https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 10, 2023

1915 காங்கிரஸ்- காந்தி

 

1915 காங்கிரஸ்- காந்தி

1915 டிசம்பரில் பம்பாயில் கூடிய காங்கிரஸில் காந்தி மிகச் சாதாரண தொண்டராக தெரிந்தார். அங்கு பேச்சு மணிக்கணக்கில் இருந்ததையும் காந்தி உணர்ந்தார்.

சூரத்தில் ஜனவரி 2, 1916ல் ஆர்ய சமாஜ் ஆண்டு நிகழ்வில் அவர் பங்கேற்றார். அங்கும் வண்டிக்கணக்கில் பேச்சு இருந்ததைப் பார்த்தார். ஏன் இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பேச பேரார்வம் கொண்டு அலைகிறோம் என்கிற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. இப்படி பேச்சைக் கேட்டுகொண்டேயிருந்தால், செய்ய வேண்டிய வேலைகள் என்னவாகும் என்கிற கவலை அவருக்கு ஏற்பட்டது.

அங்கேயே மாநாட்டில், சரி இந்த 7 மணி 8 மணி பேச்சை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, சில பேராவது என்னுடன் வந்தால், சூரத் நகரை கூட்டி பெருக்கி சுத்தம் செய்யமுடியும். மக்களும் நன்றியுடன் பார்ப்பார்கள் என்றார். கேட்டவர்கள் அதிராமல் இருப்பார்கள் என்ன..

மேலும் எல்லாம் இங்கிலீசில் பேசுகிறோம். ஆனால்

Our society will be reformed only thorough our own language. We can ensure simplicity and dignity in communication என்று பேசும் கலையை அவர் சொல்லித்தருகிறார்.

என் தொழிற்சங்க அனுபவத்திலும் மணிக்கணக்காக பேசுவது நடந்துள்ளது.  சம்பந்தம் இருக்கோ இல்லையோ ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினால்தான் சிறப்பான பேச்சு என்ற மாயச் சுழலை அனுபவித்தவன்- செய்தவன் என்கிற வகையில் காந்தி சற்று என்னை வெட்கப்பட வைக்கிறார். எங்களிடம் ‘அதிக நேரம் பேசுபவர் அதிக விவரமானவர் ‘ என்கிற எண்ணம் நிரம்பியிருக்கிறது.

காந்தியின் முறையில் சாக்ரடிஸ் கேள்வி methodology ல் அதற்கான பொருத்தமான பதிலைத்தேடும்- காரியார்த்தமான நடைமுறையைத் தேடும் மொழி சொற்செட்டு பழக்கமானதைக் காண்கிறேன். One step at a time என்கிற அவரின் பெரிய நடைமுறை சார்ந்த அம்சத்தை, நானும் வேலைப்பார்த்த தொழிற்சங்க இயக்கத்தில் அதன் father fig ஆக இருந்த தோழர் குப்தா எடுத்துக்கொண்டார். One step with all என்கிற சோதனையை அவர் செய்து பார்த்தார். அவரும் வேலைக்கு உதவாத  மொழியிலிருந்து தன்னை தள்ளி வைத்துக்கொண்டார். வானளாவிய முழக்கங்களை காந்தி வைத்ததில்லை. தோழர் குப்தாவும் தனது தோழர்களின் pulse என்பதையே,  (அரசாங்கத்தின் பலம் அறிந்து) அளவாக கொண்டார்.

சரியான கேள்விகளை உருவாக்குவதும், வாயளப்பு வாண வேடிக்கைகளை காட்டாமல், கூடியவரை பொருத்தமான பதில்களை தேடுவது என்கிற பேச்சுக்கலை எழுத்துக்கலையில் காந்தி பெரும் பயிற்சியாளராக இருந்தார். கைத்தட்டிற்காகவோ, மகிழ்ச்சி ஊட்டுவதற்காகவோ அவர் பேசியதில்லை. தன்னால் செய்ய முடிந்த வேலைகளுக்கு மட்டுமே ஒப்புக்கொடுத்தார்.

எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்கிற பேச்சில் நம்பிக்கையை அவர் தொலைத்து விடாமல், அடிமேல் அடி வைத்து, களைப்படையாமல், கூட வருபவர்களின் ஆர்வம் குலையாமல், self suffering உடன் வெகுதூரம் பயணித்தவர் காந்தி. அவரிடம் சத்தம் எழுந்ததேயில்லை. சன்னமான குரலில் ஆக உயர் காரியங்கள் நடக்க தன்னையும், தன்னுடன் வருபவர்களையும் பழக்கப்படுத்தினார். அவரது பேச்சில் எழுத்தில்  எந்த ஒரு குழுவின் சுய லாபத்திற்கான மொழி அசைவுகள் இருந்ததில்லை. அனைவருக்குமான இணக்கமான அசைவுகளை அவர் மேற்கொண்டார்.

காந்தி தனது பேச்சில் எழுத்தில் தனி மனித உருவம் மற்றும் குணங்களை ஒரு நாளும் தாக்கியதில்லை. தனிநபர் செயலின் குணங்களை நல்லதா அல்லாத ஒன்றா என்று மட்டுமே விவாதிக்கும் கலையை கற்றுத்தேர்ந்தார். இணக்கம் என்பது மட்டுமே அவரின் மொழிக்கூட்டத்தில் இருந்தது.

No comments:

Post a Comment