மறுப்பு மற்றும் ஒத்துழையாமையின் மெய்யியல்
காந்தியை முன்வைத்து
ரமீன் ஜெகன்பெக்லூ
(காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 24.04.2019 அன்று செய்யப்பட்ட
அறிமுகவுரையின் கட்டுரை வடிவம்)
-ஆர்.பட்டாபிராமன்
ரமீன் ஜெகன்பெக்லூ (ஆர்ஜே) ஈரானியர். 28 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
ஈரானில் வாழமுடியாது சிறை சித்திரவதைகளுக்கு உள்ளாகி கனடாவிலும் இந்தியாவிலும் மாறி
மாறி வாழ்ந்துவருகிறார். ஜிண்டால் பல்கலையில் மகாத்மா காந்தி துறையில் குறிப்பாக அகிம்சை
சமாதானம் துறையில் நெறியாளராக துணை டீன் ஆக இருக்கிறார். The Decline of Civilisation, Gandhian Moment,
The
Disobedient Indian போன்றவை இந்தியாவில்
பேசப்பட்ட முக்கிய ஆக்கங்கள்.
ரமீன் பாரீஸ் பல்கலையில்
டாகடர் பட்டம் பெற்றவர். அங்கு 20 ஆண்டுகள் இருந்தவர்.
பிரஞ்சு, ஆங்கிலம்,
பெர்ஷியன் மொழிகளில்
எழுதிவருபவர். ஈரானிய மீடியாக்கள் அவரை சி அய் ஏ உளவாளி என்றன. அவர் 2006ல் கைதாகி கொடுமைக்கு உள்ளாக்கபட்டார். எபாடி ஷெரின்,நோம்சாம்ஸ்கி,
உம்பர்டோ எகோ, ஹபர்மாஸ், திமோதி, அந்தோணியா நெக்ரி, ஹோவார்ட் சைன் உள்ளிட்ட
400க்கு மேற்பட்ட அறிவுத்துறையினர் அவர் விடுதலையைக்கோரினர். 4 மாத தண்டனைக்குப் பின்னர் அவர் ஆகஸ்ட் 30
2006ல் விடுதலையானார். அது குறித்தும் Time will say Nothing என்கிற ஆக்கத்தை ஆர்.ஜே எழுதினார்.
பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையே ஆரோக்கியமான
உரையாடலை மேற்கொள்வது
என்பதில் நம்பிக்கை
கொண்டவர் ரமீன். டெகரானில் இருந்த இளம் பருவத்திலேயே தாகூர் நேரு ஆனந்தகுமாரசாமி எழுத்துக்களை அவர் அறிந்திருந்தார். ரஜினி கோதாரி நிறுவிய சி எஸ் டி எஸ் உடன் தொடர்பு அவருக்கு கிடைத்தது. அஷீஷ் நந்தியுடன் நெருக்கமாக
இருந்தார், இசையா பெர்லினுடன்
உரையாடல்கள் மேற்கொண்டவர் ரமீன். கன்பர்மிசம் எதிர்த்து
உரக்க குரல்; கொடுத்து வருகிறார்.. pursuit of excellence No herd mentality என்பதை அவர் வலியுறுத்திவருகிறார்.
ரமீன் மாறுபடும் காந்தியை முன்நிறுத்துகிறார். அவ்வாறு மாறுபட்டு செயலாற்றுதல் என்பது குழப்பத்தையோ வன்முறையையோ
உருவாக்கும் காரணியல்ல-
அது புத்தாக்கம் கொண்ட ஆக்கபூர்வ செயல் என்பது அவரது நிலைப்பாடு.
பணியாமை ஒத்துழையாமை என்பது அரசியல் கருவி, அது ஒருவகை கொள்கையும்
கூட.. பணிதல், மதமதப்பு,
ஏற்று ஒத்துப்போதல் (obedience,
complacency, conformism) நிலவும் சுழலில் மாறுபடுவது உரிமையும்
கடமையுமாகிறது.. வெகுஜனவாதம்திரள்
அறியாமை, சிந்திப்பற்ற சராசரித்தனம் (Populism,
mass immaturity, thoughtlessness- mediocrity)
கொண்ட வாழ்க்கை எதிர்மறையானது.
ஜனநாயகம் என்பது கேள்விக்கு
உட்படுத்துவதும் மாறுபடுவதற்குமானது. குடிமக்கள் கேள்விகேட்பது என்பதை விட்டுவிட்டு அனைத்தையும்
ஏற்று பணிந்து நிற்பது என்ற நிலை ஆபத்தானது.
மாறுபட்டாலே தேசத்துரோகம் என கட்டம்கட்டி
கொலைக்கூட செய்துவிடும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.
வெகுமக்கள்
அறியாமையும் பாப்புலிசமும் ஒன்றை ஒன்று தாங்கிப்பிடித்துள்ள உலகில் பரஸ்பர விவாதங்கள்
மூலம் மாற்றம் கொணர வேண்டும். மாறுபடுதல்
என்பது எப்படி எதிர்த்தல் என்பதிலிருந்து வேறுபட்டது என்பதை ரமீன் முன்நிறுத்துகிறார்.
மெததனம் (கிடக்கட்டும் விடு மனப்பாங்கு) ஏற்று பணிதல் என்கிர தன்மைக்கும் வன்முறை வழிபாடு
ஆகிய இரண்டிற்குமான மாற்றாக மூன்றாவது வழியாக காந்தியின் ஒத்துழையாமை- மறுப்பு முறை
அமைந்துள்ளது. நியாமற்ற சட்டங்களை எதிர்த்து ஒத்துழையாமல் நிற்பது- அதை நியாயபூர்வ
வழிமுறைகளில் செயலாக்குவது எளிமையான காரியம் அல்ல.
அசோக் வாஜ்பாய் முன்னுரை எழுதியுள்ளார். அசோக் இலக்கிய கர்த்தா- இந்தி கவிஞர். லலித கலா அகாதமியின்
சேர்மனாக இருந்தவர். ஐ ஏ எஸ் அதிகாரியும்கூட.. காங்கிரசின் அர்ஜுன் சிங் உடன் நெருக்கமாக
இருந்தவர்.. ரமீனின் சிறப்புமிக்க ஆக்கத்தை poetics of disobedience என அவர் மதிப்பிடுகிறார்.
II
காந்தியின் பணியாமை கலைப் பற்றி அறிய இவ்வாக்கம் உதவலாம்
என்கிறார் ரமீன். இப்புத்தகத்தில் ரமீன் மேற்கு சிந்தனையாளர்கள் பலரை பேசவைக்கின்றார். அரிஸ்டாட்டில், ஹன்னா அரெந்த், கார்னிலியஸ் காஸ்டோயரிடஸ், வில்ஹெல்ம் ரெயிச், கார்ல் ஜாஸ்பர்ஸ், எரிக் பிராம் பல இடங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றனர். விடுதலை, ஜனநாயக நடத்தை, வன்முறை, உண்மை, கன்பர்மிசம், மாறுபடுதல், கேள்விகேட்டல் போன்ற கருத்தாங்கள் உரக்க விவாதிக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தை ஊழல்படுத்தும் மதமதப்பு, பணிந்து ஏற்றல் ஆகியவற்றை
தோல்வி அடையசெய்தலில்தான் மறுப்பின் பெரும்கடமையே இருக்கிறது. செயல்படாமை அப்படியே
செயல்பட்டாலும்செக்குமாட்டுத் தனம் என்பதிலிருந்து உடைவு தேவைப்படுகிறது. (the real task is dissent to
challenge and defeat the twin corruptions of democracy: imposed conformism and normalised
complacency-What is needed : grammar
based on breakthro from the passivity of perpetually renewed sameness)
ரமீன் Politics and Political ஆகிய இருபதங்களை விரிவாக விவாதிக்கிறார். ஒன்றின் எதிர்மறைத்தன்மையும்
மற்றதின் ஆக்கபூர்வ புத்தாக்க செயல்பாடு குறித்தும் அற்புதமாக விளக்குகிறார். Political ஒன்றுபடுத்தும்,
உடன் நிற்பதற்குரிய சாலிடாரிட்டியை வலுப்படுத்தும். Politics பிளவுபடுத்துகிறது. அரசியல் வெகுஜனமயமாக்கம் என்பது லும்பன் தன்மையாக்கப் படுகிறது.
சக மனிதர்களுடன் பரஸ்பர இணக்கம்- ஒத்திசைவு என்பதை பொலிடிகல்
சார்ந்துள்ளது. அதிகமான பொலிட்டிகல் எனில் கூடுதலான மனிதாபிமானமே. உலகை கேள்விகளின்
மூலம் புரிந்துகொள்வோம். நமது வாழ்க்கைக்கு கேள்விகள் வழியே உருவாகும் பணியாமை எனும்
பொறுப்புணர்வால் புதிய அர்த்தம் கொணர்வோம்
அரசியல் மனிதர்களை சமூக உயிரிகளாக ஆள்வதை உத்தியாக வைத்துள்ளது.
ஆனால் பொலிட்டிகல் ஒன்றாக வாழ்வதற்கான பொதுவுணர்வாகவுள்ளது. இணக்கத்தை, பரிமாற்றத்தை
வளர்க்கிறது. மேலாண்மை (Dominance) என்பது
இல்லாமல் தனிநபர்களுக்கு சுதந்திரம் என்பதை கட்டமைக்க பொலிடிக்கல் நிற்கிறது. விவாதம்
இருந்தால் வன்முறை இருக்காது. (Politics- space of dominating others, political
living and speaking together. Where there is a possibility of dialogue there is
absence of violence.). அரசியல் ரெகுலேஷன், அதிகார பிரதிநிதித்துவம் என்கிறது. பொலிட்டிகல்
திறந்த வளமையான உரையாடலுக்கு நிற்கிறது.
இன்று ஒருவகையான எதிர்மறை சுதந்திரம் தொழிற்படுகிறது (negative
liberty). சுதந்திரம் என்பது தன்னை கேள்விக்கு உட்படுத்துவது, தன்னை கண்டறிவது என்பதாக இருக்கவேண்டும் (freedom means self qng and self invention
and determination). தற்காலிக அரசியலின் பலவீனமே வெளிப்படைதன்மையற்ற, தைரியமற்ற போக்காகும்- (lack of courage and outspokenness.)
சுயகேள்வி,
விருப்புறுதி, புதியன காணல் (Self qng, invention, determination) ஆகியவற்றிற்கு பொறுபேற்காத சுதந்திரம் எதிர்மறையானதாகிவிடுகிறது.
சுதந்திரத்தின் போக்கு என்பதே அரசு நிர்ணயிக்கும் அம்சமாக மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட
உரிமை வரம்புக்குள் சமூக நிறுவனங்களை ஆதரித்து நிற்கவேண்டும் என வரையறுக்கப்படுகிறது.
சுயேட்சையான விமர்சனபூர்வ செயல்பாட்டை ஊக்குவித்தல், இருப்பனவற்றை கேள்விக்கு உட்படுத்தல்
என்பதும் ஒருவரின் சமூக அரசியல் இயக்கத்தில் நின்றுபோகிறது. Sense of political
impotency- nonsensical junk thought- வரைமுறையற்ற ஆதரவைத் தரும் கூட்டமாக மக்கள் சுருக்கப்படுகிறார்கள்.
Reign of Undoubt- சந்தேகமற்ற
ராஜ்யம் என ஒன்றை நிறுவ முயற்சிக்கிறார்கள். உண்மையை பேசுகிறோம் என உரிமைகோரி வருபவர்களிடம்
சந்தேகம் எழாமல்- அப்படிப்பட்ட தன்மையால் ஏற்படும் விளவுகளை பொருட்படுத்தாத சூழல் உருவாக்கப்படுகிறது.
கூட்டம் எனில் அதுவே இறுதியானது என்பதை ரமீன் விமர்சிக்கிறார். கூட்டம் தன்னை தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் தன்மையற்றதாக இருக்கிறது. அது சிலரால் கட்டுப்படுத்தப்படுகிறது. கேள்விகேட்டுக்
கொள்ளாத, எளியவகைப்பட்ட புரிதல்களுடன் சிந்திக்காத தன்மை கொண்டிருக்கிறது. அது தோற்றம் தாண்டி சிந்திக்க பழகவில்லை. ஆனால் பொலிட்டிகல் என்பது கேள்விகேட்பதன் மூலமாக வளரவேண்டிய ஒன்றாகும்.
ஆயிரக்கணக்கானவர் தலைவர்
ஒருவருக்கு பணிந்து கிடப்பதை வெறும் கோழைத்தனம் என சொல்லிவிடமுடியாது. அது
indifference servitude ஆ என்னவென சொல்வது.
இந்த திசையில் வா என அறைகூவல் விடப்படுகிறது. தலைவன் தனக்கென ஒரு கூட்டத்தை
வைத்துக்கொண்டுவிட்டால் அவன் கோருவதையெல்லாம அக்கூட்டம் செய்துவிடுகிறது என Elias
Conneti சொல்கிறார். கூட்ட மனப்பான்மையில்
நாம்- அவர்கள் என்பது கட்டப்படுகிறது. நண்பன் எதிரி உருவகங்கள் ஏற்படுத்தப்படுகிறது
தைரியமற்ற வெளிப்படையற்றத்தனம்
(A lack of courage and outspokenness) என்பதுதான்
நடப்பு அரசியலின் பலவீனம். பொதுவாக தெரியாதவர் பக்கத்தில் மனிதன் அச்சத்துடன் நிற்கிறான்.
ஆனால் கூட்டத்தில் நிற்கும்போது இந்த அச்சம் அவனுக்கு தெரிவதில்லை. ஆனால் கூட்டம் தன்னை
தானே ஆள்வதில்லை. அதை சிலர்தான் கட்டுக்குள் வைத்துள்ளனர். . (The crowd is never ruled by itself, but it
is guided and governed by a few.)
நவீன அரசியல் எல்லோரையும்
எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முயற்சிக்கிறது. அது பொய்யுரைப்பதை விழிப்புடன் கவனத்துடன்
செய்கிறது. உரக்கப்பேசுவதை, வாயடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. தற்கால உலகில் அரசியலின்
வளர்ச்சி என்பது கேள்விகேட்காத, எந்தவித பொறுப்பிற்கும் உட்படாத, கொத்தடிமையாக குடிமகனை
வைத்து பார்ப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது
உலகின் தற்காலிக ஜனநாயகம்
ரெகுலேஷன்களின் விளயாட்டுபோல் இருக்கிறது. நிறுவனங்கள் மக்களை அப்படியே அசையாத திரளாக
பார்க்கின்றன. அவர்களை depublicised
individuals ஆக சுருக்கி தங்களுக்கான பொலிட்டிகல்
உருவாக்கத்தில் எந்த பெருமித உணர்வும் அற்றவராக
மாற்றிவிடுகின்றன.
கீழ்ப்படியாமை என்பது எதிர்மறை கருத்தாக, சட்டமறுப்பாக, நியாயமற்ற
வாதமுறையாக பார்க்கப்படுகிறது. ஆழமாக பார்த்தால் அது நமது அரசியல் நடைமுறை மீதான விரிவான
கேள்விகளை கொண்டதாக, சுதந்திரம் தன்னாட்சிக்கான கூறுகளை வலுப்படுத்துவதாக அமைகிறது.
கீழ்ப்படியாமை/ பணியாமை என்கிற மனம் எவருக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் சிந்தனை
மற்றும் செயலுக்கு மட்டும் கடப்பாடுகொண்டதாக இருக்கும். ஏற்று ஒப்புக்கொடுத்தல் இல்லா சமுகத்தை (Non
conformist community) யை உருவாக்க முயற்சிக்கும்
அன்றாட வாழ்வில் populism- Mass immaturity ஆளும்போது மனசாட்சியுடன்
புதியன காண்பதற்கான உறுதிப்பாடாக மாற்றம் மற்றும் பரிமாற்றத்திற்காக அது நிற்கும்.
சமூகத்தில் உள்ளார்ந்து காணப்படும் சராசரித்தனத்தை (mediocrity) வெளிக்கொணர ஒத்துழையாமை (disobedience-
dissent) சாதனமாக இருக்கும்.
சாக்ரடிசிலிருந்து கீழ்ப்படியாமையின் வரலாறு துவங்குவதாக
கொள்ளலாம். எண்ணங்களை, செயல்களை, நிறுவனங்களை கேள்விகேட்கும் மனத்திண்மை, நெறி மற்றும்
அஞ்சாமை நிலவும்போது அங்கு கீழ்ப்படியாமையின் மதிப்பு மானுடவிடுதலைக்குரிய ஒன்றாகிறது.
அரசின் சட்டங்களைவிட உயர்ந்தது மனசாட்சியின் நெறி (Moral conscience is higher law
than the law of State. Inner voice) உள்குரல்
என்பார் சாக்ரடிஸ்.
தாமஸ் ஜெபர்சன்
That Govt is best which governs least என்றார். தோரோவோ That Govt is best which governs not at all என்றார்.
அரசியல் என்பதைவிட மனசாட்சிக்கு சேவகனாக இருப்பது, சாக்ரடிஸ் தன்மையிலான கேள்வியாளனாக
இருப்பது அவசியமானது. அரசாங்கத்திற்கு விசுவாசியாக இருப்பதா அல்லது மனம் சிந்தனைக்கு
ஒருவர் விசுவாசியாக இருப்பதா என்பதுதான் கேள்வி
எந்த நேரத்திலும் தான் சரி என வரித்துக்கொண்டதை செய்வது உரிமையாகும் என தோரோ பேசினார்.
அதேபோல் தவறு என கண்டனம் செய்யப்படும் எதற்கும் என்னை ஒப்பவிடாமல் பார்த்துக்கொள்வதும்
அவசிமாகிறது. கேள்விகேட்பதும், கீழ்ப்படியாமையும் அவமானகரமானவை அல்ல. நியாயமற்ற
சட்டங்களை பெரும்பான்மை ஏற்கும்வரை காத்திருப்போம் என்பதும், எதிர்த்தால் இருப்பதைவிட
மோசமாகிவிட்டால் என்னவாகும் என்ற பதில் அளிப்பதும் தீமை நீடிக்க ஒப்புதல் தருவதேயாகும்
என்றார் தோரோ. கண்மூடித்தனமான பின்பற்றல் இன்றி democratize democracy என்பார்.
கேள்விகேட்கப்படாமல் பணிந்துபோவது கடமை என்றாகும் தருணம்
சுதந்திரம் மரணிக்கும் தருணமாகிறது என்றார் ஜார்ஜ் உட்லாக். (George
woodlock :when the duty to obey without qn is accepted that is the moment of
freedom’s death) . விடுதலை என்பது அரசியல் செயல் மட்டுமல்ல நெறிமுறை வகைப்பட்டதுமாகும்.
எட்வர்ட் செய்த் அதிகாரத்துடன் உண்மை பேசுதல்
speaking truth to power என்றார்.
கேள்வி கேட்டலே சிந்திப்பதாகும் - சிந்தனையின் அழைப்பே சுதந்திரமாகும்
- (Thinking is questioning -The call of thought is the call of freedom ) ஆகும்.
கேள்விகேட்டு வளரும் சூழலில்தான் புத்தாக்கம் நடைபெறும். இதை Heidegger “ To think is to put the world and ourselves into question என்றார். கேள்வி கேட்பதின் மூலமே பொதுவாழ்வின் பங்குதாரராக,
சுதந்திரத்தை உணர்பவராக ஒருவரால் இருக்கமுடியும்.
.
தன்னை பிரபலிக்கும், சுயநம்பிக்கைகொண்ட, உளவியல் மற்றும் சமூக ஆற்றல் நிறைந்த தனிநபர்கள் சமூக சட்டங்களை
மீறுதல் என்பது மனித உருவாக்கத்திற்குரியதே. இதை
autonomous democracy கற்றுத்தருகிறது.
சமூகத்தை தீவிர கேள்விக்கும் வரையற்ற விசாரணைக்கும் உட்படுத்தும் வெளியது. இதையே காஸ்டோரியாடிஸ் கூட்டு சுய ஆட்சி- இணக்க பரிமாற்றம் (Collective
self governance- harmonious exchange among citizens to make , to do and to
institute) என்கிறார்.
சுவீகரிக்கப்பட்ட கருத்தாங்கள் மீதான தீராத கேள்விகளை உருவாக்கி
பகுத்தறிபூர்வ நடவடிக்கைகளில் பணியாத மனம் இறங்கிடவேண்டும். நிறுவப்பட்ட உண்மைகள் என்பதை
தாண்டியும் அது பயணிக்கவேண்டும். (Moving
against all forms of established truth).
அசமத்துவத்திற்கும் அதாரிட்டியேரினசத்திற்கும் எதிரான போராட்டமாக அது இருக்கவேண்டும்.
கேள்வியுடன் ஆன சிந்தனைமுறை வெறும் கணக்கீட்டுமுறையல்ல. பணியமுடியாது எனும்போது
அடிமை மனத்தன்மையிலிருந்து விடுபடுகிறோம்
எல்லோரும் சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களா? என்கிற கேள்வியும் எழலாம் .மெத்தனம்
Complacency, ஏற்று அநுசரித்தல்
conformity ஆகியவை அவலமான உணர்வே ஆகும். அது ஒருவகைப்பட்ட சுயத்தை மெளனமாக்குவதாகும்
( self silencing).
Dissenting outsider
என்பதன் மூலம் ஒருவர் மானுடத்தின் அடிப்படைகளை கட்டமுடியும். வாழ்க்கையில் நடைமுறையில்
எடுத்துக்காட்டானவர் என்பதன் மூலம் பொதுவாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்க இயலும். Decivilisation என்கிற ஊழலை தடுக்கமுடியும். எந்த நிறுவனத்தையும்
கேள்விகேட்கமுடியும் என்கிற மனம் கொண்டவனே நல்ல குடிமகன். இதனால்தான் republic of
gadflies உருவாகும்.
நல்ல அரசியல்வாதி எனில் அவன் dissentயை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவரை உள்ளடக்கி கொள்ளும் விழைவும் விவாதத்திற்கு
தயாரான மனநிலையும் கொண்டவனாக இருக்கவேண்டும். Unexamined Political Life என்பதில் கூட்டுவாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது.
எல்லோரும் எதற்கும் கேள்விகேட்டால் குழப்பம் மிஞ்சாதா என்ற
கேள்விக்கு அப்படி ஏதேனும் மிதமிஞ்சி நடந்துவிட்டதா என்ன என்கிற பதிலை ரமீன் தருகிறார். கேள்வி கேட்பவன் பெரும்பாலும் தனித்தே விடப்படுகிறான். Dissenter is a lonely hero.
மனிதன் தன் உள்குரலை கேட்க கற்கவேண்டும். அது மிகவும் கடினமான
ஒன்று. தான் மட்டும் தனியே தன்னுடன் இருக்கும்
நிலையில் அது உருவாகிறது. எனவே தனியாகிவிடுவோமா என்பதற்கு அஞ்ச முடியாதவன் கீழ்ப்படியா
மனிதனாகிறான். (Disobedient man does not fear to be alone with himself, for the
good reason, that he listens to himself without being freightened at the
prospect of facing himself. Disobedience is neither a task for power nor a
passion to destroy)
III
காந்தி 20ஆம் நூற்றாண்டின் arch dissenter. காந்தி self organizing self transforming
democracy என்பதற்காக நின்றார். இன்று
காந்தியாக இருப்பது என்பது காதி அணிவதும் ஆஸ்ரம் வாழ்க்கையுமல்ல. பணியாமை எனும்
மனம் வசப்படுதல். அவர் மானுடத்தின் moral conscience தருணமாகியுள்ளார்.
Gandhi was not a man of conformity and complacency. அவர்
இருக்கும் நிலைமைகளை அப்படியே ஏற்று அனுசரிக்கவேண்டும் என்றோ அதில் மனநிறைவு கொள்ளவேண்டும் என்றோ நினைக்காதவர். மெத்தனம் இல்லாதவர்.
அவர் தோராவை 1907ல் படித்தார். அவருக்கு கவர்ந்த அம்சமாக
நியாயமற்றவற்றை எதிர்ப்பதில் உள்ள மனசாட்சி நெறி என்பது இருந்தது- moral
conscience in resistance against injustice. தான் பேசும் Inner voice என்பது கொலைகாரனுக்குரிய ஒன்றல்ல. அவன்கூட
தனக்கு அப்படி ஒன்று இருப்பதாக சொல்ல முடியும் என தனது உள்குரல் குறித்த விளக்கம் அளித்தவர்.
மார்ச் 3, 1936ல் நான் காந்தியியம் என எதையும் உருவாக்கவில்லை
எந்த செக்ட் குறித்த ஆதரவாளனாகவோ அதை பரப்புவனாகவோ இல்லை என காந்திஜி தெளிவுபடுத்தினார். ( I have conceived no such thing as Gandhism.
I am not an exponent of any sect. I never clarified to have originated any
philosophy- nor I am endeavoring to do so.)
காந்தியை பொறுத்தவரை அரசியல் செயல்பாடு என்பது சட்டபூர்வதன்மை-
ஒத்துழையாமை (கீழ்ப்படியாமை) இரண்டுமே உண்மை மற்றும் நன்னடத்தையை அடிப்படையாக கொண்டதாக
இருக்கவேண்டும்.
மேலும் டிஸொபிடியென்ஸ் என்கிற செயல் சமூகத்தில் நீதி நியாயத்தை
வலுப்படுத்துவதாகவும், சமூக அரசியல் நிறுவனங்களின் மாரல் டிம்பரை உயர்த்துவதாகவும்
அமையவேண்டும்.. அச்செயல் வெறும் விமர்சனத்தன்மை கொண்டதல்ல. மதிப்பீடுகளின் புரட்சியாகவும்
அமையவேண்டும். (Not only a critique of authority, but also a revolution of
values- not mere tactical value but having ethical significance.)
குடிமகனின் நெறிசார்ந்த கடமை என்பது நல்ல அரசு சூழல், அரசின்
இருப்பு நியாயத்தில் காணப்படுவது அல்ல. ஒருவரின்
சுயாட்சிக்குரிய திறன் மேம்பாட்டில்தான் தங்கியுள்ளது அக்கடமை என்பதை காந்தி உணர்ந்திருந்தார். உணர்த்த முயன்றார்.
விரிவடைந்த பன்மைத்துவம் (Enlarged pluralism) என்பதை கட்டுவதற்கு காந்தி முயற்சித்தார். எவர்
ஒருவரின் குரலும் கேட்கத்தகுந்த அதன் மூலம்
மாறுதலுக்கு உட்பட உகந்த நிறுவனங்களை- நடைமுறைகளை அவர் விழைந்தார்.
காந்தியின் ஒத்துழையாமை உண்மையை அடிப்படையாக கொண்டது. சிவில்
சமூகத்தின் மாற்றத்திற்குரிய ஒன்று. அகிம்சைவழி நிற்பது- வன்முறையை ஏற்காதது. ஒத்துழையாமை
காரணமாக வரும் தண்டனைகளை புகாரின்றி ஏற்பது. நெறிப்பயிற்சி, நன்னடத்தை பயிற்சிகளுடன்
இருப்பது என அந்தோணி பரேல் சொல்வார். ( It was grounded on truth, different in
attitude towards violence, adhered non violence in principle, required a minimum
degree of moral fitness, involving the practice of certain virtues and it
accepted the punishment consequent upon disobedience without complaint.
Gandhian civil disobedience had to be complemented by the reform of civil
society. Anthony Parel)
காந்திஜி உண்மையை ஏற்கனவே நிறுவப்பட்ட ஒன்றாக பார்க்கவில்லை.
வாழ்க்கை உண்மைக்கான தாகம் கொண்டதாகவும் நியாயத்திற்கான போராட்டமாகவும் இருக்கிறது.
அதாரிட்டி என்பதின் மீதான அச்சமற்ற தன்மை- அவசியமானால் எதிர்த்து நிற்கும் ஆற்றல் என்பதற்காக
அவர் நின்றார்.
சிலர் அதிகாரத்தை அடைந்துவிடுவதால் அல்ல, அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது அதை எதிர்க்கும்
சக்தியை எல்லோரும்
பெறுவதன் மூலமே உண்மையான சுயராஜ்யம்
வரும் என்பதை நடைமுறையில் காட்ட முடியும் என நம்புகிறேன் என்றார்
காந்தி. (Real swaraj
will come not by acquisition of authority by a few, but by the acquisition of
capacity by all to resist authority when abused… by educating the masses to a
sense of their capacity to regulate and control authority)
அவர் அரசை ஆன்மாவற்ற அப்பாற்பட்ட அதிகாரவர்க்க எந்திரம் என்றார் (impersonal bureaucratic soulless machine).
அதே போல் வரன்முறையற்ற கட்டற்ற தனிநபர் என்கிற கருத்தாக்கத்தையும் அவர் ஏற்கவில்லை.
ஜனநாயக குடிமகனுக்கு தன் திறமை மீதான சுயாட்சி மீதான allegianceதான் அவசியம் legitimation of state என்பதில் இல்லை. அவரைப்பொறுத்தவரை
நல்ல சமூகம் அமைவது அதன் உறுப்பினர்களை சார்ந்த விஷயமே தவிர அரசாங்கம் சார்ந்த ஒன்றல்ல.
உண்மையை அனைவரும் பின்பற்றத் துவங்கிவிட்டால் கிடைப்பது சுயராஜ்யம் என்றார்.
காந்திக்கு பணிவதற்கு தகுந்த நியாயங்கள் வேண்டும். ஒத்துழைப்பதற்கு
அதிக நியாயங்கள் வேண்டும். அரசின் சட்டங்களை மதிப்பதுதான் morally safe
என்பதில்லை. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இருக்கும் சட்டங்களை பின்பற்றலாம்.
சட்டங்கள் உண்மைக்கு அப்பாற்பட்டதாக இருக்குமெனில் அதற்கு ஒத்துழைக்காமல் இருப்பது
கடமை என்றவர் காந்தி. ( For Gandhi, we
should follow legislation only when it does not contradict our
conscience and so he said “ It is our first duty to render voluntary obedience
to law when law fosters untruth it becomes a duty to disobey it.)
காந்திவகைப்பட்ட ஜனநாயகம் dialogical process கொண்ட
political communityக்கானது. அது creative
dynamic force- questioning open வகைப்பட்டது. எந்தவொரு இயக்கமும் 5 கட்டங்களை
கடக்கவேண்டியிருக்கும் என வகைப்படுத்துவார் காந்தி. முதலில் அலட்சியம், அடுத்து கேலிக்குள்ளாதல்,
மூன்றாவதாக தவறாக பேசப்படுதல், நான்காவது ஒடுக்குமுறைக்கு உள்ளாதல், அய்ந்தாவது மரியாதை
பெறுதல். இதில் 4ஆம் கட்டத்தில் தாக்குப்பிடித்து தாங்காத இயக்கம் மரியாதை பெறுவதில்லை
.
காந்தியின் ஒத்துழையாமை அநியாயத்தின் முன்னர் அடுத்தவர் துன்பம்
உணரும் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலானது. அவர் The duty of disloyalty என்கிற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். நாம் நிறுவனங்களுக்கு
தான் விசுவாசமாக அல்லது விசுவாசமற்றவராக இருக்கிறோம். எனவே விசுவாசமற்ற நிலையில் நாம்
தனிநபரையல்ல, நிறுவனங்களையே அழிக்கிறோம் என தெரிவித்திருந்தார். காந்திஜிக்கு விவாதங்கள்
உரையாடல் வழியே பகிர்வுத்தன்மையில் பெறப்படும் அரசியல் மதிப்பே உண்மையாகிறது. அவருக்கு சுயராஜ்யம் என்பது நியாயமற்றவைகளை தடுப்பது என்பதை
கடமையாக கொண்டதாகும் (For
Gandhi Truth as a shared political value is examined and adopted thro the
exercise of dialogue. His swaraj is more duty to resist rather than right to be
free-and so to resist is to be autonomous)
Enlightened self rule, disciplined rule from within,
one’s rule over one’s mind என்பதிருந்தால்தான்
self rule என்கிற autonomy தன் விழிப்புணர்வை,
மனசாட்சியை உருவாக்கி மற்றவர்களுக்கும் அரசியல் கடமைகளை கொணரும்.. நம்மை ஆளத்தெரிந்துகொண்டால்
அதுதான் சுயராஜ்யம் என்றார் காந்தி (When we learn to rule ourselves, it is
swaraj).
அசமத்துவம், நீதியின்மை, அறியாமை உள்ள நாட்டில் சுயாட்சி/
தன்னாட்சி சாத்தியமா. காந்தியின் சுயராஜ்யத்தில் பொறுப்பற்ற சுதந்திரம் என ஏதுமில்லை.
ஒருவர் தன்னை திடமாக உருவாக்கிக்கொள்கிறார். பெரும் பொறுப்புடன் நடந்துகொள்வார். நியாயமற்ற
சட்டங்களை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் நாம் மற்றவரின் சுதந்திரத்திற்கான இடத்தை விசாலப்படுத்துகிறோம்
( No irresponsible freedom- rigourous moulding of the self- a heavy
sense of responsibility. By qng the
unjust law- disobeying the evil authority, we are enlarging the space of
freedom for others.)
எந்த ஒத்துழையாமையும் தவறின் அடிப்படையில் அமையக்கூடாது.
செயல்படாத சிந்தனையற்ற அரசியல் என்பதற்கு பதில் ஒத்துழையாமை அரசியல் என்பது சிறந்த
செயலாகும் (No disobedience is practiced in the name of wrongs. In the
area of Non thinking non acting politics, disobedience is an act of excellence).
காந்தியின் அரசியல் உண்மைக்கான ஊழியம். அதன் சாரம் அதிகார அமர்வு உத்தி என்பதில் இல்லை.
எல்லோரும்
ஒரே மாதிரி எண்ணுவதில்லை. சத்தியத்தின் கொஞ்சம் பகுதியையே பார்வையின்
பல கோணங்களிலிருந்து பார்க்கிறோம். ஆகையால் பரஸ்பர சகிப்புத்தன்மையே நடத்தைக்கான
தங்கமான விதி என்றவர் காந்தி
(The Golden rule of conduct is mutual toleration seeing
that they will never all think alike and we shall see truth in fragments and
from different angles of vision. Conscience is not the same thing for all).
காந்திக்கு உண்மையும் அகிம்சையும் நாணயத்தின் இருபக்கங்கள்.
அவர் நெறிமிகு தலைவர். அரசியல் என்பது அவருக்கு கோட்பாடல்ல, நன்னெறியாகும். அவரின்
இறைகோட்பாடோ, கருத்துகோட்பாடோ மிக வரையறைக்கு உட்பட்டது. பொதுவெளியை நன்னெறிபடுத்திடவே
அரசியல் செயல்பாடு எனக் கருதி செயல்பட்டவர் காந்தி.
விரிவடைந்த பன்மைத்துவம் என்பதற்குரிய நிறுவனங்கள், நடைமுறைகள்
தேவைப்படுகின்றன. சம்பாதித்யம் சொத்து உருவாக்கம்
என்பதிலிருந்து உண்மை, நேர்மை பக்கம் நவீன அரசியல் தன் மையத்தை நகர்த்திக்கொள்ளவேண்டும்
(Enlarged pluralism requires recreation of institutions and practices Where
the voice and perspective of everyone can be articulated tested and
transformed. A centre of gravity of modern politics is to be shifted from the
idea of material power and wealth to righteousness and truthfulness).
அவரின் காரணகாரிய அறிவு குறித்த சோதனை என்பது கலாச்சாரம்
மற்றும் மத அம்சங்களில் விமர்சனபூர்வ அணுகுமுறைக்குரியது. அது தன்போல் பிறரை பார்க்கும்
தன்மைகொண்டது (Gandhi’s acid test of reason a critical approach to cultural and religious values in order to
see how we are able to consider empathically the otherness of other).
அவர் வறட்டு மதவாதியல்ல- கலாச்சார மறுமலர்ச்சியாளருமல்ல-
முற்ற முழுதான காரணம் என்பதற்காக நின்றவரும் அல்லர். அவருக்கு விமர்சனபூர்வபூர்வமாக
சிந்திப்பதும் தீவிரமாக வாழ்வதும் ஒன்றே. For him thinking critically and living
radically became one. அவர் வித்தியாசமாக சிந்தித்தார்- சாதரணமான வாழ்க்கையை வாழ்ந்தார்.
பாரபட்சமில்லாமல், மெத்தனமில்லாமல், சராசரித்தனமின்றி அனைவருடனும் வாழவே முயற்சித்தார்.
பிடிவாதக்காரராக, வளையாதவராக, யாரும் நுழைய இடம்தராதவராக தனியே போய் நிற்கவில்லை.
தன்னை உணரச்செய்திடும், தன்னை பிரதிபலிக்கும் , தன்னை மாற்றத்திற்குள்ளாக்கும் தொடர் நிகழ்வாக அவர் அரசியலை உணர்ந்தார். சுயத்தை
தேடும் மனிதன் ஒருவரின் நன்னெறியின் வெளிப்பாடாக
அரசியலை அவர் புரிந்துகொண்டார் (For Gandhi politics remained a constant process of self realization, self reflection and self reform
of the individual. Gandhi considered politics as the expression of an
ethical duty by a person seeking his or her autonomy)
புரட்சியின் மதிப்பைவிட மதிப்புகளின் புரட்சியை அவர் வலியுறுத்தினார்.
நன்னெறிக்கான புரட்சி அவசியம். உண்மையைத் தேடல் என்பது அதிகார ஆசையில்லாத நிலையில்தான்
சாத்தியமாகும். கடமையை அனைவரும் செய்வோமானால் உரிமைகள் வசப்படும். (Gandhi emphasized revolution of values than values
of revoulution.Ethical revolution were necessary. Search for truth is possible
only thro non attachment to power. If we all discharge our duties, rights will
not far to seek)
Comments
Post a Comment