https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, April 23, 2018

The Idea Of India Suni KhilNani இந்தியா என்கிற கருத்தாக்கம்- தமிழில் அக்களூர் இரவி


The Idea Of India    Suni KhilNani   Penguin Books
இந்தியா என்கிற கருத்தாக்கம்- தமிழில் அக்களூர் இரவி
சந்தியா பதிப்பகம் ரூ 315    பக்கங்கள் 335
சுனில் கில்நானியின் உயர்நடை, பார்வை, விவாதத்திறன் பிரமிக்கவைக்கும். இந்தியாவில் அதிகாரத்தின் வெளி எவ்வாறு சமூகம் என்கிற கட்டுக்கோப்பிலிருந்து அரசியல் அதிகாரம் என மாறிப்போனதின் பிரதியாக அவரின் புத்தகம் எனக்கு விளங்குகிறது. இந்தியா எனும் தேசிய பேரடையாளம், அது ஒரேவகைப்பட்டு சுவீகரித்துக்கொள்ளப்படவில்லை என்பது உண்மையாக இருந்த போதிலும் வங்கம், மராட்டிய வட்டார உணர்வில் இந்திய தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டது என்பதை சுனில் பேசுகிறார். விசாலமான கலாச்சார தேசியம் ஒன்றை வளர்த்தெடுத்துக்கொள்ளமுடியும் என அவர் பேசும்போது அதை வெறும் சொல்லாடலாக மட்டும் அவர் விட்டு செல்வது பிரச்ச்னைகளை உருவாக்கலாம்.  விசாலாமான கலாச்சார தேசியம் என்பதை விளக்க  தனித்த புத்தகம்  ஒன்று தேவைப்படலாம்
 விடுதலைக்கு பின்னர் சிறு அறிவுக்குழாம், டெக்னோகிராட் உதவியுடன் நவீன இந்திய உருவாக்கத்தில் நேரு ஈடுபட்ட கதையாகவும் புத்தகம் இருக்கிறது. விடுதலைக்குப் பின்னரான 50 ஆண்டுகளில் காங்கிரசின் உயர் குணங்களின் வீழ்ச்சி இந்திய நெருக்கடியாக மாறிப்போனதன் பிரதியாகவும் அது செல்கிறது. மாநிலங்கள் சிறுமைப்படுத்தப்பட்டு மைய அதிகாரம் நிறுவப்பட்ட பாதையையும் புத்தகம் பேசுகிறது. ஆங்கில விமர்சகர்களில் சிலர் அவரின் Cities எனும் பகுதி (அவரது நடையை ஒப்பிடுகையில் ) சற்று குறைவான நடையாக இருக்கிறது என்ற கருத்தை சொல்லியுள்ளனர். . ஆனால் அதிலும் கூட  மேற்குலக அடையாளங்கள் ஏதுமற்ற இந்தியாவில் நகரம் அதற்குரிய அமைப்புகளுடன் உருவான கதை அதில் இருக்கிறது. இந்தியாவின் ஒரிஜினல் நகரமயமாக்கத்தின் ஆரம்ப அடையாளமாக அகம்தாபாத் காட்டப்படுகிறது.
இன்றுள்ள அரசியலுக்கு மிக நெருக்கமான ஆய்வாக வாஜ்பாய் ஆட்சிக்கு வருவதற்கு உருவாக்கப்பட்ட சூழல் பேசப்படும் பகுதி இந்துத்வா அரசியல் அதிகார புரிதலுக்கு உதவும். யார் இந்தியன் எனும் பகுதி இப்புத்தகத்தின் அரசியல் ஆன்மவிசாரம் என மதிப்பிடலாம்.  காந்தி, தாகூர், படேல், ஜின்னா, ஆசாத், ராஜாஜி என தலைவர்களின் அணுகுமுறைகள் ஆங்காங்கே பேசப்படுகின்றன.
நேருவின் இந்தியப் புரிதலுக்கும் நவீன உருவாக்கத்திற்கும் நெருக்கமாக சுனில் கில்நானியின் இந்திய கருத்தாக்கம் பின்னப்படுகிறது.  இந்தவகை கருத்துருவாக்கம் நிறைந்த புத்தகங்கள் அரியவகைப்பட்டவை. இதை அக்களூர் இரவி பெரும் உழைப்பை நல்கி தமிழில் தந்துள்ளார். மொழிபெயர்ப்பு உழைப்பால்  சிக்கலான மொழி நடைகளையும் லாவகமாக கையாளும் திறன் அவரிடம் உயர்ந்து நிற்பதை ஆங்கில நூலைப் படிப்பவர்களால் உணரமுடியும்.
ஆங்கிலம் நன்கறிந்த தமிழ்வாசகர்க்கும்கூட  சுனில் கில்நானியின் மிக முக்கிய இந்தப்படைப்பிற்கான இரவியின் மொழியாக்கம்  கூடுதலான இன்னும் சொல்லப்போனால் சரியான புரிதலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு சமூகம் பெரும்பலனை இரவியால், சந்தியா பதிப்பக நடராஜனால் பெற்றுள்ளது. இரவியின் முயற்சியை திறமையை கண்டறிய கீழ்கண்ட ஆங்கில மற்றும் அதற்குரிய தமிழ் பகுதிகள் மாதிரிகளாக விளங்கும், புத்தகம் படிப்பதற்கான ஆர்வத்தையும் தூண்டும்  என கருதுகிறேன்.


Excerpts From The Idea Of India- உரிய பகுதிகள் இந்தியா என்கிற கருத்தாக்கம்
·         Epilogue  The Garb of Modernity
The idea of India was created by such collisions between cultures and politics. These encounters have left Indians with three questions of practical judgement. What possibilities are available to them? What challenges are they likely to face? And what is the significance of the history they are making? Answers to these questions necessarily invite dispute and revision, but the questions themselves are direct, urgent and unavoidable. In posing them, this book has throughout implied that the categories and terms of Western political thought are essential to all judgements about them
முடிவுரை  நவீனத்துவம் என்கிற துகில்
இந்தியா என்கிற கருத்தாக்கம், கலாச்சாரங்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான மோதல்களால்தான் உருவாக்கப்பட்டது. மோதல்களின் போதான இந்த சந்திப்புகள் அனுபவத்தின் அடிப்ப்டையில் முடிவெடுக்கவேண்டிய மூன்று கேள்விகளை இந்தியர்களிடம் விட்டு சென்றன. அவர்களுக்கு கிடைக்க இருக்கும் சாத்தியங்கள் எவை/ சந்திக்க வேண்டியிருக்கும் சவால்கள் எவை/ அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த வரலாற்றின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் விவாதத்தையும் மறுவாசிப்பையும் நிச்சயமாக கொணரும். ஆனால், அடிப்படையில் இந்தக்கேள்விகள் நேரிடையானவை, அவசியமானவை, தவிர்க்கமுடியாதவை
இந்தக் கேள்விகளுக்கான தீர்வுகளை பேசும்போது, மேற்கத்திய அரசியல் சிந்தனைகளின் புரிதலும், சில பிரத்யேகச் சொற்றொடர்களும் மிகவும் தேவை என்பதை இந்த நூல் மறைவாக சுட்டுகிறது.( பக் 320)
·         India’s public life is today riven with conflicting arguments about the appropriate contents of a cultural nationalism; and it will certainly be essential for Indians to create some version of this. This is especially true during a period when so many aspects of India’s varied cultural ecology are being severely tested by their greater exposure to the entrepreneurial talents of domestic and international operators, to forms of ingenious, often callous xploitation. But there is little need to retreat into an anxious and inward exclusivism. India’s past has bequeathed an immensely rich, varied and flexible repertoire out of which an expansive cultural nationalism might be created.
இன்று இந்தியாவின் பொதுவாழ்வு, கலாச்சார தேசியம் என்பதன் மிகச்சரியான உள்ளடக்கம் எது என்பது குறித்த மாறுபட்ட விவாதங்களால் பிளவுண்டிருக்கிறது. இதன் வகைகள் சிலவற்றை இந்தியர்கள் உருவாக்கி வைத்துக்கொள்வது அவசியமானது. இந்தியாவின் பன்முகக் கலாச்சார சூழலின் பல்வேறு பகுதிகள் அதிகமான அளவிற்கு திறந்து விடப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தொழில்முனைவுகளால் நடத்தப்படும் உணர்வற்ற சுரண்டல்களின் மிக மோசமான பாதிப்புகளுக்கு அவை உள்ளாகின்றன. குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான உண்மை இது. ஆனால், விரக்தியுற்று, ஒதுங்கிப்போகும் நிலைக்கான தேவை ஏதும் இல்லை. இந்தியாவின் கடந்த காலம் மிக உயர்ந்த, நெகிழ்வுத்தன்மை கொண்ட, பன்முகத்திறன் தொகுதிகளின் சேகரிப்புகளை விட்டு சென்றிருக்கிறது. விசாலமான பார்வை கொண்ட கலாச்சார தேசியத்திலிருந்து உருவாக்கிக்கொள்ள முடியும் (பக் 331)
·         Four  Who is an Indian?
Nehru’s improvised conception of a tolerable, common Indianness seemed to suggest a basis for India’s sense of itself. It was an explicitly political conception, and to sustain itself, it had constantly to persuade. That conception has given way, corroded by more exclusivist ideas of India and of political community. By the 1990s, definitions of Indianness were in fierce contest once again: Hindu nationalists struggled to capture the state and to purge the nationalist imagination, leaving it homogenous, exclusive and Hindu; others fought to escape the Indian state altogether and to create their own smaller, homogenous and equally exclusive communities.
ஏற்றுக்கொள்ளதக்க பொதுவான இந்தியத்தன்மைக்கான கருத்துருவம் ஒன்றை நேரு மேபடுத்தினார். இந்திய உணர்வு என்பதற்கான அடித்தளம் ஒன்றை அது பரிந்துரைப்பதுபோல் தோன்றியது. விடுதலைக்குப்பின்னர், சோத்னைகள் நிறைந்த சில பத்தாண்டுகளுக்கு இது நீடித்தது. வெளிப்படையாக, அதுவொரு அரசியல் கருத்தாக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்க, அக்கருத்து முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் நிலவிய, பிறரை விலக்க விரும்பிய சிந்தனைகளாலும், இந்திய அரசியல் சமூகத்தாலும் அக்கருத்தாக்கம் அரிக்கப்பட்டது. விலகி வழிவிட்டது. (பக் 255)
1990களின்வாக்கில், இந்தியத்தன்மையின் வரையறைகள் குறித்து மீண்டும் தீவிரமான மோதல்கள் ஏற்பட்டன. ஹிந்து தேசியவாதிகள் தேசத்தைக் கைப்பற்ற போராடினர். அதனை ஒருபடித்தான, பிறர் உட்புகாத, ஹிந்துவின் தேசமாக மாற்ற எண்ணினர் . தேசியவாத கற்பனையை வெளியேற்ற முயன்றனர். இதற்கு எதிரான கருத்துக்களை கொண்ட மற்றவர்கள், இந்திய அரசிடமிருந்து தப்பித்துச் செல்ல போராடினர். அவர்களுக்குரிய, சிறிய, ஒருபடித்தான, முற்கூறியதற்கு இணையாக தங்களுக்கே உரித்தான சமூகங்களை உருவாக்க முயன்றனர். (பக் 256)
·         Gandhi refused the ubiquitous ground of all nationalisms, the discourse of history, and created a distinctive definition of Indian identity. With unique sensitivity, he evoked a patriotic symbolism that allowed him to be visualized not merely as an all-Indian leader among the nationalist élite but as a local saint in the different regions and communities of India. His appeal to preexisting local beliefs and identities in order to create a larger, Indian one was tied to an idea of swadeshi, a patriotism based on a respect for the everyday material world inhabited by most on the subcontinent
அனைத்து தேசியங்களும் பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் அடித்தளத்தை, வரலாறு குறித்த அவற்றின் சொல்லாடல்களை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியன் என்ற அடையாளத்திற்கு தனித்த வரையறை ஒன்றை அவர் உருவாக்கினார். தனித்தன்மை வாய்ந்த உணர்திறனுடன், தேசபக்த அடையாளம் ஒன்றை எழுச்சி பெறச் செய்தார். தேசபக்த மேல்தட்டினர் மத்தியில் இந்தச் செயல் அவரை அகில இந்தியத் தலைவராக உருவாக்கியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் சமூகங்களும் அவர்கள் பகுதியைச் சார்ந்த துறவியாக அவரை மதிக்க வைத்தது. மிகப்பெரிதான இந்திய அடையாளம் ஒன்றை உருவாக்க, புழக்கத்திலிருக்கும் தலமட்ட நம்பிக்கைகளை அடையாளங்களை நோக்கி அவர் வேண்டுகோள் விடுத்தார். இது சுதேசிய சிந்தனையுடன் பிணைந்திருந்தது. துணைக்கண்டத்தின் பெரும்பான்மை மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பொருள் சார்ந்த தினசரி உலகை மதிக்கும் தேசபக்தியே இந்த சிந்தனை( பக் 274)
·         To Nehru, secularism was not a substitute civic religion, still less a political project to remoralize society by effacing religion and stamping a secular identity on all Indians. He fully recognized the depth and plurality of religious beliefs in India. It was precisely this that convinced him of the need to keep religious social identities outside the political arena. His energies were directed not towards installing a doctrine of secularism, but against the uses of religion for political purposes, the dangers of what he called ‘communalism’. This involved him in a constant political argument with nationalist and traditionalist Hindus, both within and outside his party, and he successfully quarantined national politics from religious demands
நேருவை பொறுத்தமட்டில், மதச்சார்பின்மை என்பது குடிமக்கள் பின்பற்றும் மதத்திற்கான மாற்று அல்ல. எனினும் மதத்தை துடைத்தெறிந்து, இந்தியர் அனைவரின்மீதும் மதச்சார்பின்மை அடையாளத்தைப் பதிக்கும், சமுதாயத்தை மீண்டும் அறநெறிப்படுத்தும் மிகச் சிறிய அரசியல் திட்டம். இந்திய தேசத்தில் மதநம்பிக்கைகளின் ஆழத்தையும் அதன் பன்முகத்தன்மையையும் முழுமையாக அவர் உணர்ந்திருந்தார். விரிவாகக் கூறினால், இந்த உணர்வுதான், மதம் சார்ந்த சமூக அடையாளங்களை அரசியல் வெளிக்கு புறத்தே வைக்கவேண்டிய அவசியத்திற்கு அவரை இணங்க வைத்தது. மதச்சார்பின்மை கோட்பாட்டை நிறுவுதலை நோக்கி, தனது ஆற்றலனைத்தையும் அவர் பயன்படுத்தவில்லை. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை பயன்படுத்துவதற்கு எதிராக இயங்கினார். இனவாதம் உருவாக்கும் ஆபத்துகளுக்கு எதிராக அதனைப் பயன்படுத்தினார். இதனையொட்டி தனது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலுமிருந்த தேசியவாத, பழமைவாத ஹிந்துக்களுடன் தொடர்ச்சியான அரசியல் விவாதங்களில் ஈடுபட்டார். மதவாதக் கோரிக்கைகளில் தாக்கமுறாதவாறு வெற்றிகரமாக தேசிய அரசியலை அவர் பாதுகாத்தார். ( பக் 291-92)
·         The use of secularism as an ideology of state power had engendered a new monster on the political landscape, a Hindu nationalism remotely linked to religion, which merely used it instrumentally to capture state power. Secularism as a doctrine of state was thus responsible for the corrosion of faith in the society. It had instrumentalized and corrupted the capacities for interreligious understanding and social peace which India had possessed in the past. The intellectual argument here resonated with the anti-statism that had animated the thinking of both Tagore and Gandhi; but in the face of the palpable reality of the Indian state, it remained difficult to see what it could imply in practice
அதிகாரத்தின் கொள்கையாக பயன்படுத்தப்பட்ட மதச்சார்பின்மை, அரசியல் வெளியில் அச்சம்தரும் பேருருவம் ஒன்று பிறப்பதற்கு வழிவகுத்தது. அரசு அதிகாரத்தை கைப்பற்ற மதத்தைக் கருவியாகப் பயன்படுத்திய ஹிந்து தேசியவாதமே அது. இவ்வாறு, அரசின் கோட்பாடு என்ற முறையில், சமுதாயத்தில் நம்பிக்கைச் சிதைவிற்கு மதச்சார்பின்மை பொறுப்பாயிற்று. மதங்களுக்கு இடையிலான புரிதலையும், சமூகத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் கடந்தகாலத்தில் இந்தியா பெற்றிருந்த திறன்களையும், மத்ச்சார்பின்மை ஒரு கருவியாக பயன்படுத்தியது. அவற்றை சிதைத்தது. இந்த இடங்களில் அறிவார்ந்த மனிதர்களின் கருத்து, தாகூர், காந்தி ஆகியோரின் சிந்தனையில் நடமாடிய, அரசின் கட்டுப்பாட்டு முறைகளுக்கு எதிரான கொள்கைகளை எதிரொலிப்பதாக இருந்தது. ஆனால், இந்திய அரசின் வெளிப்படையான யதார்த்த நிலையை பார்க்கும்போது, நடைமுறையில் அவை எவற்றை குறிப்பால் உணர்த்தும் என்பதை அறிவது கடினம். . (பக் 295-96)
One   Democracy
·         Democracy is a type of government, a political regime of laws and institutions. But its imaginative potency rests in its promise to bring alien and powerful machines like the state under the control of human will, to enable a community of political equals before the constitutional law to make their own history
ஒன்று ஜனநாயகம்
ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒருவகை- சட்டத்தின் மூலம்,அரசு அமைப்புகளின் மூலம் நடைபெறும் ஆட்சிமுறை. அரசியல் அமைப்பின் முன் சமநிலையில் இருக்கும் அரசியல் கட்சிகள், அவர்களது வரலாற்றை படைப்பதற்கு உதவி செய்வதில், அவர்கள் அறிந்திராத அரசு போன்ற வலிமையான அமைப்புகளை மனித முயற்சிகளின் கட்டுப்பாட்டில் கொணர்வதில் ஜனநாயகம் அளிக்கும் உறுதியில்தான், கற்பனைத்திறன் மிகுந்த அதன் ஆற்றல் நிலைப்பெற்றிருக்கிறது. (பக் 65)
·         The Brahminic order in India was certainly an oppressive system of economic production, and it enforced degrading rules about purity and pollution. But its capacity to endure and retain its grip over a wide geographical area flowed from its severely selective distribution of literacy. The Brahminic pattern survived not through allying with temporary bearers of political power, nor by imposing a single belief system on the society. Rather, it cultivated a high tolerance for diverse beliefs and religious observances, withdrew from political power – the realm of Artha, or mere worldly interest – and directed its energies towards the regulation of social relationships; it made itself indispensable to the conduct of essential rituals, and it provided law for every aspect of social life. Its interpretative powers were recognized as the ultimate sanction and authority for caste rules. By renouncing political power, the Brahminic order created a self-coercing, self-disciplining society founded on a vision of a moral order. This society was easy to rule but difficult to change: a new ruler had merely to capture the symbolic seat of power and go on ruling as those before him had done. India could be defeated easily, but the society itself remained unconquered and unchanged.
இந்தியாவில் பிராமண அமைப்புமுறை என்பது நிச்சயமாக, அடக்குமுறை வழியிலான பொருளாதார உற்பத்திமுறையே. புனிதம் மற்றும் தூய்மையிழப்பின் அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் விதிகளை அது திணித்தது. சமுதாயத்தில், மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதியினருக்கு மட்டுமே அது கல்வியறிவை அளித்தது. அதன்மூலம் பரந்து விரிந்த நிலப்பரப்பு முழுவதையும் தன்பிடியில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் திறனைப் பெற்றது.
இந்த நாட்டில் பிராமண அமைப்புமுறை தொடர்ந்து நீடிப்பதற்கு, அரசியல் அதிகாரம் பெறுபவர்களுடன் அவ்வப்போது அணிசேர்ந்துகொள்வது காரணமல்ல- அல்லது சமுதாயத்தின்மீது ஓர் ஒற்றை நம்பிக்கை முறையை அது திணித்ததாலும் அல்ல. மாறாக ஆட்சிப் பொறுப்பிலிருந்தும், அரசியல் அதிகாரத்திலிருந்தும், சாதாரண நடைமுறை உலக விஷயங்களிலிருந்தும் அது விலகி நின்றது. பல்வேறு நம்பிக்கைகளை, மதம் சார்ந்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதில் அதிக அளவிலான சகிப்புத்தன்மையை சமுதாயத்தில் வளர்த்து எடுத்தது. தனது சக்தியால் சமுதாய உறவுகளைக் கட்டுப்படுத்தியது, முக்கியமான மதச்சடங்குகள் எவற்றிற்கும், தன்னைத் தவிர்க்கமுடியாத நிலையை உருவாக்கியது. சமூக வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் விதிகளை உருவாக்கியது. சாதிய விதிகளுக்கு அதன் விளக்கங்களே இறுதியானவை. அதற்கான அதிகாரம் அதனிடமே இருக்கிறது என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று(பக் 69-70)
அரசியல் அதிகாரத்தை மறுத்ததன் மூலம், நல்லொழுக்க சமுதாயம் என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில், தன்னை வருத்திக்கொள்ளும் சுயகட்டுப்பாடு மிக்க சமுதாயத்தை இந்த பிராமண அமைப்புமுறை உருவாக்கியது. இந்த சமுதாயத்தில் ஆட்சி செய்வது சுலபம்.  ஆனால் மாற்றுவது கடினம். புதிதாக ஆட்சி பொறுப்பிற்கு வருபவர், ஆட்சியின் அடையாளமான அதிகாரபீடத்தை கைப்பற்றவேண்டும்- அவருக்கு முன் இருந்தவர்கள் எப்படி ஆட்சி செய்தார்களோ அதே முறையில் தனது ஆட்சியை தொடரவேண்டியதுதான். இந்தியாவை எளிதாகத் தோற்கடிக்க முடியும். ஆனால் வெல்லப்படாமல், மாற்றம் பெறாமல் அதன் சமுதாய அமைப்பு அப்படியேதான் இருந்து வருகிறது.(பக் 70)
·         According to commonly available understandings of democracy, individuals rationally choose political parties as instruments to pursue their interests. But representative democracy – in India as elsewhere – does not operate through a simple instrumental relation between representative and represented. The relation between politicians and their supporters includes a larger cultural connection, a felt sense of identification and trust
ஜனநாயகம் பற்றிய பொதுவான புரிதலின் அடிப்படையில் பார்த்தால் தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் கருவியாகவே அரசியல் கட்சியை தனிமனிதர்கள் விவேகத்துடன் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மற்ற தேசங்களைப் போலவே இந்தியாவிலும், பிரதிநிதிக்கும் அவரைத் தேர்ந்தெடுப்போருக்கும் இடையில் காரியார்த்தமான எளிமையான உறவின் மூலமாக பிரதிநித்துவ ஜனநாயகம் இயங்குவதில்லை. அரசியல்வாதிகளுக்கும் அவர்களது ஆதரவானவர்களுக்குமான உறவு, நீண்ட கலாச்சாரத் தொடர்பை உள்ளடக்கியது. அடையாளம் மற்றும் நம்பிக்கை உணர்வால் ஏற்பட்டது.(பக்111)
·         Yet the meaning of democracy has been menacingly narrowed to signify only elections. The compulsion to win power publicly and legitimately has provoked unpicturesque illegalities, old and innovative violence, corruption and ‘booth-capturing’, the take-over of a polling station by armed thugs so that ballot boxes may be stuffed with uniformly fake ballots supporting the local darling .Institutions like the Election Commission, responsible for ensuring the legality of elections, have, it is true, reacted impressively
இருப்பினும் ஜனநாயகம் என்பதற்கான பொருள், தேர்தல்களை மட்டும் குறிப்பதாக அச்சுறுத்தும் வகையில் குறுகிவிட்டது. மக்கள் ஆதரவுடனோ, சட்டத்தின் வழியிலோ அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத்தேவை, எழுத்தில் வடிக்க முடியாத, தொன்மையான, புதியவகையிலான சட்டவிரோதமானச் செயல்களை தூண்டிவிட்டது. வன்முறை, இலஞ்சம், ஆயுதமேந்திய அடியாட்களைக் கொண்டு வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல், தங்களுக்கு வேண்டியவர்களுக்காக முத்திரையிடப்பட்ட போலி வாக்குசீட்டுகளால் வாக்குப்பேட்டிகளை நிரப்புவது போன்றவை பெருகின. நியாயமான முறையில் தேர்தல்கள் நடப்பதற்காக  தேர்தல் கமிஷன் போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டன. மேற்கூறிய செயல்களை தடுப்பதற்கு உண்மையில் அவை செயல்பட்டிருக்கின்றன.(பக் 123)
Introduction Ideas of India
·         Rather more expansively, the period of Indian history since 1947 might be seen as the adventure of a political idea: democracy. From this perspective, the history of independent India appears as the third moment in the great democratic experiment launched at the end of the eighteenth century by the American and French revolutions
அறிமுகம்  இந்தியா குறித்த கருத்தாக்கங்கள்
விரிவான பார்வையில், 1947க்குப் பிந்திய இந்திய வரலாற்றின் காலத்தை, ஜனநாயகம் என்ற அரசியல் கருத்தாக்கம் நிகழ்த்திய சாகசமென்று கூறலாம். இந்த வகையில், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த மகத்தான ஜனநாயக பரிசோதனைகளான அமெரிக்க, பிரஞ்சு புரட்சிகளுக்கு அடுத்த மூன்றாவது புரட்சியாக இந்தியாவின் உருவாக்கத்தைக் கூறமுடியும். (பக் 47)
Introduction To the 2003 Edition
·         The idea of India is not homogenous and univocal. In fact, no single idea can possibly hope to capture the many energies, angers, and hopes of one billion Indians; nor can any more narrow ideas – based on a single trait – fulfil their desires. It may seem obtuse, even hubristic, in these circumstances, to speak of the idea of India
·         Of the many possible ideas of India, The Idea of India makes the case for one in particular, because it is the only one that can enable other ideas to emerge, and allow them to learn to live alongside one another
2003ஆம் ஆண்டு பதிப்பிற்கான அறிமுகம்
இந்தியாவை உருவாக்கிய கருத்தாககம் ஒருபடித்தானதோ அல்லது ஒற்றைப்பொருள் கொண்டதோ அல்ல. உண்மையில் வேறு எந்த ஒற்றை கருத்தாக்கத்தாலும் நூறுகோடி இந்தியர்களின் எண்ணிலடங்கா சக்திகளையும், கோபங்களையும், நம்பிக்கைகளையும் உள்வாங்கிக்கொள்வது இயலாத ஒன்றே. அல்லது ஒற்றைப்பண்பை அடிப்படையாகக் கொண்ட, குறுகிய சிந்தனைகள் எவற்றாலும் இந்தியர்களது விருப்பங்களை நிறைவேற்றவும் இயலாது. இத்தகைய சூழல்களில், இந்தியக் கருத்தாக்கத்தைப் பற்றி பேசுவது விவேகமற்ற செயலாக துடுக்குத்தனமாகத் தோன்றலாம்.
சாத்தியமான பல்வேறு இந்திய கருத்தாங்கங்ளில், இந்நூல் பேசும் கருத்தாக்கம் குறிப்பிட்ட ஒன்றிற்கு ஆதரவாக நிற்கிறது. ஏனென்றால் அந்தக் கருத்தாக்கம்தான், மற்றவை எழுச்சி பெறுவதை அனுமதிக்கிறது. மற்றவையோடு இணைந்து வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவும் அனுமதிக்கிறது. (பக் 18)


2 comments:

  1. உங்களுடைய விமர்சனம் அதனை படிகின்ற ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது --- ராமகிருஷ்ணன்

    ReplyDelete
  2. இதற்கு முன்பான அறிமுக விமர்சனங்கள் நூல் பேசிய பொருளைத் தொட்டுக் காட்டின. ஆனால் இந்த விமர்சனம் மொழி பெயர்ப்பாளரின் அசாத்தியமான உழைப்பைத் தகுந்த ஆங்கிலப் பத்திகள் அதற்கான தமிழாக்கத்தைத் தந்து மொழிபெயர்பாளரை, அவரது மொழிகள் புலமையை, வணங்கத்தக்க உழைப்பை நன்கு விதந்து குறிப்பிட்டுள்ளார். நன்றி தோழர். தோழர் இரவிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete