தோழர் கோர்பசேவ் மறைவு அஞ்சலி
கோர்பசேவ் பதவிக்கு வந்தவுடன் அவரின் பெரிஸ்த்ராய்கா- கிளாஸ்நாத் குறித்து பல தலைவர்கள் நேரிடையாக பேசியதைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியவர்களில் நானும் ஒருவன். ராஜேஸ்வரராவ் திருவாரூரில், என் இ பலராம் தஞ்சாவூரில், பரதன் தஞ்சாவூரில், தோழர் ஞானையா பல வகுப்புகளில் என அப்போது அவர்கள் பேசியதும் விவாதித்ததும் நினைவிற்கு வருகிறது.
ஆங்கிலத்திலும் தமிழிலும் கோர்பசாவ் உரைகள் அவரது அட்டைப்படத்துடன் சிறுவெளியீடுகளாக அப்போது எங்களுக்கு கிடைத்தன. மெயின்ஸ்ட்ரீம் ஏராள கட்டுரைகளை எழுதியது. சிபிஅய் தனது பார்ட்டி லைஃப் பத்திரிகை மூலம் எதிரும் புதிருமான ஏராள கட்டுரைகளை வெளியிட்டது. என் இ பலராமும், ஏ பி பரதனும் எதிரும் புதிருமாக இரு பார்வைகளை வைத்த கட்டுரைகள் ஓரளவிற்கு மனதில் நிழலாடுகின்றன. சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர் இவை பெருமளவிலான விவாதங்கள் ஆயின.
நியுஏஜ், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, இண்டெர்னேஷனல் புல்லட்டின், மார்க்சிஸ்ட் , பிராண்டியர், மெயின்ஸ்ட்ரீம், ஜனதா, மன்திலி ரிவ்யூ என வெளிவந்த கட்டுரைகளை கையில் தாங்கிக்கொண்டு அவற்றை சுட்டி பேசிக்கொண்டு தெருவில், சிபிஎம் அலுவகத்தில், ஞானையா முகாம்களில் இருந்த காலமது. கட்சி காங்கிரஸ்கள் கூடி சோவியத் வீழ்ச்சி குறித்து தனி ஆவணங்களை அணிகளுக்கு அனுப்பி புரியவைக்க முயற்சித்ததும் நினைவிற்கு வருகிறது. சோசலிசம் வீழவில்லை- ஒரு மாடல்- சோசலிச கட்டுமான சோவியத் மாடல் சோதனைக்கு உள்ளானது. மார்க்சியம் பொருந்தக்கூடியதே என்றமுடிவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தன.
பல நாடுகளில் கட்சிகள் தங்கள் பெயரை அமைப்பு விதிகளை மாற்ற முனைந்தபோது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை தங்கள் அணிகள் சோர்ந்து போவதை தடுப்பதற்கான பெருமுயற்சிகள் எடுத்தனர்.
அப்போதைய
என் குறிப்பு நோட்டை கோர்பி மறைவையொட்டி அதன் தூசு வாசத்துடன் – சைனஸ் வதையுடன் பார்த்தேன். லெனினிலிருந்து மாலங்கோவ் வரை என லண்டனில் பேராசிரியராக
இருந்த ஹக் வாட்சன் புத்தகத்தை படித்தது ஆரம்பத்திலேயே இருந்தது.
அதிலிருந்து
சில வரிகள்
“
சிலநூறு பேர்கள்தான் சண்டையில் அக்டோபர் புரட்சி காலத்தில்..4 நாட்கள் சண்டை..போல்ஷ்விக்
அரசாங்கம் வடக்கு, மத்திய ரஷ்யாவில்..பின் சைபீரியாவில்
அரசியல்
நிர்ணயசபையில் 410 சோசலிஸ்ட் புரட்சிவாதிகள், 175 போல்ஷ்விக், 16 மென்ஷ்விக், 17 லிபரல்கள்,
மீதி உபரிகள்..தேர்தலை மக்கள் தீர்ப்பாக ஏற்கமுடியாது – சோவியத்துகளே அதிகாரம் மிக்கவை
என்றார் லெனின். ஆனால் லெனினின் வாதத்தை அரசியல் நிர்ணய சபை நிராகரித்தது..”
தொடர்ந்து
எரிக் பிராம், கிராம்சி, பெளலண்ட் சாஸ், மிஷேல் பூக்கோ, எட்வர்ட் செய்த், அம்ப்ர்த்தோ
எக்கோ, தமிழவன் அமைப்பியல்,, மார்க்யூஸ் என என் குறிப்புகள் அந்த நோட்டில் செல்கிறது.
அடுத்த
குறிப்பாக ரெஜி சிரிவர்த்னேவின் சோவியத் யூனியனின் உடைவு காணப்படுகிறது. இதையும்
God that Failed இரண்டையும் ஜெயமோகன் அனுப்பி படிக்க சொன்னார். ரெஜியைப் படித்தபோது
எழுதியிருந்த குறிப்பிலிருந்து சில வரிகள்..
கோர்பி சொன்னார் – வரலாறு திறந்திருக்கிறது என்றோ
அது முன்னரே திட்டமிட்ட தண்டவாளத்தில் செல்கின்றது என்றோ நாம் கருதக்கூடாது.
இது
விதிவாதம்- டிடெர்மினசிசம் என்பதற்கானவை குறித்த எச்சரிக்கை அறிவுரை போல் தோன்றியது.
ரெஜி
கேள்வியை எழுப்பினார் - சோவியத் உள் அமைப்பிலேயே
எதேச்சகரமானது என்றால் கோர்பி போன்ற சீர்திருத்தவாதியை எப்படி அது உருவாக்கியது. அங்கு
தாராளவாத கூறுகளும் இருந்திருக்க வேண்டாமா?
”
கிழக்கு அய்ரோப்பாவில் நிராகரிக்கப்பட்டது ஸ்டாலினிசம் என சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் லெனினிசமும் கூடத்தான்..”
“
ஒரு புரட்சிகர குழாம் முதல் தரமானது. அது எந்த வரலாற்று குறிக்கோளை தேர்ந்துகொண்டதோ
அதை நோக்கி ஏனையோரை தலைமைதாங்கி நெறிப்படுத்தி அழைத்துச் செல்ல உரித்துடையது என்ற சிந்தனை…கேள்விக்கு
உட்படுத்த முடியாத சித்தாந்தமாக அரசியல் ஞானத்தின் ஊற்றுமூலமாக லெனினிசன் எனச் சொல்லி
லெனின் தெய்வமாக்கப்பட்டது…”
அப்புத்தகத்தின்
பக் 89 எனப்போட்டு எழுதிய குறிப்பு
”மனித
குலத்தை இறுதியாக அதன் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுவிக்கும் ஒரு பூரணத்துவமான
சமூகத்தை உருவாக்க முடியும் என்று நம்புவது மிகவும் ஆபத்தானதாகும்”
அடுத்து
அய்சக் டாயிச்சர் எழுதியது பற்றிய குறிப்புகள்- அதில் புகாரினை அவர் துன்பியல் நாயகன்
என எழுதியிருப்பார். இப்போது நம் காலத்தில் கோர்பி அப்படிப்பட்ட துன்பியல் நாயகனாக
தெரிகிறார்.
சார்த்தர்
எழுதிய Existentialism and Human Emotions
(sent by Jayamohan) என்ற தகவலுடன் குறிப்பெடுத்துள்ளேன். அதில் காணப்பட்ட வரிகள்
அப்புத்தக பக் 30-31 எனப்போட்டு எழுதியுள்ளேன்.
I
do not know what will become of the Russian Revolution…that at the present time
that the proletariat plays a part in Russian that it plays in no other nation.
But I can’t swear that this will inevitably lead to a triumph of the
proletariat..I have got o limit myself to what I see
அடுத்து
தோழர் கோவை ஞானியின் புத்தகம் பற்றியும், டி எஸ் இலியட் பற்றியும் இருக்கிறது.
இலியட்
வரிகளாக - ஒவ்வோரு தலைமுறையும் ஒவ்வோரு தனிமனிதனைப்
போலவே ரசனைக்கான தனது சொந்த வரையறைகளை கலைச்சிந்தனையில் கொள்வதுடன் கலையில் தன் சொந்த
தேவைகளை நாடுகிறது.
நுஃமான்,ஓஷோ,
இ எம் எஸ், நேதாஜி, மண்டேலா, அக்ஞேயா, அரவிந்தர், தளய சிங்கம்,சுந்தர ராமசாமி, அ.மார்க்ஸ்,
சூசன் சோன் டக், நகுலன் என என் குறிப்புகள் சிறு அளவில் செல்கின்றன. நகுலனை வங்கித்
தலைவர் ரகு கொடுத்திருக்கவேண்டும். அதில் ஒரு வரி
”மனம்
தெளிந்த நிலையில் வெகு தொலைவிலிருந்து தகவல்கள் வந்து சேரும்.”
ஓஷோவிடமிருந்து
”வாழ்விற்கு
எதிர்முனை தேவை…உயிர்ப்பான சமன் உயிர்ப்பான மெளனம் வேண்டும். முயற்சியில் ஓய்ந்து போய்விடு.
ஓய்வெடுக்கும்போது அது நிஜமான ஓய்வாக இருக்கும். பாதையாக இரு- சர்வாதிகாரியாக இருக்காதே”
அடுத்து
அந்த என் நோட்டின் 127 பக்கத்தில் ஆகஸ்ட் 1994ல் சிபிஅய் எம் எல் லிபரேஷன் செண்ட்ரல்
பார்ட்டி ஸ்கூல் பேப்பர்ஸ் குறிப்புகளை எழுதியுள்ளேன். அது போஸ்ட் மாடெர்னிசம் குறித்த
விமர்சன உரையாடல். அதில் ஓரிடத்தில் பூக்கோ எனப்போட்டு மேற்கோளை power is that
which represses என குறித்துள்ளேன். தொடர்ந்து நிறப்பிரிகை இதழ் 8 பின் நவீனத்துவம்
பற்றிய குறிப்புகளாக இருக்கிறது.
காவ்யாவின்
காட்டு மலர்கள், பூரண சந்திரனின் ஸ்ட்ரக்சுரலிசம்,
காம்யூவின் மனிதநேயம் ஸ்ரீராம், வ கீதாவின் காம்யூ, நிகழ், படிகள், ஊடகம், ழான் போத்ரியா,
ரவிக்குமார், அந்தோணி எஸ்தோப் சொல்லாடல், கைலாசபதி, வித்தியாசம் இதழ், ஜமாலன், அமீபா
2 என என் குறிப்புகள் சிறு அளவில் செல்கின்றன.
அமீபா வரிகள் வெள்ளை அறிவியல்வாதத்தின் கொடுமை, இந்திய
பார்ப்பன பாசிசம் என்பதை விமர்சித்துவிட்டு இறுதிவிடுதலையை அறிவிக்கும் பாட்டாளிவர்க்க
கதையாடல்கள் பற்றிப் பேசுகின்றன.
”
எல்லா சரித்திரத்தையும் அறியும் பொதுமுறை பன்மை அழிப்பு உத்தியாகச் செயல்படுகிறது.
உலகின் தொல்சமூக அமைப்புக்களை, ஆதிகுடிகளை, நாடோடிகளை அர்த்தமற்றவையாக இருப்பு நியாயம்
அற்றவையாக மாற்றியதில் இந்த பாட்டாளி வர்க்க தொழில்நுட்ப வன்முறை பெரும்பங்கு வகிக்கிறது”
“
சரித்திரம் என்பது நிகழ்காலத்தின் அதிகாரம் கூறும் மாயக்கதை…வரலாறு எப்போதும் பேசப்படமுடியாத
எண்ணற்ற மெளனங்களை புதைக்கும் மொழிப்பரப்பு… அறிவு அதிகாரத்தின் சிக்கலான வெளியில்
உற்பத்தியாகிறது. வித்தியாசங்கள், வேறுபாடுகள், பன்மை உருவங்கள் மட்டுமே வாழ்தலின்
செயல்…”
Althusser
and the Semiostics of Karl Marx என சிறிய
குறிப்பு எடுத்துள்ளேன். சித்த பிஸ்வாஸ் பால்
ராப்சன் நியுஏஜ் கட்டுரையுடன் அந்த குறிப்பு நோட்டு தன் பக்கங்களை பவுண்ட் செய்துகொண்டுள்ளது.
ராப்சன்-ல் கண்ட வரி
I must keep fighting unil I am dying
கோர்பசாவ்
மறைந்தார். அவருக்கு அஞ்சலி என எழுதத் துவங்கியவன் அவரால்- அங்கிருந்த உள் மற்றும்
வெளிநிலைமைகளால் சோவியத் என்ற சோதனை முடிவிற்கு வந்த காலத்தின் எண்ணத்தை எல்லோரையும்
போல் என்னாலும் தவிர்க்கமுடியவில்லை.
தோழர்
கோர்பியை பற்றிய மதிப்பிடல் தீர்ப்பிடல் என்பதைவிட அந்த தாக்கத்தில் அக்காலத்தில் என்
சிந்தனை அலைக்கழிப்புகள்- தேடல் அலைச்சல்கள் ஓயாது எப்படி பயணப்பட்டன என்பதை கிடைத்த
ஒரு நோட்டு புத்தகத்தைக்கொண்டு இங்கு எழுதிப்பார்த்துள்ளேன்.
சோவியத்துடன்
சேர்ந்து தன் வரலாற்று முக்கியத்துவத்தையும் மூடிக்கொண்ட அந்த நாயகனுக்கு என் அஞ்சலி
2-9-2022
20 hrs.
Comments
Post a Comment