Skip to main content

என் வாசிப்பில்.. புதிய மின்புத்தகம்

 என் வாசிப்பில்..

புதிய மின்புத்தகம்

வழக்கம் போல ஃப்ரி தமிழ் இ புக்ஸ் நண்பர்களான லெனின்குருவும் ஐஸ்வர்யாவும் இந்த மின்புத்தகத்தை வடிவமைத்து எனக்கு உதவியுள்ளனர். அவர்களுக்கு என் நன்றி. இந்த மின் புத்தகத்தை freetamilebooks இணையத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும். வாய்ப்பும் விருப்பமும் நேரமும் உள்ளவர்கள் படிக்குமாறு வேண்டுகிறேன்.

அப்புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையையும் அதன் உள்ளடக்கத்தையும் இங்கு பதிவிட்டுள்ளேன். உள்ளடக்கம் தூண்டினால் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.என் வாசிப்பில்…

முன்னீடு

 இந்த புவிபரப்பில் வாழ்வின் ஓட்டங்களை பலவகையில் புரிந்து விளக்க பலர் முயற்சித்துள்ளனர். அப்படியான சிலரை வாசிப்பின் வழி புரிந்துகொள்ளும் முயற்சியாக இந்தத் தொகுப்பை அவதானிக்கலாம்.

அறிவுஜீவிகள் உருவாக்கும் கண்ணாடிகள் வழிதான் நாம் நம்மை பார்க்க தெரிந்துகொள்கிறோம். அவர்கள் எவ்வளவு நேர்மையாக தருகிறார்கள் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. கலாச்சார கட்டுமானங்களை செய்பவர்களாகவும் அதேநேரத்தில் சூழலின் விளைபொருளாகவும் அவர்கள் இருந்து இந்த கடமையை செய்கிறார்கள். இந்த வேலையை மிகவும் பொறுப்புடன் ஆற்ற வேண்டும் என்கிற கடமையில்தான் என் எழுத்துக்கள் என்றார் முஷிருல் ஹாசன்.

ஏராள அறிவுஜீவிகளின், சிந்தனையாளர்களின் ,போராளிகளின் பிரதிபலிப்புகளை அவை என்னுள் பட்டுதெறித்த அம்சங்களில் இங்கு கொணர்ந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகள் இடைவெளியில் முகநூலிலும்- எனது இணைய பக்கத்திலும் எழுதிப் பார்த்த கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே இங்கு  ’என் வாசிப்பில்..’ எனத் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டுரைகள் கடந்த ஓராண்டில் எழுதப்பட்டவை.

கட்டுரைகளை ஒருசேர தொகுக்கும் நேரத்தில் எழுதப்பட்டவற்றில் சிறிய மாற்றங்கள் வந்திருக்கலாம். முடிந்தவரை என்ன எழுதப்பட்டதோ அதையே பெரிய மாற்றமின்றி தொகுப்பாகத் தர முயன்றுள்ளேன்.

இந்த தொகுப்பை மூன்று பகுதிகளாக பிரித்து இயன்றவரை உள்ளடக்க அடிப்படையில் தந்துள்ளேன். முதல் பகுதியில் அரசியல், இரண்டாம் பகுதியில் சமயம், மூன்றாம் பகுதியில் தமிழ்-தமிழகம் எனக் கட்டுரைகளை தொகுத்துள்ளேன். காலவரிசை என்பதைவிட பொருள் வரிசை ஏற்புடையதாக வாசகர்களுக்கு இருக்கலாம் என்ற எண்ணத்தில் இக்கட்டுரைகள் அடுக்கப்பட்டுள்ளன. இப்படி இத்தொகுப்பில் 62 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

காந்தி, நேரு, ராஜாஜி, அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர், பெரியார், முஷிருல், சாவர்க்கர், ஹெகல், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என ஏராளமானவர்கள் இந்த கட்டுரைகளில் வந்து பேசுவர். பாஜக, ஆர் எஸ் எஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி என அவற்றின் வரலாற்று சிந்தனை மற்றும் அமைப்புப் போக்கு ஓரளவு இக்கட்டுரைகள் வழி பேசப்பட்டிருக்கும். விடுதலைப்போராட்டக்காலம்- விடுதலைக்குப் பின்னரான இந்தியா குறித்த குறுக்குவெட்டு தோற்றத்தை இக்கட்டுரைகள் வழி ஓரளவிற்காவது பெறமுடியும் எனக் கருதுகிறேன்.

சாதி குறித்தும், சைவம், கிறிஸ்துவம், இந்துத்துவம், சீனாவில் சமயம் என உரையாடல்கள் பெருக்கப்பட்டிருக்கும். தமிழ் மொழிச் சூழல், சமஸ்கிருதம், தொல்தமிழகம் என மொழி சார்ந்தும், நிலம் சார்ந்தும் சில கட்டுரைகள் இங்கு இடம் பெற்றுள்ளன.

பன்முகப் பார்வை- மானுடத்தின் விரிவான சிந்தனைக்கு இடமளிக்கும் இவ்வுலகின் இந்தியாவின் தமிழகத்தின் சிறு அளவிலான விசாரணையாக இக்கட்டுரைகள் அமையலாம். ஒரே இடத்தில் பெரும் உரையாடல் திறப்புகளை இந்த தொகுப்பு கொண்டிருக்கும் எனக் கருதுகிறேன். வாசிப்போரை மூலத்தை தேடி போகச் செய்தால் இக்கட்டுரைகள் தன் இருப்பு நியாயத்தைப் பெறும். என் வாசிப்பின் சுவையை பரிமாற முயற்சித்துள்ளேன்.

10-9-2022

உள்ளடக்கம்

 

1. காந்தியின் ஹிந்த் சுயராஜ் –  சில மூலக்கூறுகள்

2. மெளலானா ஆசாத்தும் இந்திய ஒற்றுமையும்- பெருங்கனவு

3. ராஜாஜியை வாசிக்கலாம்..

4. முஷிருல் ஹாசன் வாசிப்பில்...

5. இந்தியா எனும் கருத்தாக்கம்

6. ஒரு தேசத்திற்கான கடிதங்கள் நேரு

7. காந்தி அம்பேத்கர் உண்மை முகம்

8. பகத்சிங் வாசிப்பு

9. தாட்சாயிணி வேலாயுதம்

10. மதநல்லிணக்கப்போராளி சுபத்ரா ஜோஷி

11. விக்ரம் சம்பத்தின் சாவர்க்கர்  

12. ஆர் எஸ் எஸ் நகர்வு கட்டங்கள்

13. பாஜக வளர்ந்த கதை

14. ஹெகல் சிந்தனையில் இந்தியா 

15.  மார்க்ஸ் பற்றி  சாமி சிதம்பரனார்

16. லெனின் ( ரஷ்யாவின் விடுதலை வீரர்)

17. புதுமைப்பித்தனின் ஸ்டாலின்

18. இஸ்த்வான் மீசாரஸ்

19. தோழர் பி சி ஜோஷி எழுதிய அதிகாரத்திற்கான கம்யூனிஸ்ட் பிளான்

20. தோழர் டாங்கேவின் சோவியத் சந்திப்பு

21.   1951 கம்யூனிஸ்ட் கட்சிதிட்டத்தில்

22.  நமது பலவீனங்கள் -அஜாய் கோஷ்

23. இந்திய மொழிகளில் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ

24. காலமாற்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு விதிகள்

25. இந்திய மார்க்சியத்திற்கு தோல்வியா?

26. தோழர் தா.பாவின் பொதுவுடைமையரின் வருங்காலம்

27. கம்யுனிச இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்

28. தோழர் கே.சுப்பிரமணியன் அவர்களின் புபேந்திரநாத் தத்தா

29. தோழர் பிஎஸ்ஆர்  தலைமறைவு வாழ்க்கை

30. தோழர் இந்திரஜித் குப்தா நூற்றாண்டு

31. இந்தியாவில் சோசலிஸ்ட் இயக்கம்- வரலாற்றின் சோகம்

32. வ உ சி 150

33. பெதிக் லாரன்சும் பெரியாரும்

34. அதிகாரத்திற்கு வந்த திமுக

35. மண்ணில் உப்பானவர்கள்

36. மகாத்மா காந்தியின் ஓர் உலகம்

37. இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி

38. யுகபாரதியின் நல்லார் ஒருவர் உளரேல்

39. மாநில பட்ஜெட்களும் மாடல் கதையாடல்களும்

40. மாநில கட்சிகள் பற்றி சிபிஎம்

41.  தோழர் மோர் வாழ்க்கை குறிப்புகள்

 

பகுதி 2

 

42. சாதி குறித்து இந்திய சமூகவியலாளர்

43. அடிகளார் காட்டும்  சமயநெறி

44. சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

45. தமிழ் நெறியும் லெனினியமும்

46. கிறிஸ்தவரும் கம்யூனிசமும்

47. நான் ஏன் இந்து சசி தரூர்

48. நான் ஏன் இந்து அல்ல – காஞ்ச அய்லய்யா

49. சீனா வாசிப்பில் மதம்

 

பகுதி 3

 

50. தமிழில் விடுதலை இலக்கியம்

51. தமிழும் பிராகிருதமும்

52. தமிழும் சமஸ்கிருதமும் -ம பொ சி பார்வையில்

53. தமிழ் இசுலாமிய மரபுகள்

54. மொழித்தூய்மை

55. தமிழ்நாட்டின் மொழிச்சூழல்

56. பாவேந்தம் மடல் இலக்கியம்

57. நொபுரு கரோஷிமாவின் பார்வையில் தென்னகச் சமூகம்

58. திராவிடர் பூர்வீகம் குறித்து  தொல்பழங்காலம்

59. சொற்களின் சரிதம்

60.  அறமும் அரசியலும்

61. இலக்கியம் காட்டும் நல் அமைச்சு

62. கலிங்கத்துப்பரணியின் காதல் இலக்கியம்

                   


Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு