இர்பான்
ஹபீப் சோசலிசம்
மார்க்சிய வரலாற்று அறிஞர் இர்பான்
ஹபீப் எடிட் செய்த புத்தகம் on Socialism. 2009ல் அலிகார் வரலாற்றாய்வாளர் சொசைட்டி
சார்பில் துலிகா கொணர்ந்த புத்தகம். 2018 வரை 5 பதிப்புகளைக் கண்டது. பின்னர் புதிய
பதிப்புகள் வந்தது பற்றி எனக்கு தெரியவில்லை.
மார்க்ஸ் முதலாளித்து சமுதாயத்தின்
போக்குகள் அதன் உபரி சுரண்டல் குறித்து தான் தன் வாழ்நாளை செலவிட்டார். மார்க்ஸ் மற்றும்
எங்கெல்ஸ் மூலவர்கள் என்ற வகையில் ஆங்காங்கே
அவர்கள் விழைந்த, ஆய்வில் வந்தடைந்த சோசலிச சமுதாயம் குறித்து ஆங்காங்கே தொட்டுச் சென்றனர்.
தோழர் இர்பான் ஹபீப் அவர்களின் எழுத்துக்களில் கிடைத்தவற்றை extracts என்ற வகையில்
இந்நூலில் எடுத்து தரும் உழைப்பை செய்துள்ளார்.
இந்நூலில் 6 அத்தியாயங்களை அவர்
அடுக்கியுள்ளார். மார்க்ஸ் எங்கெல்ஸ் குறிப்பிகள் முதல் மூன்று அத்தியாயங்களில் வருகின்றன.
மூலவர்களைப்போலவே லெனின் மிக முக்கிய கோட்பாட்டளாராகவும், 1917 அக்டோபர் புரட்சி மூலம் ருஷ்யாவில் அவர்கள்
சரியெனக் கருதிய சோசலிச கட்டுமான வேலைக்கான கால்கோள் ஊன்றியவராகவும் கருதப்படுகிறார். அவர் குறிப்புகளிலிருந்து தேர்வு செய்து நான்காம்
அத்தியாயத்தை இர்பான் தந்துள்ளார்.
லெனின் மறைவிற்கு பின்னர் ஓரளவு
கோட்பாட்டாளராகவும், சோசலிச கட்டுமானம் என்பதை , தான் சித்தரித்த மார்க்சிய லெனினிய
வகையில் இழுத்துச் சென்றவராகவும் பார்க்கப்படுகிற ஸ்டாலின் குறிப்புகள் 5 ஆம் அத்தியாயத்தில்
இடம் பெற்றுள்ளன.
சீனாவில் சோசலிச கட்டுமான சோதனைக்கு
அடிக்கல் இட்டு அதை ஓரளவிற்கு தனது மார்க்சிய
லெனினிய புரிதலில் சீனக்கட்டுமானமாக வெளிப்படுத்திய
மாவோ எழுத்துக்களிலிருந்து எடுக்கப்பட்டவை 6வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.
எடிட்டர் குறிப்புகள் என்கிற வகையில்
இர்பான், இறுதியில் The Marxian Theory of Socialism and the Experience of
socialist Societies என்பதை எழுதியுள்ளார்.
முதல் பகுதி மார்க்ஸின் கம்யூனிஸ்ட்
அறிக்கை மற்றும் மூலதன முதல் பாகத்திலிருந்தும், எங்கெல்சின் 1847 principles of
communism என்பதிலிருந்தும் தரப்பட்டுள்ளது.
இதில் இன்றும் கவனிக்கப்படவேண்டிய
சில வரிகள் (நான் உணர்வதை எடுத்துக்கொண்டுள்ளேன்.)
The first step in the
revolution by the working class is to raise the proletariat to the position of
ruling class, to win the battle of democracy
Combination of agriculture
with manufacturing industries, gradual abolition of the distinction between
town and country by a more equitable distribution of the population over the
country.
Free education for all
children- abolition of children’s factory labour- combination of education with
industrial production.
Education will enable young
people quickly to go through the whole system of production, it will enable
them to pass through from one branch to another according to the needs of
society or their inclinations
மார்க்சிய புரிதலில் அவசிய உழைப்பு
நேரம் மற்றும் உபரி உழைப்பு நேரம் என்பது அடிப்படையான உரையாடல். முதலாளித்துவ சமூகத்திலிருந்து
பிறக்கும் சோசலிச சமூகத்தின் ஆரம்பம் , அதன் முந்திய சமூக சாயல்களை அறவே நீக்கிய ஒன்றாக
இருக்காது என்பதும் அங்கு புரிதலாக இருக்கும். இந்த இடத்தில் மார்க்ஸ், புதிய சமுதாயத்தில்
உழைப்பு நேரம் necessary labour time என்கிற கோட்பாட்டு அடிப்படை இருந்தாலும் அது சற்று
நீட்டிய நேரமாகத்தான் அமையும் என விளக்கியிருப்பார்.
The notion of means of
subsistence would considerably expand, and the labourer would lay claim to an
altogether different standard of life.
..because a part of what is now surplus labour, would then count as necessary
labour, I mean the labour of forming fund for reserve and accumulation என மார்க்ஸ்
எழுதியதை இர்பான் மூலதனம் வால்யூம் 1 டோனா தார் எடிட் செய்ததிலிருந்து பக் 539-540
தந்திருப்பார்.
இன்னொரு சுவையான செய்தி எங்கெல்ஸ்
கேள்வி பதில் கம்யூனிச கோட்பாட்டில் கிடைக்கிறது. அது கேள்வி 21 what influence
will the communist order society have upon family.
எங்கெல்ஸ் பதில் விரிவாக செல்லும்
. அதில் பொருத்தமான வரிகள்
It will make the relation
between the sexes a purely private relation which concerns only the persons
involved, and in which society has no call to interfere-
..destroying twin foundation
hither to existing the marriage and the dependence through private property of
the wife upon husband and children upon parents. ( இதை common rights over women என சொல்வதாக கொச்சை படுத்துவர்களை எங்கெல்ஸ் விமர்சிப்பார்). Prostitution is
rooted in private property, communist organisation puts an end to it என எங்கெல்ஸ்
எழுதியிருப்பார்.
⁃ கூடுதல்
அறிமுகத்தை வாய்ப்புள்ளபோது பார்க்கலாம்
Comments
Post a Comment