Skip to main content

தாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும் The Philosophy and Political thought of Tagore

தாகூரின் தத்துவமும் அரசியல் பார்வையும்

                              -ஆர்.பட்டாபிராமன்


நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1918ல் சென்னையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் தாகூரின் தத்துவம் என்கிற புத்தகத்தை எழுதினார். தாகூர் அறிய அப்புத்தகம் வெளியானது. உபநிடதங்களும், புத்தர் போதனைகளும் அவரது ஆக்கங்களில்  விரவி   தனித்தன்மையுடன் மேம்பட்டு நிற்பதை தாகூர் ஏற்று இருந்தார். பழம்பெரும் இந்திய ஞானத்தை நவீன உலகிற்குரிய வகையில் தாகூர் வழங்கினார் என்பது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆய்வாகமும் உள்ளது. இந்தியாவின் பழமைதான் அவரது இலட்சியவாதம் என்றும், அவரது தத்துவ சாரம் முழுமையான இந்திய வகைப்பட்டதே என்கிறார்  ராதாகிருஷ்ணன்.
மேற்குல அறிவையும், கிறிஸ்துவ சாரத்தையும் அவர் தனது நம்பிக்கைகளில் ஊடும்பாவுமாக இணைத்தார்மாயைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தாமல், ’மனித கடவுள்பாற்நம்பிக்கையை, செயல்களின்பாற் நம்பிக்கையை தனது அற்புத இலக்கிய மேதைமையில் அவர் வெளிக்கொணர்ந்தார். Rev Urquhart என்பவர் தாகூர் பற்றி He has given Eastern dress to the ideas of West என்றார்.  It is a sigh of soul rather than a reasoned account of metaphysics; an atmosphere rather than philosophy என தாகூரின்சாதனாகுறித்த தனது பார்வையை ராதாகிருஷ்ணான் தருகிறார்.

உயர் லட்சிய கனவுகளுக்கும் நடைமுறை அனுசரிப்பு என்கிற பொருண்மைகளுக்கும் உள்ளே நிலவும் உடைவு, இடைவெளியை தாகூர் மிக அழகாக சுட்டிக்காட்டினார். There is astruggle between the infinite within, which makes the soul yearn for an ideal, and the lower finite, which is the heritage from the past evoultion. On the moral side, we feel the break between ideal aspirations and actual facts என தாகூர் எழுதினார். o Great Beyond, I forget, that the gates are shut every where in the house where I dwell alone என்றார் தாகூர்.
 எவ்வாறு இசைவை ஏற்படுத்துவது என்பது பெரும்கேள்விகாமம் எனம் வியாதியை குணப்படுத்து- நான் எப்போதும் அதை தீர்த்துக்கொள்ளவே விழைகிறேன், அணைத்துவிட அல்ல என்கிற செயிண்ட் அகஸ்டின் வாசகத்தை தாகூருடன் ஒப்பிட்டு சொல்கிறார் ராதாகிருஷ்ணன். Self, not- self சுயம்- சுயமில்லாதது இரண்டையும் இணக்கப்படுத்துவது தத்துவ கேள்வியாக இருக்கிறது. இதை தன் கவிதைகளில் தாகூர் கொணர்வதாக ராதாகிருஷ்ணன் விளக்குகிறார். The Indian mind never has any hesitation in acknowldeging its kinship with nature, its unbroken relation with all என்று தாகூர் சாதனாவில் எழுதினார். பூமி, நீர், ஒளி, பழம், பூ எல்லாம் அவசியமே as every note to the completeness of the sympony என இயற்கையின் அனைத்தையும் அதன் ஒரு வெளிப்பாடான மனிதனுடன் தாகூர் இணக்கப்படுத்தினார்.
மனிதன் தன் உலகுடனும் இயற்கையுடனும் ஆன உறவை அறியாவிட்டால் அவன் சிறைக்கூடத்தில் அன்னியனாக இருக்கிறான் என்றார். தாகூரிடம்  தத்துவம் கவித்துவ வண்ணம் பெறுகிறது. உன் ஜன்னலுக்கு அருகே பிரபஞ்சம், வானம், நட்சத்திர கூட்டங்கள் தட்டு நிறைய விளையாட்டுப்பொருட்கள் போல் உன்னிடம் வந்து நிற்கின்றன என கவிதை தருகிறார். இயற்கையின் சிந்தனையில், அமைதி மற்றும் தனிமையில் மனித மனம் தன்னை இழந்து divine inspiration பெருகிறது என்கிற தாகூரின் விளக்கத்தை  Fruit Gatheringல் பெறமுடிவதாக ராதாகிருஷ்ணன் சொல்கிறார்.
நமக்கு வெளித்தெரியும் வழிபாட்டு சடங்கு ஆசாரங்களும் கோயிலும் அல்ல தேவை. எங்கு இயற்கையின் அழகும் ஆகச்சிறந்த மனித முயற்சிகளும் இசைந்துபோகிறதோ அப்படிப்பட்ட வழிபாட்டுத்தலம்- ஆஸ்ரமம்தான் நமக்கு தேவை எனத் தெரிவித்தார் தாகூர். அன்றாட சத்தம் நிறைந்த உலகிலிருந்து தள்ளிநின்று இயற்கையின் உன்னதங்களை அனுபவிக்கும் மனம் குறித்து தாகூர் பேசுவதாக ராதாகிருஷ்ணன் அவர் கதைகளின் பாத்திரம் மூலம் எடுத்துக்காட்டுகிறார். பிரபஞ்சம் மனிதனுக்கு அந்நியமானதல்ல. இயற்கை அவனை வதைக்கும் எதிரி அல்ல என்கிற புரிதலை தாகூர் மனிதர்களுக்கு தருகிறார்.
உண்மையின்மையிலிருந்து உண்மையை அடைய முடியாது. பாபங்களால் நமது இதயம் தூய்மைபெறாது. அனைத்து எதிர்தன்மைகளும் அப்படியே இணக்கம் பெறாமல், வேறுபாடுகள் நீங்கப்பெறாமல் இருக்கும் என்றார் தாகூர். அப்படியொரு வாழ்க்கை வீண் மட்டுமல்ல தவறும்கூட என்றார். If there is all embracing spirit, the glooms and shadows of life lose their edge and bitterness. Perfect confidence takes place of blank despair என்கிற கருத்திற்கு தாகூர் வருவதாக டாக்டர் ராதாகிருஷ்ணான் சொல்கிறார். கீதாஞ்சலியில் All that is harsh and dissonant melts into one sweet harmony என தாகூர் தந்த வரிகளை நாம் கண்டுணரமுடியும்.
God finds himself by creating என பேசும்போது ஹெகல் கருத்துடன் நெருங்குகிறார்.. அவருக்குள் அந்த கேட்கும் ஆன்மாவை பெறுகிறார். வெளியில் பார்த்திருப்பவன் தனது சுயத்தின் நீட்சிதான்அன்புக்குரியவரிடத்தில்  அன்பை தேடுதல் என தாகூரின் வரிகளுக்கு  It is their mutual supplementation என்கிற விளக்கத்தை ராதாகிருஷ்ணன் தருகிறார்.
The Cycle of Spring ல் Old is ever new என்பதை வெளிப்படுத்துவதாகவும், தாயின் கருப்பை விட்டு நீங்குகையில் குழந்தை தன் தாயை காண்கிறது என  Fruit Gatheringலும் அவர் எழுதுகிறார். The universe is struggle of finite to reach the infinite. All objects of the world are finite-infinite, but the tension between the two is at its highest in the human consciousness என்கிற விளக்கத்தை ராதாகிருஷ்ணன் தந்து  தாகூரின் சாதனா வரிகளான The revealment of the infinite in the finite, which is the motive of all creation..மேற்கோளாக காட்டுகிறார். நமது உலகிற்கு அனைவரும் யாத்ரிகர்களாக வருகிறோம். நாம் சாலையை பார்க்கிறோம். ஆனால் முடியவில்லை என்றார் தாகூர். அறிவு வேறுபடுத்தி பார்க்கிறது.- ஒன்று எனும் சாரத்தை காணத்தவறுகிறது என்கிறார்.
இதை ராதாகிருஷ்ணன் கூடுதலாக எடுத்து சொல்கிரார். The intellectual vision is full of hard and fast lines of distinction. It makes the opposites absoulte, and the system becomes full of contradictions, but if we pierce behind it we shall find that the rigid distinctions of intellect are fluid, mingle in a wondrous whole.. அனைத்திற்கும் மேலான ஒன்று என்பது நமது ஆன்ம தரிசனம். அது காரணகாரிய பகுத்தறிவு  நிறுவுதலில் இல்லை என தாகூர் எழுதினார் . உள்ளுணர்வையும் அறிவையும் அவர் வேறுபடுத்தி விளக்குகிறார். அன்பின்வழிப்பட்ட ஞானம் முன்னது என்கிறார். உற்றுநோக்குதல்வழி அறிவு என்கிறார்.
ராதாகிருஷ்ணனும் கடவுளை காரணகாரிய அறிவின் வழி காணமுடியாது என்றே சொல்பவர். கலைஞர்கள், கவிகள் உள்ளுணர்வின்வழி தேடல் நிரம்பியவர்கள். அவர்களுக்கு கிடைக்கும் பார்வைதீர்க்கத்தில் வாழ்பவர்கள். மண்பெயர்க்கும் உழவனிடம், கல்லுடைப்பவனிடம் கடவுளை காண்பதாக எழுதியவர் தாகூர். அவரைப்பொறுத்தவரை உருவமற்ற, இதுதான் அம்சம் என சொல்லமுடியாத ஒன்றைத்தான் பாடுகிறார்- the inscrutable without name and form என்றார். பிரபஞ்சம் கடவுளின் வடிவம் என்கிற கருத்திலும் அவர் சொல்கிறார். வானம் உனது கலைக்கூடம்  என்கிறார்.
 ராதாகிருஷ்ணன் கபீரிடமும் நம்மை அழைத்து செல்கிறார். கடவுள்  மரம்- விதை- பூ, பழம், சூரியன், நிழல், வெளிச்சம், பிரம்மம், படைப்பு, மாயை- அவனே பன்முகத்தானவன் - எல்லையற்ற பெருவெளி, மூச்சு, வார்த்தை, அர்த்தம். எல்லை- எல்லையற்றவன் என கபீர் சிந்தனை விரிகிறது. When Absoulte is above the grasp ofintellect, we do not mean that it is opposed it என்கிற தனது பார்வையையும் ராதாகிருஷ்ணன் வைக்கிறார்.
காதலன் காதலி பாவத்தில்தான் கவிகள்  உள்ளுணர்வுவாதிகள் தங்கள் சிந்தை நகர்தலை செய்வர். எல்லைக்குள் நின்று எல்லையற்றது நோக்கிய பாவம் கீதாஞ்சலியில் செயல்படுவதை காணமுடியும். நான்கு கண்கள் சந்தித்தன. இரண்டு ஆன்மாக்களில் பெரும் மாற்றம் என பெர்ஷிய கவிதை ஒன்றை ராதாகிருஷ்ணன் காட்டுகிறார். அன்பில்- காதலில் சுயம் நிற்பதையும் அது சுயமற்று போவதையும் சாதானாவில் தாகூர் சொல்கிறார். Here I am; at the other the equally strong denial- I am not என்றார். To Tagore God is not a being seated high up in the heavens, but a spirit of immanent in the whole Universe of persons and things என்பது ராதாகிருஷ்ணன் தரும் விளக்கம்.
மாடர்ன் ரிவ்யூ ஆகஸ்ட் 1913 இதழில் இந்திய ஆத்திகம் பற்றி தாகூர் எழுதினார். இந்திய பிரம்ம வித்யாவில் இருவித பார்வைகள் இருக்கின்றன. புலனாகாத கடவுள், புலனுக்குரிய தன் கடவுள் என்கிற (மோனிசம்)   ஒருமைவாத மற்றும் இருமையியல் இருக்கிறது. இருமை என்பதை ஏற்காவிட்டால் வழிபாடு என்பது இல்லை. டிவோஷன்பக்தி என்பதற்கு ஒன்றிப்போதல் என்கிற குவிப்புள்ளி தேவை. சுயம் அறிய சுய மறுப்பு’ என்பதை ராதாகிருஷ்ணன் பல உதாரணங்கள் மூலம் காட்டுகிறார். தன்னை இழத்தல் மூலம் ஆன்மா உணர்தல்.  அவனை (கடவுளை) கண்டறியும்போது ஒருவன் மனிதனாக இருப்பதில்லை என்கிறார். It is self transcendence, not annihilation என்கிற அவசர குறிப்பு ஒன்றையும் இதனால் ராதாகிருஷ்ணன் தர நேர்ந்தது. Life dies into fullness , when one knows thee, then alien there is none, then no door is shut என்றும் தாகூர் கவிதை வரிகள் செல்கின்றன.

கீதாஞ்சலியில் சாவும் பிறப்பை போலவே வாழ்விற்குரிய ஒன்றே என எழுதினார். நடை என்பது காலை உயரே தூக்குவது மட்டுமல்ல, கீழே தாழ்த்துவதும் கூடத்தான் என முரண்பாட்டின் அழகியலை காட்டுகிறார். உலகம் எனும் சங்கீதம் பாடுபவனிடம் இருந்து  கணநேரம் கூட பிரிவதில்லை. The infinite and finite are one, as song and singing are one.. The real with its meaning read wrong and emphasis misplaced is the unreal என கவித்துவம் பொங்க எழுதினார் தாகூர். அழுக்குலிருந்து பிறக்கும் மலர் தனது மூலத்தின் அருவருப்பை  தன்னுள் அழித்து மணம் வீசுகிறது என்றும்  மண் தனக்கு நேரும் காயங்களை மறந்து பூவை வெளித்தருகிறது என்றும் கீதாஞசலி வரிகளை பார்க்க முடிகிறது.
எல்லையற்ற ஒன்றில்தான் எல்லைக்குட்பட்ட எல்லாம் என்றாலும் எல்லைகுட்பட்ட மனிதசேவையில் அல்லாமல் எல்லையற்ற பரம்பொருள் விசுவாசம் என ஏதுமில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.. infinite is not other than the finite, but is the finite transfigured என்றார் தாகூர். இதையே ராதாகிருஷ்ணன் Life eternal is not the lifebeyond time, but is the life recognition, here and now என்றார். மாசு, குறைபாடு, பூரணமின்மை என்பதெல்லாம் இல்லாமல் உலகம் இல்லை என்பதை ரவீந்திரர் அதன் உள்ளார்ந்த முரண்பாடு, ஒத்திசைவு மூலம் எடுத்து சொன்னார். Imperfection is not a negation of perfectness; finitude is not contradictory to infinity; they are but completeness manifested in parts, infinity revealed within bounds என்று சாதானாவில் எழுதினார்.  இதையே டாக்டர் ராதாகிருஷ்ணன் Imperfection is a necessary factor in the universe. It is as real as the created universe itself  என விளக்குவார்.
வலி உணர்தல் இல்லாமல் அன்பில்லை என்கிற கருத்து தாகூரிடம் இருந்தது. பெரும் துயரங்களும், கீழ்மைப்படுத்தப்படுதல் என்கிற அவமானங்களுக்கு உள்ளாவதும் ஒருவனை முழுமைப்படுத்துகின்றன என்றார் தாகூர். நமது ஆசைகளும் ஆவல்களும் நம்மை சுயம் குறித்த புரிதலுக்கு தடையாகி விடுகின்றன என்றார். நமது பாவ காரியங்கள் நம்மை சுயநலக்காரர்கள் ஆக்கி அனவரும் ஒன்று என்ற உணர்தலை பெறமுடியாமல் தடுக்கின்றன என்றார்.

When we seek false ends we become bound by desires என கீதாஞ்சலி பேசுகிறது.. உண்மையான வேலை என்பது எப்போதுமான வேலையல்ல. அவன் மகிழ்ச்சிக்காக வேலையாக இருக்கவேண்டும். எளிமையான, இயல்பானதாக இருக்கவேண்டும் என்பார் தாகூர் Where man is at his greatest, he is unconscious என்றார்

Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு