது அமைப்புகளை மதசார்பற்ற, விஞ்ஞான மனப்பான்மையுடன் அமையட்டும். உற்பத்தி கூட்டுறவு முறையில் ஆகட்டும். ஆண் பெண் பேதமற்ற சம உரிமைகள் மலரட்டும் என்கிற தனது கனவை அவர் சிறையில் இருந்தபோது வெளிப்படுத்தினார். proletarians from all countries Unite என்கிற முழக்கத்தை பிட்ஸ்பர்க் காங்கிரஸ் வைத்தது. 1881 முதலே தன்னை அனார்க்கிஸ்ட் என முதலாளித்துவ பத்ரிக்கைகள் பெயரிட துவங்கியதாக பார்சன்ஸ் பதிவு செய்கிறார். சர்வதேச  அமைப்பின் சார்பில் அலார்ம் என்கிற பத்ரிக்கை 1884 அக்டோபரில் துவங்கப்படுகிறது. பார்சன்ஸ் அதன் எடிட்டிர் ஆகிறார்.
அனார்கிஸ்ட் என்பதை கெட்டவார்த்தைபோல் தொழிலாளர் சிலரும் புரிந்து கொண்டனர் என்கிர வருத்தம் அவருக்கு இருந்தது. அச்சிந்தனை முறையை அவர் விளக்குகிறார். கிரேக்கப்பதம் An- without   arche- government என்பதை அவர் சொல்கிறார். அரசன் இல்லாத, பிரசிடெண்ட் அல்லது தனித்த ஆட்சியாளர் என பிரகடனம் இல்லாத முறை என்கிறார். Government is the agency or power by which some person or persons govern other persons. Power is might, and might always makes its own right என்று எழுதினார் பார்சன்ஸ். மூலதனம் என்பது உள்ளுறைந்த உழைப்புதான். அது கடந்தகால உழைப்புதான் என்கிற  கருத்திற்கு அவர் வருகிறார்.  மூலதனத்தின் செயல்பாடு என்பது கூலி உழைப்பாளர்களை சுரண்டி கொழுப்பதுதான். Legalised capital and the State stand or fall together. They are twins என்கிற தனது அரசியல் பொருளாதார பார்வையை பார்சன்ஸ் முன்வைத்தார்.
பாஸ்- பாஸ் இசம் இல்லாமல் மக்கள் கூடிக்கொள்ளவேண்டும். அப்போது சுதந்திரமாக பிரிந்துகொள்ளவும் முடியும். கவர்மெண்டலிசம் என்பதற்கு பதில் சோசியல் அட்மினிஸ்ட்ரேஷன் என்றார் பார்சன்ஸ். No Dictation No Coercion No Domination என்றார். இதெல்லாம் கனவா என்று கேள்வி எழுப்பி சாத்தியம் என விவாதிக்கவும் செய்கிறார். Force என்பதை அனார்க்கிஸ்ட்கள் சொல்லவில்லை என்றும்  தடுத்து காத்துக்கொள்ளும் அரண் மட்டுமே என்றும் பார்சன்ஸ் வன்முறை குறித்து விளக்குகிறார். மதமோ அரசியலோ பிரச்சனைகளை தீர்க்கப்போவதில்லை என்கிறார். அனார்க்கிசம் என்பது மனிதாபிமானம் நிறைந்த  ஒன்று என்பதால் வந்தே தீரும் என்கிர நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். அனார்க்கிஸ்ட் என்பவன் எவரையும் கட்டுப்படுத்த விரும்பாதவன். எவர் கட்டுப்பட்டிற்கும் உட்படாதவன். அவர்கள் மனிதனுக்கு தளையை ஏற்படுத்தும் சங்கிலையை உடைத்து சுதந்திரமாக இரு. மகிழ்ச்சியாக இருப்போம் என்பவர்கள் என்றார் பார்சன்ஸ்.
1886ல் சின்சினாட்டி, ஒகியா கூட்டங்களுக்கு சென்று 8 மணிவேலை இயக்கங்களில் பன்கேற்று மே 4 அன்றுதான் சிகாகோ பார்சன்ஸ் திரும்பினார். பார்சன்ஸ் துணவியார் தையல் தொழிலாளர்களை திரட்டிக்கொண்டிருந்தார். அன்று மதியம்தான் ஹேமார்க்கெட் கண்டனகூட்ட செய்தி அவருக்கு சொல்லப்படுகிறது. முதல்நாள் மெக்கார்மிக் போலீஸ் தாக்குதலை அவர் அறிகிறார்.  இரவு வேறு ஒரு கூட்டத்திற்கு போகவேண்டியிருப்பதாலும், மெக்கார்மிர்க் போலீஸ் உதவியுடன் கூட்டத்தை கலைத்துவிடுவர் என்பதாலும் தான் வரவில்லை என்ற செய்தியைத்தான் அவர் முதலில் அனுப்புகிறார். பார்சன்ஸ் குடும்பத்தார் 6 வயது மகன், 4 வயது மகளுடன் வெளியே இரவு 8 மணிக்கு வருகின்றனர். டைம்ஸ் பத்ரிக்கை நிருபர் கூட்டத்திற்கா என்கிறார். நான் பேசப்போகவில்லை என்றே பார்சன்ஸ் பதில் தருகிறார்.
அமெரிக்கன் குரூப் ஆப் இண்டெர்னேஷனல் கூட்டத்திற்கு வாடகை காரில் குடும்பத்தார் பயணிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ஸ்பீஸ் மட்டும்தான் இருக்கிறார். கூட்டம் அதிகமாக இருக்கிறது. வரவேண்டும் என்கிறார்கள். நடந்துகொண்டிருக்கும் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கே விரைகிறார் பார்சன்ஸ். கூடியிருந்தவர்களிடம் கருத்துக்களை வைக்கிறார். முடிக்கும் தருவாயில் பீல்டன் வருகிறார். பார்சன்ஸ் இறங்கி மனைவி குழந்தைகள் இடத்திற்கு வந்து அமர்கிறார்.
மழை துவங்கியது. கூட்டம் கலைய ஆரம்பிக்கிறது.  பெரும் சத்தம் கேட்கிறது. போலீசார் சுடத்துவங்கின்றனர். கலவர பூமியாகிறது ஹேமார்க்க்கெட். வழக்கு போடப்படுகிறது. ஆரம்பத்தில் தப்பி சென்றாலும் சரண் அடையத்தயார் செய்தியை பார்சன்ஸ் அனுப்புகிறார். சரண் அடைகிறார். எடுத்துவைக்கப்பட்ட நியாயங்கள் ஏதும் எடுபடவில்லை. சம்பவத்திற்காக அல்லாமல் அவர்கள் கொண்ட சித்தாந்தத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சுதந்திரபூமி எனப்பட்ட அமெரிக்காவில் எண்ணங்களுக்கு சவகுழிகள்தான் போலும். பார்சன்ஸ் பொறுத்தவரை கூட்டத்தில் குண்டு எறிந்தவன் நியுயார்க் நகரத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டவன் . கூட்டப்பகுதியிலேயே இல்லாத மற்றவர் மீது வழக்கு தண்டனை ஏன் என்ற கேள்வியை பார்சன்ஸ் எழுப்பினார்.
பார்சன்ஸ் துணைவியார் லூசி பார்சன்ஸ் தன்னளவில் புகழ்வாய்ந்த புரட்சியாளராக இருந்தவர். அவரும் அனார்க்கிசத்தில் ஈர்ப்புகொண்டு உரையாற்றி வந்தவர். பத்ரிக்கைகளில் எழுதியவர். அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் என்றும்- இல்லை என்றும் அவரைப்பற்றி முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன. லூசிதான் சிகாகோ தியாகிகளின் உரைகளை தொகுத்து வெளியிட்டார். 1911 பத்தாயிரம் காப்பிகள் அத்தொகுப்பு விற்றுவிட்டதாகவும், அடுத்த 6வது பதிப்பில் 12000 புத்தகங்கள் கொணரப்போவதாகவும் லூசி தெரிவித்திருந்தார்..லூசி தன் இரு குழந்தைகளுடன் கடைசியாக கணவருக்கு விடைகொடுக்கலாம் என பார்சன்ஸ் தூக்கில் ஏற்றப்படும் நாளின் காலையில் பார்க்க சென்றார். குழந்தைகளாவது தந்தையிடம் ஆசி பெறட்டும் என வேண்டினார். அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்போது அவர் முடிவெடுத்தார்.. வாழ்நாள் முழுதும் போராளியாக தொடர்வேன் என்று. அப்படியே அவர் வாழ்ந்தார். 1942ல் அவர் மறைகிறார்.

என் துணைவி அற்புதமானவர்- தைரியமானவர்- நேர்மையான அறிவிற்சிறந்த குணக்குன்று என்றார் பார்சன்ஸ். ஹேமார்க்கெட் சம்பவம் முதலாளித்துவ அரசின் காட்டுமிராண்டிதனத்தை அரக்கமுகத்தை மக்களுக்கு காட்டிவிட்டது. நம்மை ஒடுக்குவதற்கு அவர்களுக்கு சட்டம் உரிமம் (Law is License)  என்றார் பார்சன்ஸ் பேச்சுரிமை கருத்துரிமைக்காக 5 தொழிலாளர் தலைவர்கள் மரணிக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment