sep 16, 2023
மேகநாத்
தேசாய்- கீதை ஆய்வு
Who wrote Bhagavad Gita என்கிற
மேகநாத் தேசாய் ஆய்வு நூல் 190 பக்கங்கள் கொண்ட சிறிய நூல்தான். ஆனால் அடர்த்தி அதிகம்.
மார்க்சியர் நாத்திகர் என்பதால் அச்சிந்தனை அளவுகோலில் கீதாவின் ஸ்லோக பாடல்களை அவர்
அளந்துள்ளார்.
கீதா குறித்து ஆதரவான மற்றும் கடும் விமர்சனம் கொண்ட ஏராள புத்தகங்கள்
வந்துள்ளன. இங்கு தேசாய் கீதாவை மூன்று வெவ்வேறு காலத் தேவைக்கேற்ப மூன்று பேர் எழுதி
, அது இன்றைய தோற்றத்தைப் பெற்றிருக்கலாம் என்கிற டாக்டர் காயிர் கருத்தை ஏற்கிறார்.
தெலாங் இதை ஏற்கவில்லை. பகவத்
கீதையை முதலில் ஆங்கிலத்தில் கொணர்ந்த முதல் இந்தியர் தெலாங்தான். கீதாவின் பாடல்களில்
பல முரண்கள் இருப்பதை தேசாய் கொணர்ந்து காட்டுகிறார். நிர்வாணா என்பது பிராமண கருத்தாக்கமல்ல,
அது புத்த தாக்கத்திலிருந்து வந்தது
டாக்டர் காயிர் ஆய்வில் கீதாவின்
முதல் 6 அத்தியாயத்தில் பெரும்பான்மை பாடல்கள் முன்பே 600 BCE - சுமார் 126 பாடல்கள்
எழுதப்பட்டிருக்கலாம். புத்தத்திற்கு முந்திய உபநிடத கருத்துக்கள் ஈர்ப்பில் இவை நடந்திருக்கலாம்.
இரண்டாவது கர்மா சுட்டப்பட்ட காலம்.
இந்த ஆசிரியர் 119 பாடல்களை எழுதியிருக்கலாம் . அத் 8, 13, 14, 15, 17 இவரது பாடல்களாக
இருக்கலாம்.
மூன்றாவது ஆசிரியர் அனைத்தையும்
தன் பங்கிற்கானதைச் சேர்த்து இறுதிபடுத்தியவராக இருக்கலாம். அவர் அத் 7, 9-16ல் சில
பாடல்கள் எழுதி இன்று காணப்படும் 700 பாடல்களாக அதை உருமாற்றியிருக்கக் கூடும். இவர்தான்
பக்தி அம்சத்தை சேர்த்து இந்த பிரதியை பரவலாக்க முயற்சித்தவர் என்பது காயிர் ஆய்வு.
மேலும் காயிர் ஆய்வில் அன்று கிருஷ்ணா, நாராயணன் கோபாலன் என்ற இணைப்பு பெயர்களை பெறவில்லை
என்பதும் சொல்லப்படுகிறது.
காயிரின் ஆய்வில் மிக முக்கிய
அம்சம் ‘தர்மா’ என்கிற பதம் முதல் ஆசிரியரால்
பயன்படுத்தப்படவில்லை. இரண்டாவது ஆசிரியர் மூன்று பாடல்களில் மட்டுமே அப்பதத்தை
18.31, 18.32, 18.34 ல் பயன்படுத்தியுள்ளார். புகழ் வாய்ந்த yada yada hi dharmasva என்கிற 4 வது அத்தியாய
7 ஆம் பாடலை மூன்றாவது ஆசிரியர் எழுதியிருக்கலாம். அவர் தான் தர்மா என்கிற பதத்தை
24 முறை 18 பாடல்களில் எடுத்தாண்டுள்ளார்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி
பாரத
அப்யுத்தானமதர்ஸ்ய ததாத்மானம்
ஸ்ருஜாம்யஹம்
எனச் செல்லும் இப்பாடலுக்கு அறம்
அழிந்து மறம் மேலெழும்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக்கொள்கிறேன் என கிருஷ்ணன்
அர்ஜூனனிடம் ஞானகர்மம் போதிப்பதாக பொருள் சொல்லப்படுகிறது. திருப்பராய்த்துறை ஶ்ரீமத் பகவத் கீதை வெளியீட்டில்
பக் 240 ல் இதைக் காணலாம்.
புத்த சிந்தனைகள் பரவிய காலத்தவராக
இரண்டாவது ஆசிரியர் இருந்திருக்கவேண்டும் என தேசாய் ஊகிக்கிறார். காயிர் Trikala
Gita படி மூன்றாவது ஆசிரியர்தான் இன்று காணப்படும் பாடல்களில் 455 அளவில் தந்தவர் என
முடிவிற்கு வருகிறார்.
தெலாங் multiple authorship என்பதை
ஏற்கவில்லை. கோசாம்பியின் மேற்கோள் ஒன்றை தேசாய் காட்டுகிறார்
When Guptas arrived on the
scene, they fostered the return of political and religious power into the hands
of the Brahmans class, and this allowed for the revival of Brahminic religious
ideas and the establishment of what we now call Hinduism
அத் 2.42- 2.46 பாடல்களில் ஒருவகை
வேத மறுப்பு சிந்தனை இடம் பெற்றதாக வியாக்கியானம் செய்கிறார் தேசாய். இங்கு தேசாய்
எழுதியிருப்பது
The successive verses 2.47,
2.48 seem to be connected by the theme of karma. But then 2.49 the direction
changes, Krishna tells Arjunan that Karma is inferior to buddhi. 2.52 is having
direct attack on Shruti. It says if you have detachment given by yoga, you don’t
need the Shruti.
எனவே மூன்று கீதைகளின் கலவையாக
அதாவது கர்ம யோக வேத கீதா, ஞான யோக சாங்க்ய கீதா, பக்தி யோக கீதா என்பதாக இன்று
நமக்கு தரப்பட்டுள்ள பாடல்கள் இருக்கின்றன. தேசாய் வருகிற இடம்
Theses three separate Gita
which once may have been separate expositions of doctrine for students but put
together by the third author to make the Bhagavad Gita what it is today.
Original Gita வில் 209 பாடல்கள் இருந்ததாக டச்சு பேரா குயிக்கென் சொல்கிறார்.
தனது ஆய்வின் நோக்கம் என தேசாய் சொல்வது
A revered text which argues
against the logic of equality of respect deserves to be examined carefully. The
Gita as a central text of Indian culture needs to be examined in terms of its
message for the independent Republic of India . Is it a suitable
text for modern day India என்கிற கேள்விக்குமான ஆய்வாக இதை தேசாய் நகர்த்தி
சென்றுள்ளார்.
ஒருவர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
வாய்ப்புள்ளவர் படித்துப் பார்க்கலாம்
Comments
Post a Comment