Jonathan Clements எழுதிய மாவோ biography 200 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் சுவாரஸ்யமான புத்தகம். மாவோவின் திறமை பலம் பலவீனங்களுடன் இந்த ஆக்கம் நகர்கிறது.
Philip Short’s Mao A Life, Jung Chang and Holliday’s Mao the Unknown Story, Stuart Schram’s Mao’s Road to Power, Li Zhisui’s Private Life of Charman Mao, Edgar Snow’s Red Star over China மற்றும் மாவோ எழுத்துக்கள் உரைகள் வால்யூம்களையும் ஆதாரமாக்க கொண்டு இந்நூலை கிளெமெண்ட்ஸ் எழுதியுள்ளார். நூலாசிரியர் சீன, ஜப்பானிய மொழியறிவு கொண்டவர்.
இந்நூலில் சில சுவையான/ வருந்ததக்க தகவல்கள் கிடைக்கின்றன.
மாவோவும் தந்தையிடம் முரண் கொள்ளவேண்டிய சூழலையே எதிர்கொண்டார். கந்து வட்டிக்காரர். ஊர் நிலங்களை வளைத்துப் போட்ட கஞ்சத்தனம் கொண்ட கறார் தந்தை.
மாவோ 1893ல் பிறந்தவர். இவ்வாண்டு அவரின் 130 ஆம் ஆண்டு. மாவோவிற்கு இந்த நிகழ்வு நடந்தபோது வயது 13. வீடு நிறைய விருந்தாளிகள். அவர்கள் முன்னிலையில் உதவாக்கரை, சோம்பேறி என மாவோவை தந்தை கடுமையாக திட்டுகிறார். இவர் முகத்தை தொங்கவிடவேண்டும் என மாவோ முடிவெடுத்து , வீட்டை விட்டுப் போகிறேன் என கத்திவிட்டு அருகே குளக்கரைக்கு சென்று குதித்து விடுவேன் என எச்சரிக்கிறார். தாய் ஓடிவர, தந்தையும் வழியில்லாமல் நில்லுடா என குரல் கொடுத்துக்கொண்டே வருகிறார்.
மகன் மாவோ வீம்பும், தந்தையின் வரட்டு கெளரவ கோபமும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன. முட்டி போடுடா என தந்தை. ஒரு முட்டியை மட்டும் போட்ட நிலையில், அடிக்க மாட்டேன் எனச் சொல் வருகிறேன் என மகன் மாவோ. Thus the war ended என இந்த இடத்தை கிளெமெண்ட்ஸ் முடித்திருப்பார்.
அப்போதே வீட்டில் அய்க்கிய முன்னணி ஒன்றை அதிகாரத்திற்கு எதிராக மாவோ கட்டியுள்ளார். தந்தை தனியாக அதிகார மய்யம். மாவோ தன் அம்மாவுடன், சகோதரர்களுடன், சில வீட்டுத் தொழிலாளர்களுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டார். தாயாரின் ஒரே அறிவுரை பகிரங்க கலகம் கூடாது. மறைமுக தாக்குதல் நடத்தலாம் , அதுதான் சீன முறை என்பது. இந்தக் காட்சியை மாவோவின் மொழியில் எட்கர் ஸ்னோ புத்தகத்திலிருந்து இவ்வாறு சுவையாக கிளெமெண்ட்ஸ் தருகிறார்.
There were two parties in the family. One was my father, the ruling power. The opposition was made up of myself, my mother, my brother and sometimes even the labourers. In the United Front of the opposition, however there was a difference of opinion.
My mother advocated a policy of indirect attack. She criticised any overt display of emotion, and attempts of open rebellion against the Ruling Power. She said it was not the Chinese way
1907-8 மாவோவின் 14 வயதில் அவருக்கு விருப்பமில்லா 20 வயது லுவோ என்ற பெண்ணை மணமுடிக்க அழைத்து வருகின்றனர். வீட்டு வேலைக்கு ஆள் என்ற அளவுதான் தந்தை யோசித்தார் போலும். தந்தையின் நடத்தைகளால் தாயார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் வெளியேற நேர்ந்தது.
மாவோ தன் வாழ்நாளில் அதிகாரபூர்வமாக 1920ல் Yang Kaihuiவை மணந்து 3 குழந்தைகளுக்கு தந்தையானார். 1928ல் He Zizhen மணந்து 5 குழந்தைகளுக்கு தகப்பன் ஆனார். 1938ல் Jiang Qing மணந்து அவர் ஒரு மகவை பெற்றெடுத்தார்.
மாவோ கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கை 1922ல் துவங்கியது. ஒருமுறை 1928ல் அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாக செய்தி வந்து கட்சி அல்லாத பிற பணி என army divisional commander என பணிபுரிய வேண்டியிருந்தது.
1930 களில் தேசியவாதிகள் கம்யூனிஸ்ட்கள் போராட்டத்தில் அவரது துணைவியார் யாங் தூக்கில் ஏற்றப்பட்டார் என கிளெமெண்ட்ஸ் எழுதுகிறார்.
புகழ்வாய்ந்த Long March காலத்தில் 86000 வீரர்களும், மாவோ உட்பட 15000 பொறுப்பாளர்களுக்கும் சேர்த்தே 25 Nurses தான் இருந்தனர். மாவோவின் துணைவியார் He Zizhen பேறு காலமும், கைக்குழந்தையை வைத்துக்கொள்ள முடியாத சூழலில் பிறந்த பெண் குழந்தையை பெயர் கூட வைக்காது அப்படியே வழியில் கண்ட விவசாயி வசம் கொடுத்து விட்டு நகர்ந்த தாயுள்ளமும் கலங்க வைக்கும். He Zizhen 1938ல் மாஸ்கோ அனுப்பப்பட்டு அங்கு பிறந்த குழந்தை Lyova நிமோனியா கண்டு இறந்தது, ஜீஜென் துக்கத்தை கூட்டியிருக்கும்.
மாவோவின் மகன் Anying கொரிய யுத்தத்தில் மறைந்த செய்தி கூட மாவோவிடம் அரசியல் முடிவுகளில் ஏதாவது influence செய்துவிடக்கூடாது என்பதற்காக மூன்று மாதம் சொல்லப்படவில்லை என கிளெமெண்ட்ஸ் தகவல் தருகிறார்.
1949 சீன புரட்சி- மாவோ ஆட்சி, 1950 களின் நூறு பூக்கள் மலரட்டும் இயக்கம், கலாச்சார புரட்சி, bombard the head quarters, இந்திய பிரச்னை போர், அமெரிக்காவிடம் கைகுலுக்கல் என நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த புத்தகம் செல்கிறது.
மாவோவை வழிபாடு செய்யாமல் அமைப்புபலம் , சிந்தனை பலம், அதிகார பலம் என்பவற்றுடன் பலவீனங்கள், தனி நபர் ஒழுக்க பலவீனங்கள் என்கிற சித்தரிப்புடன் , மார்க்சியத்தை சீனமயமாக்குதல் என்ற தனி தடத்தை அவர் அமைத்த அவரின் சிறப்புக்களுடன் இந்த புத்தகம் நகர்கிறது.
Comments
Post a Comment