https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, July 10, 2023

CAD Document vol 7 Debate on UCC சீரான உரிமையியல் சட்டம்

 CAD Document vol 7     Debate on UCC 

அரசியல் அமைப்பு சட்ட அசெம்பிளியில் சீரான உரிமையியல் சட்டம் குறித்து நவம்பர் 23, 1948ல் நடந்த விவாதம் இங்கு தரப்பட்டுள்ளது. அப்போது அந்த ஷரத்து 1948 நகலில் 35 ஆக இருந்தது. அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பிற்கு பின்னர் அது இன்றுவரை ஷரத்து 44 ஆக இருந்து வருகிறது. 

அவையை துணைத்தலைவர் டாக்டர் எச் சி முகர்ஜி வழிநடத்தினார். இந்த விவாதத்தில் அவையில் இருந்த முஸ்லீம் உறுப்பினர்கள் பங்கேற்று திருத்தங்களை கொடுத்து தங்கள் அய்யப்பாடுகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். தனிச்சட்டத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்கிற சந்தேகம் அவர்களிடம் இருந்தது.

முகம்மது இஸ்மாயில் கான், நசிருதின்  அகமது, மகபூப் அலி பைக், தெல்லிச்சேரி போக்கர், ஹீசைன் இமாம் போன்றவர்கள் திருத்தங்களை கொடுத்து விவாதித்தனர்.  ஆர்ட்டிகல் 35 ஏற்கப்படவேண்டும் என அனந்தசயனம் அய்யங்கார், எல் கிருஷ்ணசாமி பாரதி, கே எம் முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் விவாதித்தனர். கிருஷ்ணசாமி பாரதி நாவலர் சோசசுந்தரபாரதியின் மகள் லட்சுமி பாரதியை மணந்தவர்.

திருத்தங்களை ஏற்கவியலாது என விளக்கமளித்து அம்பேத்கர் விவாதத்திற்கு பதில் அளித்தார். அம்பேத்கர் அவர்களின் விளக்கத்தையடுத்து துணைத்தலைவர் முகர்ஜி அவர்கள் திருத்தங்கள் ஏற்கப்படவில்லை என்பதுடன் அந்த 35 ஷரத்து அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கப்பட்டு இடம்பெற்றதாக அறிவித்தார். இந்த விவாதங்கள் இங்கு அப்படியே சிறு பிரசுரமாக தரப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர் வாசித்து புரிந்து கொள்ளலாம்.

7-7-2023    


click the link to read the DOC

No comments:

Post a Comment