Skip to main content

AITUC 50 years by S A Dange

 

 

AITUC 50 years by S A Dange

இந்த ஆவணம் 1973ல் வெளிவந்த ஒன்று. இவ்வாண்டு இந்த ஆவணத்தின் 50ஆம் ஆண்டு. மத்திய தொழிற்சங்களுக்கெல்லாம் தாய்ச்சங்கம் எனக் கருதப்படும் ஏ அய் டி யு சி பிறந்தும் நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. தோழர் டாங்கே அதன் 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 80 பக்கங்களுக்கு மேலான முன்னுரை எழுதியிருக்கும் 300 பக்க அளவிலான பெரும் புத்தகமது.

தோழர் டாங்கே தனது முன்னுரையில் ஐ எல் ஓ பிரதிநிதித்துவம் என்பதற்காக அவசரமாக பிறந்த இயக்கமல்ல அந்த முதல் மத்திய சங்கம் என்பதை விளக்கியிருப்பார். ஒருவேளை 1907-08 கோகலே- திலகர் காங்கிரஸ் உட்சண்டை இல்லாது போயிருந்தால் 1920க்கு முன்னரே கூட AITUC அல்லது ஏதோவொரு பெயரில் நாடுதழுவிய தொழிற்சங்க அமைப்பு ஒன்று பிறந்திருக்கும் என்ற அனுமானத்தையும் டாங்கே சொல்லியிருப்பார்.



அவரது முன்னுரையில் AITUC  துவங்கப்படுவதற்கான சூழல்கள், திலகர், லஜபத் ராய், சமன்லால் போன்றவர்களின் நேரிடையான ஊக்கம் பற்றிச் எழுதுவார். திலகரின் மறைவால் துவக்க மாநாடு சற்று தள்ளிப்போய், ஆயிரம் பிரச்னைகளுக்கும் நடுவே காங்கிரஸ் தலைவராக 1920 தேர்ந்தெடுக்கப்பட்ட லஜ்பத் ராய் அவர்களே துவக்க மாநாட்டிற்கு தலைமை தாங்கியாற்றிய உரையை விரிவாக டாங்கே பதிவு செய்திருப்பார். அன்னிபெசண்ட், மாளவியா போன்றவர்களுடன் தனவந்தர்கள் , தொழிலாளர் பிரதிநிதிகளுடன் மாணவர்கள் பங்கேற்பையும் டாங்கே சொல்வார்.

அனைத்தையும்விட டாங்கேவின் முன்னுரை அக்காலத்திய விடுதலைப் போராட்டத்தின் பலவேறு trendsயை சுட்டிக்காட்டுவதாக இருக்கும். திலகரின் மேன்மையை அவர் அதிகம் பேசியிருப்பார். காந்தியை சுட்டிக்காட்டியிருப்பார். மாநாடு குறித்த அவரின் ஏற்பின்மையையையும் சொல்லியிருப்பார். அதேபோல் சாவர்க்கர், ஆசாத், பிஸ்மில், பகத்சிங் போன்றவர்களின் தீவிரவாதத்தையும் அவர் சொல்லிச் செல்வார்.

தொழிற்சங்கத்தில் அரசியலை கம்யூனிஸ்ட்கள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு வரலாற்று பிழை என டாங்கே இதில்  லஜ்பத்ராய் உரையின் ஆதாரங்களை தொட்டுக்காட்டி நிறுவியிருப்பார். சோவியத் புரட்சியின் தாக்கத்தை சொல்லியிருப்பார். துவக்க மாநாட்டில் சுயராஜ்யம் என்பதற்கான தீர்மானம் ஏதும் வராதது குறித்தும் அதற்கான காரணங்களையும் டாங்கே எடுத்து வைத்துள்ளதைக் காணமுடியும்.

இந்திய மக்கள் இதற்கு முன்பாக சாதி, மதம், குடும்பம் என்ற அம்சங்களை மட்டுமே அறிந்த நிலையில் அவர்கள் வர்க்கம் என்ற புதிய கேடகரி குறித்த அறிதலுக்கு வந்து சேர்ந்ததை டாங்கே பேசியிருப்பார்.

அந்த ஆவணத்தின் 50 ஆண்டுகள் என்ற நினைவில் தோழர் டாங்கேவின் முன்னுரைகளிலிருந்து எனக்கு தோன்றிய சில வரிகளை இங்கு இணைத்துக்கொடுத்துள்ளேன். இனி தோழர் டாங்கே பேசட்டும்..

To put before the Indian worker the role of the Russian revolution and to denounce its imperialist detractors and draw lessons from its successors for the benefit of the ideological and political attitudes of the Indian working class and TU movement- was all done in the AITUC and its very founding session. The finest statement on this subject came from the presidential address of Lala lajpat Rai. And it is worth remembering that Lalaji was not a communist nor was there a single communist at the AITUC session in 1920 to inspire or incite such sentiments and thoughts.

Lalaji said " My own experience of Europe and America leads me to think that socialistic or even bolshevik truth is any day better, more reliable and more human than capitalistic and imperialistic truth"

" There is no one here in India who believes that European and Russian standards of labour can be applied to India today..For the present our greatest need in this country is to organise agitate and educate. we must organise our workers, make them class conscious and educate them in the ways and interests of common weal."

Three basic ideas that the presidential address emphasised: class conscioueness, international proletarian brotherhood, the place of nationalism in the class outlook. Think as a class, organise as a class and act as a class is the  most valuable thought that the president put to the AITUC as the foundation thought of its ideology

The biggest failure was that the AITUC at its founding session did not adopt any political resolution on the question of national freedom and swaraj. why was it so?

The AITUC was guided principally by the Congress leaders. The masses at this period were being led by Tilak and his group Lalaji, Bipin. Mahatma Gandhi had refused to sponsor the idea of founding the AITUC and so he did not attend..

With the differences in the Cong leadership which had come in the open in the September session of the Congress, the AITUC leadership could not take any political stand on the question of swaraj..

..The leadership from the platform would not talk of Swaraj and the freedom movement, because it was divided. And with Mrs Besant, Wadia and the British gentlemen on the platform, the clear voice of the masses and the slogan of Swaraj could not beembodied in a political resolution.

The second session of the AITUC at Jharia held on Dec 1921 immediately adopted as its first resolution

"This TU congress that the time now has arrived for the attainment of swaraj by the prople of India"

The politicalisation of the of the TU movement and the AITUC took place at its very foundation. Those who say that politics was brought into the TU and the AITUC by the communists are not stating correct history.

The founding of the AITUC in 1920 was an event of great historical importance. It ushered in an organisation of the workers on a class basis. It proposed to provide a central direction to that basic new organisational unity of the workers in their various places of work called the trade unions

 

தோழர் டாங்கே இதில் ஆகஸ்ட் 1920ல் நடக்கவிருந்த துவக்க மாநாடு திலகர் மறைவால் அக்டோபருக்கு சென்றதை விளக்கியிருப்பார். சிறிய அளவு அப்போதைய சூழலின் சுதந்திர போராட்ட தன்மைகளை விவரித்திருப்பார். காங்கிரஸ் தலைமையின் வேறுபாடுகள், காந்தியின் நுழைவு ஒத்துழையாமை ஆகியவற்றை சொல்லிவிட்டு தனிநபர் அழித்தொழிப்பு தீவிர செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை- மக்களிடம் அவர்களும் செல்வாக்குடன் இருந்ததைச் சொல்வார். அந்தப் பாராவைத் தருகிறேன்.

 

“ campaign of individual annihilation in a planned manner..however philosophically and tactically wrong they might have been their heroism was apprciated by the people and due homage was paid to them. Chepaekar, Kankere, Savarkar, Dhingra, Khudiram Bose and later on Ramprasad Bismil, Bhagat singh, Azad or the heroes of Chittagong armoury raid areall honoured of this school of armed action in India's history of the freedom movement.

It may be useful to put before our reader an extract from savarkar's phamhlet published in London entitled Bande Mataram and smuggled into India in 1909...The Phamlet said

" Terrorise the officials, english and Indian, and the collapse the whole machinery of oppression is not very far. The persistent execution of this policy that has been so gloriously inaugurated by Khudiram Basu, kanai lal Dutta and other martyrs will soon cripple the British Govt in India. This campaign of separate assassinations is the best conceivable method of parlaying the bureaucracy and of arousing the people. the initial stage of the revolution is marked by the policy of separate assassinations"

One may remark here that this statement of policy exactly reads like that of the modern naxalites of the Charu mazumdar school, except that savarkar had not the advantage to add the letters Marxist - Leninst to his party nor the name of Mao to quote..

Both before and after independence, these forms and tactics have proved historically incorrect despite the amount of courage and sacrifice shown in their execution in both periods.

தோழர் டாங்கே சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கர் பற்றி குறிப்பிட்டுள்ளார்

When ganesh Savarkarwas arrested in 1909, he had a book with him entitled " How the Russians Organise a revolution" and also a copy of Secret societies of the European Revolution 1776-1876 about russian nihilists also.

திலகர், லஜ்பத், பிபின் ஆகியோர் consistently preaching trade unionism and politics to the working class  என எழுதியுள்ளார். கேசரி பத்திரிகையில் வந்ததை சுட்டிக்காட்டுகிறார். டாட்டா உட்பட பூர்ஷ்வாக்கள் 1905-08 காலத்தில் planned the disunity of our working class என டாங்கே சொல்வதைக் காணலாம். திலகர் குறித்து டாங்கே கீழ்கண்ட மதிப்பீட்டை தந்துள்ளார்

 Tilak was the only leader of the anti- imperialist national revolutionary movement who combined all forms of struggle, including the peaceful and non peaceful, legal and illegal, open and conspiratorial, always teaching and learning from the masses and always keeping himself at the head of the masses. though he had his own religious views, he never mixed up religion with politics. the Communalists and casteists tried to attack him on the question of social reforms and thereby sidetrack the main political issue of the anti imperilaistic revolution and independence. But the masses knew better and remained with him till the last"

காந்தியின் தொழிற்சங்க பார்வையை குறித்து டாங்கே இவ்வாறு எழுதியிருப்பார்.

”Though Tilak was the moving spirit of the AITUC formation in its first phase before his death, Mahatma Gandhi had also been consulted. He did not approve the idea. And when the AITUC session was held, he refused to attend or send a message. He had a principle and a tactical line on this question which ruled out anything like a central organisation of the working class and its trade unions..

To Gandhi, the workers were not a class in the modern sense of the term, nor were the owners. But it did not mean that workers must not organise or go on strike for their just and rightful demands..Gandhi was not against formation of a union or a strike.

For a strike, he laid down two absolute preconditions. One was that the demands must be just. secondly, the workers must agree to submit them to arbitration."

இதைச் சொல்லிவிட்டு யார் நியாயமான கோரிக்கை என முடிவெடுப்பது. அதுவும் காந்திதான் என்ற விமர்சனப்பார்வையை டாங்கே இங்கு வெளிப்படுத்தியிருப்பார். திலகர் பொறுப்பெடுக்க சம்மதித்ததையும், காந்தி மாநாட்டிற்கு செய்திதரக்கூட மறுத்ததையும் டாங்கே புரிந்துகொண்ட வகையில் இந்த முன்னுரையில் பேசியிருப்பார்.

நேரு, சுபாஷ், சி ஆர் தாஸ்  AITUC Shapingல் பங்கெடுத்திருந்தால் நிலைமைகள் பெரிதாக மாறியிருக்கும் என்ற கருத்தையும் டாங்கே சொல்கிறார்.

மிக முக்கிய வேறு ஒன்றையும் டாங்கே அந்த துவக்க மாநாடு தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார். AITUC Objects

" The object of the Congress shall be to coordinate the activities of all the labour organisations in all the trades and in all provinces in India and generally to further the interests of Indian Labour matters social, political and economic"

There was not a word of revolution or socialism in this clause or in the Constitution.

சங்கத்தின் அமைப்பு விதிகளில்- நோக்கங்களில் புரட்சி என்ற பதமோ சோசலிசம் என்ற சொல்லாட்சியோ இல்லை என டாங்கேவின் முன்னுரை செல்கிறது.

இப்படி இந்த ஆவணம் பல்வேறு புரிதல்களை டாங்கேயின் முன்னுரை வழியில் வெளிப்படுத்துவதை காண்கிறோம். இந்த 50 ஆண்டுகளில் பிறந்த தொழிற்சங்க இளம் தலைமுறையினருக்கு இந்த முன்னுரை புரிதல்களுக்கான ஒருவகை connect   என  கருதுகிறேன்.

7-1-2023

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா