https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, January 27, 2022

புபேந்திரநாத் தத்தா புத்தக மதிப்புரை

 

   தோழர் கே.சுப்பிரமணியன் அவர்களின் புபேந்திரநாத் தத்தா

புத்தக மதிப்புரை

புபேந்திரநாத் தத்தா குறித்த எளிய புத்தகம் ஒன்றை கோவை வழக்கறிஞர் தோழர் கே.சுப்பிரமணியன் கொணர்ந்துள்ளார். இதுவரை புபேந்தர் பற்றி தமிழில் புத்தகம் ஏதும் வரவில்லை என்ற உணர்வு மேலோங்கிய உந்துதலில் தோழர் கே. எஸ் தனது இந்த 80 பக்க சிறு நூலை தமிழர்களின் பார்வைக்கு தனது உழைப்பால் கொடுத்துள்ளார். அவரின் இத்தகைய பணிகள் மென்மேலும் சிறந்து தமிழகம் பயனுற என் வாழ்த்துகள்.




தோழர் கே எஸ் political Bio  என்ற வகைப்பட்டு தனது நூலை உருவாக்கியுள்ளார். புபேந்தர் தத்தா விவேகானந்தரின் சகோதரர். இந்திய விடுதலை- சமூகம் குறித்த அவரது விழிப்புணர்வு பயணம்- தனது கனவை மெய்ப்பிக்க அவர் ஆற்றிய அமைப்பு பயணங்களை தோழர் கே எஸ் தொட்டுக்காட்டுகிறார். அவரது உன்னதமான ஆக்கபூர்வ நூல்கள் குறித்தும் சில செய்திகளை கே எஸ் தனது நூலில் தருகிறார்.

வங்கப்புரட்சிகரக் குழுக்கள்- அனுசீலன் சமிதி யுகாந்தர் பத்திரிகைகள் , ஜெர்மானிய தொடர்பு, மாஸ்கோ பயணம் அங்கு லெனின் உட்பட கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் உறவேற்படுத்திக்கொள்ளல், சட்டோ பெர்லின் குழு, எம் என் ராய், கதர் குழுக்கள் என வெளிநாடுவாழ் புரட்சிகர குழுக்களுடன் தொடர்பு, இந்தியா திரும்பி இந்திய சமூகம், இந்திய நிலமான்ய உறவுகளின் இயக்கவியல், இந்து சொத்து சட்டங்கள், விவேகானந்தர் பற்றிய ஆய்வுகள் என அவர் ஏராள செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றியதை அரசியல் சூழலுடன் தோழர் கே எஸ் சொல்லிச் செல்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாக- சிந்தனையாளர்களாக அறியப்பட்ட பலருடன் தத்தா இணைந்து பணியாற்றியுள்ளதை தோழர் கே எஸ் புத்தகம் நமக்கு சொல்கிறது.

இந்திய சோவியத் நட்புறவிற்கு அமைப்பு தேவை என்பதை உணர்ந்து அதன் தொடக்ககால செயல்பாட்டிற்கு பெரும் உந்து சக்தியாக புபேந்தர் இருந்ததை கே எஸ் விளக்கமாகத் தருகிறார். இதன் பொருட்டும் தனது அணுக்கமாக அன்றாட செயல்பாட்டுத்தோழராக இருக்கும் இஸ்கப் மாநில செயலர் தோழர் இராதாகிருஷ்ணன் அவர்களை இந்நூலுக்கு பொருத்தமான முன்னுரை வழங்கச் செய்துள்ளார்.

புபேந்தர் பொதுவாக வங்க புரட்சிகர போராளிகள் வரிசையில் வைத்துப்பார்க்கப்படுகிறார்.. கட்சிக்கெல்லாம் அப்பாற்பட்ட அவரது மார்க்சியம் சார்ந்த பயிற்சி அதன் வழிமுறைகளில் ஆய்வு என்பது முன்னோடி இந்திய மார்க்சிய ஆய்வாளர் வரிசையில் அவருக்கும் முன் இருக்கையை தருகிறது எனலாம். அவரை இந்தியாவின் ஆரம்ப மானுடவியலாளர்களில் ஒருவர் என்கிற மதிப்பீடுகளுடன் ஆய்வுகள்  செய்யப்பட்டுள்ளன.

1981ல் அவரது நூற்றாண்டு தருணத்தில் சில செமினார்களுடன் அவரது சிந்தனைகள் பேசப்பட்டு தொடரப்படாமல் சென்றது. அவர்  dead saint of politics’  ஆக்கப்பட்டாரா என்கிற கேள்வியுடன் நாம் விரிவாக ஆழமாக அவரைத் தேடவேண்டியிருக்கிறது. அவர் தன் ஆய்வுமுறைக்கு இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் என்பதையே அடிப்படையாக கொண்டிருந்தார். இந்திய நிலமான்ய பொருளாதாரம் , இந்தியாவில் சாதிய முறைகள், இந்திய சமயம், மகாயானம் குறித்து, இந்து சொத்துரிமை போன்ற அவரது ஆய்வுகள் மீளாய்வுக்கும் பொது விவாதத்திற்கும் கொண்டுவரப்படவேண்டியனவாக இருக்கின்றன.

 அவரது சமூகவியல் ஆய்வு என்பது இருக்கும் நிலைமைகளை குறிப்பதுடன் நில்லாது சமத்துவ சமூகத்திற்கான மாற்றம் என்பதை நோக்கிய முன்வைப்புகளாகவும் இருந்ததாக நாம் அறியமுடிகிறது. சகோதரர் விவேகானந்தர் மற்றும் குடும்ப பின்னணியின் செல்வாக்கு, இத்தாலி மாஜினியின் செல்வாக்கு, இந்திய சிந்தனா முறைகள், அமெரிக்க மானுடவியலாளர் லெஸ்டர்வார்ட் செல்வாக்கு, மார்க்சியம், ருஷ்ய புரட்சி- லெனின் சிந்தனைகள் என பெரும் செல்வாக்கு மண்டலங்களுடன் புபேந்தர் பயணித்திருந்தார்.

மிக ஆச்சர்யமான முடிவொன்றை தத்தா எழுத்தில் பார்க்கிறோம்  It is the southern people of the Indian Plane who, speaking a dialect of the Indo European language group historically known as Sanskrit have called themselves as Arya...The tribes on the Indian sides of Hindukush and Pamir regions were regarded as a part of the Indo Aryan race and the anthropologists of today find racial similarity between them and the people of the Punjab.

இதை தத்தாவின்  Studies in Indian Social Polityல் பார்க்கலாம். அதே நேரத்தில் ஆர்யர் homogenous racial group  என்பதற்கு நிரூபணம் ஏதுமில்லை என தத்தா வந்தடைவார். ரின்ஸ்லேவின் nasal index concept for social position (status)  என்பதையும் புபேந்தர் ஏற்காமல் விடுத்தார். Studies in Indian social polity  1944ல் வந்த புத்தகம்.

Caste and class may not lie in racial difference may have evolved out of the society itself  என்று பெர்லின் மற்றும் பிரஞ்சு பேராசிரியர்களுடன் தான் நடத்திய விவாதத்தில் தத்தா சொன்னதை இப்புத்தகத்தில் நினைவு கூர்வார். சாதி விவகாரத்தில் இனக் காரணிகள் தொழிற்பட்டதா- அவை தொழில்சார்ந்து வளர்ந்தனவா, இந்தோ ஆர்யர்கள் எவர், பிராமணர்கள் செய்த எதிர்புரட்சி, பண்டைய இந்தியாவில் வர்க்கப்போராட்டம், சூத்திரர்கள் யார் போன்ற பல்வேறு தலைப்புகளில் தத்தா இப்புத்தகத்தில் உரையாடியிருப்பதைப் பார்க்கிறோம். ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட புத்தகமது.

Swami Vivekananda Patriot- Prophet  A study  புபேந்திரநாத் தத்தா 1954ல் கொணர்ந்தார். இப்புத்தகம் குறித்து தோழர் கே எஸ் சில செய்திகளை சொல்லியுள்ளார். தனது தாயாருக்கு சமர்ப்பணம் செய்து விவேகானந்தரின் தேச கட்டுமானப் பார்வையையும்- தேச விழிப்புணர்வு குறித்த அவரது பார்வையையும் தத்தா இந்த ஆய்வில் மேற்கொண்டதாக குறிப்பிடுவதைக் காணலாம். குடும்ப நிகழ்வுகளைப் பொருத்தவரை தனது மற்றொரு சகோதரரான மகேந்திரநாத் தத்தாவைக் கலந்துகொண்டு புபேந்தர் எழுதியுள்ளதாகவும் தெரிவித்திருப்பார். மார்க்சிய phrase களை சுவாமி விவேகானந்தர் மிக சாதாரணமாக சொல்லாடலில் பயன்படுத்தியுள்ளார் என்பது தத்தா தரும் செய்தி.

Dialectics of Land economy of India 1952ல் வந்த புத்தகம்.  Rich are the trustees of the Property of the Poor  எனப்பேசுவதை புபேந்தர்  political obscurantism  என இதில் விமர்சிக்கிறார். இப்படி பேசியது காந்தியடிகள் என நாம் அறிவோம். தத்தா காந்தியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருப்பார். இதில் அவர் வந்தடையும் புள்ளியாக  A conscious and satisfied peasantry is the basis of a prosperous state  என்பதாக இருக்கும். இந்த பிரதியைக் கொண்டு வருபவதில் அவர் பிரஸ் தொடர்பான துன்பங்களுக்கு உள்ளாக நேர்ந்ததை அறியமுடிகிறது. 1948ல் கம்யூனிஸ்ட் பிரஸ் கல்கத்தா பூட்டப்பட்ட சூழலில் இந்தப் பிரதி அங்கே சிக்கிக்கொண்டதாம். அமைச்சர் பிரபுல்லா குமார் சென் உதவியுடன்தான் தத்தா இந்தப் பிரதியை மீட்டுள்ளார். இந்தப் புத்தகம் எழுத தூண்டலாக அவர் லெனினிடமிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட கடிதம் தூண்டுகோலாக இருந்தது. இதை தோழர் கே எஸ் தன் புத்தகத்தில் கொணர்ந்துள்ளார். லெனின் தத்தாவிற்கு 1921ல் எழுதிய கடித வரிகளாக கிடைத்த ஒன்று இவ்வாறாக செல்கிறது.

 Dear Comrade Datta

I have read your thesis. Wes hould not discuss about the social classes. I think we should abide by my thesis on colonial question. Gather stasitical facts about Peasant Leagues if they exist in India

yours

V. Ulianov ( Lenine).

இந்தக் கடித உந்துதலால் 1921 நாக்பூர் காங்கிரஸ் அமர்விற்கு தத்தா தனது குறிப்பை தொழிலாளர்- விவசாயி இயக்கங்களைக் கட்டவேண்டும் எனக்கோரி அனுப்பியதாக எம் பி டி ஆச்சார்யா குறிப்பையும் நாம் பார்க்கமுடிகிறது.

இப்படிப்பட்ட மூத்த மார்க்சிய சிந்தனையாளரான புபேந்திரநாத் தத்தா குறித்து சிறந்த ஆய்வுகள் இந்தியாவில் போதுமான அளவில் இல்லாமல் போனதும் அவை குறித்த பொதுவெளி உரையாடல் அறவே இல்லாமல் இருக்கும் சூழலில் அவரை பொதுவெளிக்கு  rehabilitate  செய்யும் பணியை தோழர் கே எஸ் தமிழ் உலகில் செய்துள்ளது அரும்பணியாகவே பார்க்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment