https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, November 2, 2019

Hon' Minister Arvind Sawant's Pension Issue


அமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை
நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு
       -ஆர். பட்டாபிராமன்

. அரவிந்த அவர்கள் தற்போது DPE (MO Heavy Industries)க்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர். எம் டி என் எல் தொழிற்சங்கத்தலைவராக இருந்தவர். அந்த ஊழியர்களுக்கு 37 பெற்றுத்தருவதில் பெரும் பங்காற்றியவர். இப்போதும் எம் டி என் எல் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்து வருபவர். அதன் இணைப்பை வற்புறுத்தியவர். பி எஸ் என் எல்/ எம் டி என் எல் ஊழியர்களுக்கு 58 வயதில் ஓய்வு குறைப்பு வேண்டாம் என சொல்லிவருபவர்.

அவரின் விநோத பென்ஷன் கோரிக்கை நாடாளுமன்ற கமிட்டியின் கவனத்தை பெற்றது. அரவிந்த சாவந்த் நாடாளுமன்ற  உறுப்பினராக தனது பென்ஷன் கோரிய பெட்டிஷனைப் போட்டிருந்தார் அவர் தனது 5-1-2018 கடிதம் மூலம் நியாயம் கோரியிருந்தார்.
சாவந்த் எம் டி என் எல் ஊழியராக 8-3-76 முதல் 31-1-1996 வரை பணிபுரிந்தவர். அவரது சேவைக்காலம் 19 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 21 நாட்கள். அவர் அரசியல் பின்புலத்தால் (சிவ சேனா) பிப்ரவரி 1996ல் எம் எல் சி ஆனார். எனக்கு ஏன் பென்ஷன் தரவில்லை- ஏன் தரக்கூடாது - நான் ஓய்வு பெறும்போது அதிகாரிகள் ஏன் சரியாக வழிகாட்டாமல் போனார்கள் என்பதெல்லாம் அவரது குறைகள். எனவே எனது விலகல் கடிதத்தை பொருட்படுத்தாமல் நான் வி ஆர் கொடுத்து சென்றது போல் பாவித்து பென்ஷன் நியாயம் வழங்கவேண்டும் என்பது அவரது கோரிக்கை
தனக்கு பென்ஷன் பெறக்குறையும் 36 நாட்களை சரிகட்டி ( 1-2-96 முதல் 7-3-96 வரை) அல்லது விடுப்பாக அக்காலத்தை எடுத்துக்கொண்டு 8-3-96ல் VRல் சென்றது போல் எடுத்துகொண்டு 20 ஆண்டுகால தகுதி சேவைக்கான பென்ஷனை தரவேண்டும் என்பது அவரின் வேண்டுகோள்.
 இதற்காக நாடாளுமன்ற கமிட்டி சம்பந்தப்பட்ட MTNL, DOT, MOC, DOPPW,DOPT   ஆகியோர்களின் கருத்தைக்கேட்டது.
 தனது பதிலாக  DOT “ Shri Arvind Sawant while working as JTO on deemed deputation in MTNL Mumbai, resigned from service on 31-1-96 to take the office of MLC in Maharashtra. at that point he had not completed 20 years of Qualifying service, which has precondition for taking VR ( Rule 48 A of Pension Rules)
The DOPT examined the matter and held that the case of Shri Sawant Ex JTO in MTNL regarding revoking the order of his resignation after almost 21 years and converting into VR on the ground that Shri Sawant was not aware of the process of VR during his service, is not in order with the extant rules."
By tendering resignation except in cases of technical resignation to take up employment, the past service stands forfeited for Pensionary benefits as per rule 26 of CCS PR.
 உருவாக்கப்பட்ட அழுத்தம் காரணமாக DOT 8-5-17  அன்று அவரின்  ராஜினாமாவை வி ஆர் ஆக மாற்றி ஏற்க தனது இசைவை தெரிவித்தது. அதே நேரத்தில்  DOPPW  கருத்து அவசியம் என உணரப்பட்டது.
DOPPW  Rule 49 (10 years service  for pension eligibility) Rule 26 forfeiture of service on resignation  ஆகியவற்றை சுட்டிக்காட்டி தனது பதிலைத் தந்தது.. மேலும் DOPPW " In case the request of Shri Sawant for conversion of Resignation into VR is accepted by the Appointing Authority and in case he had 19 yrs, 10 mths and 24 days which qualifies for pension, then it can be rounded off to 20 years in accordance with 49 (3) of CCS PR"
DOPT  சாவந்த் அவர்கள் எம் எல் சி ஆக இருக்கும் நாட்களை அரசாங்க சேவை நாட்களாக கருத விதிகளில் இடமில்லை என்றது( cannot be Govt servant and Legislator at the same time).  அதேபோல் Resignation யை VR ஆகவும் மாற்ற இயலாது என்றது.
 அனைத்து தரப்புகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற கமிட்டி அதன் சேர்மன் பக்த்சிங் கோஷியாரி அறிக்கையாக பிப் 7 2019ல்  DOT, DOPPW. DOPT  ஆகியவை அரவிந்த் சாவந்த் அவர்களின் வேண்டுகோளை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்துள்ளது. அதாவது அவர் ராஜினாமாவை வி ஆர் ஆக மாற்றி ஏற்பது மற்றும் 20 ஆண்டுகளுக்கு குறைவான நாட்களை  condone  செய்து அவர் பென்ஷன் பெறுவதற்கு உகந்த வழிகளை செய்யுமாறு  பரிந்துரைத்துள்ளது. அதேபோல் இதை முன்னுதாரணமாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது   special case  என்று குறிப்பிட்டுள்ளது.
 இதன் மீது ஏதாவதுமுடிவெடுக்கப்பட்டுவிட்டதா என்பதை   DOT தான் வெளிச் சொல்ல வேண்டும். நாடாளுமன்ற உரிமை- பாமரர் தலையிட்டு கருத்தா சொல்ல முடிகிறது...

No comments:

Post a Comment