Skip to main content

பகவத்கீதை பன்முகக் குரல்கள்

 




முன்னுரை


பகவத்கீதை நம் நாட்டின் விடுதலை இயக்கத் தலைவர்கள் மத்தியில்

செல்வாக்குடன் இருந்த மிக முக்கியமான நூல். கடந்த ஒரு நூற்றாண்டு கால

வெளியில் சமுகத்தில், அரசியலில், இயக்கங்களில் மக்கள் மத்தியில்

செல்வாக்குடன் செயல்பட்ட, அதிகாரத்தில் உயர்பொறுப்புகளை வகித்தவர்கள், முக்கிய ஆய்வாளர் சிலராலும் பகவத்கீதை குறித்து ஏராளம் எழுதப்பட்டுள்ளது.

அவர்களது எழுத்துக்களில் காணப்படும் கீதை குறித்த விளக்கங்கள் ஒப்பீட்டு

முறையில் சில ஆய்வாளர்களால் பேசப்பட்டுள்ளன. தமிழில் அம்முயற்சி

பெரிதாக இல்லை. அவரவர் எழுதும்போது மேற்குறித்த தலைவர்கள்,

சீர்திருத்தவாதிகள், ஆய்வாளர்கள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளனர்.

இங்கு தரப்படும் 21 கட்டுரைகள் தனித்தனியாக ஒவ்வொருவர் கருத்துக்களையும் சிறிய அளவாவது பேசும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை மூலநூல்களின் கருத்துக்கள் சிதையா வண்ணம் அவர்களின் கீதை குறித்த பார்வை இக்கட்டுரைகளில் பதிவிடப்பட்டுள்ளன. இருபது நிமிடம் ஒதுக்கும் எந்த வாசகரும் ஒரு கட்டுரையை படித்துவிடக்கூடும்.

அனைத்து கட்டுரைகளையும் படிக்க முடிந்த வாசகர்கள் கீதை பன்முககுரல்களுக்கு இடமளிக்கிறது- பல்வேறு முரண்களை கொண்டிருக்கிறது என்பதை உணரமுடியும். ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மற்றவரிடம் பதில் கிடைப்பதை வாசகர் அவதானிக்க முடியும். இக்கட்டுரைகளில் ஒரு ஒற்றுமையை நாம் கண்டறியலாம். அவரவர் தங்கள் வாழ்நாள் முழுதும் போராட்டங்களின் ஊடே எதை கண்டடைந்தார்களோ, எதற்காக நின்றார்களோ, எதன் பொருட்டு அடையாளப்படுத்தப்படுகிறார்களோ அந்த பார்வை நோக்கி கீதை விளக்கத்தை நகர்த்தி அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள் என்பதை நாம் பார்க்க இயலும்.

பங்கிம்சந்திரர், விவேகானந்தர், திலகர், காந்திஜி, லாலாஜி, அரவிந்தர், பாரதியார், ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், வினோபாஜி, பீமராவ் அம்பேத்கார், இந்துத்துவவாதிகள் என கருதப்படும் சாவர்க்கர்- கோல்வால்கர்- பால்ராஜ் மதோக், மார்க்சியர்கள் என அறியப்படும் அறிஞர் கோசாம்பி, தாமோதரன், டாங்கே, சர்தேசாய், திலிப் போஸ், ராமகிருஷ்ணா, பகுத்தறிவாதிகளான வீரமணி, இடமருகு ஆகியோரின் நூல்களுடன் இஸ்லாமிய அறிஞர் பாகிஸ்தானுக்காக நின்ற கான் துரானி, இன்று கார்ப்பரேட்கள் மத்தியில் செல்வாக்குடன் இந்திய புராணங்களை கொண்டு செல்கின்ற இளம் தேவ்தத் பட்டநாயக், இந்தியாவில் சர்ச்சைகளை எழுப்பிவரும் வெண்டிடோனிகர் சிந்தனைகளும் இக்கட்டுரைகளில் கொணரப்பட்டுள்ளன. தேவ்தத் கட்டுரையை முதலில் வைத்ததற்கு காரணம்பகவத்கீதை குறித்து அறிமுகம் கிடைக்கும் என்பதை தவிர வேறொன்றுமில்லை.


கீதையை மதநூல் பக்தி நூல் என்ற அளவில் மட்டுமே அறிந்த வாசகர்களுக்குஇக்கட்டுரைகள் கீதை மத தத்துவ நூலா அரசியல் நூலா என்கிற கேள்விகளை எழுப்ப வாய்ப்பு இருக்கிறது. வாசகர்கள் தங்கள் பயிற்சி அனுபவம் சூழல் பின்னணிக்கேற்ப தங்களுக்கு பொருத்தமென நினைக்கக்கூடிய கட்டுரையைத் தொடர்ந்து அதன் மூல ஆசிரியர் கருத்துக்களை நோக்கி பயணிக்க ஆர்வம் காட்டும்போது இத்தொகுப்பை மேலும் வளப்படுத்த இயலும்.


ஆர். பட்டாபிராமன்

R.PATTABIRAMAN            6-4-2017

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா