Skip to main content

May Day Martyrs Of Chicago சிகாகோ மேதின தியாகிகள் 4

அடால்ப் பிஷர் (1858-87)

                  -ஆர்.பட்டாபிராமன்


அடால்ப் பிஷர் ஜெர்மனியில் மிக முக்கிய வர்த்தக நகரான ப்ரெமெனில் 1858ல் பிறந்தவர். மற்ற சாதாரண  குழந்தைகளைப்போன்றே தனது வாழ்க்கையும் துவங்கியதாக பிஷர் தெரிவித்தார். பள்ளிப்படிப்பை 9 ஆண்டுகள் படித்துவிட்டு தனது 15 ஆம் வயதில் அவர் அமெரிக்கா சென்றார். தனது சகோதரருடன் பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் கம்போசர் பணியில் சேர்ந்தார். அவர்கள் ஜெர்மன் வாரப்பத்ரிக்கை ஒன்றையும் கொணர்ந்தனர். பின்னர் விதி தன்னை 1883ல் சிகாகோ அழைத்து சென்றதாக குறிப்பிடுகிறார் பிஷர்.
1879 முதல் ஜெர்மன் டைபோகிராபிகல் சங்கத்தில் அவர் இருந்தார். தனது திருமண வாழ்க்கை மூன்று குழந்தைகளுடன் அவர் வாழத்துவங்கினார். ஜெர்மன் பத்ரிக்கை அர்பெய்ட்டர் ஜெய்டுங்கில் கம்போசாராகவும் இருந்தார். சிறிய வயதில் இருந்தே சோசலிச கொள்கைகள் குறித்த செய்திகளால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஜெர்மனியில் படிக்கும் காலத்தில் வரலாற்று ஆசிரியர் சோசலிசம் குறித்து விளக்குவார். எதிர்மறை கருத்துக்கள்தான் அவர்களுக்கு சொல்லித்தரப்பட்டன. பிரஞ்சுக்காரர்களை காலிகள் என ஆசிரியர்கள் திட்டிவந்தனர். கஷ்டப்பட்டு உழைத்து செல்வம் சேர்த்தவர்களிடமிருந்து  சோம்பேறிகள் தட்டிப் பறிக்க நினைக்கிறார்கள் என்கிற கருத்தும் சோசலிஸ்ட்கள் பற்றி சொல்லித்தரப்பட்டது..
ஆசிரியர்கள் பேசியதை தந்தையிடம் கேட்டபோது அவர் பல மாளிகை வீடுகளை காட்டி இவர்கள் அனைவரும் எவ்வித உழைப்பு இல்லாமலும் நன்றாக சுகபோகங்களுடன் வாழ்பவர்கள்-சோசலிஸ்ட்கள் பற்றி பள்ளிக்கூடம் சொன்ன கருத்து தவறு என தந்தை தெளிவுபடுத்தினார். தேனீக்கள்போல் சுறுசுறுப்பாக இயங்கி பொழுதெல்லாம் உழைப்பவர்கள் தங்களுக்கு என்று மிக குறைந்த வசதிகளையே பெறுகிறார்கள் என்பதை பிஷர் உணரத்துவங்கினார். நான் தவறா? இவ்வுலகம் தவறாக உள்ளதா என்ற கேள்வி தன்னை அலைக்கழித்ததாக பிஷர் குறிப்பிடுகிறார்,
தொழிலாளர்கள் தங்கள் நிலைகளை ஏன் உணராமல் இருக்கிறார்கள்- தங்கள் சூழல் குறித்து கோபமடையாமல் இரைஞ்சும் நிலையில் இருக்கிறார்கள் என்பது அவரை தொந்திரவு செய்தது. பிஷரின் உறவுக்கார இளைஞன் தனது மில்லியனர் சர்க்கரை ஆலை அதிபர் குறித்து பெருமையாக பேசுவார். அவர் ஆயிரக்கணக்கானவர்க்கு வேலை கொடுத்த வள்ளல் என்பார். தொழிலாளர் மூலையெல்லாம் இப்படி மோல்ட் செய்யப்பட்டுள்ளதே என பிஷர் நினைக்கத் துவங்கினார். oh stupid fools slaves  என வாய்விட்டு கத்த துவங்கினார்- human drones எனும் பதத்தை பிஷர் பயன்படுத்துகிறார். வாழ்க்கை எனும் பள்ளியிலே உழைப்பவர்கள் கற்று முன்னேறுவதை ஆள்பவர்கள் விரும்பவில்லை என்பது அவரை உறுத்த துவங்கியது.
வியர்வை சொட்ட  வேலை செய்- மண்டியிட்டு வணங்கு- அமைதியாக கீழ்ப்படி என்பதைத்தான் கடவுளும் விரும்புகிறாரா என கேள்வி எழுப்பினார் பிஷர். Good, honest, law abiding என தட்டிக்கொடுத்து அவர்கள் சுரண்டுகிறார்கள் என்பது தெரியவில்லையா என்றார். கூலிஅடிமை சுரண்டல் என்கிற அரசியல் பொருளாதாரம் பேசினார். இந்த ஏழை குரங்குகள் எதுவும் அறிந்து கொள்ளாமல் இப்படி உழைக்கின்றனவே என்ற கடுங்கோபம் அவரிடம் இருந்தது.
மெத்தபடித்த பத்ரிக்கையாளர்கள் அனார்க்கிசம் குறித்து தவறாக சித்தரிக்கிறார்கள் என்றார் பிஷர். அது சுரண்டலை வேரடி மண்ணோடு சாய்க்கும் முறை என்றார். IWPA சர்வதேச உழைப்போர் மாநாடு பிட்ஸ்பர்க் அக்டோபர் 1883ல் கூடி மாற்றத்திற்காக கூறிய மானிபெஸ்டோவை பிஷர் மக்களிடம் எடுத்துரைத்தார் பிஷர். சுதந்திர சமூகம், மதசார்பற்ற சமுகம் ஆண் பெண் நிகரான சமூகம், அரசாங்கமற்ற சுய ஒழுங்கு மக்கள் கம்யூன்கள் மூலம் சகலவகை ஒத்துழைப்பு உறவுகள் என  மாநாடு பேசியதாக பிஷர் எடுத்து சொல்கிறார்.
கிறிஸ்துவம் என்பது எப்படி பொதுவான ஒன்றாக கத்தோலிக்கர், லுத்ரன், பாப்டிஸ்ட் என்கிற பிரிவுகளின் பொதுப்பெயராக இருக்கிறதோ அப்படித்தான் சோசலிசம் என்பதும் பொதுவான சொல். அனார்க்கிசம் சோசலிசம் படைக்கவே விழைகிறது. சோசலிஸ்ட்கள் எல்லாம் அனார்க்கிஸ்ட்களாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனார்க்கிஸ்ட் என்றால் அவன் சோசலிஸ்ட் என புரிந்துகொள்ளவேண்டும் என்றார் பிஷர்.  communistic anarchists- politically anarchists, economically communists soocialists  என்று தங்களை பார்க்கவேண்டும் என பிஷர் விளக்கினார். Abolition of political authority State  என்பதற்கு  அனார்க்கிஸ்ட்கள் பாடுபடுவதாகவும் எந்த வர்க்கமாக இருந்தாலும் (உழைக்கும் வர்க்கத்தின் பெயரில் இருந்தாலும்) பிறரை ஆள அனுமதியில்லை என்கிற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தனர். Communistic- cooperative method of production என்கிற பொருளாதார ஏற்பாட்டை அவர் விளக்குகிறார்.
அனார்க்கிஸ்ட்களில் புகழ் வாய்ந்த பிரெளதானிடமிருந்து தாங்கள் எங்கு வேறுபடுகிறோம் என்பதையும் பிஷர் சுட்டிக்காட்டுகிறார். சமுக ஜனநாயகவாதிகள் பேசும் அரசு சோசலிசம் அனார்க்கிஸ்ட்கள் ஏற்பதில்லை என்கிறார் பிஷர். அனார்க்கிசம் என்ன என்பதை அவர் விளக்குகிறார். He who rules is a tyrant, and he who submits is a slave என்பது தங்கள் கருத்து என்றார் பிஷர். மனிதர்கள் பிர மனிதர்களை பெரும்பான்மை விருப்பம் என்கிற பெயரில் ஆள்வதென்பதெல்லாம் இயற்கைக்கு விரோதமானது என்பதில் அனார்க்கிஸ்ட்கள் உறுதிபட நின்றனர்.
பிஷர் தனது வழக்கில் தண்டனை பெற்று தாங்கள் எதற்காக நின்றோம் அது குற்றமா என்கிற விவாதத்தில் மேற்கூறிய கருத்துக்களை முன்வைத்தார். Yes, the anarchists demand the reinstallation of the disinherited members of the human family. Natural, that the priveleged classes hate us என எழுதினார் பிஷர். அனார்க்கிஸ்ட்களைப் பார்த்து பாமரத்தனமாக யார் நம்மை ஆள்வது அவரவர் தனியன் என்றால் எப்படி என கேட்கிறார்கள். இது தவறு. மனித இயல்பே உறவாடிக்கொள்வது தான், அது சுதந்திர விருப்பம் சார்ந்து இருக்கவேண்டும் என்கிறார் பிஷர். legalised property system என்கிற முதலாளித்துவ சுரண்டல்முறை ஒழிப்பு என்பதையும் அவர் பேசுகிறார்.
அனார்க்கிஸ்ட்கள் தாங்கள் விழையும் சமுகத்தை எப்படி நடைமுறைக்கு கொணரமுடியும் என்பதற்கு ஏராள விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தாலும் தான் அனார்க்கிசம் மீது மிக நம்பிக்கையுள்ளவன் என்கிற வகையில் அதை  விளக்குவதாகவும் பிஷர் எழுதுகிறார்.
ஹேமார்க்கெட் சம்பவத்தன்று என்ன நிகழ்ந்தது என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். மே 3 1886 மெக்காமிர்க் போலீஸ் தாக்குதலை கண்டித்து 4 ஆம் தேதி கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கான அறிக்கைகளை  பிஷர் வெளியிடுகிறார். கூட்டம் மிக அமைதியாக நடந்தது குறித்தும் பீல்டன் பேச வருகையில் மழை வந்து மக்கள் பக்கத்து அறைக்கூடம் ஒன்றில் ஒதுங்க துவங்குவதையும் பிஷர் சொல்கிறார். zepf saloon என்கிற இடத்தில்தான் இருந்ததாகவும் பார்சன்ஸ் கண் பார்வையில் இருந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். சத்தம் கேட்கிறது. அச்சலூன் பூட்டப்படுகிறது, போலீசார் சுடுகின்றனர். சலூனுக்குள் புல்லட்களின் சத்தம் கேட்கிறது 15 நிமிடங்கள் உள்ளேயே அவரும் நண்பர்களும் இருக்கின்றனர்.. அடுத்தநாள் காலை 10 மணி அளவில் அர்பெய்ட்டர் ஜெய்டுங் பத்ரிக்கை அலுவலகத்தில் பிஷர் கைது செய்யப்படுகிறார்.
மேயர் ஹாரிசன், போலீஸ் போன்பீல்ட் ஆகியோர் குறித்தும் அவர் பதிவுகளை தருகிறார். அக்குண்டுவெடிப்பு நிகழ்வில் சம்பந்தப்படாத தனக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிமுறையை அவர் கேலி செய்து பேசுகிறார். குண்டுவெடிப்பின்போது தான் சலூனில் இருந்த சாட்சியங்கள் இருந்தும் தனக்கு மரணதண்டனை தரப்பட்டுள்ளது குறித்து அவர் எழுதினார்.  Schnaubelt என்பவன் குண்டெறிந்தான்- அது ஏற்பாடு  என்பதெல்லாம் தெரிந்தும் தாங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக வாய் அடைக்கப்படுகிறோம் என்ற உணர்வுதான் பிஷரிடம் மேலோங்கியிருந்தது.
ஆகா அற்புதமான முடிவு. ஏழு போலீஸ்காரர்கள் அச்சம்பவத்தில் இறந்துள்ளனர். ஆகவே 7 பேரை தூக்கில் இட்டு பழி தீர்த்துக்கொள்ளும் சட்ட நடைமுறைகள் என  தன் மனவேதனையை கிண்டலாக வெளிப்படுத்தினார் பிஷர். எப்படிபட்ட 7 பேர். இந்த சுரண்டும் முதலாளித்துவ சமுக ஒழிப்பிற்கு குரல் கொடுப்பவர்கள்- ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமான வாழ்க்கையை விழைந்தவர்கள்.. அவர்களை சமுகத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் என சொல்லி மரணதண்டனை என்று கோபக்கனலை வீசினார் பிஷர்.
தொழில்வகை பொய்யர்களையும், வாடகை எடிட்டர்களையும் முதலாளித்து ஊதுகுழல் மீடியாக்களையும், உண்மையை நசுக்குபவர்களையும் எதையும் ஏற்க செய்வது கடினமானது. ஆனால் நேர்மையான பத்ரிக்கையாளர்களே, உழைக்கும் பத்ரிக்கையாளர்களே அனார்க்கிசம் குறித்து சொல்லப்படும் கட்டுக்கதைகளை  அறிவார்ந்த நீங்கள் நம்பாதீர்கள். அதுதான் எங்கள் வழக்கிலும் உள்ளது என்கிற வேண்டுகோளை தனது மரணத்திற்கு முன்பாக முன்வைத்தார் பிஷர்.

எங்களுடைய மரணத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பற்றுடன் அனார்க்கிசம் குறித்து படிப்பார்கள். தெரிந்து கொள்வார்கள் என பிஷர் தன் நம்பிக்கையை பதிவு செய்தார். ஜெர்மனியில்  அவர் தந்தை அச்சமற்று இரு என சொல்லிக்கொடுத்தார். அவரின் அறிவுரைக்கு உண்மையாக எங்களுடைய மரணத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பற்றுடன் அனார்க்கிசம் குறித்து படிப்பார்கள். தெரிந்து கொள்வார்கள் என பிஷர் தன் நம்பிக்கையை பதிவு செய்தார். ஜெர்மனியில்  அவர் தந்தை அச்சமற்று இரு என சொல்லிக்கொடுத்தார். அவரின் அறிவுரைக்கு உண்மையாக இருக்கிறேன் நான் என்றார் பிஷர்..

Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு