Skip to main content

மகாத்மா சுசிலா நாயர் வால்யூம் 5

 

மகாத்மா சுசிலா நாயர் வால்யூம் 5

Mahatma Gandhi vol 5 க்கு India Awakened என்கிற தலைப்பிட்டிருந்தார் சுசிலா நாயர். இதுவும் நீள அகல 720 பக்கங்கள் கொண்ட அளவில் பெரிய புத்தகம்தான். சுசிலாவும், அவரது ஆய்வுத்தோழர்கள் குழாமும் பெரும் உழைப்பை நல்கி நமக்கு இந்த வால்யூமை விட்டுச் சென்றுள்ளனர்.

 

ICHR நிதி உதவி செய்யாவிட்டால் இந்த வால்யூம் வந்திருக்காது. 1990லேயே பிரதி தயாராகிவிட்டது. புகழ் வாய்ந்த சோசலிஸ்ட்டாக அறியப்பட்ட அச்சுத்

பட்வர்த்தன் அழகான முன்னுரை எழுதியிருக்கிறார். 1994ல் 1000 காப்பிகளும், 2010ல் 500 காப்பிகளுமாக, இந்த வால்யூம் இதுவரை 1500 காப்பிகள், நவஜீவனால் கொணரப்பட்டுள்ளன.

 

பியாரிலால் போலவே, அவரது மறைவிற்குப் பின் அவரது செயலை அதே dedication உடன் சுசிலா செய்யலானார். பியாரி போலவே, நுண்ணிய, துல்லியமான விவரங்களை சேகரித்து இந்த வால்யூமிலும் அடுக்குகிறார்.

 

தென்னாப்பிரிக்கா சத்தியாகிரக போராட்டங்கள் மூலம் இந்தியர்களுக்கான dignity யை உயர்த்திவிட்டு, லண்டன் வந்து கோகலேவை பார்க்க காத்திருந்து , 1915 ஜனவரியில் காந்தி குடும்பத்துடன் இந்தியா திரும்புவதிலிருந்து, ஏறத்தாழ 10 ஆண்டுகள் நிகழ்வு போக்குகளை 4 பகுதிகளாக சுசிலா இதில் கொண்டு வந்துள்ளார்.

 

மீண்டும் இந்தியாவை புரிந்துகொள்ளல், ஆசிரமம் அமைத்தல், சாந்தி நிகேதன் செல்தல், பனாரஸ் அதிர்ச்சி தரும் உரை என்கிற பகுதியுடன், மூன்று முக்கிய விவசாய தொழிலாளர் போராட்டங்களாக சம்பரான், கேதா, அகமதாபாத் மில் என்கிற மாடல்களை உருவாக்குவது பேசப்பட்டுள்ளது.

 

மாண்ட்போர்ட், கிலாபத், ஒத்துழையாமை, செளரி செளரா அனுபவம் , கோர்ட்டின் முன் தன் வழக்கில் காட்டும் புதுமை 6 ஆண்டுகள் தண்டனை- 2 ஆண்டில் வெளிவருதல், சுயராஜ்ய கட்சியினருடன் முரண்- இணக்கம் என இந்த வால்யூம் நீள்வதைக் காண்கிறோம்.

 

அச்சுத் பட்வர்தன் ஆகஸ்ட் 12, 1990 ல் எழுதிய முன்னுரை இந்த வாசகங்களுடன் முடியும்

The noble life story of Mahatma Gandhi is the history of the political emancipation of this land. It concerns the moral regeneration of earnest citizens and their fearless non violent resistance to misrule and injustice. It marks a historic chapter in the story of Man in the twentieth century. It is therefore, invested with perennial significance

திரும்ப கவனமாக அச்சுத் எழுதியிருக்கும் இந்த 6 வரிகளை படிக்கும் எவருக்கும் அதன் சத்திய ஒளியை உள்வாங்க முடியும். History of political emancipation of this land

Concerns the moral regeneration of earnest citizens

Fearless non violent resistance to misrule and injustice

அரசியல் விடுதலை எவ்வளவு misuse செய்யப்படவேண்டுமோ, நாம் அதை அவரவர் பங்கிற்கு செய்து வருவதை உணரமுடியும்.

 

இரண்டாவதான அவரின் தாகமான moral regeneration எதிர்மறையாக degeneration ஆகி கீழ் நோக்கி செல்வதை காண்கிறோம். Fearless resistance என்பது இரைச்சல் ஆர்ப்பாட்டம் என்கிற சிறு அளவில் நின்று போகக்கூடிய soap bubble demonstration ஆக முடிந்து போவதைக் காண்கிறோம்.

 

தீர்வை நோக்கி தீர்விற்காக என்பதைவிட protest for protest sake என்கிற இயக்கங்கள் just expose that is the end game என சுருங்கி போவதை உணரமுடிகிறது.

அரசியல் காந்தியை தள்ளி வைத்து - moral regeneration என்பதை பொருட்படுத்தாத- வாக்கு அரசியலுக்கு உகந்த தலைவர்களின் பல்லக்கிற்கு பின்னால் என்கிற ஓட்டத்தை எடுத்துக்கொண்டுள்ளது. வெறுப்பிற்கு பதிலடி பல மடங்கு வெறுப்பு என்கிற உரையாடல் பெருகி பிரவாகமாக சென்று கொண்டிருப்பதை உணரமுடிகிறது. எங்கும் தீ உமிழும் நாக்குகள் - வெறும் வசவுகள் என மொழி திண்டாடுகிறது.

 

சுசிலா போன்ற மறந்து போன பெரும் தலைமுறை ஒன்று தன் வாழ்நாள் உழைப்பை தந்து , அவை எங்கோ ஓரமாகவாவது இருந்துகொண்டு மினு மினுத்துக்கொண்டு இருக்கவே செய்யும். 21 ஆம் நூற்றாண்டின் மின் உமிழும் வெளிச்சத்தில் சுசிலாவின் படைப்பும் மின்மினி பூச்சியாகவது இருந்துகொண்டுதான் இருக்கும். பார்ப்பவர் கண்களுக்கு அது இயற்கை அழகை கூட்டும்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா