Skip to main content

periyar Political Bio

 Periyar A political Biography of E V Ramasamy by BalaJeyaraman கிண்டில் வழி படித்துக்கொண்டிருந்தேன். 

பெரியார் வாழ்க்கை வரலாறு குறித்து நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் முழுமையாக நிகழ்வுகளை (கிடைத்தவற்றை முடிந்தவரை) ஆவணப்படுத்தும் அவரது political bio வரவில்லையோ எனத்தோன்றுகிறது.   சாமி சிதம்பரம், நெதுசு, கருணாநந்தம், நீலமணி, சுப்பு ரெட்டியார் என பல இருக்கின்றன. ஆங்கிலத்திலும் Anita Diehl, Dr  E sa Viswanathan போன்றவைகள் உள்ளன.

பால ஜெயராமன் புத்தகத்திலிருந்து சில செய்திகள்..

 பெரியார் 1933 டிசம்பரில் “ இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” என எழுதிய தலையங்கத்திற்காக  இந்தியன் பீனல் கோடு செக்‌ஷன் 124  படி கைது செய்யப்பட்டார். கோவையில் 6 மாதம் சிறைவாசம். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்திற்காக கைதாகி அங்கிருந்தார். 

அடுத்த அடுத்த “செல்” என்பதால்  வேறுபாடுகொண்ட நண்பர்கள் பேசிக்கொண்டனர். மீண்டும் காங்கிரசில் ஈ வெ ரா வரவேண்டும் என்கிற முயற்சியை ராஜாஜி எடுத்தார்.  வகுப்புவாரி பிரச்சனை வேறுபாடு இருந்தபடியால் பலனளிக்கவில்லை. பெரியாரை கைது செய்து அடைத்தது நீதிக் கட்சி ஆட்சி. பொப்பிலி ராஜா முதல்வர்.

1934ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை வந்தது. சுயமரியாதை இயக்கமும் கண்காணிப்பிற்குள்ளானது. 

“ Periyar was arrested again in 1934 for publishing a translation of Bhagat Singh’s translation  ‘why I an atheist’. He had to tender an apology to the government to secure his release…

To ensure political survival, Periyar decided to move the Self respect movement away from communism” என்று பால ஜெயராமன் எழுதியிருப்பார். ஜீவாவை அவர் விரும்பாவிட்டாலும் அரசாங்கத்திடம் apology கொடுக்கச் சொன்னதாக பெரியார் சொல்லியிருப்பார். பெரியார் apology கொடுக்கவில்லை என பெரியாரிய நண்பர்கள் சொல்லிவருகின்றனர். அந்த வழக்கின் முழு ஆவணமும் எவராவது வைத்திருந்து வெளியிட்டால் , facts குறித்த நம் புரிதலை சரியாக்க உதவும்

வேறு ஒரு தகவலும் கிடைக்கிறது. அப்போது தொடங்கப்பட்டிருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கு வருமாறு பெரியாரை ஜெயப்பிரகாஷ் நாராயணன் அழைத்தார். சுயமரியாதை இயக்கத்தை இணைத்துவிட வேண்டினாராம் ஜேபி. அது நடக்கவில்லை. ஆனால் பெரியாரிடம் திருத்துறைப்பூண்டி மாநாட்டின்போது கருத்துவேறுபாடு கொண்டு வெளியேறிய ஜீவா போன்றவர்கள் self respect socialist party எனத்துவங்கி, பின்னர் ஜேபியின் அறிவுரைப்படி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

பெரியார் மணியம்மை திருமணம் ஜூலை 9 1949ல் நடந்தது. இது குறித்து அறிந்த அண்ணா மற்றும் தோழர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினர்.  ராஜாஜியை சந்தித்த பின்னர் தான், இந்த முடிவை பெரியார் எடுத்தார் என அறிந்து, இரகசிய சந்திப்பு ஏன் என்ற கேள்வியை அண்ணா எழுப்பினார். அது தனிப்பட்ட சந்திப்பு என பெரியார் அக்கேள்வியை கடந்து போனார். இங்கு பால ஜெயராமன் எழுதியிருப்பது..

“Rajaji in fact counselled him ( Periyar) against marrying Maniammai. When his ( Periyar’s) followers urged him to release his correspondence with Rajaji to silence Anna’s criticism, Periyar refused saying that he could not use private letters for party issues”

தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக பெரியார் தெரிவித்ததில் மனம் உடைந்த அண்ணா தோழர்கள் சதிகாரர்கள் குறித்த அவதூறுக்கு வழக்கு தொடுத்தனர். இங்கு பால ஜெயராமன் எழுதியிருப்பது

“Anna and Sampath promptly sued him ( Periyar) for libel. They withdrew their cases only when Periyar appeared in court and clarified that he had not referred them( Anna and Sampath)”

1944ல் தி க என நீதிக்கட்சி பெற்ற பெயர் மாற்றத்தின் போதே, தலைமைக்கு பெரியார் அல்லாத ஒருவர் என மூத்தவர்கள் போராடி தோற்றனர். 1945-49 களில் பெரியார் அண்ணா முரண்பாடும் முற்றத்துவங்கியது.

பிராமணர் ஹோட்டல் பகிஷ்கரிப்பு ( அன்றைய சூழலில்) சாத்தியமில்லை என அண்ணா கருதினார்

கருஞ்சட்டை அனைவரும் என்பது தேவையில்லை. இரண்டாம் உலகப்போர் கால வில்லன்களில் ஒருவரான பாசிஸ்ட் முசோலினியின் அடையாளம் அது என அண்ணா பேசியது எடுபடவில்லை. கருஞ்சட்டை தடை வந்த கண்டனக் கூட்டத்திற்கு பெரியாரை விட்டுக்கொடுக்காமல், நெடுஞ்செழியன் தொளதொள கருப்பு ஜிப்பாவை அணிந்து  அண்ணா வரவும் செய்தார்.

ஆகஸ்ட் 15யை துக்கநாள் என பெரியார் அறிவித்ததை எதிர்த்து இன்பநாள், கொண்டாட்டத்தில் பங்கேற்க அண்ணா வலியுறுத்தினார். இறுதி முரணாக பெரியார் திருமணம் வந்து, திமுக என்கிற அரசியல் உதயம் , திக விலிருந்து வெளியேறி வந்தது.

பெரியார் குறித்து வரும் வரலாற்று குறிப்புகளில் உரிய ஆவணத்தை இணைத்து  பேசாமல் செல்கிற குறையிருப்பதாகத் தோன்றுகிறது.

(வழக்குகள் எனப் பேசும்போது பின் இணைப்பாகவாவது, சைமன் கமிஷன் என்றால் கொடுத்த குறிப்பு என்ன என்பது போன்று) . முழுமையான திரட்டப்பட்ட முழு ஆவணங்களுடன், (50 ஆண்டுகள் திமுக, அதிமுக ஆட்சிகள் இருந்தும்) அவரது வாழ்க்கை வரலாறு தொகுக்கப்படாதது ஏனோ?


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா