Skip to main content

BAKUNIN பகுனின் 7

VII
Federalism, Socialism , Anti Theologism  என்பதை அவர் முழக்கமாக தந்தார். 1869 பாசல் காங்கிரஸ் அகிலத்தின் கூட்டத்தில் அரசிடம் அனைத்து சொத்துக்களும் என வாதாடிய  State- Authoritarian Communists   மற்றும் அனைத்து சொத்துக்களும் தொழிலாளர் அமைப்புவசம் என வாதாடிய  anti authoritarian communist federalists- anarchists  என இரு பிரிவுகள் மோதிக்கொண்டதாக  அனார்க்கிச வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தன்னை கலெக்டிவிஸ்ட் என அழைத்துக்கொண்ட பகுனின் கீழ்கண்ட விளக்கம் தந்தார் என அப்பதிவு சொல்கிறது.  I want society and collective or social property to be organised from the bottom up by way of free association, and not from the top  down by means of any authority whatsoever.
கூட்டாக உழைப்பவர் செல்வ உற்பத்தி செய்வர். அதை கூட்டாக சொந்தம் கொண்டாடுவர். அவரைப்பொறுத்தவரை படித்த கோட்பாட்டு விளக்க சோசலிஸ்ட்களைவிட உண்மையான சோசலிஸ்ட்கள் அன்றாட கடும் உழைப்பால் சமுக அவலங்களை சந்திக்கும் படிப்பறிவற்ற வாழ்க்கையில் ஏதும் கிடைக்காதவர்களே.  It is socialistic by virtue of the material conditions and the needs of its being, while the others are only intellectually socialist  என்கிற விளக்கத்தை கொண்டிருந்தார் பகுனின். ஏற்கனேவே உள்ளுணர்வால் உணரப்பட்ட அவர்களிடத்து சோசலிச சிந்தனைகள் கொண்டு செல்லப்பட்டு விழிப்படைய வைத்துவிட்டால் அச்சக்தி வெற்றி பெறும் என்றார்.
1870-71 பாரிஸ் கம்யூன் காலத்தில்  The letter to Albert Richard  என்பதில் புரட்சிகர சிறுபான்மையினருக்கும் வெகுமக்களுக்குமான உறவு என்பதை பகுனின் விவாதித்தார். பகுனின் பங்கேற்ற  Lyons Uprising  என்பதை பொறுப்பற்ற சாகசம் என விமர்சித்தவர்கள் பலர். அக்கடிதத்திலும் மார்க்சியர்கள் கருதியமைக்கும் தனக்கும் இருந்த ’புரட்சி அதற்கு பின்னரான அரசு அமைத்தல்’  நடவடிக்கைகள் குறித்த வேறுபாடுகளை சுட்டிக்காட்டுகிறார் பகுனின். தன்னைப் பொறுத்தவரை பாரிசில்தான் எழுச்சி என்பதல்ல எங்கு வேண்டுமானாலும் எழலாம். ஆனால் அவை வேர்க்கால் இயக்க வலுவால் அவற்றின்  தேவைக்கேற்பே எழும்பும் என்றார்.
In short, the revolution emanating from all points should not must not depend on a single directing center. The center must not be the source, but the product, not the cause, but the effect of the revoultion  என்பது அவரின் கருத்தாக இருந்தது. எந்த மையப்படுத்த இடத்திலிருந்து எக்கட்டளையும் கூடாது என்பதை பல்வேறு வடிவங்களில் அவர் விளக்குவதை நம்மால் உணரமுடியும். ஒரே வரியில் அவர் தன்னை விளக்கிக்கொண்டார். Every command is a slap on the face of Liberty .
பிரஞ்சுகாரர்களுக்கு கடிதம் என்பதும் அவரது முக்கிய ஆக்கமாக அனார்க்கிஸ்ட்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் புரட்சிகர தன்மை என்பதை பகுனின் வற்புறுத்தினார். அவர்களிடம் அரியாமை இருந்தாலும் பொது புத்தி, பாராட்டக்கூடிய திறமை வெளிப்பாடுகள் இருக்கிறது என்றார்..  Let us talk less about revoultion but  be consistent in actions  என்றார். Revoultion is no longer revoultion when it becomes despotic, and when, instead of promoting fredom, it begets reaction. The goal of the revoultion is the extirpation of the principle of authority in all its possible manifestations, abolition of State.
State socialism   அரசு சோசலிசம் என்பதை அவர் விளக்கினார்.  Labour employed by the State. The state will then become the only banker, capitalist, organiserand director of all national labour, and the distributor of all its products. Such is the ideal, the fundamental principle of modern communism- authoritarian communism- state socialism  என விமர்சித்தார் பகுனின். நவீன உலகின் நடப்புகள் நமக்கு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளன. எந்த வடிவத்தில் அரசு ஆனாலும் அது எதேச்சதிகாரத்திற்கே போகும் என தனது கவலையை அவர் பகிர்ந்து கொண்டார்

கடவுளும்   அரசும்  God  and State   அவரின் அற்புத கருத்தாக்கம். தவறிழைக்காதவர் என எந்த அதாரிட்டி மீதும் தனக்கு நம்பிக்கையில்லை. ஒரு தனிநபரின் நேர்மை, உழைப்பு அனைத்திலும் நான் கொள்ளும் மரியாதை என்பது அவரை தாண்டி எனக்கு நம்பிக்கை வேறு எங்கும் இல்லை என்பதற்கானதல்ல என்றார் பகுனின். சில ’சிறப்பு திறமையாளர்களை’ நாம் போற்றலாம், கொண்டாடலாம் என்பது வேறு. அவர்கள் மீது முற்று முழுதான நம்பிக்கை கொள்வது என்பது வேறு என்றார்  I receive and I give; such is human life. Each directs and is directed in his turn. and so no fixed and constant authority, but a continual flutuation of mutual, temporary and above all voluntary authority and subordination  என மேலும் அவர் மனித உறவுகளின் ஊடாட்டத்தை தெளிவுபடுத்துகிறார்.
மனித முயற்சிக்கும் சுதந்திரத்திற்கும் சமுகம் வேர் என்பதை பகுனின் ஏற்கிறார். அவனது கூட்டு சமுக உழைப்பில்தான் அவன் தன்னை சுதந்திரமாக்கிக் கொள்ளமுடியும் என்பதையும் சொல்கிறார். மற்றவர்கள் இருந்தால்தான், அவர்கள் முன்னர்தான் நான் சுதந்திரமானவன் என்கிற உணர்வே வெளிப்படும் என்கிறார் It is the slavery of other men that sets up a barrier to my freedom.I am truly free only when all human beings, men and women, are equally free..
சமுகம் இயல்பானது என அவர் கருதினார். அரசை எதிர்ப்பதற்கு உள்ள அவசியம் போல் சமுக எதிர்ப்பிற்கான் அவசியம் இராது என கருதினார்.  Society, so to speak, individualises itself  in every individual  என அவரது விளக்கமாக அமைந்தது.
தொழிற்சங்க அதிகாரம் Union Bureacracy  என்பது பற்றியும் அவர் பேசினார். தொழிலாளிகளை கலந்து பேசாமலே முடிவெடுப்பதை அவர் விமர்சித்தார்.  The leaders regard themselves as the absolute masters of their constituents, as permanent chiefs, whose power is sanctioned by their services as well as the length of their tenure in office .  அகிலத்தை பொறுத்தவரை அது ஏழ்மையானது. நிதி பற்றாக்குறை கொண்டது. அங்கு அவ்வித ஊழலுக்கு தலைவர்கள் இரையாக முடியாது ஆனால் அங்கு வேறுவகைப்பட்ட ஊழல் மலிந்துள்ளது. வெற்று ஜம்பம், பகட்டான குறிக்கோள் என விமர்சித்தார்.
If there is devil in human history, that devil is the principle of command. It sustained by the ignornace and stupidity of masses, without which it could not exist..  தனிப்பட்ட தனது நெறியை காத்துக்கொள்ளவேண்டும் என நினைப்பவர் அதிகாரத்தில் அதிக காலம் இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்தால் விழிப்பாகவும் எதிர்கருத்துகளுக்கு இடமளித்தும்தான் இருக்க வேண்டும். அகிலத்தில் யார் வேலை செய்கிறோம்.  Workers  in General. Workers for what? Workers  for the idea, for propaganda, for the Social revoultion   என கேள்விகேட்டு தனது விளக்கத்தை அவர் தந்தார்.

ஒரு துறைசார்ந்த தொழிலாளியிடம் போய் உலகம் இப்படி இருக்கிறது என பேசிக்கொண்டு நீங்கள் போகமுடியாது. அவன் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்ச்னைகளை புரிந்துகொண்டுதான் பேசவேண்டும். அவனிடம் போய் நமது அனைத்து சோசலிச திட்டங்களையும் பேசுவது  எதிர் விளவுகளை கூட உருவாக்கிவிடும் என எச்சரித்தார். It is not enough that the workers can free themselves by way of international solidarity. It also necessary that they have confidence in the effectiveness of this solidarity and in their coming deliverance  என்றார்
தொழிலாளர் இயக்கம் இல்லாமல் வெறும் அகிலத்தின் மையம் என்றால் அது உடலற்ற வெற்று ஆன்மா போன்றாகிவிடும் என்றார் .  அனைத்துவித சமுக வாழ்வும் மக்கள்திரளின் தனிநபர்களின் ஒருவொருக்கு ஒருவரான செயல் ஊடாட்டமே. ஆகச்சிறந்த அறிஞர் என்பானும் கூட மக்கள் செயலின் விளைப்பாடே என்றார் பகுனின். அகிலமே தன்னை அரசாக வடிவமைத்துக்கொள்ளக்கூடாது. அரசு என்பதை அழிப்பது என்றில்லாமல் அகிலத்திற்கு தன்னைப் பொறுத்தவரை அர்த்தம் இல்லை என்றார். மார்க்ஸ் பார்வையிலிருந்து மாறுபட்டு அனார்க்கிஸ்ட்கள் பாரிஸ் கம்யூன் குறித்து பேசினர். பாரிஸ் கம்யூனை அதாரிட்டேரியன் சோசலிச மாடலின் தோல்வி என்றனர்.
I am not a scholar or a philosopher not even a professional writer. I have not done much writing in my life and have never written except, so to speak, in self defense, and only when a passionate conviction forced me to overcome my instictive dislike for any public exhibition of myself... I am an impassioned seeker of truth and a fanatical lover of liberty   and a convinced advocate of economic and social equality என தன்னை மிகச் சரியாக புரிந்துகொண்டு வெளிப்படுத்தினார் பகுனின்.
அரசுவாதமும் அராஜகவாதமும் என்கிற ஆக்கத்தை அவர் 1873ல் எழுதினார். ருஷ்ய மொழியில் அது எழுதப்பட்டது. அனைத்துவகை அரசாங்க வடிவங்களுக்கும் நாங்கள் விரோதிகள் என அறைகூவி சொல்கிறோம் என எழுதினார். மார்க்ஸ் மற்றும் லசேல் சொல்வது போல் பாட்டாளிகளை ஆளும்வர்க்க்கமாக உயர்த்துவது- மக்கள் அரசு என்பதை ஏற்பதற்கில்லை.  State without slavery is unthinkable .   அனைத்து பாட்டாளிகளும் ஆளமுடியுமா- எனவே அவர்களுக்காக சிறு பிரதிநிதி குழு என்கின்றனர். அவர்கள் தேர்ந்த அறிவார்ந்த சோசலிஸ்ட்கள் என்கின்றனர். ஆனால் அவர்கள் தொழிலாளர்களாக தொடர்வதில்லை. ஆகா அற்புதம்..  The uneducated people will be totally relieved of the cares of administration, and will be treated as a regimented herd.. Beautiful liberation  என கேலி செய்தார் பகுனின்.
According to Marx, the people not only should not abolish the State, but, on the contrary, they must strengthen and enlarge it, and turn it over to the full disposition of their benefactors, guardians and teachers- the leaders of the Communist party, meaning Marx and his friends- who will  then liberate them in thier own way. They will concentrate  all admistrative power in thier own strong hands, because the ignorant people are in need of a strong guardianship...  என மிக உக்கிரமான தாக்குதலை மார்க்சிய வரையறைகளின் மீது பகுனின் தொடுத்தார்.
எவ்வளவுதான் பாதுகாப்பு அரவணைப்பு தருவதாக தெரியும் அரசாங்கமாக இருந்தாலும் அது எதிர்ப்பை சகிக்காது. அதன் அரசியல் மேலாண்மையை விட்டுக்கொடுக்காது. அதனிடத்தில் விசுவாசமாக இருப்பதற்கு பணிந்து நடப்பதற்கு அமைதியான, தாஜா செய்வது உட்பட செய்து பார்க்கும் முடியாத நேரத்தில் அடைக்கி ஒடுக்கும். நவீன அரசு அதன் வடிவத்தில் இராணுவ அரசுதான். அது படையெடுக்கும்- விரிவுபடுத்திக்கொள்ளும் அரசுதான் என புரிந்து கொள்ளவேண்டுமென்றார் பகுனின்.
தேசியம் என்பது ஏதோ மனிதாபிமான கொள்கையின் அடையாளமல்ல. அது வரலாற்றின் விளைபொருளாக பொறுத்துக்கொள்ளப்படும்  ’facts’ ல் ஒன்றுதான் என்றார். அரசின் நுகத்தடியிலிருந்து விடுபட பொருளாதார அரசியல் விடுதலை பெறுவது இரத்தம் சிந்தும் போராட்டங்களாலேயே சாத்தியம் என அவர் கருதினார். சோசலிச சமுகப் புரட்சி அதன் சாரத்தில் சர்வதேசத்த்னமையானதாகவும் இருக்கிறது.
தனது இறுதி ஆண்டுகளில் தனக்கு நெருங்கியவர்களுக்கு தான் ஒதுங்கிவிடப்போவதாக கடிதம் எழுதினார். தன்மீது எழுப்பப்படும் அவதூறுகள் கண்டு சலிப்படைந்ததாகவும் தெரிவித்தார். மார்க்சியர்களிடமிருந்து அமைப்பை காப்பாற்றி அனார்க்கிஸ்ட்கள் இத்தாலி போன்ற நாடுகளில் நடத்திவரும் போராட்டத்தை பாராட்டினார். ஆனால் மனசோர்வை, நிராசையை, தன் கனவின் தகர்வை அவர் வெளிப்படுத்தி வந்தார்.
பகுனின், மார்க்ஸ் இருவரின் மறைவிற்கு பின்னரும் அவர்களது வேறுபாடுகள் தொடர்ந்த விவாதங்களுக்கு இன்றளவிலும் உள்ளாகிவருகின்றன. பகுனின் சிந்தனைகளை மனோராஜ்ய கற்பனைவாதம் என மார்க்சியர்கள்  விமர்சித்த்னர். சிறு சிறு கம்யூன் பகுதிகளில் வட்டார அளவில்தான் ஜனநாயகம் சமத்துவம் சாத்தியம் என்கிற பகுனின் சிந்தனை தவறானது மட்டுமல்ல போலியானது என மார்க்சியர்  விமர்சனம் அமைந்தது. அவரின் பல கருத்துக்கள் நகைப்பிற்கு இடம் தருபவன என ட்ராட்ஸ்கியவாதிகள் தாக்கினர்.
 மையப்படுத்தப்பட்ட அதிகாரம் எதிர்த்து போராடியதாக சொல்லப்பட்ட பகுனின் தனது இரகசிய அமைப்புகளில் தனது அதிகாரத்தை செலுத்துபவராகவும் தன்னை சிட்டிசன் பி என்றுதான் அழைக்கவேண்டும் என கட்டளை இட்டதாகவும் விமர்சனம் வந்தது. அரசே வேண்டாம் என்றவர்கள் சில நேரங்களில் பூர்ஷ்வா அரசாங்கங்களில் பங்கேற்றவர்களாக இருந்தார்கள் என்கிற விமர்சனமும் அனார்க்க்சிசவாதிகள் மீது எழுந்தது.
1850ல் எங்கெல்ஸ் எழுதி 1927வரை வெளிவராத பகுதி ஒன்றில் அவர் அரசை ஒழிப்பது எப்போது என பேசுகிறார் ’for communists abolition of the state makes sense only as the necessary result of the abolition of classes, with whose disappearance the need for the organised power of one class for the purpose of holding down the other class will automatically disappear.’- abolition of State  என மார்க்ஸ்- எங்கெல்ஸ் காலத்தில் எழுந்த குரலை absurd idealism என இருவரும் கருதினர். அதேபோல் எங்கெல்ஸ் தனது மிலான் நகர் நண்பருக்கு எழுதும் கடிதத்தில் ‘state power is nothing more than the organisation which the ruling classes have provided for themselves in order to protect their social privileges but Bakunin maintains that it is the state which has created capital. That the capitalist has his capital only by grace of the state. As therefore the state is the chief evil, it is above all the state which must be done away with and then capitalism will go to blazes of itself. We on the contrary say do away with capital, the concentration of all the means of production in the hands of a few and the state will fall of itself.’ என எழுதினார்.
பகுனின் எழுதிய  Statism and Anarchy யை ருஷ்ய மொழி கற்று மார்க்ஸ் படித்ததாகவும் தெரிகிறது. படித்த அம்மொழியிலேயே தனது நோட்டு குறிப்புகளை வைத்த்ருந்ததாகவும் ஸ்டீவ் கோல்மேன் என்பாரின் 1982ல் எழுதப்பட்ட கட்டுரை மூலம் அறிய முடிகிறது. அக்குறிப்பில் மார்க்ஸ் he says ‘what does it mean the proletariat raised to the position of the ruling class? It means that the proletariat instead of struggling in isolation against the economically privileged classes, has acquired sufficient strength and organisation to employ general means of coercion in the struggle against them. But it can only use the kind of means which destroy its own character as a class. Thus its domination ends with its complete victory since its class character has disappeared.’ என சொல்கிறார். அதாவது வர்க்கமாக தன்னை கலைத்துக்கொள்ளும் சாத்தியப்பாடு  குறித்து பேசுகிறார்.
 1846ல் புருதானை விமர்சித்து மார்க்ஸ் அன்னென்காவ் என்பாருக்கு எழுதிய கடிதத்தில்  அனார்க்கிஸ்ட்களுகு சரியான பதிலை மார்க்ஸ் தந்ததாக  ஸ்டிவ் சொல்கிரார். Proudhon,   ‘a man who has not understood the present state of society may be expected to understand still less the movement which is tending to overthrow it.’
டிராட்ஸ்கி அனார்க்கிஸ்ட்களை பூர்ஷ்வாக்கள் சிந்த்னாவாதிகளுடன் ஒப்பிட்டு  பேசினார். இருசாராரும் தொழிலாளரை அரசு அதை தொட்டுவிடாதே’ என்பதில் உடன்படுகின்றனர். ஒருவர் அது எங்கள் புனித கடமை என ஒதுங்க சொல்கின்றனர். மற்றவர் புரட்சிகர கடமை தொடாதே என்கின்றனர். மார்க்சியர்களாகிய நாம் தொடு, கைப்பற்று என்கிறோம் என எழுதினார்..  மார்க்சியர்- அனார்க்கிஸ்ட்கள் அரசு குறித்த கொள்கை சார்ந்த விவாதம் முடிந்தபாடில்லை..
Ref:
BAKUNIN      GUY ALDRED
Michael Bakunin  E H CARR
A Marxist Critique of Anarchism, Steve Coleman
Bakunin on Anarchy - Sam Dolgoff

God and State- Bakunin

Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு