https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 10, 2023

இந்துயிசம் ஏ எல் பாஷம்

 

sep 15, 2023

                     ஏ எல் பாஷம் - இந்துயிசம்

புகழ்வாய்ந்த ஏ எல் பாஷம் அவர்கள் 1984-85ல் வட அமெரிக்காவில் ஆற்றிய 5 உரைகள் அவர் மறைவையடுத்து The Origins and Development of Classical Hinduism என்கிற புத்தகமாக 1989ல் கொணரப்பட்டது.

டெல்லி மோதிலால் பதிப்பகத்தார் 2016ல் இங்கு மீண்டும் கொணர்ந்தனர். ரூ 400 விலையில் கிடைக்கும் புத்தகமது. இந்தியா குறித்த தேர்ந்த ஆய்வு மனப்பான்மை கொண்டவர் Basham என்பதால் , இந்த புத்தகம் அமெரிக்க வாசகர்களிடம் சென்றது. இந்தியா விவாத வெளியில் இதை எவரும் குறிப்பிடாமல் இருப்பதால், இங்கு அதன் reach குறித்து அறியமுடியவில்லை.

பாஷம்  அவர்களின் 5 உரைகளாவன

The Rig Veda and the beginnings of philosophy

The development of sacrificial religion in the later Vedic literature

The origins of the doctrine of transmigration

The growth of Mysticism and the Upanishads

The rise of Thesim and the composition of the Bhagavad Gita

பாஷம் அவர்களின் இறுதி ஆக்கமாக இது பார்க்கப்படுகிறது.  பாஷம் மே 24, 1914ல் இங்கிலாந்தில் பிறந்தவர். அவர் தந்தை எட்வர்ட் ஆர்தர் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சிம்லா பகுதியில் முதல் உலகப்போர் காலத்தில் பணியாற்றியவர். அம்மா மரியா பத்திரிகையாளர், இலக்கிய கர்த்தா. பாஷம்  தன் 7 வயதில் பியானோ கற்றாராம். 16 வயதிற்குள் ஏராள composition அவரால் முடிந்ததாம்.

பாஷம் என்றாலே the wonder that was India நினைவிற்கு வரும். ஆஜீவக வரலாறு என்பதுடன் கோல்டன் பரோ என்கிற நாவல் கூட எழுதியவர். அவர் இந்தியா, ஆசிய வரலாறு நாகரிகம் பற்றிய தீவிர ஆய்வாளராக தன் வாழ்நாளை முடித்துக்கொண்டார். 1985ல் கல்கத்தா ஏசியாடிக் சொசட்டியின் சுவாமி விவேகானந்தா கீழைத்தேய ஆய்வு பேராசிரியராகவும் இருந்தார். கல்கத்தாவில் ஜனவரி 27, 1986ல் அவர் மறைந்தார்.

அவர் எழுதியதைவிட, அவர் தன் மாணவர்களிடம் உரையாடியபோது தெறித்தவை ஏராளம் என அவர் பற்றி எழுதும் கென்னத் சொல்கிறார். இந்திய ஆய்வு என்கிற தளத்தில் புதிய புதிய பயணங்களை, புதிய புதிய தரவுகளுடன் அவர் செய்துகொண்டே இருந்தாராம்.

இந்த 5 உரைகளை அவரின் மேலான ஆய்வு அனுபவத்தின் சாரம் என்றே கென்னத் குறிப்பிடுகிறார். இனி பாஷம்  உரைகள் உணர்த்தும் சில செய்திகள்..

அவரது முதல் உரையிலிருந்து…

ஹரப்பா தொல்பொருள் ஆய்வின் படி சிந்து வெளி நாகரிகம் இந்த துணைகண்ட மண் சார்ந்த ஒன்றே. வெளி படையெடுப்பாளர் உருவாக்கியதல்ல. மொகஞ்சதாரோ ஹரப்பா என்கிற இரு பெரும் நகரங்களின் கலாச்சாரம் தொடர்புகொண்டதாக ஒத்ததாக இருந்தது.

கிமு 1700களில் மேற்கிலிருந்து ஆரியர் வருகை போரால் மொகஞ்சதாரோ அழிவுற்றிருக்கலாம். நகரம் கைவிடப்பட்ட 2000 ஆண்டுகள் கழித்து புத்த ஸ்தூபி ஒன்றை சிந்தி விவசாயிகள் எழுப்பினர். இதுவும் கைவிடப்பட்டு, அப்பகுதி மக்கள் இஸ்லாம் தழுவினர்.

ஹரப்பா என்னவானது- அதன் செங்கற்கள் எப்படி உருவப்பட்டன- அதன் மீது ரயில் பாதைகள் வந்தன . .. அந்நகரம் அமைந்த தோற்றம், அங்கு கிடைத்த பொருட்களை  வைத்து பார்க்கும்போது சிவ வழிபாட்டின் முன் அறிகுறிகள் தெரிகின்றனஎன பலர் சொல்கின்றனர். ஆனால் அப்படி சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்றே பாஷம் நினைத்தார். In fact the evidence for any continuity between this prehistoric god and Siva is rather weak என்கிறார். நிச்சயமாக இது கோயில் தான் எனவும் எந்த கட்டிடத்தையும் அறுதியிட்டு கூறமுடியவில்லை என்கிறார். இங்கு அவர் ஊகிப்பது

It is possible to be a very devout Hindu without ever going near the temple, which is late development in Hinduism and is still not one of its essential features எனவும் சொல்கிறார்.

ரிக்வேதம் பரவலாக்கப்பட்டதை அவர் இப்படி எழுதுகிறார்.

It was only with great difficulty that a few Brahmans in Calcutta were persuaded in the 1780s to divulge the oldest of these texts Rig Veda, once the text was made public other Brahmans from other parts of India followed them. அதிலும் காஷ்மீர் பிரதிக்கும் தமிழ் பகுதி பிரதிக்குமே நிறைய வேறுபாடுகள் இருந்ததாம்.

3000 ஆண்டுகளாக மனனம் மூலம் கைமாற்றி தந்த ஒன்று மிக accuracy ஆக வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. பல பிராமணர் அதன் vaguest notions because it’s language is archaic என்கிற குழப்பத்துடன் மனனம் செய்து கைமாற்றி தந்திருக்கக்கூடும்.

ஆரியர் வருகை என்பதும் கூட concerted invasion என்பதாக இல்லாமல், அடுத்தடுத்து வந்த கூட்டங்கள் என்பதாக தெரிகிறது. அவர்கள் பஞ்சாப் பகுதிகளில் இந்த வேத பாடல்களை இயற்றியிருக்கலாம். எல்லா அறிஞர்களும் சொல்வது போல் ரிக் 10 வது மண்டலம்  சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் அதில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பாஷமும் சொல்கிறார். இந்திரன் குறித்து 250 பாடல்களும், அக்னி குறித்து 200 பாடல்களும் இருக்கின்றனவாம்.  அரசன் சுதாசின் வெற்றிகளைப் பாடும் பாடல்கள் ஏராளம்.

ஆரியர்கள் நாடோடிகள் nomadic என்பதால் அவர்களின் பாடல்களில் நகர வாசம் ஏதும் வரவில்லை என்கிறார் பாஷம் . The hymns are addressed to pantheon Gods with no very definite hierarchy. Max Muller called this Henotheism.

The hymns of the Rgveda were chiefly composed for chanting at soma sacrifices..and gods and men mixed on almost equal terms . Relations with gods were friendly.

பிரம்மன் என்கிற பதம் 10 வது மண்டலம் பாடலில் வருவதாக பாஷம் சொல்கிறார். அடுத்து இரண்டு முக்கிய அம்சங்களை பாஷம்  தருகிறார். இறந்தவர்களில் வசதியானவர்க்கு மட்டுமே எரிக்கப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும், சிரார்த்தம் என்கிற பழக்கம் இருந்ததாக தெரியவில்லை என்றும் சொல்கிறார்.

No comments:

Post a Comment