https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, October 11, 2020

Richest List 2020

 

இந்திய பெருமுதலாளிகள் – பெரும் சொத்தாதிபதிகள்

இந்தியாவின் பெரும்பணக்காரர்களின் மொத்த சொத்து பாகிஸ்தான் பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பூடான் ஆகிய 4 நாடுகளின் GDP விட அதிகம். இந்தியாவின் ஜி டி பியில் மூன்றில் ஒரு பங்கை இவர்கள் சொத்தாக கொண்டுள்ளனர்.



இந்தியாவில் 827 பேரிடம் ரூ 1000 கோடிக்கு மேல் சொத்துள்ளது. இவர்களின் சராசரி வெல்த் 7300 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. சராசரி வயது 63. இவர்களில் பெண்கள் 40 பேர் மட்டுமே. ஓரிடத்தில் வாழ்நிலை இல்லாது 110 நகரங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத் தொழில் முதலாளிகள்  90 சதமாக உள்ளனர்

 இந்த லாக்டவுன் காலத்தில் முகேஷ் அம்பானி அவர்களால் மணிக்கு 90 கோடி மட்டுமே சம்பாதிக்க முடிந்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்னர் 2,77,700 கோடி சொத்திலிருந்து தற்போது முகேஷ் 6,58,400 கோடிக்குத்தான் உயர்ந்துள்ளார்.. இப்படியே போனால் அவர் லட்சம் கோடியை எட்டுவது எந்நாளோ?

 இரு புகழ்வாய்ந்த பெரும் பெண் சொத்தாதிபதிகள் ஸ்மிதா கிரிஸ்னா 32400 கோடி - அடிக்கடி  டி வி விவாதங்களில் வரக்கூடிய கிரன் மஜூம்தார் ஷா 31600 கோடி பெற்று பெண்களின் சொத்து கெளரவத்தை காத்துவிட்டனர்.

பம்பாயில் 217 பேரும், டெல்லியில் 128, பெங்களூரில் 67 பேரும் உள்ளனர். கல்கத்தாவை விட சென்னையில் பெரும் முதலாளிகள் அதிகமாக இருக்கின்றனர் என்பது தமிழர்களுக்கு ஆறுதலான செய்தி. தமிழ்நாட்டில் 65 பேர் என்றால் குஜராத்தில் 60, தெலங்கானாவில் 54 பேர், மே. 32, கேரளா 16, ஹரியானா 16, .பியில் 9, பஞ்சாபில் 8, ராஜஸ்தானில் 9 என இவர்கள் இருப்பிடத் தகவல் செல்கிறது. நல்லவேளை குஜராத்தைவிட தமிழ்நாட்டில் ஆயிரம்கோடி அதிபர்கள் சற்று கூடுதலாக இருக்கின்றனர். தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.

 

 முதல் 10 சொத்தாதிபதிகள் முதலாளிகள் பட்டியல்

1. முகேஷ் அம்பானி  6,58,400 கோடி

2. ஹிந்துஜா சகோ   1,43, 700 கோடி

3. சிவ் நாடார்        1,41,700 கோடி

4. கெளதம் அதானி   1,40, 200 கோடி

5. அசீம் பிரேம்ஜி     1,14, 400 கோடி

6. சரஸ் பூனாவாலா  94,300 கோடி

7. ராதாகிருஷ்ண தமனி 87,200 கோடி

8. உதய் கோடக்         87,000 கோடி

9. திலிப் சங்க்வி        84,000 கோடி

10 சைரச் மிஸ்ட்ரி      76000 கோடி

10. ஷாபூர் மிஸ்ட்ரி     76000 கோடி

எல் அய் சி ஏஜெண்ட் ஆக இருந்து பில்லியனர் கிளப்பிற்கு வந்தவர் மிட்டல். இவர் இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தியாளர். 7700 கோடி சொத்துடன் பட்டியலில் 164வது இடத்தில் இருக்கிறார். நிதின் காமத் என்பவர் ஜெரொதா எனும் ஸ்டாக் கம்பெனி புரோக்கர். 16900 கோடி சொத்துடன்  அவர்முதல் நூறில் இடம் பிடித்துள்ளார்.

இந்த 827 பட்டியலில் தமிழ் முதலாளிக்கு 54வது இடமே  கிடைத்துள்ளது. மிக முக்கிய தமிழரான கலாநிதி மாறன் அவர்கள் 19000 கோடி சொத்துடன் இந்த இடத்தில் இருக்கிறார். முதல் 50 பட்டியலில் கூட தமிழ் முதலாளிகள் இடம்பெற முடியவில்லையே என்கிற போராட்டம் தமிழர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது.

ஜாய் ஆலுகாஸ் தங்க நகை முதலாளி 99வது இடத்தில் இருந்து கேரளாவின் (திருச்சூர்) மதிப்பை உயர்த்தியுள்ளார்.

நேரடியாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து முதல் நூறில் ஒருவர் கூட இடம் பெறாதது நமக்கெல்லாம் ஆறுதலைத் தரலாம்.

 

தமிழ்நாட்டில் இப்போது 5  ( 2019 கணக்கில்) பில்லியனர்கள் மட்டுமே உள்ளனர்.  7 ½ கோடி தமிழர்களில் 5 பேர் மட்டும்தானா என்பது பெரும் கேள்வியாகவே இருக்கிறது.

திருவாளர்கள்

கலாநிதி மாறன் 19100 கோடி

 Zoho  வேம்பு ஸ்ரீதர் 9900 கோடி

போதிஸ்  சடயாண்டி  7100 கோடி

ஹஸ்டன் சந்திரமோகன் 7000 கோடி

 cavin care ரங்கநாதன் 5300 கோடி

அடுத்த 5 நிலையில்

 

கிருஷ்ணமூர்த்தி 4500 கோடி

சீதா வெங்கட்ரமணி 4500 கோடி

ஜி எஸ் கே வேலு   3100 கோடி

டி டி கே ரகுநாதன் 3100 கோடி என முதல் 10 பேர் தமிழ்நாடு பெரும் சொத்தாதிபதிகள் பட்டியல் செல்கிறது. இவர்கள் 5 பேராவது அடுத்த ஆண்டில் பில்லியன் கிளப்பில் சேர்ந்து தமிழகத்திற்கு இரு இலக்க எண்ணிக்கை கிட்ட செய்யவேண்டும்.

தமிழகத்தில்  ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துள்ள சில முக்கியஸ்தர்கள் பட்டியல்

 

 பரிதா ஷூஸ் 1800 கோடி

கே சீனிவாசன் 1500 கோடி

அப்பல்லோ ரெட்டி 1400 கோடி

எஸ் எஸ் எம் கந்தசாமி 1300 கோடி

என் ஜெயமுருகன் 1300 கோடி,

லலிதா ஜீவெல்லரி கிரன் குமார் 2700 கோடி,

அனந்த பத்மநாபன் கோவிந்த ராஜூலு  ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ் 2300 கோடி

அதே போல் அவரது குடும்பம் கோவிந்தராஜூலு ராதாகிருஷ்ணன் 2300 கோடி

ஆட்டோமொபைல் லஷ்மி நாராயணன் 2300 கோடி

அதே துறையில் மல்லிகா 2300 கோடி

சங்கர் சுந்தரம் 2300 கோடி

 ஸ்ரீராம் முரளி 2300 கோடி

 கீதா முத்தையா செட்டிநாடு சிமெண்ட்ஸ் 1700 கோடி

 சுகுணா புட்ஸ் செளந்தரராஜன் 1300 கோடி

 முத்தையா செட்டிநாடு சிமெண்ட்ஸ் 1500 கோடி

 ராம்ராஜ் காட்டன் நாகராஜன் 1200 கோடி

 கே பி ஆர் மில் சேர்ந்த

 ராமசாமி 1200 கோடி

 சிகாமணி 1200 கோடி

 நடராஜ் 1200 கோடி

 ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக் 1100 கோடி

 இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் 1100 கோடி

சரவணா தங்க மாளிகை சிவ அருள் 1100 கோடி

பன்னாரி சுகர்ஸ் பாலசுப்பிரமணியன் 1100 கோடி

 அப்பல்லோ பிரிதி 1000 கோடி

அச்வினி பிஷரிஸ் செல்வம் 1000 கோடி

 சி ஆர் பம்ப்ஸ் சேர்ந்த செல்வராஜ் 1000 கோடி

செளந்தரராஜன் 1000 கோடி

 ராசி விதைகள் செந்தில் 1000 கோடி

 இப்படியாக 1000கோடி அதிபர்கள் 55 பேர் பட்டியல் 2019 படி கிடைக்கிறது.

வாழ்க பெருமுதலாளித்துவ இந்தியா- வளர்க  முதலாளித்துவ தமிழகம்

 

ஆதாரம்:   Hurun Wealth List 2020 Press release dt 29th sep 2020

 

No comments:

Post a Comment