https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, August 1, 2017

தாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் 4 The Philosophy and Political thought of Tagore

IV
 ஹிரன் முகர்ஜி தாகூர் பற்றி 1961ல் புத்தகம் எழுதினார். அதன் மறுபதிப்பு 125 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் 1986ல் வந்தது. கிருஷ்ண கிருபாளனி தனது தாகூர் புத்தகத்தில் மார்க்சியம் தாகூருக்கு அந்நியமானது என சொல்வதை ஹிரன் குறையாக சுட்டிக்காட்டுகிறார். தேவையில்லாமல் ஸ்டாலின் காலத்து பிம்பத்தைகொண்டு தாகூர் சென்று பாராட்டிவந்த சோவியத் மதிப்பீடுகளை குறைக்க கிருஷ்ணா முயன்றுள்ளார். New Russia is engaged in pricking a death bolt out of the skeleton’s of man’s civilization, the death bolt called Greed  என சொன்னார் தாகூர். ருஷ்யாவின் முயற்சி வெற்றிபெற  பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
1917-27 ஆண்டுகளில் தாகூரின் 60 படைப்புகள் 2 லட்சம் காப்பிகள் விற்றுத் தீர்ந்ததாகவும் ஹிரன் தெரிவிக்கிறார். இவான் புனின் நோபல் பரிசாளர் மேற்பார்வையில் தாகூரின் ஆக்கங்கள் ருஷ்ய மொழிபெயர்ப்பில் 1918ல் வந்தன. The works of Tagore with their full blooded colours, subtle spiritual insights and genuineiy great ideas are one of the chief treasures of world culture at present  என Anatoli Lunacharski  பாராட்டினார். அவரை இந்தியன் டால்ஸ்டாய் என்றார். லெனின் தனது நூலகத்தில் தாகூர் ஆக்கங்களை வைத்திருந்ததாகவும், அவர் தாகூர், பெர்னார்ட் ஷா போன்றவர்களை சிறந்த இலக்கியவாதிகள் என குறிப்பிட்டதையும் ஹிரன் சொல்கிறார். எட்வர்ட் தாம்சன் காளிதாசருக்கு அடுத்த மகத்தான இந்திய கவி தாகூர் என்றார்.

அவரை ஓவியராக, கவியாக மட்டுமே சுருக்கி சிந்தனையாளர் என ஏற்க மறுக்கும் அரை ஞான இந்தியர்களை ஹிரன் சாடுகிறார். 1921 கோஆப்பரேஷன் என்கிற மாதப்பத்திரிக்கை ஒன்றில் தாகூர் எழுதினார். Where there is great disparity between capital and labour, democracy is bound to be thwarted at everystep. For, money is the main instrument of all kinds of powers. Where there is disparity in incomes sovereignty cannot flow equally thro every citizen. In the USA one finds at every level instances reign of money.
ருஷ்ய மக்களின் துன்ப துயரங்களிலிருந்துதான் போல்ஷ்விசம் பிறந்தது. மனித குலம் நிலைகுலைந்து போனதால் புரட்சி எழுந்துள்ளது. போல்ஷ்விசம் என்பது மருத்துவ சிகிட்சை போன்றது. ஆனாலும் சிகிட்சை என்பது நிரந்தரமாக நடைபெறமுடியாது, டாக்டர்களின் ஆட்சி முடியும் நாளே நோய் இருந்தவர்க்கு பொன்னாள். This Revoultion has broken out because humanity has lost its balance.It is not improbable that in this age Bolshevismis the treatment, but medical treatment cannot be permanent; indeed the day on which the doctors’s regime comes to an end must be hailed as the red letter day for the patient…
பிறந்த சொந்த மண்ணில் இரத்தமும் சதையுமாக பின்னிப்பிணந்து நாம் கற்றவற்றை பெரிதாக கொள்ளாமல், இங்கிலீஷ்காரர்கள் மூலம் வந்ததை கொண்டாடிவருகிறோம். நம் தலையின் கனத்தைவிட டர்பன் அல்லது தலைப்பாகை கவர்ச்சியாகிவிடுகிறது. மாத சம்பளத்தைவிட போனஸ் பெரிதாக தெரிகிறது என மிக நயமாக அந்நியமாகாதே என்பதை எடுத்துரைக்கிறார் தாகூர். இதை ஹிரன் தனது புத்தகத்தில் தாகூர் வாசகத்தாலேயே சுட்டிக்காட்டுகிறார் He who alienates his people cannot make the alien as his own, and who disowns his home can never play host to the world. It is absurd to imagine that we can annex the world renouncing our own foothold on this earth.The complete man must never be sacrificed to the patriotic man, or even to the merely moral என  அவர் எழுதினார்.
தாகூருக்கு கிராமப்புற விவசாயம் சார்ந்த பின்னணி இருந்தாலும் அவர் காலத்தில் பல்கேரியாவில் 1920களில் இருந்த கிரீன் சோசலிஸ்ட் என்கிற அடையாளத்தை கொள்ளவில்லை. அவருக்கு பெர்னார்ட் ஷா, எச் ஜி வெல்ஸ் பழக்கம் இருந்தாலும் தன்னை பாபியன் சோசலிஸ்டாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியாவின் எகானாமிக் நேஷனலிசம் என்பதுடன் அவ்வப்போது தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் தாகூர். அந்நிய பொருட்கள் பகிஷ்காரம்- இந்திய பொருட்களை வாங்குவீர் என்பதில் கூட காந்தியுடன் ஆரம்பத்தில் விவாதம் நடத்தியவர் தாகூர்.
சுதேசி இயக்கத்திற்கு ஆதரவாக தாகூர் நின்றார். 1904ல் அவரது எழுத்துக்களில்  primitive socialism கருத்துக்கள் இருந்தன என லால்சேத் சொல்கிறார். ராபர்ட் ஓவனிச சோசலிசம் எனக்கூட சொல்லலாம் என்கிறார் லால்சேத். அவரின் சுதேசி சமாஜ் நோக்கி இளைஞர்களை அழைத்தார். பயங்கரவாத நடவடிக்கைகளை விடுத்து நிலத்தில் இறங்கி செல்வத்தை பெருக்க வாரீர் என அழைப்புவிடுத்தார்.
டால்ஸ்டாயின் சிறந்த படைப்புகள் 1850-70களில் வந்தன, மார்க்ஸ்- பகுனின் படைப்புகள் வேறுபாடுகளும் இக்காலத்தவையே. ஆனால் சோசலிச கருத்து முரண்பாடுகள் டால்ஸ்டாயை எந்த வகையில் பாதித்தன எனத்தெரியவில்லை. அடிமைகள் விடுவிப்பில்- அவர்களின் சுதந்திரம் என்பது ருஷ்ய ஜனநாயக போராட்டத்தில்  மிக முக்கிய அம்சம். டால்ஸ்டாய் அதில் நின்றார். ஆனால் ஜாரின் கோபத்திற்கு இரையாகாத வழிகளில் நின்றார். ஏசுபிரான் ஏழைகளின் ஒடுக்கப்பட்டவர்களின் காவலன் என்கிற புரிதலை டால்ஸ்டாய் முன்வைத்தார். கிறிஸ்துவர்கள் சோசலிஸ்ட்களாக இருக்கவேண்டும் என்கிற விழைவும் இருந்தது.  Mass for the Masses என்றார்.
  Tagore presented his ideas in keeping with its liberal tradition, though he preferred to the frame work of society, not in the immediate present, but in the distant past என லால்சேத் பார்க்கிறார். லால்சேத் அவரை கன்சர்வேடிவ் சோசலிஸ்ட் என்கிறார். மாற்றம் தவிர்க்கமுடியாது என்ற பார்வை அவருக்கு இருந்தாலும் ’மார்க்சிய கன்வெர்ட் அல்ல அவர். அவரின் சொத்து- தன்வந்தர்கள் குறித்த பார்வையில்  அரசியல், பொருளாதாரம் என்பதைவிட எதிகல் என்கிற நெறிப்படுத்தல் கருத்துக்களே அதிகமாக இருந்தன. அதேநேரத்தில் டால்ஸ்டாய், தாகூர் இருவரையும்  religious philanthropists  என முத்திரைகுத்தி விடக்கூடாது என்கிற எச்சரிக்கையும் லால்சேத் பார்வையில் வருகிறது.
மண்டலி எனும் கிராம யூனியன் ’பாப்னா’ அமையப்பெற விழைந்தனர். ஆனால் அவை மார்க்சிய வர்க்க ஸ்தாபனங்கள் அல்ல. வர்க்கப்போராட்டம்- மோதல் என்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. கிராமத்தின் சுயதேவைகள் நிறைவேற்றும் இயக்கங்களாக இருக்கவேண்டும் என அவர் கருதினார். விவசாய கருவிகளை கூட்டாக வாங்க அவை முயற்சிக்க வேண்டும் என்றார். பால் உற்பத்தியை கூட்டாக செய்தால் அடக்க செலவு குறையும் என்றார். நெசவாளர்கள் கூட்டுறவுமுறையை அவர் பரிந்துரைத்தார்.
பெங்கால் சோசியல் சர்வீஸ் லீக் என்பதில் 1915களில் அவர் ஆர்வமாக செயல்பட்டார். கல்வியை பரப்புதல்- எழுத படிக்க கற்றுத்தருதல், குடிநீர் பெற உதவுதல், முதலுதவி, சிறு மருத்துவ சேவைகளை செய்தல்- குறிப்பாக மலேரியா, டி பி போன்றவற்றை ஒழிக்க பாடுபடுதல், சிசு மரணங்களை தடுக்க பாடுபடுதல், கிராம கூட்டுறவு கடன் சொசைட்டிகளை துவங்கி அதன் பலன்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல், வறட்சி, வெள்ளக்காலங்களில் நிவரணவேலைகள் போன்ற அக்காலத்தில் கடினமான திட்டங்களை அவர்கள் முன்வைத்து செயல்பட்டனர். Strength thro Joy என்றார் - good health, good food, fellow feeling என்பனதான் மகிழ்ச்சிக்குரியன என்றார்.
Iqbal Singh தாகூர் பற்றி குறிப்பிடும்போது Tagore began to see in the stirring of the great masses of Asia and Africa, the unfolding perspectives of a new civilisation where culture and happiness will not be the monopoly of a class or race, but the common inheritance of man என எழுதினர்.
சோவியத் புரட்சி நடந்த தருணத்தில் அவர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்கு பல்வேறு பத்ரிக்கை செய்திகளை கண்ணுற அவருக்கு வாய்ப்பிருந்தது. அவர் சோவியத் செல்லும்போது திறந்த மனதுடன் சென்றார். அங்கு கல்வி, இலக்கிய பணிகள் குறித்து அறிந்தார். சைமன் பிரிட்டிஷ் இந்திய கல்விமுறை பற்றி பேசுவதற்கு முன்னர் ரஷ்யா போய் அறிந்து வந்திருக்கவேண்டும் என்றார் தாகூர். இந்தியா திரும்பியவுடன் சோவியத் கல்வி பற்றி சொற்பொழிவாற்றினார்.
ரிலிஜன் ஆப் அன் ஆர்டிஸ்ட் என்கிற கட்டுரை ஒன்றை அவர் 90 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். தான் பிறந்த கால சூழலில் ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்கள் சமூகத்தில் உருவாக்கிய புயல் பற்றியும் தனது குடும்பம் அவ்வியக்கத்தில் அங்கமாக இருந்தது பற்றியும் தெரிவிக்கிறார். பழமையில் ஊறிப்போனவர்களுக்கு அது கடுமையாகவே இருந்தது. அதேபோல் பங்கிம் சட்டர்ஜி உறங்கி கிடந்த வங்க மொழிக்கு புத்தாக்கம் தந்தார். அதன் பின்னர் தேசிய இயக்கம்.  நமது பழமையை விடக்கூடாது என்று வந்தாலும் பிற்போக்கு தன்மையில் இல்லாது புரட்சிகரமாக பேசியது. இந்த மூன்று இயக்கங்களிலும் எங்கள் குடும்பம் தொடர்புடன் இருந்தது. we were ostracized because of our hetrodox opinions about religion and we enjoyed the freedom of the outcast  என்றார் தாகூர்.
When an organisation which is a machine becomes a central force, political, commercial, educational or religious, it obstructs the free flow of inner life of the people and waylays and exploits it for the augmentation of its own power   என மையப்படுத்தப்படும் அமைப்பு எந்த பெயரில் அரசியல், மதம் என இருந்தாலும் அதன் எதிர்மறை விளைவு பற்றி தனது கவலையை அவர் வெளிப்படுத்தினார்.
உபநிடதங்கள் கருத்துக்களுடனான மோனோதீசம் என்பதில் தந்தை முன்நின்றார். அவரை மோசமான கிறிஸ்துவர் போன்றே சக வங்காளிகள் பார்த்தனர். எனவே குடும்பம் ஒதுக்கப்பட்டது. கவிதைகள் என்பன மார்க்கெட் சரக்குகள் அல்ல. நான் தாந்தேவிடம் போனேன். படுதோல்வியடைந்தேன் என்கிறார் தாகூர். ஹெயின் ஜெர்மானிய கவிதை அழகை தந்தது என்கிறார். கதேவிடம் போனேன். ஆனால் அவ்வீட்டில் சகஜமாக இருக்கமுடியவில்லை. விருந்தாளியாகத்தான் இருக்க முடிந்தது என்பார் தாகூர்..
Man cannot reach the shrine if he does not make the pilgrimage. My religion is essentially a poet's religion. My religious life has followed the same mysterious line of growth as has my poetical life.  சுற்றியிருக்கும் உல்கம் என்னை மந்தமாக்கியதில்லை. ஏனெனில் மேகம் எனக்கு மேகமாக, பூ பூவாக நேரிடை உறவை எனக்கு தருகிறது என்றார் தாகூர்.  True foundation of religion is not in its dogma  என்றார். காலை வந்துவிட்டது என உணர்த்த எனக்கு ஒரு விஞ்ஞானி வரவேண்டியதில்லை. அதே போல் சுற்றி ஏராள உண்மைகள் தெரிகின்றன.  அதேபோல் உண்மைகள், நல்லது  என விளக்க  இறையியலாலர் ஒருவர் தேவையில்லை என்றார். தீயது என்றால் என்ன, இறப்பிற்கு பின்னர் என்ன ஆகிறோம் என்பது பற்றி எனக்கு திருப்திகரமான பதில்களை தரமுடியாது. வேறுபாடுகளை முற்றானது என கருதாமல் பிரபஞ்ச வாழ்வுடன் ஒன்றிப்போகும் மனம் மகிழ்ச்சி அடைகிறது என எழுதினார்.
நமது உடல் வெறும் வயிறு, இதயம், மூளை தாங்கி மட்டுமல்ல. அது ஆளுமையை வெளிப்படுத்துவதும் கூடத்தான். Its highest value is infact that it communicates its personality  என்றார் . self expression not self preservation  என்றார். That fact that we exist has its truth in the fact that everything else does exist, and the I am in me crosses its finitude whenever it deeply realizes itself in the thou art. Limitation of the unlimited is personality: God is personal where He creates    என எழுதினார்.
1904 Swadeshi Samaj ல் அவரது அழைப்பு நம்மை நாம் மீட்டுக்கொள்வோம் என்றாக இருந்தது.  Tagore asked us to win back the country, not from others, but from the overpowering orbit of inactivity, indifference. 1905 cultivate your strength  என்றார். சிலர் மட்டும் தீவிர செயல்களில் இறங்குவதை அவர் ஏற்கவில்லை whole not parts  என்று அறிவுறுத்தினார். தாகூர் பலமான நம்பிக்கையை மானுட பிரபஞ்சம் என்பதில் வைத்திருந்தார். History of man is history of  Building up human universe. 1940 Gandhi Maharaj என்கிற ஆக்கத்தை அவர் தந்தார்.
 we who follow Gandhi Maharaj's lead
Have one thing in common among us
we never fill our purses with spoils from the poor
Nor bend our knees to the rich  என கவிதை வாசித்தார். ஆனால் 1920ல் அவர் காங்கிரஸ் ஏற்று காந்தி அறிவித்த ஒத்துழையாமையில் பங்கேற்கவில்லை. இது எதிர்மறை இயக்கம் என்றார். தாகூரின் எச்சரிக்கை குறித்து காந்தி  I regard the Poet as a sentinel warning us against the approach of enemies called Bigotry, Lethrgy, Intolerance and ignorance and other members of that brood  என தெரிவித்தார். காந்தியின் உண்மையைத்தேடுதல், வன்முறையற்ற வழியில் விடுதலை போராட்டம் என்பதை தாகூர் மனம்திறந்து பாராட்டினார்.  For the first time perhaps, it has been declared that it is for us to yield up life, not to kill, and yet we shall win  என்று காந்தியின் பாதை குறித்த  வியந்து பாராட்டினார். 1921 ல் ஆண்ட்ரூஸ் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தாகூர் அரசியலுக்கு எதிரானது எனது இயல்பு. ஆனால் துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் சூழலில் அரசியல் கோபங்களை காட்டாமல் இருக்கமுடியவிலை என்றார்.

1940ல் அரசதிகாரம் எனும் உலக அரசியலை கண்ணுற்ற அவர் கவிதை ஒன்றை தந்தார்.
 At the feast of power today  the cannibals are quarrelling
over human sacrifice, today the face of the earth
is smeared with glory of red.
But time comes when out of this orgy of devastation
heroic peace will emerge victorious.
Let flames lick up everything unholy, every evil, every weakness
and burn them into ashes.
I shall stand firm facing all, nor shall I doubt ever

பழமையை முற்றிலுமாக அறுத்துக்கொண்ட புதுமை என்பது அவருக்கு உவப்பானதல்ல. இரண்டிற்கும் இடையே சரிகட்டல்கள் தேவை என்றார். நமது முன்னோர்களின் தியாக சிந்தனை, வேலைப்பாங்கு நம் புது வாழ்க்கையிலும் தொடர்வேண்டும் என விழைந்தார்.

No comments:

Post a Comment