Skip to main content

ஹிண்டன்பர்க் அறிக்கையும் அடானி குழுமமும்

 

                ஹிண்டன்பர்க் அறிக்கையும் அடானி குழுமமும்

ஜனவரி 24ல் அடானி குழுமத்தின் மீது ‘ஹிண்டன்பர்க் அறிக்கை’ எனும் குண்டு வீசப்பட்டது. அதன் 80 பக்க அறிக்கை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக பங்கு விற்பனை வட்டாரத்தின் , மீடியாக்களின் பேசுபொருளானது. அடானியும் தனது சார்பில் 413 பக்க அறிக்கையை பதிலாக தந்துள்ளார். ஆனாலும் அவரால் சரிவை தடுத்து இன்றளவும் தற்காத்துக்கொள்ள முடியவில்லை.ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து - கொடுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி எஃப் பி வை அதானி திரும்பபெற்றார். ஹிண்டன்பர்க் ஜனவரி 24, 2023ல் தனது அறிக்கையை தந்தது. அதானி குழுமத்தின்  Stock manipulation, accounting fraud, improper use of tax havens and money laundering என்ற முக்கிய குற்றச்சாட்டுக்களை அடுக்கியது.

ஜனவரி 29 அன்று அதானி தனது 413 பக்க பதில் அறிக்கையில் ஹிண்டன்பர்க் அறிக்கை  maliciously mischievous  என்றது. அவசியமானால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றது. ஹிண்டன்பர்க்  அதை சந்திக்க தயார் என பதிலடி கொடுத்தது. உலகம் முழுதும் இதற்கான எதிர்வினைகள் வரத்துவங்கின. பல பத்திரிகைகள் ஹிண்டன்பர்க் நிலைப்பாட்டை ஏற்கத்தகுந்த வகையில் கருத்துக்களை வெளியிட்டன.

அதானியின் மார்க்கெட் மதிப்பு பெரும் வீழ்ச்சியைக் கண்டது. உலகப்பணக்காரர் பட்டியலில் 3ஆம் இடத்திலிருந்து அவர் 20க்கு சரிந்தார். ஏப்ரல் 2020- ஆகஸ்ட் 2022க்குள் அதானி பங்கு மதிப்பு 4000 சதமாக உயர்ந்தது எப்படி என்ற கேள்வி பலரது புருவத்தை உயர்த்தியது

பிப்ரவரி 2ல் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஜேபிசி அமைக்கக் கோரின. செபி எங்கே என்ற கேள்விகள் எழுந்தன. செபி, ரிசர்வ் வங்கி தங்களது எதிர்வினைகளை ஆற்றத்துவங்கின..

ஆகஸ்ட் 2022ல் அமெரிக்க நிதி மற்றும் இன்ஸ்யூரன்ஸ் பிட்ச் குழுவினர் அடானியின் ’too much debt’ குறித்த எச்சரிக்கையை செய்தது. ஆனால் அடானியின் அரசாங்க நட்பும், வங்கி உறவுகளும் அந்த குழுமத்தை பாதுகாப்பாக வைத்துள்ளன என்பதையும் அது சேர்த்தே சொன்னது.

குவார்ட்ஸ் என்ற நிறுவனம் அதானி ’default’  ஆனால் ஸ்டாக் மார்க்கெட்டை மட்டுமில்லாது இந்திய பொருளாதாரத்தையும் தாக்கும் என கருத்துக்கூறியது. The tax payer will be hit, by indirect exposure to the group through LIC and the state owned banks என்றும் கூறியது. அதே நேரத்தில் public exchequer bail out would limit the damage  என்றும் குறிப்பைக் கொடுத்தது.

எல் அய் சி தனது ஜனவரி 30, 2023 எதிர்வினையில் LIC exposure in the Adani group as on date is 0.975 % of LIC's Total Assets under management at BOOK value என்ற கணக்கையும் Stakeholders safeguard   என்பதற்கான உறுதியையும் அது தந்தது.

புளும்பெர்க் மிகிர் சர்மா இவ்வாறு முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

Indians’ real fear is something else — that Gautam Adani and his companies simply cannot do what they say they will. Can they build the roads they have promised, improve the ports they have been given, maintain the airports they won in a bid? Until now, nobody else has been able to do so.

மோடி அரசாங்கம் அதிகமாக பேசக்கூடிய infrastructure  விஷயங்கள் பல அதானி குழுமத்தை நம்பியவை என மிகிர் சொல்கிறார். என்ன வேண்டும் சொல்லுங்க அதை செய்கிறேன் என அடானி வந்தவர் என்ற நம்பிக்கை இன்றுள்ள அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மிகிர் தனது எழுத்தில் பளிச்சென கீழ்கண்டவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

Wherever the money may have come from — public sector banks, pension funds, faceless pools of offshore capital — what matters for India’s growth is how productively it is spent. Effective oligarchs might be dangerous for a country and, if they’re corrupt, even more so — just ask Russia. Inept oligarchs are calamitous.

If Adani’s companies can deliver a fraction of what he has pledged, then perhaps, in time, they might even grow into the valuations they have already achieved on paper. If they fail, then a lot more goes down than his investors; Adani will take down India’s industrial policy with him. Their big bet on him will then rebound on India’s banks, on India’s politicians, and on India’s citizens.

பல நாடுகளில் அதானி கரம் இருக்கிறது. இந்தியாவில் எந்த இசம் கொண்ட மாநில ஆட்சியாக இருந்தாலும் 22 மாநிலங்கள் அதானியுடன் தொடர்பு வைத்துள்ளன. தற்போது பங்களாதேஷ் தனது  தெர்மல் பவர்’ வியாபாரத்தின் உடன்பாட்டை திருத்த வேண்டும் எனக் கோருகிற வரும் செய்திகள் வருகின்றன. வெளியுறவுத்துறை அமைச்சர் இறையாண்மை கொண்ட நாடு ஒன்றுடன் இந்திய கம்பெனி போடும் ஒப்பந்தம் அது. இதில் நாங்கள் சொல்ல என்னவிருக்கிறது எனக் கேட்டதைக் காண்கிறோம்.

இந்திய scroll  இணையதளம் ’volatile relationship between private capital and Indian state’ குறித்த கவலையை பகிர்ந்துள்ளது. 1980ன் லத்தீன் அமெரிக்கா, 1990 இறுதியிலான ருஷ்ய காட்சிகள் என அது ஒப்புமைப்படுத்தி பேசியுள்ளது. அதாவது  adding wealth without productivity, monopolizing asset ownership, with the help of Govt  cutting competition and allowing not entry of new firms  என்ற காரணிகளை அது அடுக்கியுள்ளது.

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு சட்டத்திற்கு புறம்பாக அதானி குழுமம் செயல்பட்டுள்ளது-  used offshore investment funds and accounting fraud to boost share prices and group earnings என்பதாகவுள்ளது.

அரசியல் பொருளாதார அறிஞர் அதுல் கோலி போன்றவர்கள் இந்தியா தாரளமயமாக்கல் 1990களிலிருந்தே   State- Capital- Private Business Alliance at the cost of fragmented  labour force  என சொல்லி வருவதையும் கான்கிறோம். இதில் வீர்யமான ஒன்றாகவே அதானி- மோடி கூட்டு   a newly designed pro business regulatory outlook  என தீபன்ஸ் மோகன் பிப் 3, 2023 கட்டுரையில் படிக்க முடிகிறது.

The rise of Adani is deeply connected not just with rise of Indian equity market but more specifically with Modi's vision and Gujarat connection   என்று FT பைனான்சியல் டைம்ஸ் எழுத்து ஒன்று நமக்கு சுட்டுகிறது. 2012லேயே ரகுராம்ராஜன் போன்றவர்கள் குரோனி கேபிடலிசம் இந்தியாவின் பிரச்சனையாகிவுள்ளது எனக் கூறிவந்தனர். ரூபா சுப்பிரமணியம் இந்த குரோனி மாடல் ஏறக்குறைய ருஷ்யாவின் சோவியத் வீழ்ச்சிக்கு பின்னாலான  gangster மாடல்தான் எனக் குறிப்பிடுவதையும் எஃப் டி சுட்டிக்காட்டுகிறது.

 ஜெய்ருஸ் பனாஜியின் சர்வே ஒன்றையும் கட்டுரையாளர்கள் எடுத்துச் சொல்கின்றனர். பனாஜி இந்தியாவில் மூலதனம் எப்பகுதியினரால் எவ்வளவு முதலீடாக்கப்பட்டுள்ளது என்ற சதவீதத்தை அவர்தம் விற்பனை வழி சதவீதமாக நமக்குத் தருகிறார்.

PSU 32.1   ,  LBH 12.1, First wave Post 1947 2.8,  New Capitalists 29.8, Foreign Firms 16.7,  others 3.2

LBH means Traditional Tata Birla Mahindras, singhanias

New capitalists - floated since 1980 like Ambani , Adani, sunil Mittal, Vedanta Anil Agarwal, Hindujas etc

others- ITC, L&T, HDFC etc.

New Capitalists கடந்த 40 ஆண்டுகளில் கணிசமாக- பாரம்பரிய நூற்றாண்டு முதலாளிகளைவிட வேகமாக வளர்ந்துள்ளதைத்தான் பனாஜியின் சர்வே நமக்கு சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

2015ல் credit Suisse   House of Debt  அறிக்கையில் severe stress உள்ள கம்பெனியாக அதானி குழுமம் பற்றி குறிப்பிட்டுள்ளதாம். வங்கி கடனில் 12 சதத்தை அதானி குழுமம் பெற்றுள்ளதாகவும், அதனால் அரசாங்க உறவின் காரணமாக அதிகமாக்கிக்கொள்ளவும் முடியும் என ஹெமிந்திர ஹசாரியின் எழுத்தொன்றை எஃப் டி சுட்டிக்காட்டுகிறது. 

Mauritius based letterbox firms மூலமான மோசடியை ஹிண்டன்பர்க் வெளிக்கொணர்ந்தது. 6 மொரிசஸ் அதானி கம்பனிகள் பற்றி  செபி மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை விசாரிப்பதாக 2021ல் நாடாளுமன்ற கேள்விக்கு 2021ல் துணை அமைச்சர் நிதி- பங்கஜ் பதில் அளித்த செய்தியை எகானாமிக் டைம்ஸ் தந்தது. அதே நேரத்தில் Enforcement Directorate ஏதும் விசாரிக்கவில்லை என்பதும் பதிவானது.

எல் சி அதானி போர்ட்ஸ் ல் 9.14 %, டோட்டல் காஸ் ல் 5.96 %, டிரான்ஸ்மிசன்ஸ் ல் 3.65 %, அதானி கிரினில் 1.28 % என    Stakes   வைத்ததால் அதன் இழப்பு 16500 கோடி என  scroll  இணைய தளம் சொல்கிறது.

Adani Response  என்கிற 413 பக்க விரிவான அறிக்கையை ஜனவரி 29 , 2023ல் அதானி குழுமம் வெளியிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் மீது அடானி தனது மீள் குற்ற சாட்டுக்களை சாட்டாமல் இல்லை.

Adani Portfolio, Short seller Allegations , Annexures  என்ற மூன்று பகுதிகளாக இந்த பதில் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது-  malicious- selective misinformation- concealed facts baseless - ulterior motive  என தன் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது. அதன் நோக்கம்  to create a false securities to enable Hidenburg an admitted short seller to book massive financial gain thorugh wrongful means at the cost of counteless investors. .

அதாவது ஹிண்டன்பர்க் முழுமையான ஆய்வு நிறுமனமல்ல-  short seller  நிறுவனமும் கூட. சரிவை உண்டாக்கி அதன் மூலம் பிறர் துயரில் இலாபம் பார்க்கும் நிறுவனம் என்ற பதில் தாக்குதலை ஹிடன்பர்க் மீது அடானி குழுமம் தந்துள்ளது. Hidenburg is an unethical short seller  என்ற தாக்குதலையும் அடானி குழுமம் தந்துள்ளது.

அடானி நாங்கள் எழுப்பிய அதன் மோசடிகளுக்கு எந்த பதிலையும் தரவில்லை என தனது எதிர்வினையை ஹிடன்பர்க் தந்தது. இந்தியாவின் புகழ்வாய்ந்த ஹரிஷ் சால்வே ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்களை விசாரிக்க இந்திய சட்டங்கள் நமக்கு கைகொடுக்கவில்லை- போதவில்லை என்கிறார். ஆனால் வழக்கு தொடுக்கவேண்டும் என்கிறார். வழக்கை சந்திக்க தயார் என்கிறது ஹிண்டன்பர்க்.

இது அதானியின் பிரச்னை- அதை தேசிய பிரச்னையாக இந்திய நாட்டின் மீதான சதியாக பார்க்கவேண்டும் என அடானி திசை திருப்புகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ பிரச்னையா- அல்லது ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவன அடானி பிரச்னையா என்றும் விவாதங்கள் நடக்கின்றன. புகழ்வாய்ந்த அறிஞர் குருசரண் தாஸ் போன்றவர்கள் எதிர்கட்சிகள் கோரும் ஜேபிசி மூலம் இந்திய முதலாளித்துவம் அக்னி பரிட்சை ஒன்றை நடத்திக்கொள்வது நல்லது என்கிற கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா இன்னும் பெரும் முதலாளித்துவ நாடாக  mature  ஆகாத சூழலில்,  முதலாளிகள் மீதான அவநம்பிக்கை பொதுப் புத்தியில் அதிகமாக இருக்கும் நாடாக இருப்பதாலும் இந்த சோதனையை இந்திய முதலாளிகள் நடத்திக்கொள்ள அவர் அறிவுறுத்துகிறார்.

அரசாங்கம்- மூலதனம்- கழுத்தறுக்கும் போட்டி என்பதில் அரசாங்க பாத்திரம் என்ன என்ற கேள்வியையும் அடானி நெருக்கடி நாட்டின் முன் வைத்துள்ளது.

முதலாளித்துவத்தில் ஏது நன்னெறிகள் என்ற கேள்விகளும், முதலாளிகள் நன்னெறியுடன் தங்கள் தொழிலை நடத்த முடியாதா என்கிற   எதிர்பார்ப்புகளும் கொண்ட சமூகமாக நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். முதலாளிகள்  National Builder- Wealth Creators  என்ற  நம்பகத்தன்மையை உருவாக்குவார்களா அல்லது அவர்கள் சுரண்டல் கொள்ளையர்- இலாப பிசாசுகள் என்ற  அவப்பெயர்களுடன் நெறி பிறழ்வார்களா என்பதை  வரலாறுதான் தீர்க்கவேண்டும்.

13 hrs  5-2-2023

Comments

Popular posts from this blog

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு