https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, March 17, 2023

பென்சன் ரிவிஷன் புரிந்தும் புரியாமலும்..

 

பென்சன் ரிவிஷன் புரிந்தும் புரியாமலும்..

மார்ச் 3, 2023 அன்று AIBSNLPWA பென்சனர் சங்க பொதுச்செயலருக்கு நான் எழுதிய அப்பீல் ஒன்றிற்கு விளக்கத்தை எனக்கு பதிலாக பொதுச் செயலரோ அல்லது முக்கிய நிர்வாகிகளோ தான் தரவேண்டும் என்பதில்லை. சாதாரண உறுப்பினர் என்ற வகையில் என் அப்பீலுக்கு விளக்கத்தை அங்குள்ள, அல்லது வேறு அமைப்பில் உள்ள எவர் வேண்டுமானாலும் தருவது வரவேற்கத் தகுந்ததே.

அமைப்பில் தலைவர்கள் மட்டுமல்லாமல், அமைப்பு எடுத்த முடிவை உறுப்பினர்களும் விதந்து அதன் நியாயத்தை எடுத்துச் சொல்வது, எந்த ஓர் அமைப்பின் ஆரோக்கியத்திற்கும் அளவுகோலாகவும் அமையும்.

 நான் சொல்வதை புரிந்து கொண்டுதான் அவர்கள் பதில் விளக்கத்தை தருகிறார்கள் என்று என் மனம் சமாதானம் பெற்றுவிட்டால், என் தவறான புரிதலை  பொதுவெளியில் ஏற்றுக்கொண்டு விடுவேன். அப்படி ஏதும் நிகழாமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியதாக எனக்குப் படுகிறது.

திரும்பவும் எனக்கு விளக்கமளிக்க விழைபவர்களுக்காக இதை தந்துள்ளேன். இதுவும் கூட மேதாவிலாசத்தைக் காட்டுவதற்காக அல்ல. DOT முன் வைத்துள்ள புரிதலை சீர்படுத்திக்கொள்வதற்காகத்தான்.

1-1-2017 முதல் BSNL பென்ஷன்தாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் என்பது அதற்கு முந்தி ஓய்வுபெற்ற ‘pre 2017 தாரர்களின்’ கோரிக்கை. ஆனால் இது அவர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் ‘post 2017 தாரர்களையும்’ இணைப்பதால் சவாலானதாக மாறுகிறது. அவர்களை இணைக்காமல் பிரச்னை in today’s context தீராது.

 DOT தனது ஆயத்தப்பணிகளையெல்லாம் நிறைவு செய்து உரிய காபினட் ஒப்புதலைப்பெற்று எந்த நாளில் உத்தரவு இடுகிறதோ அந்த நாளில் இருவகை  பென்ஷன்தாரர்கள் இருப்பர். ஒருவகை pre 2017 , மற்றது post 2017.

இந்த post 2017 என்பதில் DOT உத்தரவு வந்த ( வரப்போகிற உத்தரவு) நாளுக்கு முன்பாக ஓய்வு பெற்ற பென்சனர், அந்த உத்தரவு தேதிக்குப் பின்னரும் தொடர்ந்து ஓய்வு பெறப்போகிறவர்கள் என அவர்கள்  பிரிந்து இருப்பார்கள். இருவருக்கும் உகந்த தீர்வைத்தான்  DOT கொணரவேண்டும்.

உத்தரவு எந்த தேதியில் வரப்போகிறதென்றாலும் அமுலாக்க தேதி  w.e.f 1-1-2017. இந்த 1-1-2017 தேதியிலிருந்து பென்சன் மாற்றம் என்பது pre2017 க்கு அவர்களின் பென்சனில் ( 2nd PRC LPD in their scale) கிராக்கிப்படி இணைத்து, பிட்மெண்ட் கொடுத்து புதிய பென்சனை ( 3rd PRC LPD in the corresponding new scale) நிர்ணயம் செய்திட DOT எழுத்துபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதுவும் பின் தேதியில் நோஷனலாக தரப்படும். இவர்கள் புதிய பென்சனில் மூன்றாவது ஊதிய கமிட்டிக்குரிய IDA வில் செல்லத்துவங்குவர்.

இனி post 2017. இவர்கள் அந்த 1-1-2017 அன்று பென்சனர்கள் அல்லர். ஊழியர்கள். எனவே அவர்களுக்கு அந்த தேதியில் பென்சன் என ஏதும் இருக்காது. ஊதியம் என்கிற pay தான் இருக்கும். இப்படி இரண்டாவது ஊதிய கமிட்டியின் Pay உரிய Scaleல் இருக்கும் அவர்களை ( அனைத்து போஸ்ட் 2017க்கும்- DR ஊழியர் தவிர) அந்த 1-1-2017ல் ஊதியத்துடன் கிராக்கிப்படி இணைத்து, பிட்மெண்ட் கொடுத்து அவர்களை நோஷனலாக மூன்றாவது ஊதிய கமிட்டியின் Pay- scaleல்  vitual ஆக இன்க்ரிமெண்ட் உள்ளிட்ட பலன்களுடன் அனுமதிக்கவேண்டும். அவர்கள் post 2017 காலத்தில் என்று ஓய்வு பெறுகிறார்களோ அன்று நோஷனலாக கொண்டு வரப்பட்ட pay- scaleல் அவர்களது ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்வதாக DOT முன்மொழிந்துள்ளது. அசோசியேஷன் கேட்ட தவறான கோரிக்கையை சரியாக்கி முன்மொழிந்துள்ளது.

இந்த போஸ்ட் 2017காரர்கள் அவர்கள் ஓய்வு பெறும் நாள் வரை BSNL ஆல் இரண்டாவது ஊதியக்கமிட்டி ஊதிய நிலையிலேயே செல்வர். ஏனெனில் ஊதிய மாற்றம் நடைபெறாத குழப்பம் அங்கு நிலவுவதால். இதற்கு இணையாக இந்த நோஷனல் சென்று அவர்கள் ஓய்வு பெறும் நாளில் pre 2017 போலவே இவர்களும் தங்களுக்கான பலனை 1-1-2017 அன்றே ஊதியத்தில் பெற்று தங்களுக்கான பென்சனை அதன் அடிப்படையில் பெறுவர்.

Pre 2017க்கு பென்சனிலிருந்து புதிய பென்சன் என்றால்,  Post 2017க்கு Pay லிருந்து புதிய Pay  வழியாக பென்சன் நிர்ணயம் என்பதை புரிந்துகொண்டால்தான் ஏன்  ஊதிய மாற்றமில்லாவிட்டாலும் scales  மாற்றம் தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இதை போஸ்ட் 2017 காரர்கள் புரிந்து கொள்கிறார்களா என்பது தான் முக்கியமாகிறது. ஏன் எனில் அவர்கள்தான் இன்றும் சங்கங்களை ஆங்காங்கே வழி நடத்துகிறார்கள். இந்த விவாதமே அவர்களுக்கானதுதான் என்ற விழிப்புணர்வு அங்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. பென்ஷன் சங்கத்தில் போய் வாழ்த்தும் பெரிய நிர்வாகிகள் கூட அங்கு போய் 7 வது ஊதியமாற்ற அடிப்படையில் என பேசி வருகிறார்கள் என தெரிந்துகொள்ளும்போது, அவர்களின் விழிப்புணர்வு குறித்த சிறிய கவலை மேலிடுவதால் இதைச் சொல்லவேண்டியுள்ளது.

ஊதிய மாற்றமில்லாமல் பென்சன் மாற்றம் DOTக்கு மிக வசதியாகிவிட்டது என்ற புரிதல் போஸ்ட் 2017 காரர்களிடம் தொந்தரவு செய்யாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மேலிடுகிறது.

என் புரிதலில் உள்ள தவறை சுட்டிக்காட்டுபவர்களுக்கு என் வணக்கம் நிலைக்கும்.

16hrs  17-3-2023                              - R.Pattabiraman

No comments:

Post a Comment