Skip to main content

திராவிட இயக்கம் - பேரா க. அன்பழகன்

 திராவிட இயக்கம் - பேரா க. அன்பழகன்


திமுகவின் உயர் தலைவர் பேரா க. அன்பழகன் அவர்களின் திராவிட இயக்கம் எளிய சுருக்கமான ஆனால் subject matterல் கவனப்பிசகு இல்லாமல் இருக்கிற புத்தகம்.



பேராசிரியர் கல்வி அமைச்சராக இருந்தபோது சென்னை பல்கலை கருத்தரங்கத்தில் ஏப்ரல் 27, 1978ல் அவர் ஆற்றிய உரையை தருமபுரி நண்பர்கள் செப் 2022ல் நேர்த்தியாகக் கொண்டுவந்துள்ளனர்.

சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் மேற்கோள் மற்றும் பாரதியார் இந்து பத்திரிகைக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றை அன்பழகன் எடுத்தாண்டுள்ளார்.


இராமசாமி சாஸ்திரியின் The Hindu Culture, தத்துவ அறிஞர் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆய்வு முடிவுகளை அன்பழகன் தனது உரையில் தொட்டுக்காட்டுகிறார். கே எம் பணிக்கரின் A Survey of Indian History யை தன் உரைக்கு துணையாக பேராசிரியர் எடுத்துக்கொண்டுள்ளார்.


அதேபோல் Non Brahmin Regeneration in South India என்ற நூலையும் பேராசிரியர் எடுத்தாள்கிறார். இது அநேகமாக காசிநாத் கவ்லேக்கர் எழுதியதாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். பலராலும் அடிக்கடி பேசப்படும் வாலெடின் சிரோலின் Indian Unrestயையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். புகழ் வாய்ந்த சர் சி சங்கரன் நாயரின் கருத்துக்களையும் உரையில் பேராசிரியர் கொணர்ந்துள்ளார். சங்கர நாயரின் கருத்தை மறுத்தவரை விமர்சித்து இந்துவிற்கு பாரதி எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டுகிறார்.


வரலாற்று அறிஞர் பி டி சீனிவாச அய்யங்காரின் pre Aryan culture, History of the Tamils இரண்டையும் தனது உரையின் மய்ய கருத்திற்கு பேராசிரியர் பயன்படுத்துகிறார். நாரயண குருவின் சீடர் தரும தீர்த்தா எழுதிய History of Hindu Imperialism என்பதிலிருந்தும் மேற்கோள் உரையில் தரப்பட்டுள்ளது.


பின்னர் தியாகராயர், நாயர், நடேசன் , பெரியார், அண்ணா போன்றவர்களின் செயல்பாடுகளை ஓரளவிற்கு அன்பழகன் தொட்டுக்காட்டுவார். பெரியார் அண்ணா ஒப்பீடு மிக subtle ஆக செய்யப்பட்டிருக்கும். இருவருக்குமான பிணைப்பும், வேறுபாடுகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். முரண்களை பகையாக காட்டாமல் நட்பு முரண்பாடாக அண்ணாவால் கையாளைப்பட்டதை பேராசிரியர் குறிப்பிட்டு சொல்லுகிறார்.


இந்த உரைதனில் பேராசிரியர் பல்வேறு சான்றாதார நூல்களின் துணையுடன் கீழ்கண்ட வைப்புகளை தந்துள்ளதைக் காணமுடிகிறது.


திராவிடர் சமய நெறியின் சிறப்பு இறை உருவ வழிபாடு

திராவிடர் மதத்தன்மையான உருவ வழிபாட்டை ஆரியர் ஏற்றனர்

வேதமதம் கடவுள் நம்பிக்கை மதமாக திராவிடத்தொடர்பால் மாற்றமடைந்துள்ளது.

திராவிடர் அறிவின் சாயல் பலவற்றை ஆரியர் சம்ஸ்கிருதத்தில் எடுத்துக்கொண்டனர்

ஆரிய வந்தேறிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை அன்றைக்கு மிகுந்திருக்காது.

தென்னாட்டை மூல வாழ்விடமாகக் கொண்டிருந்த திராவிடர்களிடமிருந்துதான் ஆரியர் நாகரிக சிந்தனைகளைப் பெற்றனர்.

இந்திய நாகரிகம் வேதகாலத்திற்கு முறபட்ட ஒன்று. இந்து மதத்தின் இன்றிமையாத பண்பாட்டுக் கூறுகள் மொகஞ்சதாரோ திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டவை.

சிவனும் காளியும் லிங்க வழிபாடும் இந்து மதத்தின் பிற கூறுபாடுகளும் ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் நிலைகொண்டிருந்தவையாகும்

அரக்கரும் பிராம்மணரும் சேர்ந்து உருவான கோத்திரம்தான் பிரம்மராட்சச கோத்திரம்

பிராமணியத்திற்கு பெரும் செல்வாக்கு ஆதிக்கம் தென்னாட்டில் கிடைத்ததைப் போன்று வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. அவர்கள் வல்லாண்மையுடன் ஆசார சம்பிரதாயங்களில் மட்டுமல்லாமல், அரசியல் பொருளாதார தலைமையையும் வைத்திருந்தனர்.

பிராமணர்கள் போற்றிய மொழி, மதம், கலாச்சாரம் தனி ஆதிக்கச் சக்தியாக வளர்ந்ததால், தமிழ்மொழி, இசை, கலை, நாகரீகம், பண்பாடு , சமய சிந்தனைகள், சித்தர் வழிபாடு, ஆட்சி முறை மதிப்பிழந்து போயின.

இழந்தவற்றை மீட்க தென்னிந்திய நலவுரிமை சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திமுக உருவாகி செயல்பட வேண்டிய சூழல் உருவானது.


எம்ஜிஆர் பிரிந்து போனதை சொன்னாலும் அது குறித்து தான் ஒரு கட்சிக்காரராக இருப்பதால் பல்கலை உரையில் பேச முடியவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சி இட ஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு இருந்ததை அவர் சொல்வார். அண்ணாவின் ஆட்சியை தொடர்ந்த திமுகவின் நலத்திட்டங்களை பேச நேரமில்லை என அவர் உரை முடிந்திருக்கும். வாய்ப்புள்ளவர் படித்துப் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு