Communism in Indian Politics பவானி சென் குப்தா அவர்களால் எழுதப்பட்டு 1972ல் வெளிவந்த நூல். 500 பக்கங்களை நெருங்கும் பெரிய நூல் தான். தெற்கு ஆசியா கழகம் என்பதில் விவாதிக்கப்பட்டு வெளிவந்த நூல். சென் குப்தா அவர்கள் அப்போது ஜே என் யு பல்கலையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்.
இந்தியாவில் ‘a force of international communism’ எனப் பிறந்த கம்யூனிச இயக்கம், இந்திய விடுதலைக்கால அனுபவம், இந்திய அரசமைப்பு, நாடாளுமன்ற அரசியல் ஆட்சிமுறை அனுபவம் ஆகியவற்றின் நீண்ட பயணத்தில் எவ்வாறு தன்னை Indian Political force ஆக நிறுவிக்கொள்ளவேண்டிய போராட்டத்தை நடத்தி வந்தது என்பதை விரிவாகப் பேசுகிற நூல் இது.
இந்தியாவில் பிறந்த கம்யூனிச இயக்கம் உடைவுகளை 1964, பின்னர் அதில் 1969 உடைவு- அதிலும் கூட பல உடைவுகள் என சந்தித்தாலும் இரண்டு மெயின்ஸ்ட்ரீம் இயக்கமாக CPI, CPM இரண்டும் National and Regional ( linguistic state ) polityல் தங்களை நிற்க வைத்துக்கொள்ளும் போராட்டங்களை , மேற்கொண்ட உத்திகளை இந்த நூலாசிரியர் பேசுகிறார்.
கம்யூனிச இயக்கம்/கட்சி உதயமானதிலிருந்து மெல்ல மெல்ல தன்னை transform செய்துகொள்ளும் போராட்டங்களை நடத்திக்கொண்டது. சோவியத் மற்றும் சீனக் கட்சி செல்வாக்கிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, இந்திய நிலைமைகளை தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து பார்த்து அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை தக அமைத்துக்கொள்ளும் விரிவான பயிற்சிக்கான போராட்டமாகவும் இது அமைந்தது. 1951ல் மெதுவாக துவங்கி, ஸ்டாலின் மறைவிற்கு பின்னர், சோவியத் 20வது கட்சி காங்கிரஸ்க்கு பின்னர் இதன் தீவிரப் பாதையை நிகழ்ந்த மாற்றத்தை இந்நூலாசிரியர் காட்டுகிறார்.
இந்தியாவில் கம்யூனிச இயக்கம் வளர்ந்த முதல் 50 (1972 வரையிலான) ஆண்டுகள் வரலாற்றை இந்நூல் தொட்டுக்காட்டி, இக்காலங்களில் கருத்துருவாக்கத்தில், அது தன்னை இந்தியத் தன்மை அரசியல் போக்கில் நிலை நிறுத்திக்கொள்ள பெற்ற உருமாற்றங்களைப் பேசுகிறது.
தேர்தலில் நிற்பது என்பதை 1945லேயே ஏற்றுகொண்டு labour Constituencyக்களில் வெற்றியை சிறிதளவு பெற்றாலும், 1951க்குப் பின்னர் பாராளுமன்ற அரசியல் சோதனைக்கு இந்திய கம்யூனிசம் தன்னை ஒப்புகொடுத்து, மக்களின் அங்கீகாரத்தை பெறும் போராட்டத்தில் இறங்கியது. உலகின் முதல் சோதனையாக தேர்தல் வழி ஆட்சியைப் பெறுதல் என்பதை கேரளத்தில் நடைமுறையாக்கியது. தொடர்ந்த நேரு ஆட்சி- நம்பூதிரி ஆட்சி கவிழ்ப்பு, சர்வதேச கம்யூனிச இயக்க வேறுபாடுகள்- உட்கட்சி வேறுபாடுகள் இந்திய கம்யூனிச இயக்க சோதனையில் உடைவை உருவாக்கின.
கேரளா
ஆட்சி, வங்க ஆட்சி, திரிபுரா
ஆட்சி என்ற மாநில சோதனைகள் நடந்தன.
இந்தியா போன்ற விரிந்த பரப்புள்ள
நாட்டில் இரு வழி சோதனைகளை
சிபிஅய் மற்றும் சிபிஎம் நடத்திப்
பார்த்ததாக சென்குப்தா சொல்கிறார். சிபிஅய் national power வழியாக மெதுவாக கீழிறங்கி
பரவலாகுதல், சிபிஎம் மாநில அதிகார
தளங்கள் வழியாக தேச அதிகாரம்
நோக்கி செல்தல் என்கிற இரு
சோதனைகளை இந்திரா ஆட்சி காலத்தில்
சோதித்ததாக சென் எழுதியுள்ளார். சிபிஎம்
எல் முற்றிலுமாக சீனப்பாதை- அழித்தொழிப்பு எனச் சென்றதையும் இந்நூல் பேசுகிறது. இந்த
நூலின் ஆய்வுப் பாதையின் சாரமாக இந்தப் பாராவைச் சொல்லலாம்.
The
fundamental dilemma of communism in India can be stated in simple terms. The
communists are pitted against a state and a political system created and
devised and evolved by the bourgeosie to which the communists could make little
positive contribution on their own.
The
choice that has baffled them all these years is whether they should work within the system and use its
institutions and instruments to gradually change its qualitative character, or
whether they should try to overthrow the system and replace it with another
based on radical realignment of productive relationships. The United CPI began
with the overthrow tactic, then swung to the opposite tactic of working within.
(page 404)
இன்னும்
ஒரு பாராவில் வேறு ஒரு பிரச்சனையையும் அவர் எழுப்புகிறார்.
Another
problem- the influence of regional cultures on indian communism. If Russian
communism is Marxism plus slavic culture, chinese communism with Han culture,
can Indian communism be immune to many cultures that go into the making of what
can loosely be described as Indian culture? ’Regional
– nationalist’ sentiments are appear to be strong
among middle class intelligentia
சில இடங்கள் சில விமர்சன பார்வைகளை தோழர்கள் ஏற்கமுடியாமல் போகலாம். ஆனால் இந்த நூல் ‘கருத்துருவாக்கம்’- conceptual என்பதற்கு சற்று நெருக்கமாக போகும் புத்தகம் என்பதால் ஆர்வம் உள்ளவர் படித்துப் பார்க்கலாம்.
3-12-2023
Comments
Post a Comment