ஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்
2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL-ல் இணைந்த ஊழியர்கள், DOTயிலிருந்து ஓய்வு பெற்றதாகக் கருதப்பட்டு அரசு ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். BSNL-ல் இணைந்த ஊழியர்கள் IDA ஊதியவிகிதம் பெற்று DOT – BSNL இரண்டிலும் ஆற்றிய சேவையையும் ஒன்றாகக் கணக்கிட்டு ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய விதி 37-ஏ அனுமதிக்கிறது. BSNL-ல் இணைந்த ஊழியர்கள் ஓய்வு பெற்றபின், தங்கள் ஓய்வூதியத்தில் கிராக்கிப்படியை IDA விகிதத்தில் பெறுகிறார்கள்.
விதி 37-ஏ துணைவிதி 8-ல் எதிர்காலத்தில் BSNL-ல் ஓய்வுபெற இருப்பவர்களுக்கும் அப்போதைய மத்தியஅரசு ஊழியர்கள்
பார்முலா அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்பட உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நமது போராட்டம் காரணமாகத் திருத்தப்பட்ட விதி
37-A வில் துணைவிதி 21 ன் மிக வித்தியாசமான சிறப்புத் தன்மை BSNL ஓய்வூதியர்களுக்கு இந்திய அரசாங்கமே ஓய்வூதியத்தை வழங்கும்
என உறுதி செய்யப்பட்டிருப்பதுதான். இந்தச்
சிறப்பு அம்சம் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகே 2014-ல் MTNL ஊழியர்களுக்கும்,
ஓய்வூதியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
BSNL-ல் இணைந்த ஊழியர்கள் இடைப்பட்ட இந்தக் காலத்தில் மூன்று முறை
ஊதிய மாற்றம் கண்டிருக்கிறோம். அக்டோபர்
2000 -ல் CDA லிருந்து
IDA விற்கு; ஜனவரி 2007ல் IDA ஊதிய மாற்றம்; பின்னர்
10-06-2013ல் 78.2 வாக திருத்தி அமைக்கப்பட்ட மாற்றம். BSNL-ல் இணைந்த
ஊழியர்கள் (5வது ஊதியக்குழுவிலிருந்து வெளியேறி 1-10-2000 முதல் First PRC IDA வில் நுழைதல்) அக்டோபர் 2000ல் IDA ஊதிய விகிதத்தில் பொருத்தப்பட்டபோது அதற்கு முதல்நாள்
30-09-2000வரை CDA விகிதத்தில்
DOT லிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு
ஓய்வூதியமாற்றம் தேவைப்படவில்லை - தரப்படவும்
இல்லை. இங்கு நாகரா தீர்ப்பின் சாரம் பொருத்தமானதாக கருதப்படவும் இல்லை. எவரும் கோரிக்கை எழுப்பவும் இல்லை.
அடுத்த இரண்டு IDA ஊதிய மாற்றத்தின்போதும்
ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் அவசியமாகி விட்டது. ஏன் என்றால் அவர்கள் ஒரேவகைப்பட்ட IDA பென்ஷனர்கள் என்கிற கிளாஸ் ஆகிவிடுகின்றனர். (1-10-2000
உள்நுழைந்த ஊழியர்கள் அனைவரும் ஓய்வு பெறும்போது
IDA Pensioners என்கிற ஒரே Class ஆக்கப்படுகின்றனர்.
இவர்களை cutoff Date வகைப்பட்டு
discriminate செய்யமுடியாது என்பதால் தான் தொடர்ந்த 2007 மற்றும் 78.2 ஊழியர்கள் பெற்றபோது காலதாமதம் ஆனாலும் Past Pensioners that is Existing Pensioners on that date ஓய்வூதிய மாற்றப் பலனைப் பெற்றனர்.)
இங்கு நாகரா தீர்ப்பின்
சாரம் பொருந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2007-க்கு முன் இருந்த ஊழியர்கள் மற்றும்
10-06-2013க்கு முன் இருந்த ஊழியர்கள் என அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஊழியர் சங்கங்கள்
மற்றும் ஓய்வூதியர்களின் அமைப்புகளின் தொடர் போராட்டங்களினால், ஓய்வூதிய மாற்றம் சாத்தியமாயிற்று.
இந்த ஓய்வூதிய மாற்றங்களும்
அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே அமுலாகியது. அதன்படியே DOT-யும் ஓய்வூதிய மாற்றத்திற்கான இரண்டு உத்தரவுகளை வெளியிட்டது. 2007-க்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களுக்காக மார்ச்
2011-லும், 78.2 மாற்றத்திற்காக ஜூலை 2016-லும்
உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
ஓய்வூதிய மாற்றத்திற்காக அமைச்சரவைக் குறிப்புத் தயாரிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய மாற்றம் என்பது பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய
மாற்றத்துடன் இணைந்தே இருக்கிறது என DOT தெரிவித்தது.
பென்ஷன் மாற்றம் என்பதை DOT தனது காபினட் மெமோவில் கீழ்கண்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டி
நியாயப்படுத்தியது.
1. ஊதிய மாற்றம்
அதனைத் தொடர்ந்து நாகரா தீர்ப்பின் சாரம்
2. ஊதிய மாற்றம் வந்ததால் பென்ஷன் மாற்றம் தருவதில் சட்டப்படியான
அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக (legal or constitutional objection) ஏதுமில்லை
எனச் சட்ட அமைச்சகம் தரும் ஒப்புதல்
3. DOPPW
ஆறாவது ஊதியக்குழுவின் பென்ஷன் ஷரத்துக்கள் சிலவற்றைச் சேர்த்துக்
கொள்ள வழிகாட்டல். DPE-யே அரசாங்கப் பென்ஷன் வந்தவுடன் வழிகாட்டல் தரலாமே என்கிற
ஆலோசனை
4. ஒரு ஊழியர் ஓய்வு பெறும் நாளில் பெறுகின்ற ஊதியம்; மற்றும்
எதிர்காலத்தில் இவரது அந்தஸ்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் அவர் ஓய்வு பெறும் நாளில்
பெறக்கூடிய ஊதியம் -- இவற்றோடு இணைக்கப்பட்டிருக்கிறது பென்ஷன் (Pension is linked to pay drawn at the time of
retirement as well as pay drawn by employee of similar status in future after
retirement)
5. ஓய்வுபெற்ற
ஊழியரின் ஓய்வூதிய மாற்றம் என்பது தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தோடு
இணைக்கப்பட்டிருக்கிறது (Pension
revision of retired employee is linked to pay revision of existing employees ).
6. If the annual pension liability exceeds the fig of
60 % receipts of retired employee is linked to pay revision of exiting
employees.
2009-10ல் அரசாங்கம்
பெற்ற டிவிடெண்ட், கார்ப்பரேட்வரி, கலால் வரி ஆகியவை 7425 கோடி. இதில் 60 சதம்
4555 கோடி எனில் பென்ஷன் செலவு 2877 கோடிதான் என்றது DOT.
78.2 ஓய்வூதிய மாற்றத்தைப்
பொருத்தவரை 10-06-2013க்கு முன்பும் பின்பும் ஓய்வு பெற்ற BSNL ஊழியர்களிடையே ஓய்வூதிய நிர்ணய பார்முலாவில் இருந்த வித்தியாசம்
காரணமாக ஏற்பட்ட முரண்பாடு/பாரபட்ச சூழ்நிலையால் ஓய்வூதியம் மாற்ற முடிவு எடுக்க வேண்டியதாயிற்று
என அரசின் பத்திரிக்கைக் குறிப்பு விளக்கியது (இந்திய பிரஸ் பிரோ PIB செய்திக் குறிப்பு
தேதி 5-7-16)
மத்திய
ஊதியக்குழுக்களின் முடிவுகள் நமக்கு முழுமையாகப் பொருந்துமா என்ற கேள்விக்கு விளக்கம் தேவைப்படுகிறது. 6வது மற்றும்
7வது மத்திய ஊதியக்குழுக்களுக்கு முன்பும்
பின்புமான ஓய்வூதியதாரர்களுக்குத் தனித்தனியான நிர்வாக உத்தரவுகளை மத்திய ஓய்வூதியம்
மற்றும் ஓய்வூதியர் நலத்துறை (DOPPW) வெளியிட்டுள்ளது.
DOT–ம் அந்த உத்தரவுகளைப் பின்பற்றி
2006-க்கு பின்பும், 2016-க்கு பின்புமான ஓய்வூதியதாரர்களுக்குப் பணிக்கொடை
(DCRG) போன்ற சில அம்சங்களில் அப்படியே பொருந்தும் என நேரடியாக
ஒப்புதல் அளித்து உத்தரவு வெளியிட்டது.
6வது ஊதியக்குழுவினுடைய முதியோர்களுக்கான உயர்விகித ஓய்வூதியம்,
குறைந்தபட்ச / உச்சபட்ச ஓய்வூதியம் பற்றிய முடிவுகள் முந்தைய ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்ற ஓய்வூதியத்துறை உத்தரவுகள்
அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகே நமக்கான
மார்ச் 2011 உத்தரவில் இடம் பெற்றன. மத்திய
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டெஸ்க் D 27-03-2009 உத்தரவு 2006-க்குப் பிந்தைய
ஓய்வூதிதாரர்களுக்குப் பொருந்தும் என்பதற்காக வெளியிடப்பட்டது. 2006-க்கு முந்தையவர்களுக்கான பிரச்சனை எழவில்லை
என்பதையும் சுட்டிக்காட்டியது.
7வது ஊதியக்குழு முடிவுகள் நமக்குப் பொருந்துமா என்பது பற்றி
DOT யின்16-03-2017 தேதியிட்ட
நிர்வாக உத்தரவு சில தந்திரங்களைச் செய்துள்ளது. 2016-க்கு பிந்தைய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய
நலத்துறை உத்தரவு 6.1 பத்தியின் படியான பணிக்கொடை இருபது லட்சம் பொருந்தும் என அந்த
உத்தரவில் கூறியுள்ளது. ஆனால் பத்தி 6.2 ல்
விலைவாசி கிராக்கிப்படியோடு இணைத்துப் பணிக்கொடை உச்சவரம்பு என்பதை நமக்குப் பொருந்தும்
என உத்தரவிடவில்லை. 2007 IDA மற்றும்
2017 IDA வில் இருந்த குழப்பம் காரணமாக அதனைத் தவிர்த்துவிட்டது.
DOT யின் உத்தரவில் இன்னொரு தேவையில்லாத பத்தியும் உண்டு. 01-01-16 தேதியிலிருந்து ஓய்வூதிய பார்முலாவில் மாற்றம்
ஏதும் இல்லை. BSNL மற்றும் MTNL-ல் இணைந்த
ஊழியர்கள் தொடர்ந்து பழைய பார்முலாபடியே மாற்றமின்றி ஓய்வூதியம் பெறுவர் எனக் கூறியுள்ளது. அதாவது
இந்தப் பத்தி BSNL-ல் ஜனவரி 2016-க்குப் பிறகு ஓய்வுபெறும் ஊழியர்கள் குறைந்தபட்ச
மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்யும் விதி 37-
A துணைவிதி 8-க்கு எதிரானது.
ஜனவரி 2016 முதல்
அல்லது அதன்பிறகு ஓய்வுபெறும் BSNL ஓய்வூதியர்களுக்கு
20 லட்சம் பணிக்கொடை உச்சவரம்பு உத்தரவு பொருந்துவது போல, ஓய்வூதியப் பலன்களில் ஒன்றான
குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டதும் பொருந்த வேண்டும். இந்த ஒரு அம்சம் ஒப்புக்கொள்ளப்பட்டால் NE 6 வரை
உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ9000 ஆக கூடுதலாகப் பெற வாய்ப்பு ஏற்படும். ஆனால் துரதிருஷ்டவசமாக DOT–ன் 2017 மார்ச் 16 உத்தரவில் குறைந்தபட்ச / அதிகபட்ச ஓய்வூதியம்
பற்றிய DOPPW உத்தரவு
நமக்குப் பொருந்தும் எனக் கூறவில்லை. ( இதற்கான காரணம் ரூ 9000 என மாற்றினால் என்ன
IDA 2nd PRC or 3 rd PRC படியா என்கிற பிரச்னை உருவாகிறது)
7th CPC-யைப் பொறுத்தவரை கிராஜுடி போன்றவை
applicability என்பதில் வருகின்றன. அதிலேயே
கூட Index linked என்பது பொருத்தப்படவில்லை. மினிமம் - மாக்சிமம் பென்ஷன், Index linked போன்றவை
incorporate (முதன்மை உத்தரவோடு இணைத்து ஐக்கியப்படுத்தல்) செய்யப்பட வேண்டியவையாக இருக்கின்றன. 6th CPC அடுத்தும்
நேரிடையாக applicability (to the future
pensioners), ஊதிய மாற்றத்திற்குப் பின்னர் பென்ஷன் மாற்றத்தில் சில முக்கிய அம்சங்களில்
incorporation நடந்தேறின. 6வது ஊதியக்குழு
ஷரத்துக்கள் applicability எனும்போது 1-1-2006 முதல் என்றும் incorporate ஆகும்போது
1-1-2007 எனவும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இப்போதும் அதே பிரச்சனையை நாம் எதிர்கொள்கிறோம். நமது NE-6 வரை உள்ள அடிப்படை ஊழியர்கள் மினிமம் பென்ஷன்
ரூ 9000-க்கும் குறைந்து வாங்கிக் கொண்டிருப்பதை நம்மால் மாற்ற முடியவில்லை. ரூ9000
applicability (பொருந்தும்) எனச் சொல்லிவிட்டால்
1-1-2016 முதல் அவர்களுக்கு அதை உயர்த்தவேண்டும். ஆனால் 2007 IDA இருப்பதால் அதை அவர்கள் செய்ய மறுக்கின்றனர். ஊதிய மாற்றம் -பென்ஷன் மாற்றம் செய்யப்படும்போதுதான்
இதை அவர்கள் 1-1-2017 முதல் மாற்றச் சம்மதிப்பர். அதே போல் 20 லட்சம் கிராஜுடியை நாம்
1-1-16 முதல் பெற்றாலும் அதற்கான index linked
Enhancement to 25 %க்காகக் காத்து நிற்க வேண்டியுள்ளது.
விதி 37-A -ல் ஓய்வூதியம் மாற்றியமைத்தல் என்பதற்கு வழிவகை
எதுவும் சொல்லப்படவில்லை. இதற்கு முந்தைய ஓய்வூதிய மாற்றங்கள் அதிகாரிகளின் ஊதிய மாற்றத்தைச்
சார்ந்து பரிசீலிக்கப்பட்டன. IDA
ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது பற்றிய பொதுவான வழிகாட்டுநெறிகள்
ஏதும் இல்லை என்பதை DOT-யின் அமைச்சரவைக்
குறிப்பு வெளிப்படுத்துகிறது.
i) ஊதிய மாற்றத்திற்குப்
பிறகு ஓய்வூதிய மாற்றம் Ii) ஊதியமாற்றத்திற்கு முன்பே ஓய்வூதிய மாற்றம் iii) ஊதிய மாற்றம் இல்லாமலேயே ஓய்வூதிய மாற்றம்
என எவ்வாறு சிந்தித்தாலும் அவை நிச்சயம் ஒன்றுக்கொன்று
பரஸ்பர தாக்கத்தைக் கொண்டவையே ஆகும்.
பென்ஷன் மாற்றம்,
ஊதியமாற்றமின்றி
(Delinking
Pension from pay Revision)
பொதுத்துறைகளில்
– BSNL-ல் -- ஊதியமாற்றம் என்பது
இலாபப் பிரச்சனையுடன் கட்டிப் போடப்படுகிறது. ஆனால் பென்ஷனர்களுக்கு அரசாங்கமே பென்ஷன்
தரவேண்டும் என்கிற பொறுப்பு இருப்பதால் 7வது ஊதியமாற்றம்- பென்ஷன் மாற்றம் வந்த நிலையில்
BSNL ஓய்வூதியர்களுக்கும் பென்ஷன்
திருத்தம் என்கிற கோரிக்கை வலுப்பெறத் துவங்கியது. பொதுவாக அனைத்து பென்ஷன் சங்கங்களும் இக்கோரிக்கையின்பாற்
இணைந்துள்ளன. போராடியும் வருகின்றன. தொழிற்சங்கங்கள் இக்கோரிக்கைக்காக வேலைநிறுத்தமே
செய்துள்ளனர். அமைச்சர் மற்றும் DOT செயலர் இதைப் பாசிட்டிவ் ஆக பரிசீலிப்பதாகவும் செய்திகள்
வந்தன. இது தொடர்பாக DOT -- DOPPW கடிதப் பரிமாற்றங்களும் நடந்துள்ளதாக அறியமுடிகிறது.
பென்ஷன் மாற்றம், அதை ஊதிய மாற்றத்துடன் இணைக்க வேண்டியதில்லை
எனும்போது இதுவரை காப்பற்றப்பட்ட எதிர்காலத்தில் ஓய்வுபெற உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் இன்றைய
நாள் ஓய்வூதியர்களுக்குமிடையே உள்ள தொடர்பு (’Future pensioners- Existing Pensioners Link’) என்பது உடைக்கப்படும் நிலையை
உருவாக்கும் கோரிக்கையாக அது மாறுகிறது.
2017 துவங்கி ஓய்வுபெறுபவர்களின்
நிலை என்ன என்ற கேள்வி வரும்போது, மீண்டும் பென்ஷன் மாற்றம் பெற்றவர் என்ன பலனைப் பெறுகிறாரோ
அதை நோஷனல் ஆகக் கொடுத்து லிங்க் கொடுக்கலாம்
எனத் தீர்வை அமைப்புகளின் தலைவர்கள் முன்வைக்கின்றனர். எனவே delink (தொடர்பு அறுத்தல்) என்பது (பின்னொரு காலத்தில் தொடர்புபடுத்தப்படப் போவதால்) எவ்வகையிலும் சாத்தியமற்ற ஒன்றாக ஆகிவிடுகிறது.
ஊதிய மாற்றம் என்பதற்கு உத்தரவு வரும்போது
மூன்று வகை நிலைகளில் அதன் பலனைப் பெறவேண்டியவர் இருக்கின்றனர். உத்தரவு வரும் நாளில்
ஊழியராக இருப்பவர், பின்தேதியிட்டு (retrospective ஆக) 1-1-17 முதல் ஊதிய மாற்றம் பெறுவார்.
அவர் ஓய்வுபெறும்போது பெற்ற புதிய ஊதிய நிலையில்
தனது பென்ஷன் நிர்ணயத்தைப் பெறுவார்.
அடுத்த வகை பயனாளி
என்பவர் உத்தரவு வரும் நாளில் ஓய்வூதியராக இருப்பார். ஆனால் 1-1-17 அன்று அவர் ஊழியராக
இருந்து ஊதிய உத்தரவு வருவதற்கு முன்னர் ஓய்வுபெற்று, பென்ஷன் பெற்றுக்கொண்டிருக்கும்
பென்ஷனர்.
இந்த இரண்டாவது வகைப்
பயனாளி மூன்றாவதாகப் பயனாளியாகப் போகும் 1-1-17க்கு முன்பான Existing Pensioners க்கு
Future Pensioner ஆக இருப்பவர். இந்த இரண்டாவது வகைப்பட்ட பயனாளி ஊதிய மாற்றத்திற்குத்
தகுதி பெற்ற பென்ஷனர். மூன்றாவது பயனாளி, ஊதிய மாற்றம் நேரிடையாகப்
பெறமுடியாத பென்ஷனர் (ஏனெனில், ஊதிய மாற்ற உத்தரவு வரும் நாளிலேயோ அல்லது ஊதிய
மாற்றம் அமலாகும் தேதியிலேயோ அவர் ஊழியராக இல்லை). இரண்டாமவர் பென்ஷன் மாற்றத்தையும் ஊதிய மாற்றத்தால் பெறுவதால், மூன்றாமவராக
இருக்கும் முந்திய பென்ஷனர்களின் parity (ஒத்த சமத்தன்மை) நிலை
பாதிக்கப்படுகிறது. இதைச் சரி செய்திட --
parity (சமத்தன்மை) கொணர்ந்திட -- 31-12-2016வரை ஓய்வு பெற்றவர்க்கும் பென்ஷன்
ரிவிஷன் தேவைப்படுகிறது. இப்படித்தான் மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஊதியக்குழு
அமைந்தபின் ஓய்வூதிய மாற்றமும் சேர்ந்தே செய்யப்படுகிறது. BSNL-லிலும்
2007 மற்றும் 78.2 ஓய்வுதிய மாற்றம் இவ்வாறே நடந்து முடிந்தது.
இப்போது Delinking என்பதன் மூலம் தலைகீழாக இதை மாற்ற நாம்
முயற்சித்து வருகிறோம். முதலில் பென்ஷன் ரிவிஷன் என்கிறோம். அதுவரை இணைக்கமாகச் செல்ல
முடிந்த நாம், பலன்கள் என வரும்போது 7வது ஊதியக்குழு- 3rd PRC என வேறுபடத் துவங்குகிறோம். 2017 முதல் ஓய்வு பெறுகிறவர்க்கு
ஏற்படும் அனாமலியை நோஷனல் ஆகப் போக்கிக் கொள்ள முடியும் என்றும் சொல்கிறோம்.
ஓய்வூதியம் என்பது 37--A விதிப்படி என்ன ஊதியநிலையோ அதிலிருந்து
நிர்ணயிக்கப்படுகிறது. ஊதிய மாற்றத்திற்கு
உத்தரவு என ஏதும் இல்லாத நிலையில், அவரின் ஊதியத்தை யார் நிர்ணயிப்பார்கள்? அவர் ஓய்வு பெற்றபின் அவர் ஓய்வூதிய மாற்றம் என்பதற்கு
என்ன விதி இருக்கிறது? ஊதிய மாற்றம் வேறு பிட்மெண்டில்
நடந்தால் அவருக்குத் திரும்ப ஊதிய உயர்வை எதன் அடிப்படையில் தரமுடியும்? உடன்பாட்டை
மீறி புதிய ஊதியத்தை எவ்வாறு நிர்னயிக்கமுடியும்? அவர் ஓய்வு பெற்றபின் அவரின் ஓய்வூதியம்
திருத்தப்பட விதியோ உத்தரவோ யார் தருவார்கள்?
முதலில் என்னுடைய ஓய்வூதிய மாற்றத்தைச் செய்து முடி, பின்னர்
புதிய மற்றும் எதிர்கால ஓய்வூதியர்களுடைய ஒத்த ஓய்வூதிய சமநிலை பேணுவதைப் பார்த்துக்
கொள்ளலாம் என்பதன் பொருள், ஒரு வகையில், ஊதிய மாற்றப் பிரச்சனையை நாம் கைவிடுகிறோம்
என்பதுதான். ஒரே IDA ஓய்வூதியம் பெறும் வகுப்பினரிடையே
– பழைய பென்ஷனர்கள், புதிய பென்ஷனர்கள் என்ற – இரண்டு மாறுபட்ட ஓய்வூதிய மாற்றம் பற்றிய
கணக்கீட்டு முறைகள் இருக்க முடியாது. (Revise
pension first for me and keep parity for the fresh and future pensioner means
in a way we are giving up the issue of Pay Revision. There cannot be two
methods of calculating pension revision for the two categories of pensioners
the old and the fresh one belonging to a same IDA pensioner class.)
ஓய்வூதியம் என்பது உரிமையாக இருக்கலாம். ஆனால் ஓய்வூதிய மாற்றம் என்பதை, எதிர்கால ஒத்த பணியாளர்
ஊதிய மாற்றம் / பென்ஷன் மாற்றம் என்பதாக (பிணைந்து) இருக்கும்போது லீகல் உரிமையாக –சட்டபூர்வமான உரிமையாக-- மாறுவதைத்தான் நமது
அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன. ஆகவே இக்கோரிக்கையில்
மிக அதிக கவனம் தேவைப்படுகிறது என்பதை மட்டுமே நாம் சொல்ல விழைகிறோம்.
நன்றி. விளக்கமான பதிவு. மாலி
ReplyDelete