Skip to main content

Bakunin பகுனின் 4

IV
பகுனின் dictum என The passion for destruction is also a creative passion வாசகம் புகழ் பெறத்துவங்கியது  ஹெகலிடமிருந்தே மார்க்ஸ், பகுனின் துவங்கினாலும் ’ரீஆக்‌ஷன் இன் ஜெர்மனி’ என்கிற கட்டுரையில் பகுனின் பாயர்பாக் தனது நல்லாசிரியர் என்கிறார். மார்க்சின் விடுதலை குறித்த பார்வை ஒடுக்கப்படும் வர்க்கத்தின் விடுதலை என்பதாக இருந்தது. பகுனின் அதீத அளவில் தனிமனித விடுதலை என வற்புறுத்தினார். Individualism remains the essence of Bakunin's social and political system and his opposition to Marx  என்கிற மதிப்பீட்டை வரலாற்றாய்வாளர் கார் தருகிறார்.
1873ல் வினோத முரண்பாட்டில் அவர் சிக்கினார். சிவிஸ் நாட்டு தேச உரிமை பெற அங்கு வீடு சொத்து இருந்தால் பெறலாம் என் நண்பர்கள் சொல்ல அவர் அதற்கு முயற்சி எடுத்து வீடும் வாங்குகிறார். தனிச்சொத்து பற்றி பெரிதாக பேசிய அவருக்கு இது சோதனைதான் என கார் எழுதுகிறார். சில நேரம் அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லை என்ற நிலையில் இருந்த பகுனின் சில மாதங்களில் நண்பர்கள் உதவிட சொத்து பெறமுடிந்தது. Carlo Cafiero  என்கிற தெற்கு இத்தாலி சார்ந்த அனார்க்கிஸ்ட் தலைவர் தனது சொத்துக்களை விற்று பகுனின் வாழந்திட சுவிட்சர்லாந்தில் வீடு வாங்கிக் கொடுத்தார். அவ்வீடு புரட்சியாளர்களின் புகலிடமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. முதலில் 50 ஆயிரம் ப்ராங்க் கார்லோ அனுப்பிய குறிப்பு கிடைக்கிறது. அதே போல் மற்றொருமுறையும் அனுப்பியதற்கான செய்தியை கார் தருகிறார்.
1874ல் அந்தோனியா தnaது மூன்று குழந்தைகளுடனும், தாயாருடனும் அங்கு வந்து சேர்கிறார். ஆனால் பகுனினுக்கு ராஸ் மற்றும் கபியெரோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் வீட்டை கபியோரேவிற்கே இருந்த பசுமாடுகள், குதிரைகளுடன் எழுதிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தோனியாவிற்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாத நிலையில் பகுனின் மிகவும் அவதிக்குள்ளானார். அந்தோனியா வந்த சில நாட்களில் பகுனின் ராஸ் உடன் இத்தாலி சென்றார். அங்கிருந்து அந்தோனொயாவிற்கு அவ்வீடு குறித்த விவரங்களை  A justificatory Memoir to my poor Antonia  என்று எழுதினார்.

Bolgona  பகுதியில் கலகக்காரர்களுடன் தபுருனி என்கிற பெயரில் பகுனின் மறைந்து வாழ்ந்தார். அங்கு கலகம் தோற்றவுடன் தற்கொலை செய்து கொண்டுவிடலாம் என கருதினார். பின்னர் அவர் முழுமையாக முக சவரம் செய்துகொண்டு மாறுவேடத்தில் நாட்டுப்புற பாதிரியார் போல பல இடங்களுக்கு சென்றார். பிறகு அவர் வீடு வாங்கிய சுவிட்ஜர்லாந்தின் லோகார்னோவிற்கு திரும்ப நினைத்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்தோனியா ராஸ் மூலம் அவ்வீடு புரட்சிக்கார்களுக்கு சொந்தமானது அவரது கணவருக்கல்ல என்பதை தெரிந்துகொண்டார்.
பகுனின் தாஸ்தவஸ்கி சூதாட்டம் ஆடிய காசினோவில் சென்று வந்ததாக கார் குறிப்பிடுகிறார். அந்தோனியா தன்னை ஏற்றுக்கொள்ளாமல் காதலன் காம்புஸியிடம் போக முடிவானால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வழியில்லை என்ற மனநிலை அவருக்கு உருவானது. ஆனால் செப்டம்பர் 1874ல் தன்னுடன் லுகானோ எனும் பகுதிக்கு வந்து சேரும்படி அந்தோனியா கடிதம் எழுதினார். பகுனின் அக்டோபர் 7, 1874ல் அந்தோனியா இருப்பிடத்திற்கு சென்று சேர்ந்தார். சில நாட்களில் அப்பகுதியில் மாஜினி ஆதரவு பேராசிரியர்களுடன் நட்பு பூண்டார். காம்புஸி அவ்வப்போது அங்கு வந்து சென்றார். லுகோனாவில் காலையில் காபி பத்ரிக்கைகள் படிப்பது, நண்பர்களுடன் விவாதம்,  மாலை 4 மணியிலிருந்து 8 மணிவரை உறக்கம், சிறிது நேரம் அந்தோனியாவுடன், பின்னர் இரவு வெகுநேரம் கண்விழித்து படித்தல், எழுதுதல் என்கிற முறையை கையாண்டு வந்தார். ஆங்காங்கே கடன்  இல்லாமல் இல்லை.
தொழிலாளர்களுக்கு அனார்க்கிசம் பற்றி எடுத்துரைத்து வந்தார். அவருக்கு நாம் நிறைய பேசிவிட்டோம். இனி வயதான காலத்தில் கற்றுக் கொள்வதுதான் உகந்தது என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் ஜான் ஸ்டூவர்ட் மில், ஷோபன்ஹேர் புத்தகங்களை தினமும் படிப்பவரானார். திரும்ப காபிடல் புத்த்கம் வேண்டி நண்பர் ஆடால்ப் வோக்ட்க்கு எழுதினார். சொந்த ஊரான பிரேமுகினோவில்  சொந்தமாக இருந்த காடுகளை விற்றால் பகுனின் பங்காக லட்சம் பிராங்க் கிடைக்கும் என சகோதரர் மத்தியில் பேச்சு எழுந்தது. பிப்ரவரி 1875ல் 28000 பிராங்க் கொடுத்து லுகனான் நகருக்கு அருகில் வில்லா ஒன்றை அவர் வாங்கியதாக குறிப்பு கிடைக்கிறது. தான் இடுகாட்டிற்கு போவதற்கு முன்னர் சொந்த ஊர் வந்து உறவினர் அனைவரையும் பார்க்க விரும்புவதாக பகுனின் எழுதினார். விவசாயம் என்பதில் ஆர்வம் கொண்டு உரங்கள் குறித்து தெரிந்து கொள்ள கெமிஸ்ட்ரி படித்தார் பகுனின். பலவகை விதைகளை தருவித்தார்.
பகுனின் உடல்நிலை தளரத்துவங்கியது. ஆஸ்த்மா, இதயநோய், கால் வீக்கம், காதுகேளமையால் அவதிப்பட்டார். இத்தாலி தொழிலாளர் இருவர் காலை மாலை வந்து அவருக்கு ஆடை அணிவித்திட உதவினர். ராஸ், கபியெரோ போன்றவர்கள் அந்தோனியா அறியாமல் பகுனினை பார்த்து சென்றனர். 1876ல் அலெக்சாந்திர வெபர் எனும்  இளம் ருஷ்ய பெண் தினம் பகுனினை பார்க்க வரத்துவங்கினார். அவருக்கான தனி சிறுஅறையில் பல்வேறு மொழி புத்தகங்கள் , தினசரிகள் எழுதுகோல் மருந்துகள் ஆங்காங்கே முறையற்று காணப்பட்டன. வெபரிடம் அடிக்கடி ருஷ்யா தற்போது எப்படி இருக்கிறது எனக்கேட்டு அறிந்து வந்தார். அவரது சகோதரி தத்யானா அடிக்கடி சொல்லும் சாவது எப்படி அருமையாக இருக்கிறது என்பது அவருக்கு அடிக்கடி கேட்கத்துவங்கியது.
அந்தோனியா இத்தாலி போய்விட்லாம் என வற்புறுத்த துவங்கினார். அங்கி அரசியலில் ஈடுபடவில்ல்லை என ஆட்சியாளர்களுக்கு தெரிவித்து தங்கிவிடலாம் என்றார். வெபர் கடுமையாக இதை ஆட்சேபித்தார். பகுனின் தன் வரலாற்றை, பெருமிதத்தை இழந்துவிடுவார் என்றார் அந்த இளம் பெண் வெபர். ஆனால் அந்தோனியா பேச்சை பகுனினால் தட்ட முடியவில்லைல். தனது நம்பிக்கைகுரிய செருப்பு தொழிலாளியுடன் அவர் ஜூன் 1876ல் லுகானோ விட்டு புறப்பட்டார். வழியில் பெர்னேவில் அடால்ப் வோக்ட் அவரை ரயில் நிலயத்தில் வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பழம் நண்பர்கள் பலர் மருத்துவமனை வந்து பார்த்தனர். அவர்களிடம் நான் என் நினவுகளை எழுதினால் யார் படிக்கப்போகிறார்கள் என வினவினார். ஷோபன்ஹார் புத்தகங்களை படிக்க வேண்டினார்.

அவரது உடல்நில ஒத்துழைக்க மறுத்து அவர் ஜூன் 28 1878ல் கோமா விற்கு சென்றார். முன்னதாக அவரை தினமும் பார்த்து இசை குறித்து ரெய்ச்சேல் குடும்பத்தினர் பேசிவந்தனர்.  ஜூலை 1, 1876ல்  சனிக்கிழமை மதியம் அவர்கள் வந்தபோது அவர் மறைந்த செய்திதான் கிடைத்தது. உடல் நிறமாறியது.  ஜூலை 3 அன்று அவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றன. நாற்பதுபேர்களுக்கு குறைவாக பங்கேற்றனர். எவ்வளவு பெரிய சவப்பெட்டி என அவ்வேலை செய்யும் தொழிலாளர்கள் சிரித்துக்கொண்டே பேசியதை கார் குறிப்பிடுகிறார். மிக எளிய முறையில் இறுதி சடங்குகள் முடிந்தன. வாழ்நாள் போராளி, அதிகாரத்திற்கு எதிரான குரல் எழுப்பிய போரளி எந்த பகட்டும் இல்லாமல் சவப்பெட்டிக்குள் அடங்கிப்போனார் என்கிறார் கார். அப்போது நேப்பிள்ஸ் நகரில் இருந்த அந்தோனியா பின் பெர்ன் வருகிறார். அங்கிருந்த நண்பர்களுடன் நடந்தது குறித்து கேட்டறிகிறார்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...