https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 10, 2023

ஆதி சங்கரர்

                                             ஆதி சங்கரர்

தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாட் மூத்த இந்திய மார்க்சிய அரசியல்வாதி மட்டுமல்ல. இந்தியாவின் மகத்தான மார்க்ஸிய சிந்தனையாளராகவும் அவர் வாழும் காலத்திலும், அவர் எழுத்துக்களின் வழி இப்போதும் உணரப்பட்டு வருபவர்.

ஆதி சங்கரர் அவர்களின் 1200 ஆண்டு கொண்டாட்டம் காலடியில் நடந்தபோது, மார்க்சியர்களும் ஆதிசங்கரர் தத்துவம் குறித்த செமினார் ஒன்றில் பங்கேற்றனர். தோழர் இ எம் எஸ் அவர்கள் , அந்த 1989 தருணத்தில் ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார். அதன் தலைப்பு Adi Shankara and His Philosophy A Marxist View.

Left word பதிப்பகம் 2010 ல்  இ எம் எஸ் அவர்களின் 16 கட்டுரைகளை இணைத்து History Society and Land Relations என்கிற புத்தகமாகக் கொணர்ந்தது. அப்புத்தகம் வந்தவுடனேயே நானும் வாங்கிவிட்டதாக நினைவு.  அதில்  சங்கரர் குறித்த இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. அளவில் 12 பக்க கட்டுரைதான்.

இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் பேசுபவர் இதுபோன்ற idealism சார்ந்த செமினாருக்கு - அது போன்ற விஷயங்களில் பங்கேற்கலாமா எனக் கேட்டுக்கொண்டு, பங்கேற்கலாம் - நமது பார்வையை வைக்கலாம் எனதெளிவுபடுத்தினார் இ எம் எஸ். ஆதிசங்கரரின் கருத்துமுதல்வாத சிந்தனை என்பதும் இந்திய ஞானம் என்கிற புரிதலுடன் கச்சிதமாக தன் விவாதத்தை  அவர் கொண்டு சென்றிருப்பார்.

இந்திய பொருள்முதல்வாதம் உழைக்கும் மக்களை சார்ந்து நின்றால்,  கருத்து முதல்வாதம் ஆக உயர் தட்டிற்காக  நின்று சமூகத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பிராமண- சத்திரிய வர்ணங்களுக்காக, அவர்கள் சலுகைகள் வீழ்ந்துவிடாமல் காப்பதற்காக நின்றது என்கிற மார்க்சிய புரிதலை இ எம் எஸ் வைக்கிறார்.

இங்கு இ எம் எஸ் இரு வாதங்களில் உயர்ந்தது  இது - தாழ்ந்தது அது எனப்பேசாமல், அவற்றின் முரண் மோதல் சமூக வளர்ச்சி என்கிற இயக்கவியல் அணுகுமுறையை எடுத்திருப்பார். அவர் வரிகளை கவனியுங்கள்

“Neither idealism nor materialism remains static, both are ever moving forward, negating each other, the struggle between the two in newer and newer forms is the law of development of human thought. There is therefore no question of materialism as such being superior to idealism, idealism as such being inferior “

இங்கு இ எம் எஸ்  law of development of human thought என்பதன் அம்சமாக இந்திய கருத்துமுதல்வாத ஞானத்தை, அதை inferior எனச் சொல்லாமல், மெட்டிரியலிசம் என்பதுடன் அதன் தொடர் மோதலை புரிந்துகொள்ள சொல்லித்தருவதைக் காண்கிறோம்.

இந்தியாவில் இந்த மோதலில் ஆதிசங்கரரின் அத்வைதம் உள்ளிட்ட அவரது தத்துவ சிந்தனைகள், சார்வாகம் புத்தம் உள்ளிட்ட பொருள்முதவாத சிந்தனைகளை வீழ்த்த தலையாய பங்காற்றியதை இ எம் எஸ் எடுத்துச் சொல்கிறார். இ எம் எஸ் தருவதிலிருந்து சில வரிகள்

Adi Shankaracharya with his philosophy of Advaita Vedanta was the finest and most sophisticated exponent of this school of India’s idealist philosophy. He developed his teachings on Brahman to such an extent that it implied the denial of even God, he was denounced by his opponents as Buddha in disguise- prachchanna Buddha….

Shankara was and is still revered however, for the erudition with which he defeated the Buddhist philosophical trend

இந்திய கருத்துமுதல்வாத பொருள்முதவாத மோதலை இந்திய வகைப்பட்ட வர்க்கப்போராட்டத்தின் வகை என இ எம் எஸ் கருதுகிறார்.  இந்தியாவில் புத்தம் தோற்றதை the  victory of dominant upper castes whose theoreticians championed idealism   என இ எம் எஸ் முடிவிற்கு வருகிறார். டாக்டர் அம்பேத்கர் இந்த முடிவை முன்னரே எட்டியிருந்தார். புத்த வீழ்ச்சியும், சங்கர தத்துவ வெற்றியும் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சியை பாதித்தன என்கிற நீட்சியான முடிவிற்கு இங்கு கூடுதலாக இ எம் எஸ் வந்தடைகிறார்.

மேலும் தன் ஆய்வில் இ எம் எஸ் வந்தடையும் புள்ளி

..the defeat of oppressed castes at the hands of the Brahminic overlordship, of materialism by the idealism, constituted the fall of India’s civilisation and culture which in the end led to the loss of national independence

இன்னும் அழகாக தன் மார்க்சிய மொழி கூட்டி இ எம் எஸ் சொல்கிறார். இது ஏதோ தத்துவம் வென்றது என்பதல்ல, அதில் victor - vanquished என்பதெல்லாம் இரண்டு தத்துவமல்ல இரு சமூக வர்க்கங்கள்- the dominant and oppressed castes using the philosophy as their arsenal.

The victory of Shankara and his philosophy was the victory of the Brahmin and other dominant castes, the defeat of the rest of Indian society. இந்த புரிதலில் பிராமண மற்றும் மேலாதிக்க சாதிகள் என்ற சொற்றொடரை இ எம் எஸ் பயன்படுத்தியிருப்பதை பார்க்கமுடியும்.

எவர் dominant castes என்பதை குறிப்பிட்ட அந்த சாதியினரின் அரசியல் அதிகார பலம்,  தேர்தலில் அதன் பங்களிப்பு, சொத்து பொருளாதார பலம், அவ்வூரில் கிராமத்தில் அவரின் பயமுறுத்தல்   index காட்டிவிடலாம்.

இ எம் எஸ் இப்படி முடித்திருப்பார்

“ Let  me conclude: Shankara was one of the tallest of India’s - world’s  idealist philosophers, his advaita vedanta is one of the richest contributions India has made to the treasury of human knowledge “

நமது பொருள்வாத சிந்தனையிலும் பல genius இருந்தாலும் , சமமற்ற போட்டியால் அவர்கள் வெற்றிபெறமுடியாமல் போனதால் ஆயிரமாண்டு பின்னடைவு பிரிட்டிஷ் ஆட்சி என அவர் பேசுகிறார்- the beginning of a millennium- long age of intellectual  and socio political backwardness which culminated in the establishment of British rule in our land. இந்த இ எம் எஸ் வாக்கியங்களை கவனித்தால் அவர் மில்லினியம் கால பிற்பட்டத்தனம் என்கிற சொற்றொடரை- முகலாய காலத்தையும்  சேர்த்தே பேசியிருக்கிறார் - அதை வெளிப்படையாக சொல்லாமல் காலத்தைச் சொல்லி subtle ஆகச் செல்வதைக் காண்கிறோம்.

வலது சிந்தனையாளர்கள் தங்களுக்கானதான பகவத் கீதை, இதிகாசங்களை சமஸ்கிருத ஸ்லோகங்களுடன் அதன் மாநிலவாரி மொழிபெயர்ப்புகளுடன் ஏராளம் கொண்டு செல்கின்றனர். அப்படி அவர்கள் பெருமிதமாக காட்டிக்கொள்ளும் சமஸ்கிருதம் அல்லது இந்தி மொழியில் நாத்திக மற்றும் பொருள்முதல்வாத,  ஒடுக்கப்பட்டவர்க்கு ஆதரவான கருத்துக்கள் ஸ்லோகங்கள் இருந்தால் அவற்றை அதே மொழியில் தந்து மாநில மொழியில்  அர்த்தம் எழுதி எடுத்துச் செல்லவேண்டிய பணி நடைபெறுகிறதா என அறியமுடியவில்லை.

இ எம் எஸ் பேசியது போல the law of development of human thought என்பது பல்வேறு மொழிகள் தொடர்பில் தான் பெறமுடியுமே தவிர, எவர் கதவடைப்பிலும் அந்த போராட்டம்  மற்றும் வளர்ச்சி நிகழாமல் போய்விடும். எனவே மொழி கதவடைப்புகளை ஆர்வம் உள்ளவர்களாவது - சிறிய அளவிலாவது தவிர்த்து, மானுட சமதை சிந்தைக்கு , dignity க்கு உகந்த கருத்துக்களை கொண்டுவந்து அவரவர் மொழியில் சேர்ப்பதும், பிற மொழிகளுக்கு உகந்த சிந்தனைகளை கடத்துவதும், இந்த போராட்டங்கள் ஊடாக இணக்கமான சமூகம் கட்டப்படுவதற்கும் துணை நிற்கட்டும்.

No comments:

Post a Comment