https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, December 8, 2021

லெனின் நான்கு கட்டுரைகள்(Lenin Four Essays)

 

லெனின் நான்கு கட்டுரைகள்(Lenin Four Essays)

இந்த சிறு மின் பிரசுரத்தில் லெனின் குறித்த நான்கு கட்டுரைகளை இடம்பெற செய்துள்ளேன். விடுதலைப் போராட்டக்காலத்தில் பல போராளிகளுக்கும் லெனின் இந்தியாவில்  எந்த அளவு ஆதர்ஷ வீரராக இருந்தார் என்பதை படம்பிடிக்கும் கட்டுரையாகவிடுதலைக்கு முன்னர் இந்தியாவில் லெனின் என்ற கட்டுரை அமைந்திருக்கும். இக்கட்டுரை இணைய தளங்களிலும் ஜனசக்தி மலரிலும் இடம் பெற்ற கட்டுரைதான்.



அடுத்த கட்டுரை லெனின் ஆட்சிக்கு வந்த பின்னர் என்பது பற்றிப் பேசும் கட்டுரை. புரட்சியை நடத்துவது  அதற்கு மக்களை இசைய வைப்பது என்பது எளிதான செயல் அல்ல என்றால் அப்படி புரட்சி நடந்து ஆட்சி பொறுப்பை ஏற்று அவர்கள் முன்மொழிந்த சமூக கட்டுமானத்தை செய்வது அதைவிட மிகக் கடுமையான பல சறுக்கல்களை சந்திக்கும் செயல்களாக அமைவதற்கும் வாய்ப்புண்டு என்பதை என்னால்  வெகு ஆண்டுகளுக்கு பின்னரே உணரமுடிந்தது. லெனின் ஆட்சி எப்படி இருந்தது என கொஞ்சம் தேடிப்பார்த்ததில் என் வாசிப்பிற்குள் வந்த அம்சங்களை இக்கட்டுரையில் தந்துள்ளேன்.  நேருவும் ஆட்சிக்கு வந்தவுடன் அவரிடம் கேள்வி கேட்ட போராளிகளிடம் then I was an agitator, now administrator  என பதில் சொன்னதும் நினைவிற்கு வருகிறது.

அடுத்த கட்டுரை தோழர் காந்தி என்பதற்காக எழுதப்பட்ட பல கட்டுரைகளில் ஒன்று. லெனினும் காந்தியும் என்பது. இது எளிய ஒப்பீடுதான். ஆனாலும் ஆரம்ப நிலை தோழர்களுக்கு சற்றாவது உதவும் மதிப்பீடாக இருக்கும். தோழர் டாங்கேவும் ரெனோ அவர்களும் இந்த ஒப்பீட்டை எந்த கோணங்களில் முன்வைத்தனர் என இக்கட்டுரை பேசுகிறது.  நான்காவது லெனின் சகோதரிக்கும் துணையாருக்கும் எழுதிய கடிதங்கள் எப்படி  அமைந்தன என்பது பற்றியதாக இருக்கும்.

லெனின் குறித்து ஏராள புத்தகங்கள்  கிடைக்கின்ற சூழலில் இந்த சிறு வெளியீடு அவர் குறித்து எழுதிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வ உந்துதலால்  வந்துள்ளது என சொல்லலாம். எவருக்காவது பலனளிக்கும் என்றால் அதுவே எனக்கான வெகுமதி

 

டிசம்பர் 4, 2021                                              - ஆர். பட்டாபிராமன்

நூலைப்படிக்க  https://freetamilebooks.com/ebooks/lenin_four_essays/

No comments:

Post a Comment