https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, July 23, 2023

இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள்

 2017ல் வந்த மின் புத்தகத்தின் முன்னுரை

இணைப்பில் புத்தகத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்


                     கம்யூனிச இயக்க முன்னோடிகள்

விடுதலை இயக்க காலத்தில் சோவியத்  புரட்சியின் தாக்கத்தில் வெளிநாடுகளில் சென்ற புரட்சிகரவாதிகள், இந்திய இளைஞர்கள் இங்கும் விடுதலைக்கு பின்னர் சோவியத்வகைப்பட்ட சோசலிச ஆட்சி என்கிற கனவை வைத்திருந்தனர். அதற்கு காங்கிரஸ் பேரியக்கமும், காந்தியும் வாகனமா என்பதில் அவர்கள் கொள்கை, நடைமுறை தெளிவுகளை போதுமான அளவு பெறமுடியாமல் போனது. சோவியத், பிரிட்டிஷ் வகைப்பட்ட சொல்லிக்கொடுப்புகளுக்கும், இந்தியாவில் யதார்த்த வெளியில் அவர்கள் உணர்ந்ததற்கும் ஏராள இடைவெளிகளை அவர்கள்  கண்டனர். காங்கிரஸ், காந்தி என்பதுடன் சோசலிஸ்ட்கள் - இடதுசாரிகள் என பல்வேறு போக்குகளுடன் ராய், போஸ், ஜேபி-லோகியா முரண்பாடுகளை அவர்கள் பார்த்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பணியாற்றிய இளைஞர்கள் தங்கள் மத்தியிலும்  கருத்து போரிட்டுக்கொண்டனர்.

ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களுடன் அரசியல் பயணம் நடத்திவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பற்றிய சில குறிப்புகள் இங்கு கட்டுரைகளாக தரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக இங்கு தரப்படுகிறது இதில் தோழர்கள் சுந்தரையா, ஜோதிபாசு, சர்தேசாய், அதிகாரி, முசாபர், காட்டே போன்ற பலர் இடம் பெறவில்லை. தொடர்ந்து முன்னோடிகளை அவர்களது வெற்றிகளை, தடுக்கி தடுமாறிய இடங்களை அனுபவத்திற்காக எடுத்துக் கொள்வது இந்திய அரசியல் பயிலும் மாணவர்களுக்கு அவசியமானதாக இருக்கும். படிக்கவும் கருத்துக்களை செழுமைப்படுத்தவும் வேண்டுகிறேன்.

 

20-5-17                                  ஆர்.பட்டாபிராமன்


 https://ia902708.us.archive.org/19/items/communist-fore-runners/communist%20fore%20runners.pdf

No comments:

Post a Comment