Skip to main content

மார்க்ஸ் மறைவின் போது…. (At The Time of Death of Karl Marx)

மார்க்ஸ் மறைவின் போது….
(At The Time of Death of Karl Marx)

                                                              -ஆர்.பட்டாபிராமன்

மார்க்ஸ் - மார்க்சியம் குறித்து ஏராள புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் வந்து கொண்டேயிருக்கின்றன, மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதை குறித்தே ஆயிரக்கணக்கான புத்த்கங்கள் வந்துவிட்டன. மார்க்சின் 200 ஆண்டுகள் என்பதால் மேலும் புதியவைகள் ஏராளம் வரலாம். மார்க்ஸ் மறைந்த மார்ச் 14 1883 நேரத்தில் அடுத்த சில நாட்களில்- மாதங்களில் நடந்தவை, வெளிவந்த பத்த்ரிக்கை செய்திகள், புறக்கணிப்புகள் பற்றியும்  நிறைய தகவல்கள் கிடைக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். மார்க்சின் கடைசி 10 ஆண்டுகள், கடைசி ஆண்டு என்பதை பற்றி கட்டுரைகள், நூல் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன.  அச்சூழலை தொகுத்து புத்த்கங்கள் வந்துள்ளன. அவர் மறைந்த சூழல்- வெளிவந்த செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.
மார்க்ஸ் மறைந்த இருவாரத்தில் தடையில் இருந்த ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சோசியல் டெமாக்ரட் பத்ரிக்கை அவருக்கு செலுத்தப்பட்ட பல்வேறு இயக்கங்களின் நினைவு இரங்கல் செய்திகளை தொகுத்து சிறப்பு இதழ் ஒன்றை வெளியிடும் என்றதுஆனால் அப்படி ஏதும்  வரவில்லை. முதலாண்டு  நினைவான மார்ச் 14 1884ல் கூட எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையை மட்டும் சிலர் வெளியிட்டனர்.
1933ல்  மார்க்சின் 50வது நினைவாண்டில் சோவியத்யூனியனின் மார்க்ஸ்- எங்கெல்ஸ்- லெனின் இன்ஸ்டிட்யூட் பல்வேறு மொழிகளில் எங்கெல்ஸ் நினவாஞ்சலி உரையை சிறு பிரசுரமாக வெளியிட்டது.1968 ஜி டி ஆர் எனப்பட்ட ஜெர்மன் ஜனநாயக குடியரசில் சில இரங்கல் செய்திகள், பத்ரிக்கைகள் எழுதிய அஞ்சலி தலையங்கங்கள் வெளியிடப்பட்டன. மாஸ்கோ பதிப்பகம் மார்க்ஸ்- எங்கெல்ஸ்  சேர்ந்த நினைவு குறிப்பு புத்தகம் ஒன்றை தமிழ் உட்பட பலமொழிகளில் வெளியிட்டது.

தற்போது மார்க்ஸ் பிறப்பின் 200 ஆண்டுகள் என்பதை கொண்டாடாத நாடுகளே இல்லை - அவரைப்பற்றி பாராட்டியோ தூற்றியோ பேசாத நாடுகளே இல்லை என சொல்லமுடியும். ஆனால் அவர் இறந்த மார்ச்14 1883 -அதை ஒட்டிய மாதங்களில் அவரது மறைவை பல்வேறு அமெரிக்க, அய்ரோப்பிய முக்கிய பத்ரிக்கைகள் செய்தியாகக்கூட தரவில்லை. தொடர்ந்து சோசலிசம் குறித்து கட்டுரைகளை வெளியிட்ட அட்லாண்டிக் மன்த்லி, நார்த் அமெரிக்கன் ரிவ்யூ, லண்டன் காண்டம்பரரி ரிவ்யூ  போன்றவை அக்க்கட்டுரைகளின் ஊடாக கூட மார்க்ஸ் மறைவை சொல்லவில்லை.
லத்தீன் அமெரிக்காவில் புகழ்வாய்ந்த தாராளவாத சிந்தனை பத்ரிகைகளிலும் தொடர்ந்த நாட்களில் செய்தி இல்லை. புகழ்வாய்ந்த ஜோஸ் மார்ட்டியின் அனுதாப செய்தி அமெரிக்க கூப்பர் சங்க நினைவு கூட்டம் ஒன்றில் சொல்லப்பட்டது. வெளிவந்த சில செய்திகளிலும் வாழ்க்கை குறிப்புகள் தவறாக இருந்துள்ளன. பல செய்திகள் கார்ல்மார்க்ஸ் மறைவு என்கிற தலைப்பிலேயே இருந்தன. பல்வேறு இடங்களுக்கும் சென்று கிடைத்த அனைத்தயும் தொகுத்து தரக்கூடிய கடினமான வேலையை பேராசிரியர் பிலிப் ஃபோனர்  Philip S Foner செய்தார். அந்த தொகுப்பு மார்க்சின் 90ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் 1973ல் வந்தது. 1983ல் மார்க்சின் மறைவு நூற்றாண்டில் இந்தியாவில் இத்தொகுப்பு கல்கத்தாவில் வெளியிடப்பட்டது.
ஆக்ஸ்போர்டு வரலாற்றாசிரியர் அசா பிரிக்ஸ் அவர்களின் முயற்சியால் பி பி சி 1981ல் கார்ல் மார்க்ஸ் தொடர் ஒன்றை ஒளி பரப்பியது. அசா பிரிக்ஸ் புத்தகம்லண்டனில் கார்ல்மார்க்ஸ்’  என வெளிவந்தது. பிலிப் ஃபோனர் பென்சில்வேனியான் லிங்கன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியராக இருந்தவர்.
கேபிள் மூலம் மார்ச் 14 1883ல்  ப்ரடெரிக் அடால்ப் சோர்கே, நியுஜெர்சிக்கு செய்தியை எங்கெல்ஸ் அனுப்புகிறார். அதில் மார்க்ஸ் இன்று மறைந்தார் என்பது  தந்தி  வாசகம்.
Liebknechtக்கு அன்றே எங்கெல்ஸ் கடிதம் எழுதுகிறார். என்னிடம் இருந்த ஒரே முகவரிக்கு அனுப்பிய டெலிகிராம் மூலம் மார்க்ஸ் மறைவை அறிந்திருப்பீர்கள். மார்க்ஸ் உணவு எடுத்துக்கொண்டால் தேறி வந்துவிடலாம் என கடந்த வாரம் லண்டனில் உள்ள புகழ் வாய்ந்த டாக்டர் தெரிவித்திருந்தார். பசித்து சாப்பிட துவங்கியிருந்தார் மார்க்ஸ். ஆனால் இன்று மதியம் வீடு கண்ணீரால் சூழ்ந்தது. அவர் பலவீனமாக இருக்கிறார் என சொல்லி மாடிக்கு அழைத்தனர். டெமூத் இரு நிமிடம் மட்டுமே அங்கு இல்லை. மார்க்ஸ் அரைதூக்கத்தில் இருப்பது போல இருந்தது. மாடிக்கு சென்று பார்த்தேன். அது நிரந்தர உறக்கம் என தெரிந்தது.The greatest mind of the second half of our century had ceased to think. மருத்துவர்கள் ஆலோசனை பெறாமல் ஏன் இப்படி திடிரென முடிவுவந்தது என்பதை சொல்லமுடியாது. கடந்த 6 வாரத்தில் நான் போதுமான அளவு பார்த்துவிட்டேன். ஜென்னியின் இறப்பு இறுதி நெருக்கடிக்கு காரணமாகாமல் இல்லை. பாட்டாளிகளின் இன்றுள்ள இயக்கத்திற்கு அவர் மூலகர்த்தா. நாம் அவருக்கு கடன்பட்டுள்ளோம் என்ற வகையில் அக்கடிதம் சென்றது.

எட்வர்ட் பெர்ன்ஸ்டினுக்கும் எங்கெல்ஸ் கடிதம் அதே நாளில் எழுதுகிறார். எனது தந்தி கிடைத்திருக்கும்திடிரென கொடுமையாக அது நடந்துவிட்டது. அவர் இரண்டு நிமிடங்களில் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். அவர் தேறிவருவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். கொள்கை, நடைமுறைகளில் எவ்வளவு மதிப்புமிக்க மனிதர் அவர். அவருடன் நீண்டகாலம் உடன் இருந்தவர்களால்தான் இதை உணரமுடியும். அவர் பலவீனமாகி இன்று காலை இறந்துவிட்டார் ( இக்கடிதத்தில் மார்னிங் என எங்கெல்ஸ் மணி குறிப்பிடாமல் எழுதுகிறார்அவரின் பலமான பார்வை தீர்க்கம் வருகிற ஆண்டுகளுக்காக அவருடன் சேர்ந்தே புதைக்கப்படும். நாம் யாரும் அந்த அளவு திறமையானவர்கள் அல்லர். இயக்கம் இருக்கும். ஆனால் அந்த மேம்பட்ட மூளையின் வழிகாட்டுதல் இல்லாமல். அவர் பல தவறுகளிலிருந்து அவ்வப்போது கொள்கையை  விடுவித்தவராக காத்தவராக இருந்தார். இப்போது நள்ளிரவை நெருங்கப்போகிறது. மதியமும் மாலையிலும் தேவையானதை செய்துவிட்டு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்
Johann Philip Beckerக்கு மார்ச் 15 1883ல் எங்கெல்ஸ் கடிதம் எழுதினார். கடந்த இலையுதிர்காலத்தில் மார்க்சை பார்த்து சென்றதற்கு நன்றி. நேற்று மதியம் 2.45க்கு அவரைவிட்டு இரண்டு நிமிடம் மட்டுமே இல்லாதிருந்தோம். அவர் தனது சாய்வு நாற்காலியில் ஆழத்துயில் கொண்டார். நமது கட்சியின் மிகச்சிறந்த மூளை சிந்திப்பதை நிறுத்திக்கொண்டது. வலிமையான இதயம் துடிப்பதை நிறுத்திக்கொண்டது. Internal Hemorrahage ஆக இருக்கலாம். நீங்களும் நானும்தான் 1848ன் பழைய சகாக்கள். புல்லட்ட்டுகள் சப்தமிடுகின்றன. நம்மில் ஒருவரையும் தாக்கலாம். ஆனால் அது நம்மை வெகுநாள் வலியில் கிடத்தாமல் வரட்டும்
Frideric Adolp Sorge சோர்கேக்கு மார்ச் 15 அன்று கடிதம் எழுதினார் எங்கெல்ஸ். தங்கள் தந்தி இன்று மாலை கிடைத்தது. மார்க்ஸ் உடல்நிலைப்பற்றி தொடர்ந்து தங்களுக்கு தெரிவிக்கமுடியவில்லை. அது மாறிக்கொண்டேயிருந்தது. அவரது துணைவியார் மரணத்திற்கு முன்னர் அக்டோபர் 1881ல் மார்க்ஸ் புளுரசியால் தாக்கப்பட்டார். 1882 பிப்ரவரியில் அவர் அல்ஜியர்ஸ் அனுப்பப்பட்டார். ஆனால் பயணத்தில் கடும் குளிரால் மறுபடியும் அவருக்கு நோய் ஏற்பட்டது. பின்னர் கோடை வெப்பத்திலிருந்து அவரை காத்திட அவர் மாண்டே கர்லோ மனோகோ அனுப்பப்பட்டார். பிறகு பாரிஸ் அருகில் அர்ஜெண்டில் பகுதியில் அவர் மகள் மேடம் லாங்கே (Longuet)வீட்டிற்கு சென்றார். Bronchitis தொல்லைகளிலிருந்து குணப்படுத்த முயன்றனர். குணம் அடைந்து வந்தார். ஆறுவாரங்கள் வெவே பகுதியில் இருந்துவிட்டு குணமாகி செப்டம்பர் 1882ல் திரும்பினார். இங்கிலாந்தின் தென் கடற்கரைப்பகுதியில் அவர் குளிர்காலத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டார். பனிக்காலம் வந்தவுடன்  வைட் தீவு பகுதியில் இருந்தார். ஆனால் அங்கு மழையின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டார். ஜென்னியின் மரணத்தை அடுத்து  பிராங்காட்டிஸ் தொல்லைகள் தொடர்ந்தது. Lung Abscess காரணமாக உடல் பலவீனமாகியது.  லண்டனில் தலைசிறந்த மருத்துவர் அவரை ரே லங்கெஸ்டர் அழைத்து செல்ல பரிந்துரைத்தார். தற்போது ஆறுவாரமாக கொடுமையான பய உணர்வுகள். அவரை பார்க்க உகந்தநேரமான மதியம் 2.30க்கு வந்தேன். வீடு கண்ணீரில் இருந்தது. Slight hemorrahage பலவீனமாக இருந்தார் என்றனர். அவரை தாயினும் மேலாக பார்த்து வந்த ஹெலன் டெமூத் அரைத்துக்கத்தில் இருக்கிறார் என தெரிவித்தார். நாங்கள் அறைக்குள் நுழைந்தோம்.. அவர் மீண்டு எழாத தூக்கத்தில் இருந்தார். அந்த இரண்டு நிமிடத்தில் அவர் அமைதியாக வலியேதுமின்றி போய்விட்டார். அவர் நாடித்துடிப்பும் மூச்சும் நின்றிருந்தது. எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் சுய தேற்றல் இயற்கையானது. முற்றுப்பெறாத வேலைகளை முடிக்கவேண்டும் என்கிற தவிப்புடன் இருந்து ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலை ஜெண்டிலான இறப்பை விட ஆயிரம் மடங்கு கசப்பானது.

Death is not a misfortune for him who dies but for him who survives என்றார் எபிகுரஸ். அற்பவாதிகளை நிர்மூலமாக்கிய அவர் இரண்டு நட்களில் அவரது மனைவியின் கல்லறைக்கு அருகில் அமைதியாக அடக்கமாவார்.  Mankind is shorter by a head, and the greatest head of our time. பாட்டாளிகளின் இயக்கத்தில் பிரஞ்சுகாரர்கள், ருஷ்யர்கள், அமெரிக்கர், ஜெர்மானியர் என அனைவரும் அத்தனை நெருக்கடியிலும் அவரிடம் வழிகாட்டலைப் பெற்றனர். ஆனால் என்ன இனி, தலமட்ட ஒளிவட்டங்கள், சிறு மூளைகள் எல்லாம்  சுதந்திரமாக இருக்கும். நாம் எதற்கு இருக்கிறோம். தைரியத்தை இழக்காமல் இருப்போம்
Friedrich Lessenerக்கு எங்கெல்ஸ் மார்க்ஸ் இறப்பு குறித்து கடிதம் எழுதினார். அக்கடிதமும் மார்ச் 15, 1883ல் எழுதப்பட்டது. நமது பழைய நண்பர் நேற்று  மூன்று மணிக்கு மென்மையாக அமைதியாக நிரந்த தூக்கத்தில் ஆழ்ந்தார். உடனடி காரணம் உள் ஹெமரேஜ் ஆக இருக்கலாம். இறுதி சடங்கு சனிக்கிழமை மணி 12க்கு நடைபெறும். Tussy(மார்க்சின் மகள் எலியனார்) உங்களை வர சொல்கிறார். அவசரத்தில் இக்கடிதம் எழுதப்படுகிறது.
Der Sozialdemokrat, Zurich பத்ரிக்கையில் மே 3 1883ல் மார்க்ஸ் இறப்பு குறித்து தெளிவிபடுத்தி எங்கெல்ஸ் எழுதினார். நம்து மாபெரும் கோட்பாடுகளின் ஆசான் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. சில விவரங்களை தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. மார்க்ஸ் லிவர் தொல்லைக்கு மருத்துவம் தரப்பட்டது. அவருக்கு வயிற்றுவலி, தலைவலி, இன்சோம்னியா அவதி இருந்தது. தொடர்ந்த இருமல் காரணமாக தொண்டை வலியாலும் தூக்கமில்லாமல் அவதிப்பட்டார்பிராங்காட்டிஸ் தாக்கத்தை அவர் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. இவை அவரது மரணத்திற்கு காரணமாயின. ஜென்னியின் மரணத்திற்கு 4 அல்லது 5 வாரங்களுக்கு முன்பாக ப்ளுரசி தொல்லை. ஆரம்ப நிமோனியா அறிகுறிகள் இருந்தன. அவர்  வைட் தீவு, அல்ஜீரியா பகுதிகளுக்கு குணமடைய சென்றார். ஆனால் தொடர் குளிர் மழையால் குணமடைய முடியாமல் நிலைமை மோசமானது. மாண்டே கார்லோ சென்று பிறகு மகள் லாங்கெ வீட்டில் அர்ஜெண்டில் பாரிஸ் பகுதியில் கோடையை கழித்தார்கடுமையான பிராங்காடிஸ் நோயிலிருந்து  குணமாகி வருகிறார் என டாகடர்கள் கருதினர்.
பிறகு வெவே என்கிற ஜெனிவா ஏரிப்பகுதிக்கும் அதன் பின்னர் (லண்டனில் வேண்டாம் என) தென் கடலோரப்பகுதியிலும் அவர் இருந்தார். செப் 1882ல் குணமாகி லண்டன் திரும்பினார். 300 அடி உயர்  ஹாம்ஸ்டெட் குன்று கூட என்னுடன் சிரமம் இல்லாமல் ஏறினார். நவம்பர் பனிமூட்ட பயத்தால் அவர் வைட் தீவு அனுப்பப்பட்டார். அங்கும் குளிர் , இருமல் அவதியால் பலவீனமானார். படுக்கையில் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டது. மார்க்சின் மகள் திருமதி லாங்கே மறைந்தார். மறுநாள் ஜனவரி 12,(1883) அன்று மார்க்ஸ் லண்டன் வந்தார். ஆகாரம் எடுக்கமுடியவில்லை. பால் தான் குடிக்க முடிந்தது. Lungs Tumorபிப்ரவரியில் ஏற்பட்டது. கடந்த 15 மாதங்களாக மருந்துகள் கூட பலனளிக்கவில்லை. பிராங்கடிஸ் தொலையிலிருந்து விடுவிக்க டாகடர்கள் முயற்சி பலனளித்தது. ஆகாரம் விழுங்கக்கூடிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அன்று 2 மணிக்கு வீடு கண்ணீரால் சூழ்ந்தது.

மார்ச் 14 1883 அன்று காலை அவர் பால், சூப் சிறிது ஒயின் எடுத்துக்கொள்ள முடிந்தது. அவரின் விசுவாச  டெமுத், மார்க்சின் அனைத்து குழந்தைகளையும் 40 ஆண்டுகளாக உடன் தங்கி வளர்த்தவர், அவர் அரைதூக்கத்தில் இருக்கிறார், வாருங்கள் பார்ப்போம் என அழைக்கிறார். நாங்கள் உள்ளே சென்று அவர் நிரந்தர துயில் கொண்டதை பார்த்தோம். இதைவிட அமைதியான சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடியான மென்மையான சாவு வராது. காபிடல் இரண்டாம் வால்யூம் 1000 ஃபோலியோ பக்கங்கள் முடியும் நிலையில் உள்ளது .. மார்க்ஸ்  என்னையும் மகள் எலியனாரையும் அவரது literary Executors என சொல்லி இருக்கிறார். (மேற்கண்ட விளக்கம் ஏப்ரல் 28, 1883 ல் லண்டனில் எங்கெல்ஸ் எழுதி மே 3ல் பிரசுரிக்கப்படுகிறது.)

Comments

  1. தோழர்.படடாபி, தெரியாத பல செய்திகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி.

    சு.கருப்பையா. பரூச், குஜராத்.

    ReplyDelete
  2. தோழர்.படடாபி, தெரியாத பல செய்திகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி.

    சு.கருப்பையா. பரூச், குஜராத்.

    ReplyDelete
  3. நன்றி கருப்பையா அவர்களே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...