ஜனவரி 8 வேலைநிறுத்தம்
மத்திய
சங்கங்களின் அறைகூவலை ஏற்று பல்வேறு துறைகள்
சார்ந்த திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்கள் ஜனவரி 8 2020ல் வேலை நிறுத்தம்
செய்யவிருக்கின்றனர். அவர்களுக்கு நல்வாழ்த்துகள். போராட்டம் அமைதியாக முடியட்டும்.
வேலைநிறுத்தத்தில்
25 கோடி தொழிலாளர் பங்கேற்பர் என தலைவர்கள் மதிப்பிட்டுள்ளனர். கோரிக்கைகள் பல்வேறு
அரங்குகளில் விளக்கப்பட்டும், தெருமுனைகளில் பேசப்பட்டும் இருக்கின்றன.
ஆட்சியிலிருக்கும்
திரு மோடி தலைமையிலான பா ஜ க சர்க்கார் நல்லிணக்கம் சமூக அமைதிக்கு உத்தரவாதம் தராமல்
சமூக பதட்டத்தை- ஒற்றுமையின்மையை நாள்தோறும் அதிகரித்து வருவது குறித்த கவலையை அச்சத்தை
தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. போராடும் பல்வேறு ஜனநாயக சக்திகளின் குரலுடன் தொழிலாளர் சக்திகளும்
சேர்கின்றது .
சிலகோரிக்கைகள்
முத்தரப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருபவை. முன்பிருந்த திரு மன்மோகன் சிங் சர்க்கார் பொறுப்பில் இருந்த 10 ஆண்டுகளில் 5 முறை ILC கூட்டப்பட்டிருந்தது. நான்குமுறை பிரதமராக இருந்த
திரு மன்மோகன் அவர்களே கலந்துகொண்டு தன் அரசின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி சென்றார்.
தொழிலாளர் தரப்பு பி எம் எஸ் உட்பட கடுமையாக விவாதம் நடத்தின. இப்போது BMS வேலைநிறுத்தத்தை அரசியல் என விமர்சித்து தன் அரசியலை
ஆட்சியாளர்க்கு விசுவாசமாக காட்டியுள்ளது.
அடிப்படை
தொழிலாளர்களுக்கு- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 21000 என்ற கோரிக்கை அனைத்து
துறைகளிலும் பேசப்பட்ட கோரிக்கையாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 2019ல் சென்னை போன்ற
பெருநகரங்களில் தின சம்பளம் ரூ 603, திருச்சி போன்ற நகரங்களில் ரூ 503, தஞ்சை போன்ற
நகரங்களில் ரூ 403 என்றாக்கி CLC உத்தரவு பிறப்பித்துள்ளனர். லட்சக்கணக்கான்
BSNL ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதகணக்கில் சம்பளம் தராத நிலை நீடிக்கிறது.
கேரளா சர்க்கர் அனைவருக்கும் தினம் குறைந்தபட்சம்
ரூ 600 என உத்தரவு முன்னரே வெளியிட்டுவிட்டனர். மத்திய அரசோ மிகமோசமாக ரூ4600 மாதம் என்பதை சொல்லிவருகிறது. இது போராட்டத்தில்
பெரும் தாக்கம் ஏற்படுத்தும் கோரிக்கை.
திரு மன்மோகன்
சிங் காலத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு என்ற உயர்நோக்கு வேலை உத்தரவாத சட்டம்
வந்தது. ஊரக மக்கள் ஆரோக்கியம்- கல்வியறிவின்மை போக்க கவனம் செலுத்தப்பட்டது. ESIC coverage
எண்ணிக்கை 20லிருந்து 10 போதும் என மேம்படுத்தப்பட்டது. EPFO முற்றிலும்
கணினி மயமாக்கப்பட்டு ஏறத்தாழ 6 கோடி தொழிலாளர் ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டன. Female Labour Force என்பதற்கு கவனம் செலுத்தப்பட்டது.
Universal Social security Coverage என்பதிலும் கவனம் இருந்தது. குறைந்த பட்ச பென்ஷன்
ரூ 1000 என்பதும் வந்தது. அது போதாது என்கிற போராட்டமும் தொடர்ந்தது. இவ்வளவையும் தொழிற்சங்கத்தலைவர்கள்
உரிய மட்டத்தில் விவாதித்து கொணர முயற்சித்தார்கள். அந்த 43, 44, 45 மாநாடுகளின் முடிவுகளை
தாங்கள் பரிசீலித்து முடிவெடுப்போம் என பா ஜ கா சொல்லி ஆட்சிக்கு வந்தது.
திரு
மோடி அவர்களின் 6 ஆண்டுகால ஆட்சியில் நியாயமாக
மூன்று முறையாவது கூடியிருக்க வேண்டிய ILC ஒரே ஒருமுறை மட்டுமே ஜுலை 2015ல் கூடியது. பிரதமரும் பங்கேற்று
இனிய வார்த்தைகளை பேசினார். ஏதும் நடைபெறவில்லை. தொடர்ந்து கூடவும் இல்லை.
அவர் உரையின் சாரம் :
“He
( Shri
Modi)
recalled that the ILC has been guided by visionary leaders like B.R. Ambedkar
and V.V. Giri who made significant contributions to our country’s development.
He reiterated that
the present government is committed to carry forward the principles and ethos
of tripartism… Hon’ble Prime Minister said that the role of labour is very
prominent in the process of nation building and that a country can prosper only
if there is harmonious relationship between employers and workers. He stressed
that bonds strong as family bond between employees and employers will not only
strengthen the economy of the country, but will also ensure well-being of both
entrepreneurs and workers.”
அற்புத வார்த்தைகள் வெறும் வார்த்தைகள்.
அவரது கமிட்மெண்ட் ஏதும் நடைமுறைக்கு வரவில்லை. மாறாக நீதி ஆயோக் துறைவாரியாக சொல்வதெல்லாம்
நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கின்றன. Labour
Code களை அமுல்படுத்த நாடாளுமன்றமும் தீவிரம் காட்டியதை பார்த்தோம்.
அந்தந்த துறைசார்ந்த தாக்குதலை
எதிர்கொண்டு தற்காத்துக்கொள்ள துறை சார்ந்த சங்கங்கள் போராடிவருகின்றன. சக்திக்கேற்ப
தீர்வுகளை காண்கின்றன. மத்திய சங்கங்கள் ஆண்டுதோறும் ஒட்டுமொத்த பிரச்ச்னைகளை முன்வைத்து
ஒருநாள்- இரண்டு- மூன்று நாட்கள் அளவிற்கு கூட அடையாளப் போராட்டங்களை பொதுவேலைநிறுத்தமாக
பல ஆண்டுகளாக நடத்திவருகின்றன.
கடந்தமுறை ராஜ்நாத்சிங்- அருண்ஜேட்லி
போன்றவர்கள் கொண்ட அமைச்சர் குழுவே வந்து பேசியது. இம்முறை தொழிலாளர் அமைச்சர் ஜனவரி
2 அன்று அவசர அழைப்பை கொடுத்து பேசியுள்ளார். பல சங்கத்தலைவர்கள் சுற்றுப்பயணத்தில்
இருந்த நிலையில் பல இரண்டாம் நிலை தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை
என்ற அறிக்கையையும் தந்துள்ளனர். அரசாங்கம்
அதிகாரபூர்வமாக கூட்டக்குறிப்பையாவது வழங்கியிருக்கவேண்டும். தன்நிலைப்பாட்டை பொதுமக்கள்
பார்வைக்கு வைத்திருக்கவேண்டும். வேண்டுகோள் கூட பொதுவெளியில் விடப்படவில்லை.
குடியுரிமை சட்டம் பற்றி வீடுவீடாக
செல்வோம் எனச் சொல்லி செல்பவர்களால், தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தியிருக்க முடியாதா
என்கிற கேள்வி எனக்கு எழுகிறது. ஏற்கனவே பெரும் விழ்ச்சியில் இருக்கும் பொருளாதாரம்
வேலைநிறுத்தம் காரணமாக வீழ்ந்துவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்ச்சி ஆள்வோரிடம் இல்லாமல்
போனது கவலைக்குரிய அம்சமே.
வேலைநிறுத்தத்தின் வெற்றி என்பது
பல அம்சங்களை சார்ந்தே இருக்கும். அரசியல்ரீதியாக பா ஜ க மீதான மக்களின் கோபம் அதிகரிக்க
உதவினால் அதுவும் வெற்றியாகவே பார்க்கப்படும். பா ஜ க விற்கு வாக்களித்த தொழிலாளர்
பகுதி கணிசமாக பங்கேற்றால் ’பங்கேற்பின் அடர்த்தி’ நியாயம் கூடும். கோரிக்கைகளின் மீதான
தீர்வில்தான் அரசாங்கத்தின் நியாயத்தன்மை வெளித்தெரியும்- அடக்குமுறையிலோ பழிவாங்குதலிலோ
அது நிலைகொண்டு நிற்காமல் இருக்க வேண்டும். கோரிக்கையின் தீர்வில் தலைமையின் முழுமையான
பொறுப்பும் அதன் திறனும் வெளிப்படும்.
Best Results with Least expenditure of Energy
என்பது அனைத்து அமைப்புகளுக்கும் பொதுவான சுட்டுதல். வாழ்த்துகள்!
7-1-2020
Comments
Post a Comment