BSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை
?
மத்திய
அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில் கடந்த ஜனவரி
2016 முதல் பெற்றனர். டிசம்பர் 2015 வரை ஓய்வுபெற்ற பென்ஷனர்களும் பென்ஷன் உயர்வுக்குரிய
பலனை ஜனவரி 2016 முதல் பெற்றனர். அங்கு ஊதிய மாற்றம்- பென்ஷன் மாற்றம் என ஒருசேர நடந்தது.
ஊதிய மாற்றமின்றி தனியாக பென்ஷன் மாற்றம் நடைபெறவில்லை. பென்ஷன் மாற்றம் நடந்ததால்
அதை தொடர்ந்து ஊதிய மாற்றம் நடைபெறவில்லை.
பி
எஸ் என் எல்லில் ஓய்வுபெற்றவர்கள் ( BSNL IDA Pensioners) தங்களது ஓய்வூதிய மாற்றத்தை
2011ல் பெற்றனர். இரண்டாவது PRC அடிப்படையில்
ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற்றப் பின்னர் பென்ஷனர்களும் அதே அளவு பலனை ஜனவரி 2007 முதல்
பெற்றனர்.
மூன்றாவது
PRC நிபந்தனைகளால் இதுவரை பி எஸ் என் எல் ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற முடியாமல் போயுள்ளது.
இதற்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆனால் ’கிடைக்குமா
- எப்போது கிடைக்கும் - எந்த அளவில் பலன் கிடைக்கும் ’ என்கிற சூழல் இதுவரை தென்படவில்லை.
சோராமல் போராடவேண்டிய பொறுப்பில் உழைப்பவர்கள் அங்கு இருந்து கொண்டிருக்கிறார்கள்
பென்ஷனர்
அசோசியேஷன்கள் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லாமல் பி எஸ் என் எல் இருக்கும் சூழலை கணித்துவிட்டு
delinking pension revision from pay
revision என்கிற கோரிக்கையில் அழுத்தம் தரத்துவங்கினார்கள்.
போராடவும் செய்தார்கள். தொழிற்சங்கங்களும் தங்களது போராட்டக்கோரிக்கையாக இதை முன்வைத்தன.
பலன்களை
எந்த வகையில் பெறுவது என்பதில் அசோசியேஷன்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டன. சிலர் 7வது
ஊதியக்குழு அடிப்படையில் ஜனவரி 2017 முதல் என்றனர். வேறு சிலர் 3வது ஊதிய கமிட்டி அடிப்படையில்
15 சதம் என்றனர். 7 வது ஊதியக்குழு அடிப்படையில் என்றவர்கள் தங்கள் நிலைப்பாட்டில்
ஒரு மாற்றத்தையும் உருவாக்கினர். ஜனவரி
2016 முதல் பலன் - CDA Conversion அடிப்படையையும் ஏற்கலாம் என்றனர். இதனால் தொடர்ந்து
வரக்கூடிய காலங்களில் மத்திய அரசு பென்ஷனர் பெறும் போதே நாமும் பெறலாம் என்கிற விளக்கமும்
தரப்பட்டது. கணக்கீடுகள் விளக்கப்பட்டு ஆங்காங்கே பென்ஷனர்களின் ஆதரவும் திரட்டப்பட்டது.
அதிகாரிகள் அமைச்சர்கள் சந்திப்பில் ஏற்பட்ட நம்பிக்கைகள்
பலனளிக்கவில்லை என்கிற செய்தி வரத்துவங்கியதும் மாற்றுவழிகளை காண்பது என்று சிலர் முயற்சிக்க
துவங்கியுள்ளனர்.
மிக
எளிமையான ஒற்றைவரி கோரிக்கை ’பென்ஷன் ரிவிஷன்’. போராடியோ- விவாதித்தோ- அரசியல் அழுத்தத்தாலோ- சட்ட
படிக்கட்டுகளின் வழியாகவோ ரிவிஷன் கோரிக்கை தீர்ந்தால் பலன் அடைபவர்கள் 2015/ 2016 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள்.
அடுத்து வருகிற மிக எளிமையான கேள்வி ஜனவரி 2016/
2017 முதல் ஓய்வுபெற்று வருகிறவர்கள் வருகிற
பிப்ரவரியில் லட்சம் தோழர்கள் இருப்பர். இவர்களுக்கான கோரிக்கை ஏதாவது உண்டா இல்லையா?
அவர்களும் இன்று பென்ஷனர்கள்தான்.
’பென்ஷன்
மாற்றம் ஜனவரி 2016/2017 முதல்’ என தாங்கள் விழையும் உத்தரவை அசோசியேஷன் பெற்றால் இந்த
தோழர்களுக்கு எப்படி பென்ஷன் ரிபிக்சேஷன் (Refixation) நடைபெறும். அவர்கள் ’ஊதிய மாற்றம்
பெற்றால்தான்’ அவர்களுக்கு ’பின் தேதியிட்டு அப்பலன்கள் உண்டு என சொல்லப்பட்டால் மட்டுமே’
இப்போது ஓய்வுபெற்றுவரும்போது நிர்ணயிக்கப்படும் பென்ஷனை உயர்த்தி
refix செய்ய முடியும்.
முந்திய
பென்ஷனர் சி டி ஏவில் பென்ஷன் பெற்றுக்கொண்டும் பிந்திய பென்ஷருக்கு ஐ டி ஏவிலும் பென்ஷன்
நிர்ணயம் செய்யப்படும் நிலையை எப்படி மாற்றுவது. பென்ஷன் ஊதிய அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
அவருக்கு ஊதிய மாற்றம் செய்யவேண்டிய பொறுப்பு பி எஸ் என் எல் சார்ந்தது. பென்ஷன் பிரச்சனை
வருவதால் அதற்கு ஒப்புதல் தரவேண்டிய பொறுப்பு டி ஓ டி க்கு. சம்பள மாற்றம் வராமல் எப்படி
இவர்களின் பென்ஷன் உயரும்.
Past Pensioners எனப்படும் ஓய்ய்வூதியர்கள் மட்டும் தனியாக பென்ஷன்
ரிவிஷனை ஜனவரி 2015/ 2016 லிருந்து பெறுவது பென்ஷனர்களை இரு கூறாக்கிவிடும். ’Delinking Pension Revision from Pay revision’
என்பதோ ’Pay revision இல்லாவிட்டாலும்
pension revision’ என்பதோ ’பி எஸ் என் எல் அய் டி ஏ பென்ஷனர்களை’ இரு வேறு நிலைகளில்
வைத்துவிடும். முந்திய பென்ஷனர்கள் ரிவிஷன் காரணமாக 7வது ஊதியக்குழு/ 3 வது ஊதிய கமிட்டி
பலன்களை பெற்றவர்களாகவும்- ஜனவரி 16/ 17 பென்ஷனர்கள்
தொடர்ந்து இரண்டாவது ஊதியக் கமிட்டி அடிப்படையில் பென்ஷன் பெறுபவர்களாகவும் நீடிக்கும்
நிலை ஏற்படும். இது பென்ஷனர் ஒரே வர்க்கம் என்கிற நிலைப்பட்டிற்கு உகந்ததாக இராது.
பிந்திய
பென்ஷனர்கள் (அதாவது ஜனவரி 2016/ 17 அன்று ஊழியர்கள்) எப்படி பலனைப் பெறப்போகிறார்கள்
என்பது uncertainty ஆக உள்ள சூழலில் முந்திய பென்ஷனர்கள் பலனைப் பெறுவது ’certain’
என்பது குழப்பத்தை அதிகப்படுத்தும். இதுவரை நிலவிவந்த ஊதியக்குழுக்கள் கடைப்பிடித்த
modified Parity என்பதும் உடைபடும்.
கடந்தகால
அனுபத்திலிருந்து மத்திய அரசாங்கத்தில் தரப்படுவது போல் Simultaneous Pay and
Pension Revision என்பது மட்டுமே ’முந்திய-
பிந்திய’ பென்ஷனர்களை ஒன்றுபடுத்தும் கோரிக்கையாக அமையும். Delinking என்பது பிரிக்கின்ற கோரிக்கையாகவே இருக்கும்.
இனிவரப்போகிற
பென்ஷனர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் நிலையில் அவர்களது உணர்வுகளையும் கணக்கில்
கொள்ளாமல் பெரும் அமைப்புகள் கோரிக்கைகளில்
நகர்தலை செய்வதும் கடினமாக இருக்கும். ’உங்களுக்கு வந்ததால் எங்களுக்கும் வந்தது’
( Employee- Pensioner) போன்றதல்ல ’எங்களுக்கு வந்தால் உங்களுக்கும் வரும்’ (Pensioner- Employee) என்பது . இரண்டிற்கும் பெரும்
வித்தியாசம் உள்ளதை ஊன்றிப் பார்த்தால் உணரமுடியும்.
எந்தவொரு
சமூகமும் அங்குள்ள உழைப்பவர்களைவிட ஓய்வுபெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்
என பொதுவாக நினைக்காது. உழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்கவேண்டிய கெளரவத்தை முன்பு
உழைத்தவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறேதுமில்லை. சமூகம் அதை
புறக்கணிக்காது.
9-1-2020
Comments
Post a Comment