Skip to main content

Comrade Professor தோழர் ஹிரன்முகர்ஜி 2


II
மனிதன் தான் நினைத்தபடி வரலாற்றை உருவாக்கிவிடமுடியாது. அதே நேரத்தில் மனிதன் இல்லாமல் வரலாறும் உருவாவதில்லை என மிக நிதானமாக பேசியவர் ஹிரன். சோசலிசம் தவிர்க்கமுடியாது என மார்க்சியர்கள் பேசுவது மனிதகுலத்தின்பாற்பட்ட நம்பிக்கை அடிப்படையில்தான் என்கிறார் ஹிரன். தவறுகளிலிருந்து மீள்வதும், நீண்ட தொடர் போராட்டங்களையும் கொண்ட பாதையது என்கிறார். 1871ல் குகல்மேனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தை குறிப்பிடுகிறார் ஹிரன். தொழிலாளர்கள்  50 ஆண்டுகள்கூட சிவில் உலகயுத்தங்களை காநேரிடும் என்றார் மார்க்ஸ்.. ரேமண்ட் ஆரன் போன்றவர் புத்திஜீவிகளுக்கு மார்க்சியம் அபின்போன்றது என கிண்டல் செய்ததை கடுமையாக விமர்சித்தார் ஹிரன். தேசவிடுதலையின் குரலாகவும் உலகளாவிய சிந்தனையாகவும் சோசலிச சிந்தனைகள் மாறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

புரட்சி என்பது நேர்கோட்டு விஷயமல்ல என்பதையும், கணித வாய்ப்பாட்டுமுறையுமல்ல என்றும் ஹிரன் விளக்குகிறார். ஜே டி பெர்னால் சொல்லியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். Get communism first and argue about it afterwards. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒற்றுமைக்காக பேசப்பட்ட புகழ்வாய்ந்த ஒன்றாக இதை புரிந்துகொள்ளலாம். மெர்லி பாண்டி எச்சரித்த ஒன்றையும் அவர் சொல்கிறார். Men get bored with what is constituted and completed. சோசலிச ஆட்சி வந்தால் எல்லாம் நிறைவேறிவிடும் என்கிற மொத்த தத்துவ பார்வைக்கு எச்சரிக்கையாக இது இருந்திருக்கவேண்டும்.
ஸ்டாலின் நூற்றாண்டு குறித்த கட்டுரை ஒன்றை ஹிரன் எழுதியிருந்தார். அதில் ஸ்டாலின் மேற்கோள் ஒன்றையே காட்டுகிறார். Leaders may come and go, only the people are eternal. ஸ்டாலின் மீதான விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் சிந்த பங்களிப்புகளை மறைத்துவிடக்கூடாது என கருதினார் ஹிரன். வரலாற்றின் தீர்ப்புகளை மட்டுமே தான் அமுல்படுதியவனாக இருந்தேன் என ஸ்டாலின் பேசியதை அவர் சொல்கிறார். கட்சி செயலாராக இருந்தபோது பி சி ஜோஷி வேடிக்கையாக பேசியதை ஹிரன் குறிப்பிடுகிறார். லெனினுக்காக மார்க்ஸ் எழுதினார். ஸ்டாலினுக்காக லெனின் எழுதினார், நமக்காக ஸ்டாலின் எழுதியிருக்கலாம் .  அனகோலி பிரான்ஸ் சொல்வார். கடவுளுக்கு சிக்கல் இருக்கிது. அவரின் விருப்பங்களை மனிதன் மூலம் அவர் நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஹிரன் இது சோசலிசத்திற்கும் பொருந்தட்டுமே என்பார். எம் என் ராய் நமது காலத்தில் மகத்தான மனிதன் ஸ்டாலின் என சொல்லிவிட்டு Great man need not be Good Man என்றார். லெனினுக்கு பின்னர் சோவியத் கட்டுமானத்தில் ஸ்டாலின் தந்த பங்களிப்பை குறைத்துவிடக்கூடாது என்பதில் ஹிரன் அழுத்தம் தந்தார்.
டிராட்ஸ்கியை ஹிரன் விமர்சித்தாலும் டிராட்ஸ்கி, புகாரின் எழுத்துக்கள் வெளி உலகிற்கு கிடைக்காமல் போகிவிடக்கூடாது என கருதினார். அவர்களின் எழுத்துக்களும் கிடைக்கப் பெறவேண்டும் என்றார். NO UNPERSONING என்கிற அழகான பார்வையை ஹிரன் முன்வைத்தார். ஸ்டாலின் கூட்டுமுடிவுகள் என்பதிலிருந்து விலகி சென்றார் என்றபோதும் அனைத்திற்கும் ஸ்டாலினை காரணமாக்குவதையும் ஏற்கமுடியவில்லை என்றார். அவரை சுற்றியிருந்தவர்கள் நடவடிக்கை பரிசீலிக்கப்படாமல் போகிவிடுகிது என்பது அவரது கருத்தாக இருந்தது. ஸ்டாலின்தான் இன்றைய லெனின் என்கிற பேச்சை மிகோயின் தரவில்லையா என்கிறார் ஹிரன். சோசலிச சமுகம் ஸ்டாலின், மாவோவை வழிபாட்டிற்குரியவராக மாற்றியது என்பது அதன் maturity யை காட்டவில்லை என்பது ஹிரன் விமர்சனம். அதே நேரத்தில் வரலாற்றில் பங்களிப்பு செய்தவர்களை  unpersoning  இல்லாமல் செய்வதும் ஏற்புக்குரியதல்ல என்பது அவர் கருத்து.
ஜனநாயகமும் சோசலிசமும் என்கிற கட்டுரை ஒன்றை ஹிரன் எழுதினார். அறியாமைமிக்க மக்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும் அவர்களிடம் செயல்படும் பொதுப்புத்தியை அவர் எடுத்துக்காட்டுகிறார். நமது நாடு 4000 ஆண்டுகளின் கலாச்சார பாரம்பரியங்களை சுமந்து நகர்கிறது என நேரு குறிப்பிட்டதை அவர் தொட்டுக்காட்டுகிறார். உழைக்கும் மக்களை ஆளும்வர்க்கமாக உயர்த்தும் புரட்சியின் முதல் நடவடிக்கை ஜனநாயகத்தின் வெற்றி என கம்யூனிஸ்ட் அறிக்கை பேசியதை அவர் குறிப்பிடுகிறார். பாராளுமன்றவாத விமர்சனம் என்பது நிறுவனங்களை ஒழிப்பதில் அல்ல அவைகளை செயற்படும் கருவியாக மாற்றுவது என்கிறார் ஹிரன். சோசலிசம் என்பது சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதல்ல. சுதந்திரம் என்கிற பெயரில் மனிதவிரோத செயல்கள் நடவாதவண்னம் காப்பது என்று விளக்குகிறார். மேற்கு ஜனநாயகம் பணமூட்டைகளின் அதிகார சேட்டைகளும்  துஷ்பிரயோகமும் என விமர்சித்தார் ஹிரன்.
இந்தியாவில் சமத்துவ சிந்தனை மரபுகள் என்கிற கட்டுரை ஒன்றை அவர் எழுதினார். இந்தியாவில் பொருள்முதல்வாத சிந்தனை வர்ச்சியை அதில் எடுத்துரைக்கிறார். சார்வாகர், லோகாயதம், நியாயம், வைசேசிகம், சாங்கியம்,  புத்தம், ஜனம் பற்றி அவர் பேசுகிறார். இவ்வாழ்வை துறத்தல் என்பதுமட்டுமே கொண்டாடப்பட்டு அமுலாகியிருந்தால் இந்திய வரலாறு இவ்வாறு இருந்திருக்காது என்கிறார். வேதம் அன்றாட வாழ்வின் பல அமசங்களை பாடுகிது. சூரியஉதயம், பெண்முகம்,  தாய்மை, சொர்க்கம், வானம், பூமி, தண்ணீர், தாவரம் செடிகள், கடவுள், பிரபஞ்சம் அனைத்திலும் அமைதி அதன் பாடுபொருட்களாக இருந்தன. உபநிடதங்களும் உலகளாவிய விஷயங்களை பேசின. உலகை துறத்தல் என்பது மட்டுமே இந்தியாவின் தனித்தன்மை என்பது சரியல்ல என விளக்குகிறார் ஹிரன்.
T.S எலியட் DAMYATA, DATTA, DAYADHWAN (Self Control, Charity, Compassion) என்பதை பிரஹதாரண்ய உபநிடத்த்திலிருந்து எடுத்துக்கொண்டதாக ஹிரன் தெரிவிக்கிறார். பண்டைய இந்தியாவில் pessimism passivity இல்லை என்கிறார். மகாபாரதம்கூட வறுமையை மிக மோசமாக   death by degrees என சொல்கிறது. மார்க்கண்டேயபுராணம் எனக்கு ராஜ்யமோ, சொர்க்கமோ, மறுபிறப்போ விருப்பமில்லை. அனவரின் துன்பமில்லாத வாழ்க்கைதான் விருப்பம் என்றது. ரிக்வேதம் தனக்கு மட்டும் உணவு சமைப்பவனை பாவி என்றது.  வசிஷ்டர் வட்டி பாவம் என சொன்னதாக ஹிரன் குறிப்பிடுகிறார். இவற்றில் நாம் விஞ்ஞான சோசலிச சிந்தனைகளை தேடிக்கொண்டிருக்கமுடியாது எனவும் எச்சரிக்கிறார் ஹிரன்.
அமிர்குஸ்ரு, அரவிந்தர் என பலரின் மேற்கோள்களை ஹிரன் எடுத்தாள்கிறார். கதரியக்கத்தை(Ghadar party) துவங்கிய லாலா ஹர்தயால் மார்க்சை ரிஷி என அழித்து அறிமுகப்படுதியதையும் அவர் தெரிவிக்கிறார். விவேகானந்தர் Gospel of Equality பேசியது, காந்தி, தாகூர் பேசியவை என பலவற்றை சுட்டிக்காட்டுகிறார் ஹிரன். சுபாஷ் தனது Indian Struggleல் சம்யவாத் என பாசிசம்- கம்யூனிசம் கலப்பு இணைப்பு என பேசியதையும் அவர் சொல்கிறார். நேருவின் பாபியன் சோசலிச பார்வையை விவரிக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா சாட்சி- சுய நம்பிக்கை என்கிற கட்டுரை ஒன்றை அவர் எழுதியிருந்தார். இந்தியாவில் மார்க்சிய சிந்தனைகள் விடுதலை இயக்க சூழலில் பரவியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். ஆக்ஸ்போர்ட் நண்பர்கள் செல்வாக்கும் ரஜினிபாமிதத் வகுப்புகள் கட்டுரைகளும் தங்களைப் போன்றவர்களை ஈர்த்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். ஹிரன்முகர்ஜி ஆந்திரா பல்கலைக்கழகம் வந்தடைந்தவுடன் அங்கு இருந்த ஏராள சோசலிச புத்தகங்களை கற்க வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் பெருமுயற்சியால் புத்தகங்கள் வாங்கப்பட்டிருந்தன. பிறகு வந்த சி ஆர் ரெட்டி என்பார் அனைத்தும் ஆபத்தானவை என அவற்றை அப்புறப்படுத்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் தடுக்கவில்லையெனில் ஹிரன்முகர்ஜியும் வெளியேற்றப்பட்டிருப்பார்.
1964 கட்சி உடைகின்ற தருணத்தில் அதற்காக மிகவும் வேதனைப்பட்டவர்களில் ஹிரனும் ஒருவர். படிண்டா- ஜலந்தர் காலத்தில் கட்சி ஒன்றுபடவேண்டும் என்பதற்காக மெயின்ஸ்ட்ரீம் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அவர் கட்டுரைகள் எழுதினார். குற்றங்களை கண்டுபிடித்து பேசுவது எளிதானது. இருவரும் கூட்டாகவோ, தனித்தனியாகவோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற எங்கே தவறிப்போனோம் என்பதை கண்டறிந்து சரி செய்துகொள்ளவேண்டும் என்றார். 1964 உடைவிற்கு பின்னரான 1967 நக்சல்உடைவை பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். மாவோ, செகுவாரா என்பவர்கள் பேசியதை துண்டுதுண்டாக பார்த்துக்கொண்டு எடுத்துக்காட்டி சில இளைஞர்கள் செயல்பட்டுவருவதையும் அவர் பேசுகிறார். காங்கிரஸ், ஜனதா என்கிற அனுபவங்களையும் கணக்கில்கொண்டு இரு கட்சிகளும் தங்களை நேர் செய்துகொள்ளவேண்டும் என்கிற வேண்டுகோளை அத்தருணத்தில் ஹிரன் வைத்தார்.  கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இரத்த சம்பந்த சகோதரர் மத்தியில் கருத்துவேறுபாடு வரலாம், நாம் யாருக்காக போராடுகிறோமோ அவர்களின் நலனை சேர்ந்துள்ள அனுபவங்களை கணக்கில் கொண்டு மனங்களை ஒன்றிணக்க வேண்டும் என்றார் ஹிரன்.

கட்சியின் வளர்ச்சிகட்டங்களை அசைபோடுகிறார் ஹிரன். ஜோஷி போன்றவர் அக்காலங்களில் வெளியேற்றம் குறித்து வேதனைப்பட்டார் . ஜோஷி, அஜாய், புபேஷ் என்கிற மூன்று ஆளுமைகளை அவர் தனது கட்டுரைகளில் பதிவிடுகிறார். ஜோஷி எங்கு இருக்கிறாரோ அங்கு இயக்கம் தோன்றிவிடும் என்கிறார். கட்சியில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களை அவர்  அவரது உயர் மொழி ஆளுமையில் வெளியிடுகிறார். As often happens in our movement’s history, swings of the policy’s pendulum were found  too undialectical to bring out desired results  என எழுதினார். ஜோஷி காலம் பிரில்லியண்ட் சாப்டர் என அவர் எழுதியிருந்தார். கட்சி வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தீர்ப்பிடல்கள் குறித்தும் அவர் அனுபவமொழியை பதிவிடுகிறார். Experience which involves bad judgments helps arrival at right judgment. There is never full stop to things, however, and the struggle reflects life with its anomalies, its contradictions, all to be tackled in good time, courageously but not too precipatedly… கட்சி பொறுப்பில் பணியாற்றக்கூடிய அனைவருக்கும் தேவைப்படும் அறிவுரையிது.
Reflections and Recollections 1952-77 என்பதில் : "The Left, however, for all its faults and factions and errors is no minor factor in India. There is no reason for it to fear it has reconciled to being a poor relation of the rich `vested interests' parties now dominant in the national scene”  என்கிற நம்பிக்கையை அவர் எடுத்துரைத்தார். தனது 94 வயதிலும் அவர் 2002 குஜராத்படுகொலைகள் குறித்து அவர் மிகுந்த கவலையை வெளிப்படுத்தி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார்.

எவர் குறித்தும் அதீத மதிப்பீடுகளை உருவாக்கி தீர்ப்பு தருவதை சரியானதாக அவர் கருதவில்லை "I hesitate to judge people too sternly: one of my favourites is the Somerset Maugham character who said he did not fancy one particular job, namely, `God's' on Judgment Day." தனக்கும் கட்சிக்கும் உள்ள உறவைப்பற்றி அவர் குறிப்பிட்டுக்கொள்ளும்போது  I have made my home only as an adopted  child in the Communist Party and the movement around it. I might have wandered but this has been my home என அவர் தெளிவுபடுத்தினார். கல்கத்தா மருத்துவமனை ஒன்றில் தனது 97வது வயதில் ஜூலை 30 2004ல் அவர் மறைந்தார். ஹிரனின் மார்க்சிய எழுத்துக்கள்  இளம் தலைமுறையினரை  சென்றடைய காத்துக்கொண்டிருக்கின்றன.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு