Skip to main content

Bakunin பகுனின் 2

II
பகுனின் பொறுத்தவரை அவர் புரட்சியை பெரும் சிந்தனைக்கு பின்னர் வரும் ஒன்றாக கருதவில்லை. தன்னெழுச்சி என புரிதலுடன் இருந்தார். Revoultion is  instict rather than thought  என்பார். அவர் ஜெர்மன் மொழியில் எழுதுவதைவிட பிரஞ்சில் எழுதுவதை எளிதாக கருதினார். ஆரம்பகால ருஷ்ய சோசலிஸ்ட்கள் பகுனினால் ஈர்க்கப்பட்டார்கள். புருதான் அதிகாரம் என்பது அதுயார் கையில் இருந்தாலும் ஒடுக்குதலையே செய்ய விழையும் என்றார். 1848ல் பிரான்சில் நடந்த எழுச்சியை அவர் விவாதித்தார்.. Power is not radical but a panderer. It lacks initiative, the essential feature of social change என்றார் புருதான்.  மனித மூளையில் புரட்சி முதலில் பற்றவேண்டும். சமுக மாற்றத்திற்கு வன்முறை அவசியமற்று போகலாம் என்றார். ஹெர்சன், பகுனின் இருவரும் புருதானுடன் நெருக்கமாக இருந்தார்கள்.
ஹெர்சன்  ருஷ்யா திரும்பினார். தொடர்ந்து ஜாருக்கு எதிராக எழுதியதால் ருஷ்யாவிலிருந்து முழுமையாக 1848ல் வெளியேறினார். Death to the old world! Long live chaos and destruction! Long live death! out of the chaos , Socialism is to be born  போன்ற முழக்கங்களை ஹெர்சன் வைத்தார். ஹெர்சன் மாஸ்கோவில்தான் புரட்சி உருவாகவேண்டும் என்றார். அய்ரோப்பிய நாகரீகம் வீழவேண்டும் என்றார். கிராஜுவலிசம் என்கிற தன்மையை அவர் ஏற்கவில்லை.. சில நேரங்களில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் புரட்சிகர தன்மைகளை நீர்த்து போக வைக்கிறார்கள் என்கிற குற்றசாட்டை முன்வைத்தார் ஹெர்சன். Revolutionary negation of parliamentarism  என ஹெர்சன் சிந்தனையை கை ஆல்ட்ரெட் மதிப்பிடுகிறார்.

1848 புரட்சிக்கு பின்னர் பகுனின் எழுதிய ஸ்லாவியர்களுக்கு வேண்டுகோள் என்பது பல ஆய்வாளர்களால் முக்கிய ஆக்கமாக சொல்லப்படுகிறது. அதில் அவர் பூர்ஷ்வாக்கள் எதிர்புரட்சியாளர்கள், புரட்சியின் எதிர்காலம் தொழிலாளிவர்க்கத்தின் கைகளில், ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தின் தகர்வு மத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் குடியரசிற்கு முன்நிபந்தனை போன்ற கருத்துக்களை தந்திருந்தார். The whole world should understand that liberty was a lie where the great majority of the population is reduced to a wretched existence, where, deprived of education, of leisure, and of bread, it is condemned to serve as stepping stone for the powerful and the rich .. we must first purify our atmosphere and transform completely the milieu in which we live; for it corrupts our insticnts and our wills, and contracts our heart and our intelligence. The social question takes the form primarily of the overthrow of society.
1849ல் இசைகலைஞர் வாக்னருடன் பகுனின் தங்கினார். ஏப்ரல் 1849ல் பகுனின் ரிச்சர்ட் வாக்னரின் பீதோவன் 9வது சிம்பெனி நிகழ்வில் பங்கேற்கிறார். உலகில் அனைத்து இசைகளும் அழியும்போதுகூட அவை இந்த இசையை காப்பாற்றவேண்டும் என உறுதிமொழியை எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்லி வாக்னரை அவர் பாராட்டுகிறார். நட்பு பலப்பட்டு வாக்னர் இல்ல விருந்தாளியாக அடிக்கடி பகுனின் சென்றார். வாக்னர் துணைவியார்  இந்த விருந்தாளி நண்பர் இப்படி இறைச்சியை அள்ளி சாப்பிடுகிறாரே, ஒயினுக்கு பதில் பிராந்தியுடன் இருக்கிறாரே என வியந்து போனார். வாக்னர் காட்டுமிராண்டிப்போல் இருக்கும் அந்த நண்பர் விவாதங்களில் சாக்ரடிஸ் போல் பளிச்சிடுகிறார். அவர்தான் வலுவான வாதங்களை எப்போதும் வைத்து வெல்கிறார் என பதிவு செய்துள்ளார். நண்பர்கள் உபசரிப்பில் அவர்களிடமிருந்து பெறும் உதவித்தொகை கடன்களில்தான் பகுனின் வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது.
மே 10 1849ல்  இரவில் அவர் கைது செய்யப்படுகிறார். சிறை வாழ்க்கை  only thinking not a living one  என்ற உணர்வை கொடுத்தது. ஷேக்ஸ்பியர், பிரஞ்சு வரலாறு போன்ற புத்தகங்கள் கொடுக்கப்பட்டாலும் , தினசரி பத்ரிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 1850 ஜூனில் அவர் பிரேக் சிறைக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்றம் விசாரணைக்குப்பின்னர் அவருக்கு 1851ல் மரணதண்டனை என்றது. ஆனால் கடுங்காவல் ஆயுள் தணடனையாக அதை மாற்றினர்.
ஜாரின் அதிகாரி கவுண்ட் ஆர்லவ் என்பார் ஜூலை 1851ல் சிறையில் பகுனினை சந்த்திது மரணதண்டனை நிறைவேறாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் கருணை வேண்டுகோள் மனு ஒன்றை நீதிமானுக்கு வேண்டுதல் போல் அல்லாமல் ஆன்மீக ஆத்மார்த்த தந்தைக்கு எழுதுவதுபோல் ஜார் மன்னருக்கு எழுத அறிவுறுத்தினார். நிகோலஸ் மன்னர் எந்த ஒரு பாவியும் வருந்தி பிராயசித்தம் கேட்டால் மன்னிக்கவேண்டும். காப்பாற்றப்படவேண்டும். ஆனால் உண்மையானதாக இருக்கவேண்டும் என கருணைமனுவில் குறிப்பு எழுதினாலும் அவர் பகுனின் விடுதலை குறித்து எந்த அவசரமும் காட்டவில்லை.
ஆறு வருடங்களாக குடும்பத்தார் பார்க்க முடியாமல் இருந்த பகுனினை சிறையில் பார்ப்பதற்கு அவர் தந்தை சகோதரிக்கு அனுமதியை மன்னர் தந்தார். கண்பார்வை மங்கிய 83 வயது தந்தை 3 நாட்கள் பயணித்து சென்றால்தான் பகுனினை பார்க்க இயலும் என்ற நிலையில் சகோதரர் ஒருவருக்கு அனுமதி அளித்தனர். இருட்டறை கொடும் சிறைவாசத்தால் 1854ல் பகுனின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. சிறைஉணவு மூலவியாதியை அவருக்கு உருவாக்கியது. எலும்புருக்கி நோயும் ஏற்பட்டது. எப்போதும் காதில் சத்தம் கேட்க துவங்கியது. பற்கள் விழத்துவங்கின. அடிக்கடி பார்க்கவந்த சகோதரியிடம் அவர் மனம் உடைந்து எழுதிய பென்சில் குறிப்புகளை தந்தார். உயிருடன் புதைக்கப்படுவது போன்ற நிலை. சாகசங்கள், புரட்சிகர கனவுகள் நான்கு சுவருக்குள் அடைப்பட்டு நான் இற்று வீழ்கிறேன் . புகழ்வாய்ந்த நெப்போலியனாக இருந்தாலும் கருணை வடிவமாக ஏசுவே ஆனாலும் இந்த சிறையிருட்டில் பைத்தியமாகிவிடுவார்கள்  அவர்களே ஆகிப்போவார்கள் என்றால் என்ன புத்தி இருந்தால் என்ன நான் எம்மாத்திரம் என வேதனை விம்மல்கள் அக்குறிப்பில் பட்டு தெறித்தன...
பகுனின் ஆகஸ்ட் 1849 முதல் மே 1850 வரை கொனிஸ்டெயின் எனும் சிறையில் வைக்கப்பட்டார். அவரை விசாரித்து மரணதண்டனை என தீர்ப்பிடப்பட்டது. அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் பிரேகிற்கு அனுப்பபட்டார். மரணதண்டனைக்கு பதிலாக.. அங்கு அவர் சுவர்களுடன் சங்கிலியால் ஆறுமாதம் பிணைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஸ்திரியா அரசாங்கம் மீண்டும் மரணதண்டனை என்றது. பிறகு அதை ஆயுள் தண்டனை என குறைத்தனர். 1851ல் அவருக்கு பிணைக்கப்பட்டிருந்த முரட்டு சங்கிலியின் அளவு குறைக்கப்பட்டது.
1851ல் அவர் அலெக்சிச் எனும் கோட்டையில் அடைக்கப்பட்டார்.  ஜார் மன்னன் தூதன் ஒருவனின் மூலம் பகுனின் தனது புரட்சிகர நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்றை தரவேண்டும் என சொல்லப்பட்டது.  தனது அவமதிப்பை பொறுத்துக்கொண்டு அதை பகுனின் செய்ததாக ஆல்ட்ரெட் தெரிவிக்கிறார். ஜார் நிகோலஸ்க்கு அவர் எழுதிய விண்ணப்பத்தில் “ It is hard for me, CZAR of mine, an erring, estranged, misled son, to tell you he has had the insolence to think of the tendency and the spirit of your rule. It is hard for me because, I stand before you like a condemned criminal. It is painful to my  self love. It is ringing in my ears as if you, my Czar said: The boy baables of things he does not understand.
பகுனின் தாயாரும்  இரண்டாம் நிகோலஸ் அலெக்சாந்தர்க்கு விண்ணப்பித்தார். உங்கள் மகன் உயிருடன் இருக்கும்வரை அவர் சுதந்திரமாக இருக்கமுடியாது என்ற பதிலை அரசாங்கம் அனுப்பியது. பின்னர் பிப்ரவரி 4, 1857ல் பகுனின் மறுபடியும் பெட்டிஷன் வேண்டுகோள் மனு அனுப்பினார். அதில்  My Lord King by what name shall I call my past life? I have done nothing in my life except to commit crimes..if I could rectify my past by an act, I would ask mercy and opportunity to do this. I should be glad to wipe out with blood my crimes against you, my Czar.. I am not ashamed to confess my weakness.. I confess that the thought of dying in loneliness, in the dark prison cell, terrifies me more than death itself and from the depths of my heart and soul I pray your Majesty to be released, if it is possible, from this last punishment, the heaviest that can be என வேண்டியிருந்தார்.
ஆகஸ்ட் 1856ல் அலெக்சாந்தர் ஜார் பலரை விடுவித்தார். ஆனால் பகுனின் விடுவிக்கப்படவில்லை. பகுனின் நாடு திரும்பாமல் பல்வேறு பகுதிகளுக்கு மாறி சென்று சுற்றுவதை அறிந்து கோபம் அடைந்த ஜார்  ex- Ensign Michael Bakaunin- loss his noble rank and to banishment to saiberia for an indefinite period with hard labour; and his property was declared confiscated to the State  என்கிற உத்தரவை பிறப்பித்தார். சைபீரியாவிற்கு கடின உழைப்புமுகாமிற்கு கடத்தப்படுதல், சொத்து பறிப்பு என அவ்வுத்தரவு பேசியது.
 1857ல் அவர் மேற்கு சைபீரியவிற்கு அனுப்பபட்டார்.  அங்கு  உள்ளார்ந்த தோம்ஸ் பகுதி ஒன்றில் அவர் வசிக்க அரசாங்கம் அனுமதி தந்து இடம் கொடுத்தனர். சைபீரியாவில் கடத்தப்பட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் பெரும் அறிவுஜீவிகளாகவும் போராட்டக்காரர்களாகவும் இருப்பர். அரசியல் காரணமாக அங்கு அனுப்பப்பட்டவர்கள் செலவை தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும். கடினமான வாழ்க்கை சூழலை சந்திக்கவேண்டியிருந்தது. இந்நிலையில் அங்கு க்வியாகோவிஸ்கி என்கிற போலந்து வர்த்தகர் குடும்ப நட்பு  ஏற்பட்டது. அவரது பெண் அந்தோனியாவுடன் காதல் மலர்ந்து திருமணம் என முடிவெடுத்தனர். அந்தோனியாவிற்கு வயது 18. மணவாழ்க்கை எனில் குடும்பம் நடத்த பணம் தேவை. அரசாங்கம் அவருக்கு அங்கு குமாஸ்தா வேலை கொடுத்தது. மாபெரும் ருஷ்யா ஜார் குடும்ப உறவினர், ராணுவ அதிகாரியாக இருந்தவர்,  மரண தணடன பிறப்பிக்கப்பட்டவர் சைபிரியாவில் கடத்தப்பட்டு குமாஸ்தாவாக வாழ்ந்துகொள் என சொல்லப்பட்டதை வேண்டாம் என உதறினார் பகுனின். 1858ல் அந்தோனியாவை மணம் முடித்தார். 1859ல் ருஷ்யா கைப்பற்றிய அமுர் எனும் பகுதியில் தங்கிட பகுனின் அனுமதிக்கப்பட்டார்.
பகுனின் உறவுக்காரர் கிழக்கு சைபீரியாவின் கவர்னர் ஆக வந்தார். அவர் வந்தபின் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பகுனினுக்கு வேலை கிடைத்து வர்த்தகம் தொடர்பாக சைபீரியா முழுமையும் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. பகுனின் தாயார் ஜாரிடம் தொடர்ந்து வின்ணப்பித்து வந்தார். சைபீரியா கவர்னரும் அவரை ரஷ்யா திரும்பிட ஏற்பாடுகள் செய்ததாக சொன்னார். பகுனின் உடல்நிலை தேறியது. மீண்டும் புரட்சிகர எண்ணங்கள் அவரை உந்தி தள்ளின இத்தாலியில் கரிபால்டி சுதந்திர கொடியை உயர்த்தினார்.  பகுனின் தனது புரட்சிகர என்ணங்களை அடக்கி கொள்ள முடியாமல் வெளியேற முயற்சித்தார். ஜாருக்கு எழுதிய கருணை மனுக்களை அவர் மறந்தார்.
கம்பெனியிடமிருந்து இரு வருட ஊதியம் என 5000 ரூபிள்கள் பெற்றுக்கொண்டு மனைவியையும் அழைத்துக்கொள்கிறேன் என உறுதி  தந்துவிட்டு 1861 ஜூனில் வெளியேறுகிறார். 2000 மைல்கள் 4 வாரங்களில் அவர் பயணித்தார் என வரலாற்று அறிஞர் ஈ எச் கார் சொல்கிறார். ஆகஸ்ட் 4 1861ஒல் ஜப்பானிய துறைமுகம் ஒன்றை அடைந்தார். அக்டோபர் 14 அன்று சான்பிரான்சிஸ்கோ வந்தார். பின் நியுயார்க், போஸ்டன் சென்றார். லிவர்பூல் சென்று டிசம்பர் இறுதியில் லண்டனை வந்தடைந்தார்.

பகுனின்  தன் பிரஞ்சு நண்பர் மாதம் தரும் நிதியை கொண்டு லண்டன் வாழ்க்கையை நடத்தினார். போட்கின் என்ற அந்த நண்பர் 23 பவுண்ட்கள் தருவார். பழைய நண்பர் ஹெர்சன் 10 பவுண்ட்கள் தருவார். துர்கானேவ் வருடத்திற்கு 1500 பிராங்கிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் பகுனின் அதைப்பெற ஆர்வம் காட்டவில்லை என்கிறார் கார். தான் பாரிசிலோ கல்கத்தாவிலோ இருக்கவேண்டும் என ஹெர்சன் விரும்பியதாக குறிப்பு ஒன்றை பகுனின் கடிதம் மூலம் அறியமுடிகிறது. பகுனின் போலந்து, ரஷ்யா, இத்தாலி புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகொண்டு செயல்படத்துவங்கினார். பேசக்கூடிய அளவிற்கு ஆங்கில புலமையை வளர்த்துக்கொண்டார். மாஜினியுடன் சிறிது காலம் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.
1862ல் பகுனின் தனது முழுகவனத்தையும் ரஷ்ய ரகசிய குழுக்களுடன்  குவித்தார். அவர் நெறியாளராகவும் ஹெர்சன் வெளியீட்டாளராகவும் செயல்படத்துவங்கினர். அவர்கள் பயன்படுத்திய ரகசிய  சமிக்ஞைகள் போலிசாரால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையாக இருந்தன. பகுனினுக்கு பிரைக்லாவ் என்கிற ரகசிய பெயரிடப்பட்டிருந்தது. ரஷ்ய பயணிகள் சிலரை நம்பி பகுனின் கரிபால்டி உட்பட பலருக்கு எழுதிய கடிதங்கள் பல ருஷ்யா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. துர்கனேவ் போன்றவர்கள் பீட்டர்பர்க்கிற்கு 1863ல் விசரணைக்கு அழைக்கப்பட்டனர்.
பகுனினின் ரகசிய குழு இயக்க முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஹெர்சனின் முழக்கமான  Land and Liberty  சிலரை கவ்விப்பிடித்தது. 1862 ஆக்ஸ்டில் அவர் பாரிஸ் செல்லும்போது அவர் தொடர்ந்து ஆதரிக்கும் போலந்து புரட்சியாளர்கள், முந்திய ராணுவ தளபதிகளை சந்தித்தார். போலந்து விடுதலைக்குரிய கட்டுரைகளை ஹெர்சன், பகுனின்  அவர்கள் நடத்திய தி பெல் இதழில் இடம்பெற செய்தனர்

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...