https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, October 25, 2023

Varna Jati Caste

 

Varna Jati Caste

இந்தியாவில் சாதி அமைப்பு முறை குறித்து ஏராள ஆய்வுகள் கிடைக்கின்றன. மேற்கு ஆய்வாளர்கள், இந்திய சமூகவியலாளர்கள், மார்க்சியர்கள், சோசலிஸ்ட்கள், அம்பேத்கர், வரலாற்றாய்வாளர்கள் என ஆய்வுலகம் விரிந்த ஒன்றாகவே இருக்கிறது.

இந்த ஆய்வுகளில் ஒன்றை குறிப்பிட்டு அது தான் துல்லியமானது என சொல்லிவிடமுடியுமா என எனக்கு தோன்றவில்லை. பெரும்பாலும் சில தரவுகளைக்கொண்டு, சில பண்டைய நூல்களை சாட்சியாகக்கொண்டு, அந்த அந்த ஆய்வாளர்கள் வெளிப்படுத்தும் ஊகங்களாக உத்தேச முன்வைப்புகளாக, இப்படி வந்திருக்கலாம் எனச் சொல்லக்கூடியதாக அவை அமைந்திருக்கின்றன.  அவர்கள் கருதும் உண்மைகள் என்ற முன்வைப்புகள் இருக்கவே செய்யும். அவர்களின் perception சார்ந்த தீர்ப்புரையாகவும், அரசியலுக்கு தோதான  சமூக இழுப்புரைகளாகவும் அவை அமைந்துள்ளன.

இந்த தரப்பில் சில வலது ஆய்வாளர்களும் வரத்துவங்கியுள்ளனர். பழம் பெருமையை குறையேதும் இல்லாமல் உயர்த்திக்காட்டி, எல்லாம் காரண காரியங்களின் ஏற்பாடாக நிறுவி, இன்றைய அரசியலுக்கு துணைநிற்கும் ஆய்வு இழுப்புகளாக அவை வருவதைக் காண முடிகிறது. இவர்களும் தாங்கள் காணும் உண்மைகள் என்றே முன்வைப்புகளை, பண்டைய நூல்களை சாட்சியாக வைத்து பேசுகின்றனர்.

முன்னர்  எம் பேராசிரியாக இருந்த திரு வைத்தியநாதன் ஆய்வுரை ஒன்றின் சில அம்சங்களை முகநூலில் தந்திருந்தேன். இன்று ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் விஜயா விஸ்வநாதன் எழுதியுள்ள varna Jati Caste  A Primer on Indian Social Structures என்பதிலிருந்து சில அம்சங்களை தர முயற்சித்துள்ளேன்.

ராஜிவ் மற்றும் விஜயா அமெரிக்க கல்வி புலன் சார்ந்தவர்கள். ராஜிவ் கார்ப்பரேட் சார்ந்தவரும் கூட. ஏராளம் எழுதிவருகிறார். விஜயாவும் வேதாந்த தர்ம நாகரிகம் குறித்த ஆய்வுகளை செய்து வருகிறார். கார்ப்பரேட் சார்ந்தவர். இவர்களின் வர்ணா ஜாதி காஸ்ட் புத்தகம் 2023ல் தான் வந்தது. முடிந்தவரை சொற்செட்டுடன், தங்கள் ஆய்வுரையை சாரமாக தர முயற்சித்துள்ளனர்.

Wokeism மற்றும் மேற்கின் இந்திய சமூக முறை குறித்த அரைகுறை புரிதல்களை இவர்கள் விமர்சித்து, அதை நேர்படுத்தும் வேலையை எடுத்து செய்வதாக சொல்கின்றனர். அதை மேற்கில் வாழ்ந்துகொண்டே செய்கின்றனர் போலும்.

Varna Jati caste என்கிற சொல்லாட்சிகள் பெற்ற கால மாறுதலை இவர்கள் விவரிக்கின்றனர். போர்த்துகீசிய சொல்லின் ஆட்டுவிப்பை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்கின்றனர். வர்ணாவை ஒரே குணம் attribute கொண்டு பேசுவது அறியாமை - அதன் குறைந்த அளவான 7 attributes கொண்டு முழுமையாக அறிதல் அவசியம் என்கின்றனர். அதில் புருஷார்த்தம் என்பதுடன் ஆசிரமம், அகிம்சை, தொழில் வகை போன்றவைகளும் இணைத்து பார்த்துள்ளனர் என்கின்றனர்.

Varna can be understood only when the entire ecosystem is considered. Those following a modern, and opportunistic life style are disconnected from varna based society. Varna Jati and Caste are all different and their distinct origins, applications and histories need to be understood.

இந்த மூன்றும் வெவ்வேறு கால புரிதல்கள் என்கின்றனர். இந்திய நாகரீகம் என்பது வேற்றுமையை சகித்துக்கொள்வதல்ல, அதன் இயல்பை கொண்டாடும் நாகரீகம் என்கின்றனர். எங்கெல்லாம் diversity நீக்கம் என வருகிறதோ அங்கெல்லாம் centralised monopoly வந்துவிடுவதாக இந்த ஆசிரியர்கள் சொல்கின்றனர்.

ஓக்கனிசத்தின் அம்சமே இந்த வேற்றுமைகளை நீக்குவதாக சொல்லி அது செய்திடும் cancel culture என்கின்றனர்.

கலப்பு மணம் என்பதை இவர்கள் வேறுவகையில் விமர்சிப்பதைக் காணமுடிகிறது. திருமணம் என்பதை சுய விருப்பம் சார்ந்த கலாச்சார தேர்வு எனச் சொல்லி, இதற்கெல்லாம் அரச கட்டளை போன்ற ஒன்று கூடாது என்கின்றனர்.

Real diversity is possible only when different identities are allowed to exist as per their own choices in an open architecture with no central authority and to dictate social policies .

இங்கு சமூகங்கள் எந்த அதாரிட்டியையும் ஏதோ ஒரு வகையில் வைத்துக்கொள்ளாமலா இயங்குகின்றனர் என்ற கேள்வியை ஆசிரியர்கள் miss செய்திருப்பதாக தோன்றுகிறது.

மேற்கின் ஆய்வை நம்பியவர்கள் ஏதோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய சமூக அமைப்பு அப்படியே மாறாமல் இருப்பதைப் போன்ற ஒன்றை சித்தரிப்பதை இவர்கள் விமர்சிக்கின்றனர். நிலைத்த ஒன்றாகவும், இன்றுள்ள  அனைத்து பிரச்சனைகளுக்கும் அந்த முன்னொரு காலம் காரணமாகவும், இந்தியாவின் நீண்ட வரலாற்று கட்டங்களை குழப்பமாக புரிந்து கொள்ளலும் அவர்கள் செய்யும் தவறாக இவர்கள் சொல்கின்றனர்.

வர்ண சாதியை இனம் என்கிற racism ஆக்கி அதை பெரும் அரசியல் இயக்கமாக்கியுள்ளனர் - அதன் மூலம் இந்துயிசம் என்பதை நீக்கிவிட முயற்சிப்பதாக இவர்கள் விமர்சிக்கின்றனர். கீழ்கண்ட கேள்விகளை பெரும் விவாதப் பொருளாக இந்த ஆசிரியர்களும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

Is caste a necessary condition for Hinduism?

to be a Hindu can one avoid caste ?

Does conforming to caste automatically make one a Hindu?

Was caste present in ancient Vedic society?

Why did caste enter Indian society?

Varna Jati compatible with modern democracy and capitalism?

Is caste only abusive, or only positive or does it have a combination of good and bad qualities?

How grave is caste oppression today?

How western societies managed to resolve their massive class and wealth disparities?

Who are the Dalit activities working in the west? Who supports them?

போன்ற ஏராள கேள்விகளை முன்வைத்து இப்புத்தகம் தனது உரையாடலை நகர்த்திச் செல்கிறது. இவர்கள் இந்திய சமூக வரலாற்று கட்டங்கள் என 7 யை குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்ப வேதகாலம், பின் வேத இதிகாச காலம், தர்மசாஸ்திரங்கள், இஸ்லாமியர் காலம், அய்ரோப்பியர் காலனி ஆட்சி, விடுதலைக்கு பின்னரான காலம், உலகமய சூழல் என்கிற 7 கட்டம் பற்றி விளக்கியுள்ளனர்.

ஆரம்ப வேத காலம் - varna, no hierarchy , not birth based, no endogamy, no economic competition

இதிகாச காலம்- fluid varnas/ Jatis, no hierarchy, sometimes birth based, no endogamy, no economic competition

தர்மசாஸ்திர காலம்- Formalised Jatis, birth based , some endogamy , no rigid hierarchy, no economic competition

முஸ்லிம் காலம்- degenerated Jatis, rigid hierarchy, birth based, rigid endogamy, no economic competition

காலனி ஆட்சி- caste , rigid hierarchy, officially birth based, rigid endogamy, competing economic interests

விடுதலைக்கு பின்னர்- caste Vote Bank, hierarchy, endogamy, officially birth based, quotas reservations

உலகமய சூழல்- caste as race, hierarchy, communal hostility, free market, endogamy

தீண்டாமை பற்றி பேசும்போது ஆரம்பத்தில் இல்லை, தர்மசாஸ்திர காலத்திக் தொடங்கி இஸ்லாம் காலனி காலத்தில் மிக அதிகமாகி, விடுதலைக்கு பின்னர் சட்டப்படி குற்றமாகியுள்ளது என  சொல்லியுள்ளனர்.

  மேலும் வாய்ப்புள்ளபோது பார்க்கலாம்

No comments:

Post a Comment