தோழர் பட்டாபியின் புதிய புத்தகம்- கட்டுரைத்தொகுப்பு
படிக்க சொடுக்குக: https://archive.org/details/converted_20190630
நவீன
சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்
படிக்க சொடுக்குக: https://archive.org/details/converted_20190630
ஆசிரியர்
விழைவு
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆளுமைகள் வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி, மேற்கு கல்வி, ஆண்ட இஸ்லாம்- கிறிஸ்துவம் என்ற பொதுச்சூழலில் வளர்ந்தவர்கள். இந்துமதத்தின் நிறைகுறைகளை அறிந்து அதன் பின்னணியில் வளர்ந்தவர்கள். சிலர் இந்திய பண்பாடு என்பதை மேற்கு பண்பாட்டிற்கு இளைத்த ஒன்றல்ல என நிறுவ முயன்றவர்கள். ஆங்கிலக்கல்வி, மேற்குலக பயணங்களால் தங்கள் சிந்தனையை கூர்தீட்டிக்கொண்டவர்கள். இந்திய விடுதலை என்கிற கனவை சுமந்தவர்கள். அய்ரோப்பிய தத்துவ பலத்திற்கு முன்னால் கையைக்கட்டிக்கொண்டு நிற்காமல் தங்கள் சிந்தனையை உலகறிய செய்யவேண்டும் என தவிப்புகொண்டவர்கள். இந்தியாவின் ‘கடைக்கோடி மனிதனுக்கும் வாழ்க்கை’ என்கிற பேரவா அவர்களை துரத்தி செயல்பட வைத்தது.
அவர்கள் தவறே செய்யாதவர்களாக இருந்திருக்க முடியாது. விமர்சனத்திற்கு ஆளாகாமல்
செயல்பட்டிருக்க முடியாது. அவமதிப்புக்களைக்கூட
அவர்கள் தாங்கி பல வாய்ப்புக்களில் பிரகாசித்தவர்கள்.
நவீனகால
இந்தியாவை கட்டுவதில் இவர்களது சிந்தனை செயல்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. இவர்களின் மண்சார்ந்த ஞானம் அவர்களது ஆக்கங்களை படிக்கும்போது நம்மை பிரமிக்க
செய்கிறது. தாகூரும், விவேகானந்தரும், ராதாகிருஷ்ணனும் நம்மை மட்டுமல்ல உலகை வியக்க
வைத்தவர்கள். சாளரமாக இருந்தவர்கள். லாலாஜி, பிபின், ராஜாஜி, கிருபளானி , நரேந்திரதேவா
குறித்தும் முன்கூட்டி நிற்கும் அனுமானங்கள்
(prejudice) எதிலும் ஆட்பட்டுக்கொள்ளாமல் அவர்கள்
ஆக்கங்களை படித்து அதன்மூலம் அவர்கள் இக்கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும்
பற்றி உணரப்பட்ட உன்னத சிறப்புகள், விமர்சனங்கள் அப்படியே கொடுக்கப்படுகின்றன.
இந்தியாவில்
இன்று நிலவும் அரசியல் சூழலில் இப்பெரியவர்களின்
எவரையும் விலக்கி ஒதுக்கா ஞானம் (wisdom of Inclusiveness) இளம் தலைமுறைக்கு சென்று
சேர வேண்டும் என்பதே கட்டுரை ஆசிரியரின் விழைவு. அவர்கள் சிந்தனையின் உன்னதங்கள் நின்று
நிலைபெறட்டும். வழக்கொழிந்தவைகள் மங்கி மறையட்டும்.
21-1-18 - ஆர். பட்டாபிராமன்
பதிவிறக்கம் செய்திட:
https://ia601503.us.archive.org/33/items/converted_20190630/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-converted.pdf
Comments
Post a Comment