https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 10, 2023

இ எம் எஸ் சாதி வர்க்கம் கட்சிகள்

 

இ எம் எஸ் சாதி வர்க்கம் கட்சிகள்

தோழர் இ எம் எஸ் எழுதிய முக்கிய ஆய்வுக் கட்டுரையில் ஒன்று castes , classes and parties in Modern political development. தனியான சிறு வெளியீடு அளவிற்கான கட்டுரையிது. அவரது selected essays இடம் பெற்ற ஒன்று.

இந்தியாவிலும் படிநிலை சமுதாய வளர்ச்சியில் வரலாற்றுக்கு முந்திய pre historic primitive communist society- tribal society இருந்தது என்கிற  வரலாற்று பொருள்முதவாத பார்வையை அவர் வைத்திருப்பார். கேரள அனுபவத்தில் ஓணம் சிறப்பை அவர் சொல்லும்போது ‘மாவேலி’ இந்தக் காலத்தின் அடையாளம் என்கிற முடிவிற்கு வருவார்.  பிறர் சொத்தில் வாழ விரும்பி , அவர்களை கட்டுக்குள் வைக்கும் வர்க்க உருவாக்கத்தை ‘வாமன’ அடையாளத்தில் அவர் தருவார்.

இந்தியாவில் இந்த பழங்குடி சமூகம் நால்வர்ண சமூகமாக பிளவுண்டு- பின்னர் ஏராள சாதிகளின் சமூகமாக மாறிய வித்தியாசத்தை அவர் ஏற்று ஆய்வைத் தொடர்வார்.

பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரால் சுரண்டப்பட்டனர் என்பதை சொல்லிவிட்டு, the exploiting minority happened to be the ‘unconscious tool’ of human civilisation என்கிற அம்சத்தை தன் மார்க்சிய புரிதலில் அவர் தந்ததை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். அவர் தரும் வரிகள்

The steady development of human civilisation with the flowering of literature, the arts and philosophy, leading to the flowering of sciences and culminating in the S&T revolution of the modern era- these are the social consequences of emergence of class society.

தன் கருத்திற்கு துணையாக அவர் எங்கெல்சின் டூரிங்கிற்கு மறுப்பிலிருந்து without the slavery of antiquity no modern socialism என்கிற வரியை எடுத்தாள்வார். இங்கு வேதம் உபநிடதம், இன்னும் இஸ்லாமிய கலாச்சாரம்  எல்லாம் வர்க்க சமுதாயம் உருவானதன் விளைவுகளாகவே இ எம் எஸ் பார்க்கிறார்.

நால்வர்ணத்திலும் கூட முதலில் பழங்குடி சமூகத்தின் பிரதானமானதான  சத்திரிய போர் வீரர்கள், அடுத்துதான் போருக்கான வெற்றியை வேண்டிய சடங்குகளை நடத்திய அடுத்த நிலை பிராம்மணர்- பின்னர் அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர்கள்- உயர அனுமதிக்கப்பட்டவர்கள், அடுத்து வைஸ்யர் என்பவர் தான் இருந்திருக்கவேண்டும் என்கிறார் இ எம் எஸ்.

நிலப்போரில்  இடத்தைப் பிடித்த பின்னர் தோற்கடிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கான வேலைகளை செய்யவைக்கப்பட்ட சூத்திரர் ஆகி நால் வர்ணம் அமைந்ததாக இ எம் எஸ் விளக்குவார்.  போர்களும் சாம்ராஜ்ய உருவாக்கங்களும் அதற்குரிய இராணுவம் தளவாடங்களும், மேலும் மேலும் புதியவகைபட்ட சாதிப்பிரிவுகளை உருவாக்கியிருக்கலாம் என தோழர் இ எம் எஸ் ஊகம் செல்கிறது.

கேரளாவில் வைஸ்யர் வர்ணம் இருந்ததாக தெரியவில்லை என்கிறார் தோழர்  இ.எம் எஸ். பழங்குடி சமூகத்தின் முழுமைக்கு முன்பாகவே சாதி வடிவம் தெரியத்துவங்கியதால், அடுத்த அடுத்த சமூக அமைப்புகளில் அது திடமாகிக்கொண்டே சென்ற பார்வையை நாம் இ எம் எஸ் இடம் பெறமுடிகிறது. அவருடைய மிக முக்கிய கவலை

The institution of caste in India conceals the essence of class division in society.

அதே நேரத்தில் பல நூறாண்டுகளாக சமூகத்தில் நீடித்து வரும் இந்த சாதி சமூக அமைப்பை மாற்ற வேண்டிய - புரட்சிகரமான சமூக அமைப்பிற்கான முன் தேவையாக உள்ளது என்பதை இ எம் எஸ் சொல்கிறார். ஆனால் சமூகத்தில் மாற்றம் வருவதையும் கவனிக்க வேண்டும் என்கிறார். கூட்டுக்குடும்பம் என்கிற பழைய அமைப்பின் அச்சாணி போய், புதிய குடும்பங்கள் உருவாகி வருகின்றன. கிராமங்கள் தன்னிறைவு குறைந்து இந்திய மற்றும் உலக சந்தையுடன் உறவாடவேண்டியுள்ளது.

சேர்ந்து உணவு உட்கொள்வது என்பதில் காணப்பட்ட taboo உடைந்துள்ளது. கலப்பு மணம் நடை பெறுகிறது.  இ எம் எஸ் இங்கு எழுதுவது deathblow delivered to the three institutions of caste, village community and joint family.

பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விடுதலைக்கான நீண்ட போராட்டக் காலத்தில்  சமூகத்தில் அரசியல் கட்சிகள் மதிப்பும் செல்வாக்கும் பெறத்துவங்கின.

As political democracy advances, as social and class conflicts intensified, the mass organisations and political parties of the various classes and strata acquire increasing importance என்கிற முக்கிய advancement யை நம்பூதிரிபாட் வைக்கிறார்.

கேரள சமூக மாற்றத்தில் சிரியன் கிறிஸ்துவர், நாயர், தமிழ் பிராமணர், நம்பூதிரிகள், முஸ்லீம்கள் என பலதரப்பட்ட பிரிவினரின் பிரிட்டிஷ் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகள் குறித்த புரிதலை இ எம் எஸ் தொட்டுக்காட்டுவார்.

விடுதலைக்கு பின்னர் வளர்ந்து வரும் கேரள அரசியலில் சாதிக்கு பங்கேயில்லை எனச் சொல்லமுடியாது. அதேபோல் சாதி மட்டுமே அனைத்தையும் அங்கு தீர்மானிக்கிறது என சொல்லவும் முடியாது என்கிற புள்ளியை இ எம் எஸ் எட்டுகிறார். அவர் இக்கட்டுரையை முடிக்கும்போது எழுதும் வரிகள்

..while classes and political parties are assuming greater and greater importance in the political life of the state, the existence of caste as a social factor and problems arising therefrom cannot be wished away

மேற்கூறிய இ எம் எஸ் வரிகள் இன்றைய அரசியல் பார்வைக்கு அவசியமான ஒன்றாக தோன்றுகிறது. விடுதலைக் காலத்திலிருந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசியல் கட்சியாக பெற்ற செல்வாக்கு, கடந்த சில ஆண்டுகளாக பாஜக பெற்று வரும் செல்வாக்கு, தமிழகத்தில் முதல் 20 ஆண்டுகள் காங்கிரஸ் செல்வாக்கு, பின்னர் திமுக அதிமுக அரசியல் கட்சிகள் செல்வாக்கு , மே வ, கேரளா, திரிபுரா ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் - என்கிற பெரும் ஆய்விற்கு போதுமான இடமளிக்காமல், அவர்களின் நிறை குறைகளை எடைபோடாமல் , அரசியல் கடந்து போகமுடியாது

ஆண்டவர்களும் ஆள நினைப்பவர்களும் பண்டைய இந்திய சமூகத்தின்  மீதான வெளிச்சத்தைக் காட்டியே தங்களின் குறைகளை,  தங்கள் செய்யமுடியாதவற்றை மறைத்து அரசியல் செய்ய விரும்பும் போக்கு அதிகரித்து வருகிறது.

மாறிய அம்சங்களை கவனித்து சொல்லாமல், ஏதோ இந்தியா 2000 ஆண்டுகளுக்கு முன்னரான மனுக்காலம் போல சித்தரிப்பதும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இஸ்லாமியர் காலம் போல சித்தரித்து அதற்கு வரலாற்று பழி தீர்க்க ஏக உருவெடுப்பு காட்சிகளாகவும் அரசியல் ‘மறைப்பு வேலைகளை’ செய்து வருகிறது.

‘இன்றைய அரசியல்’ அமைப்பு சட்ட வாய்ப்புகளுடன் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் , தடைகளாகும் அம்சங்கள் என்ன, இணைக்கப்படுத்தி ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய வேண்டிய சட்ட திட்டங்களுடன் பயணிக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment