Skip to main content

சிக்கலைப் புரிதலும் அதை தீர்த்தலும்

 

சிக்கலைப் புரிதலும் அதை தீர்த்தலும்

பென்ஷன் மாற்றம் எவ்வழியில் என்கிற இருவேறு நிலைப்பாடுகளில் ஒரு பஞ்சாயத்து வந்ததை நான் சமீபத்தில் பார்க்கிறேன். எனக்கு கோவைத் தோழர் எஸ் எஸ் ஜி 50 நிமிட ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார்.

 தஞ்சாவூர் ஓய்வூதியர் மாநாட்டில் அவ்வமைப்பின் அகில இந்தியத் தலைவர் தோழர் DG பேசிய உரையது. விரிவான விளக்கங்களுடன் அவர் உரையாற்றியுள்ளார். 7th CPC அடிப்படையில் 2.515 ( 14.55 %) பிட்மெண்ட் கேட்பதன் நியாயத்தையும், அமைப்பின் தலைவர்களுக்கு இருக்கும் விஷன் - பார்வை தீர்க்கம் குறித்தும் அதில் சொல்லியுள்ளார். உரையை முடிக்கும்போது ஒருவேளை கோரிக்கை ஏற்கப்படாமல் 10 சதமோ அல்லது 5 சதமோ DOT கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு தொடர்ந்து 7th CPC Fitmentக்கான நியாயத்திற்கு போராடுவோம் என்ற வாக்குறுதியையும் அவர் தந்துள்ளதைக் கேட்டேன். இப்படி accept what is given and fight for the improvement of the rest  என்கிற தோழர் குப்தா பார்வையை ஏற்ற பல தோழர்கள்  இந்த நிலைப்பாட்டை வரவேற்கவே செய்வார்கள். அதை வரவேற்கலாம்.

அந்த உரையில் சில misunderstanding  இருப்பதை சாதாரண ஓர் உறுப்பினர் என்ற வகையில் சுட்டிக்காட்ட விழைகிறேன். என் புரிதலை மேம்படுத்திக்கொள்ளவே அதைச் செய்கிறேன். தனிப்பட்ட வகையில் ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அமைப்பில் பணிபுரியும் முத்தியாலு , டி ஜி போன்றவர்கள் என்னைவிட மூத்தவர்கள்- அனுபவம் வாய்ந்தவர்கள்.

பிரச்னையின் முடிச்சு post 2017 ல்  உட்கார்ந்திருக்கிறது. இதனால்தான் டிலிங்க் சாத்தியமா என்ற விவாதமே முன்னர் நடந்தது. இப்போது அசோசியேசன்கள்- யூனியன்கள் கேட்ட அடிப்படையில் pension revision in the absence of pay revision  என்பதை அதன் வசதி கருதி DOT ஏற்று அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறது.

 pre 2017 பென்ஷனருக்கு  ரிவிஷன் தருவதற்கு  போஸ்ட் 2017 காரர்களுக்கு தீர்வு என்ன என்ற கேள்வி இதில் லிங்க் ஆக வேண்டியுள்ளது. 2.515 போன்ற அதே பலனை அந்த போஸ்ட் 2017 காரர்கள் ஓய்வு பெறும் போது அப்படியே அந்தலாஸ்ட் பே டிரானில்’ வந்த பென்ஷனை பெருக்கி கொடுத்து விடலாம் என்ற தீர்வை  அமைப்பின் தலைவர் முன் வைக்கிறார். இதை நான் ஏற்கவில்லை என்பதல்ல பிரச்னை. அது சரியான தீர்வல்ல என்பதை நல்லவேளை DOT புரிந்துகொண்டு அவர்கள் வெளியிட்ட Methodolgyல்  அதிகாரிகள் தங்களின் சரியான புரிதலை தந்துள்ளனர்.

இதில் கவனம் பெற வேண்டிய முதல் அம்சம் எந்த தேதியிலிருந்து கோரிக்கைத் தீர்வை அனைவரும் வேண்டுகிறோம் என்பதுதான். அந்த தேதி pre 2017  பென்ஷனருக்கு 1-1-2017 என்ற தெளிவு எல்லோரிடமும் இருக்கிறது. அதே தேதியில் தான் post 2017 காரர்களுக்கும் என்பதில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. இதில் DOT தெளிவாக இருக்கிறது. post 2017 காரர்களுக்கும் பலன் 1-1-2017 லிருந்துதான்  என்பதை அது எழுத்து வடிவில் தந்துவிட்டது. இங்குதான் 3rd PRC நுழைவின் அவசியம்- அதன் ஊதிய நிலைகளின் தேவை உணரப்படுகிறது. இதில் புரிதல் அவசியமாகிறது. அதாவது ’pre 2017’ காரர்களுக்கு  pensionல் மாற்றம்   ’post 2017’ காரர்களுக்கு PAYல் மாற்றம் என்ற வகையில் தீர்வு.

7th CPCபடி பிட்மெண்ட்  எனச் சொல்பவர்கள் இரண்டாவது பி ஆர் சியில் செல்கிற ஊதிய நிலையிலேயே pre 2017- post 2017 காரர்களுக்கு ரிவிஷன் என்ற புரிதலுடன் பேசி வருவதைக் காண்கிறேன். ஆனால் இவர்கள் 3rd PRCன் பரிந்துரைப்படியிலான IDA Merger என்பதை ஏற்றுத்தான் ரிவிஷன் கோருகிறார்கள். அதாவது 2017க்கு முந்திய பென்ஷன்தாரர்களுக்கு 3rd PRC படி 1-1-2017 தேதி முதல், 119.5 சத இணைப்பு ஆகியவற்றையும் 7வது ஊதியக்குழுப்படி 2.515 ( 32 சத உயர்வு) என்பதையும் கோருகின்றனர்.

 போஸ்ட் 2017 என வரும்போது யார் யார் எப்பொழுதெல்லாம் வெவ்வேறு தேதிகளில் ஓய்வு பெறுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் ஓய்வு பெறும் தேதியிலிருந்து இந்த 2.515 மாற்றத்தை கோருகிறார்கள்.  போஸ்ட் 2017 காரர்களுக்கு இந்தப் பலனை ஏன் 1-1-2017 லிருந்து DOT  சொல்வது போல் கேட்காமல் அவர்களின் ஓய்வூதியராகும் வெவ்வேறு  தேதிகளிலிருந்து கேட்கும் தவறைச் செய்கிறார்கள்?

அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஊதிய மாற்றமின்றி வரும் Pre 2017 Pension Revision ஏற்படுத்தும் அனாமலியை   Post 2017 பென்ஷனர்களுக்கு அவர்களின் ஊதிய மாற்றம் வழிதான் தீர்க்க முடியும் என்பதே. அதுவும் 1-1-2017 அன்றே பலனைக் கொடுத்து தீர்க்கவேண்டும். 1-1-2017 அன்று போஸ்ட் 2017காரர்கள் அனைவரும் ஊழியர்களாக இருப்பர். ஊழியர் என்றால் அவர்களுக்கு ஊதியம்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே ஊதியத்தில் மாற்றம் செய்து அதை  (நிர்ணயிக்கப்பட்ட பென்ஷனை) தீர்க்கவேண்டும். DOT உத்தரவு வந்த பின்னரும் தொடர்ந்து ஊழியர்களாக இருந்து பென்ஷனராக மாறுபவர்களுக்கும் இந்தப் பலனை அவர்கள் ஊதியத்தில் மாற்றம் செய்து அவர்கள் பென்ஷனராகும் போது தரவேண்டும்.

ஊதிய மாற்றமின்றி பென்ஷன் மாற்றம் என்பது  DOT க்கு வசதியான ஏற்பாடானது. பி எஸ் என் எல் நுழைந்த ஊழியர்க்கு பென்ஷன் நிர்ணயிக்க 37 ஏ விதிகள் உள்ளன. ஆனால் அதன் பென்ஷன்தாரர்களுக்கு பென்ஷன்  மாற்றம் செய்ய  எந்த விதியும் இல்லை. ஊதியக்குழுவோ அல்லது ஊதியக்கமிட்டி பரிந்துரைகளோ இல்லை. இது DOTக்கு வசதியாக போனது.

ஊதிய மாற்றமின்றி பென்ஷன் மாற்றம் செய்ய DOT முன் வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதிய நிலைகள் தேவைப்படுகிறது. எனவே அவர்கள் 3rd PRC  படி 1-1-2017 முதல் பலன்கள், 119.5 % மெர்ஜர், ஊதிய நிலைகள் என்பதைக் கொண்டு ஊதிய மாற்றமே இல்லாமல் pre 2017 க்கு பென்ஷன் மாற்றத்தையும், போஸ்ட் 2017காரர்களுக்கு அதே தேதியில் அதே மெர்ஜருடன் ஊதியத்தில் மாற்றத்தை புதிய ஊதிய நிலைகளில் நோஷனலாகவும் செய்ய முன்வந்துள்ளனர்.

பிரச்னை NIL Fitment க்கு பதில் 3rd PRC  ன் எந்த பிட்மெண்டை எடுத்துக்கொண்டு பென்ஷன் ரிவிஷனை இறுதிப் படுத்துவது என்பதில் நிற்கிறது.

போஸ்ட் 2017ல் 1-1-2017 முதல் ஓய்வு பெற்று வருகிறவர்களுக்கும், இனி 2026 வரை  (அடுத்த மாற்றம் வருகிறவரை தொடர்ந்து 2026 தாண்டியும்) ஓய்வு பெறப்போகிறவர்களுக்கும் இந்த 1-1-2017 முதலான நோஷனல் பிக்சேஷன் வழியாக அனாமலியை  DOT  சாதுர்யமாக தீர்க்கப்பார்க்கிறது. இதனால்தான் 7th CPC  என்பதையோ  7th CPC scales என்பதையோ அதனால் எடுத்துக்கொள்ள முடியாமல் போகிறது.

 இந்த  pre - post  என்கிற லிங்க் தான் நமது ஆதாரமான அம்சம்.  37 ஏ எப்போதும் அது வந்த நாள் முதல் ’போஸ்ட்’ காரர்கள் – அதாவது ஊழியர்களாக இருப்பவர்கள் வழிதான் தன்னை அது நிலை நிறுத்தி பென்ஷன் உத்தரவாதத்தை தந்துகொண்டிருக்கிறது. தோழர் குப்தாவை இதற்கு நினைவு கூறாமல் இருக்க முடியாது.

 எந்த ஓர் அமைப்பிலும் அந்த அமைப்பிற்காக  உழைக்கக்கூடியவர்களையே அதன் உறுப்பினர்கள் பாராட்டியும் செவிமடுத்தும் இருக்க முடியும். அமைப்பில் அன்றாட வேலை செய்யாத என் போன்றவர் கருத்தை ஏற்க வேண்டும் என நான் வலியுறுத்த முடியாது. தெரிந்த கருத்தை சொல்வது அவசியம் என்பதால் சொல்லவேண்டியுள்ளது. அமைப்பில் பணியாற்றுபவர்கள் வெற்றி எந்த அமைப்பிற்கும் மிக முக்கியமானது. என் வாழ்த்துகள்!

14 hrs 20-2-2023     -   R. Pattabiraman

 

 

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு