Skip to main content

Bakunin பகுனின் 6

VI 
Liberty without Socialism is privilege, injustice; socialism without liberty is slavery and brutality   என எழுதினார் பகுனின். அவர்  systematic thinker  இல்லை.  No Theory, no ready made system, no book that has ever been written will save the world  என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.  I am a true seeker  என்பார். க்ரோப்ட்கின் சொல்வது போல அவர்  moral personality  rathe than intellectual authority.  அவர் எழுத்துக்களை patchwork of fragments, undoctrinaire insurrectionism என்கின்றனர்
வளர்ச்சி பெறாத நாடுகளின் அடிமட்ட மக்களிடமிருந்துதான் புரட்சி என அவர் கருதினார். சொத்தில்லாத, அன்றாடவேலை இல்லாத, எதுவுமே கிடைக்கப் பெறாதவர்கள்தான் அவரின் புரட்சிகரபகுதி-ஒழுங்கமைந்த தொழிலாளிவர்க்கமல்ல. ஆஸ்திரிய பேரரசை அழித்து பல ஸ்லாவியர் குடியரசுகளை உருவாக்குதல்தான் அய்ரோப்பிய புரட்சியின் நம்பிக்கையாகும் என அவர் கருதினார்.  Bakunin found the greatest revoultionary potential in uprooted, alienated, declasse elements, elements either  left behind by, or refusing to fit into, modern society.
ஹெர்சன் பகுனினை அமெரிக்கா இல்லாத கொலம்பஸ் மட்டுமல்ல  கப்பலே இல்லாதவர் என்பார்.  centralised conformist and artificial world லிருந்து தப்ப விரும்பும் மனிதனாக அவர் இருந்தார். Life cannot be reduced to laboratory formulas and that efforts in this direction would lead to the worst form tyranny  என்று அறிவியல் வளர்ச்சி என்பதை கண்டு அஞ்சினார். உலக ராணுவ அரசுகள் அடித்துக்கொண்டு அழியும்- ஒன்று மற்றதை விழுங்கும் என கருதினார்.
Every command slaps liberty in the face  என்றார் பகுனின். அவரைப் பொறுத்தவரை இந்த அரசாங்கம் மோசம் அந்த அரசாங்கம் நல்லது என்பதெல்லாம் இல்லை. அரசாங்கம் என்பதே ஆபத்துதான் மோசமானதுதான். மனிதகுலமே சுதந்திரமாக சமதையாக சுதந்திரமாக இருந்தால்தான் எனக்கும் சுதந்திரம். அதாவது எனது சுதந்திரத்தை வரையறுக்காத கட்டுப்படுத்தாத அடுத்த மனிதர்களின் சுதந்திரம் என்பதுமாக அது இருக்கிறது என்றார். பிரிந்துபோகும் உரிமை இல்லாத ஃபெடெரலிசம் என்பதை பகுனின் ஏற்கவில்லை. அது உண்மையான ஃபெடெரலிசம் ஆகாது என்றார். கண்ணுக்கு தெரியாத புரட்சிகரகுழுக்களாக நாம் செயல்படவேண்டும். இருக்கின்ற அரசை அழிக்கவேண்டும். புதிய அரசை அதிகாரத்தை கட்டுவதல்ல  வேலை.
பாட்டளிவர்க்க சர்வாதிகாரம் உலக புரட்சியில் சீப் இன்ஜினியராக  மக்களை நெறிப்படுத்தும் அதிகாரமாக செயல்படும் என்பதே அனைத்து மக்கள் இயக்கங்களையும் திசை திருப்பும்- புரட்சியை கொன்றுவிடும் என்பதை மார்க்ஸ் பார்க்க தவறிவிட்டார். In the socail Revoultion- all that the individuals can do is to formulate and propagate ideas expressing the instictive desires of the people, and contribute thier constant efforts to the revoultionary organsition of the natural power of masses.. all the rest can be accomplished by the people. Otherwise we would end up with a political dictatorship the reconstitution of the state..என்ற பார்வையை வைத்தார் பகுனின்.
வறுமையும் தாழ்வுற்ற நிலையும் மட்டுமே புரட்சியை உருவாக்கிவிடாது. தலமட்ட கலகம் எழலாம். ஆனால் மக்களிடம் சர்வாம்ச கொள்கை பற்ற வேண்டும். அது உரிமைக்கான ஆழமான பற்றுறுதி தாகமாக இருக்கவேண்டும். இந்த ஐடியாவும் வெகுஜன நம்பிக்கையும் இணையும்போது  சமுக புரட்சி அருகாமைக்கு வரும் என்றார் பகுனின். The constructive tasks of the social revoultion, the new forms of life, can emerge only from the living experience of the grass roots organisations which will themselves build the new society according to their manifold needs and desires  என விளக்கம் அளித்தார் பகுனின்.   Collinet போன்றவர் Must the capitalist State be supplanted by a workers' State, or should the workers destroy all forms of State Power? Must power be centralised, or should it be diffusedamong multiple federated units? என்கிற கேள்வியை முன்வைத்தனர். .
 Man is truly free only among equally free men ; the slavery of even one human being violates humanity and negates the freedom of all  என்பார் பகுனின். சமுக ஸ்தாபனங்கள் அனைத்திலும் சுதந்திரம், தனிநபர் சுதந்திரத்தில் சமுக ஒழுங்கு என சொன்னார் அவர். அனைத்து வர்க்கங்கள், ரேங்க் என்பதை தாண்டி அனைவருக்குமான அரசியல் உரிமை, சர்வஜன வாக்கெடுப்பு என அவர் வற்புறுத்தினார். நீதிமான்கள் கூட சமுகத்தால் தேர்ந்த்தெடுக்கப்படுவர். அனைத்து மையப்படுத்தப்பட்ட அரசாங்க  நிர்வாக நிறுவனங்கள் கலைப்பு என்றார். அடிப்படை நிறுவனம் கம்யூன். அதன் அனைத்துவகை நிர்வாகிகளும் வயதுவந்த அனைவராலும் தேர்ந்த்தெடுக்கப்படுவர். கம்யூன், பிராவின்ஸ், தேசம் என்கிற வகையில் கட்டமைப்பு இருக்கும். சுயேச்சையான பிரதேசங்களின் சமஷ்டியாக தேசம் இயங்கும்.

தனிமனித சமத்துவம் என்பதற்கு அவர் விளக்கம் தந்தார்.  Equality does not imply the levelling of individual differences... diversity in capacities and powers- differences between races, nations, sexes, ages and persons- far from being  a social evil  constitutes the abundance of humanity. Every single human being from birth thro adolescence and maturity- find therein equal means, first for maintenance and education, and later, for the exercise of all his natural capacities and aptitudes.
வழிவழி சொத்துரிமை ஒழிக்கப்படும் என்றார். உழைப்பு மனித கெளரவம் என்கிற உணர்தல் இருக்கும். உடல் உழைப்பு, அறிவு உழைப்பு என பாகுபாடுகள் இல்லாமல்  intellegent, free collective labour  என சொல்கிறார் பகுனின்.  Abolition not of the natural family but of the legal family on law and property. Religious  and civil marriage to be replaced by free marriage  என வரையறுத்தார். குழந்தைகள் ’பெற்றவருக்கோ, சமுகத்திற்கோ சொந்தம்’ என உரிமை கொண்டாடமுடியாது. அவர்கள் வளர்க்கப்பட்ட பின்னர் சுதந்திரமானவர்கள். மதசார்பற்ற கல்விமுறை அனுசரிக்கப்படும். வயதானவர், நோயுற்றவர், முடியாதவர் கம்யூனால் பராமரிக்கப்படுவர். சுருக்கமாக கூறினால் political equality, Economic Equality and socail rights from birth for every individual என்பது அவர் கனவு.
சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கான் லீக் என்பதில் விக்டர் ஹ்யுகோ, மில், கரிபால்டி ஆகியோர் ஆர்வம் காட்டினர். ஜெனிவாவில் அதன் முதலாம் காங்கிரஸ் 1867ல் நடந்தது. அங்கு பகுனின் கருத்து ஏற்கப்படாததால் அவர் 1868ல் வெளியேறினார். பெடர்லிசம் என்கிற முக்கிய கருத்தாகம் குறித்து அவர் பேசினார். சோசலிசம் உருவாக்கம் என்பதற்கு பல நூற்றாண்டுகள் பிடிக்கலாம் என்றார். அய்க்கிய அய்ரோப்பிய நாடுகள் என்றார்.
Every state is a terrestrial Church, just as every church, with its own heaven, the dwelling place of immortal God is but a celestial state. Theory of State is essentially founded upon the principle of authority, the eminent theological, metaphysical and political idea that the masses always incappable of governing themselves, must at all times submit to the beneficient yoke of a wisdom and justice imposed upon them, in some way or other from above  என்று அரசின் அவசியம் குறித்து பேசுபவர்களுக்கு மறுப்புரை தந்தார். Nothing is as dangerous for man's personal morality as the habit of commanding   என்றார். மனிதனுக்கு போடப்படும் எந்த கட்டளையும் சுதந்திரத்தின் மீது விழும் அறைதான் என்றார். நான் மட்டுமே ஆளத்தகுதி நிறைந்தவன் என நல்ல மனிதனைக்கூட அதிகாரம் சீரழித்துவிடும். அவர்களுக்கு கட்டளையிட நான் பிறந்துள்ளேன் என்கிற அருவருப்பான பார்வை ஒருவருக்கு பலப்பட்டுவிடும் என்றார் பகுனின். அதிகாரம் என்பதைவிட மனித மூளையை இதயத்தை ஊழல்படுத்தும் ஒன்று வேறில்லை என்றார்.
Anarchy is unrestricted manifestation of the liberated life of the people, spring from liberty, equality the new social order. It matters little to us if that authority is called church, Monarchy, Constitutional state, bourgeisie Republic or Revoultionary Dictatorship. We detest and reject them all of them equally as the unfailing sources of exploitation and despotism   என்பதை அவர் உறுதிப்ட சொல்லிவந்தார். எந்த தேசிய புரட்சியும் சமுக புரட்சி வடிவம் கொள்ளாது வெற்றிபெற முடியாது. அதேபோல் அது அரசு என ஒன்றை அழிக்காதும் வெற்றிபெறமுடியாது என்றார் பகுனின். ஏனெனில் அது மக்களால் மக்களின் நெறிசார்ந்து நடைபெறுவது. புரட்சி என்ற பெயரால் மேலிருந்து கட்டளைப்போட்டு தேசத்தை நடத்தும் அரசால் விடுதலையை அனைத்து மனிதர்களுக்கும் தரமுடியாது என அவர் கருதினார்.


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா