sep 18, 2023
மொழியும்
அறமும்
சமத்துவ சிந்தனை என்றால் அது மேற்கிலிருந்து
குறிப்பாக பிரஞ்சு, ஆங்கில, ஜெர்மானிய சிந்தனையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற எண்ணம்
பரவலாக இருக்கிறது. அப்படி வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.
மனிதன் சமதையாக நடத்தப்படவேண்டியவன்
என்கிற அறச் சிந்தனை தமிழ் பாடல்களில் காணக்கிடைக்கிறது. எச்சிந்தனையில் எம்மொழியில்
, இன்னும் உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுகிற தமிழ், சமஸ்கிருதம், கிரேக்க , லத்தீன்
இன்னும் வேறு எந்த மூத்த மொழி வழி சிந்தனையில் இருந்தாலும் அவற்றை கொள்ளத் தக்கதாக
எடுத்தாளவேண்டும். இந்த எண்ணப் பரவல் வேகப்படுத்தப்படவேண்டும்.
எழுத்துவடிவம் கூட இல்லாத மொழிக்கூட்டத்தில்
அது தென்பட்டாலும் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமர்த்யா
சென் அவர்களிடம் சமஸ்கிருதம் குறித்த உரையாடல் நடந்தபோது, அம்மொழியை தான் சிறு வயது
முதலே பயில விரும்பியது ஏன் என்பதை சுட்டிக்காட்டினார். அதன் மதம் சார்ந்த எழுத்துக்களையும்
தாண்டி, அதன் சார்வாகர் - புத்த எழுத்துக்களையும், அறிவியல் பாங்கில் அமைந்த எழுத்துக்களையும்
தான் தேடி அறிந்ததாகவும் அவை ஏராளம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படிப்பட்ட
அந்த so called தேவ பாஷையில் எழுதப்பட்டுள்ள மானுட சமத்துவ உயர் சிந்தனைகளை அம்மொழி
அறிஞர்கள் தொகுத்து ஆங்கில வழியிலோ, வாய்ப்பிருந்தால் பிற இந்திய மொழிகளிலோ தருவது நல்லது- பயனுள்ளதாக
இருக்கும். இங்கிருந்து இந்திக்கும் பெரியார்
எழுத்துக்கள் போய்க்கொண்டிருக்கின்றன.
எந்த மொழியையும் அது உருவாக்க
விழையும் இணக்க சிந்தனைகளிலிருந்து புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது. அதன் சமய மற்றும்
சாதி ஏற்றத்தாழ்வு மொழியாடல்களுக்கு மாற்றாக, அதே மொழியில் காணப்படும் இணக்க சிந்தனைகளை
பரவலாக்குவது நல்லது. ஒரு மொழியால் தனது சமயம் சார்ந்த மொழியில் மானுட கெளரவம் உயர்த்தி
பிடிக்கப்பட்டிருந்தால், அந்த சமய மொழியும் நல்ல பலனைத் தரமுடியும். அதில் சமய உயர்வு என்கிற பெருமிதத்தைவிட, மானுட
நேயம் என்பது உயர்ந்து நின்றால் நலம். அன்னப்பறவையை அடிக்கடி காந்தி அழைப்பதைக் காண்கிறோம்.
கொள்வதைக் கொள்ளல் என்பதற்காக அவர் அதைச் சுட்டிக்காட்டுகிறார்.
சமூகம் தனக்கான அற சிந்தனைகளை,
மானுடத்தின் அன்பை அரவணைப்பை போற்றும் சிந்தனைகளை தமிழைப் போலவே , பிற மொழிகளிலும்
சிந்தித்து தொகுத்து வைத்திருக்கிறது. எந்த
சமூகமும் நடைமுறையில் மத, சாதிய வேறுபாடுகளையும், தாழ்த்துதலையும், வெறுப்பையும் செய்துகொள்ளும்போது
, அம்மொழி அதற்கான சுய சாதி சுய மத பெருமிதங்களையும் மொழி கட்டுமானத்தில் கொணர்ந்து
, அதற்கான விரிவுரையாளர்களையும் வைத்துக்கொள்கிறது. அவர்களை போஷிப்பதன் மூலம் தங்கள் பெருமித தூய சாதி, தூய மதக் கட்டு
குலையாமல் பாதுகாத்துக்கொள்ளலாம் என அப்பாவித்தனமாக நம்பியும் வினையாற்றுகிறது.
சிறு வயதில் படித்த the
heritage we carry forward - the heritage that we renounce என்பது இன்றும் என்னுள்
பதிந்துள்ளதை உணரமுடிகிறது. செய்யக்கூடிய செயலால்
சமூகத்தின் ஓரம் சார்ந்த கடைநிலை மனிதர்க்கு பயனுண்டா எனப்பார் என்கிற மந்திர தாயத்தை
காந்தி தன் களப்பணியாளர்களுக்கு தந்து சென்றார்.
இந்திய சமூகம் அரசியல் வழியாக
பொருளாதார- சமுதாய ஏற்றத்தாழ்வு உணர்வுகளை சரி செய்யமுடியும் என்கிற நம்பிக்கையுடன்
விடுதலை வாயிலில் நுழைந்தோம். முன்னேறவேயில்லை என்று நாம் எதிர்மறையாக அளவிட வேண்டியதில்லை. முன்னேற்றம் கடைக்கோடிக்கு போகவில்லை என்கிற புரிதல்
இருந்தாலும் , ஏன் என்பதற்கு பல முரண்பட்ட பதில்களை அரசியல் அரங்கில் பெற்று வருகிறோம்.
‘மாரல்’ என்கிற அறச்சிந்தனையில் நாம் கீழிறங்கி வருகிறோமா என்கிற அய்யப்பாடு ஏற்படுகிறது.
இந்திய சிந்தனை என்கிற அனைத்து மொழி சமூக கூட்டு முயற்சியில் சமதையான வாய்ப்பு-
மேம்பட்ட இரட்டை அளவுகோல்களை தவிர்த்துக்கொண்ட அனைத்து மட்டங்களிலும் ஜனநாயக உணர்வும்
செயல்பாடும், அவரவர் கலாச்சார கூறுகளில் நிலவும் ஏற்றத்தாழ்வான மொழிவுகள் மற்றும் உணர்வுகளை
களைதல் என்கிற பயிற்சி தேவைப்படுகிறது.
Hatred cannot be
eradicated by doubling or squaring or
,multiplying hatred in turn. இன்றைய அரசியல்
மொழியாடல் தவறவிட்ட அம்சமாகவும் இது இருக்கிறது.
Comments
Post a Comment