https://ia801608.us.archive.org/34/items/kripalani-jb/kripalani%20jb.pdf
ஆச்சார்ய கிருபளானி ( சிறு வெளியீடு இணைப்பில்)
நவீன இந்தியாவின் அரசியல் விவாத களத்தில் கிருபளானி குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர் . ஆழமான அறிவு மற்றும் அனுபவங்களின்பாற்பட்டு கருத்துக்களை ஒளிவு மறைவின்றி எடுத்துவைத்தவர். பல சோசலிஸ்ட் தலைவர்கள் போலவே மார்க்சியம்- காந்தியம் குறித்த உரையாடல்களில் ஆழத்தோய்ந்தவர்.
விடுதலை இந்தியாவில் எதிர்கட்சி தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் ஆச்சார்யா கிருபளானி . காங்கிரசில் இருந்தபோதும், பிரஜா சோசலிஸ்ட் தலைமையில் ஆனாலும் கட்சியின் கொள்கைகளை அப்படியே பிசகின்றி பின்பற்றும் மனோபாவம் கொண்டவராக கிருபளானி தன் அரசியலை அமைத்துக்கொள்ளவில்லை. தவறு என்று தான் உணரும் ஒன்றுடன் சேர்ந்து உழைப்பதில்லை என்கிற காந்திய மனோபாவம் அவரிடம் இருந்தது.
இந்த சிறு வெளியீடு இரு நீள் கட்டுரைகளை தாங்கி வருகிறது. நவீன இந்தியாவின் கட்டுமானத்திற்கு ஏதோவொரு வகையில் பங்களித்த பல பெரியவர்கள் குறித்து மிகச் சுருக்கமாகவாவது தெரிந்துகொண்டு அதை எழுதிப்பார்க்கவேண்டும் என்ற அவஸ்தையில் பலர் குறித்து நவீன இந்தியாவின் பன்முகக் குரல்கள் என்ற வெளியீட்டைக் கொண்டுவந்தேன். எவரும் அதை தரவிறக்கம் செய்து வாசித்துக்கொள்ளலாம். அதில் ஒரு கட்டுரை கிருபளானி குறித்த சில குறிப்புகளாக அமைந்தது.
விடுதலைக்காலம்வரை காந்தி- நேரு- படேல்- பிரசாத் என மிக முக்கியமானவர்களுடன் இணைந்து பயணித்தவர் கிருபளானி. இணைந்து எனச் சொன்னால் உராய்வே இல்லை எனச் சொல்ல முடியாது. உராய்வுடன் உறவாடி பயணித்தவர். சிந்துவில் பிறந்து வளர்ந்து, அப்பகுதி பாகிஸ்தான் சென்ற பின்னரும் ஒன்றாக இருந்தபோதும், பிற இந்தியப் பகுதிகளில் ஊரைவிட்டு வெளிவந்து விடுதலைக்கால நிகழ்வுகளில் போராட்டங்களில் ஈடுபட்டவர் கிருபளானி.
விடுதலைக்குப் பின்னரான காலத்தில் நேருவுடன் சிக்கல் ஏற்பட்டது. வெளியேறி தனிக்கட்சி உருவாக்கியவர். ஜேபி- லோகியா போன்ற சோசலிஸ்ட்களுடன் கட்சிப் பணியாற்றியவர். தனி அங்கீகாரம் என அவர் வாழ்வில் பெற்றாலும் அரசியலில் பெரும் வெற்றியைக் காணாமல் – தொடர்ந்து இந்திய அரசியல் நினைவில் ’காணாமல் போனவர்களில்’ ஒருவர்.
அவரின் ’எனது காலம்’ பிரம்மாண்டமான நூல். இக்காலத்தில் போதிய கவனம் பெறாத நூல். அதை வாசித்த போது முகநூலில் அவ்வப்போது சில இடுகைகளை செய்தேன். இரண்டாவது கட்டுரை அந்த இடுகைகளின் சுருக்கமான தொகுப்பாக இங்கு இடம் பெற்றுள்ளது.
இரு கட்டுரைகளும் ஓரளவிற்கு கிருபளானியை அறிமுகப்படுத்தும் - அர்த்தப்படுத்தும் எனக்
கருதுகிறேன்.
7-10-2022 - ஆர். பட்டாபிராமன்
https://ia801608.us.archive.org/34/items/kripalani-jb/kripalani%20jb.pdf
Comments
Post a Comment