https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, May 24, 2017

Kindle E Book




 பட்டாபி அவ்வப்போது எழுதிய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் பற்றிய 9 கட்டுரைகள்  'இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள்'  (Fore Runners of Communist Movement) KIndle E Book ஆக நிர்மலின் உதவியுடன் வெளியாகியுள்ளது.  அமேசான் கிண்டில் ஸ்டோர்களில் இ- புக்காக இதை பெறமுடியும். கிண்டிலில் வாங்கி தரவிறக்கம் செய்திட விலை ரூ 99. கிண்டில் அன்லிமிடெட் சந்தா உடையவர்கள் இதை இலவசமாக தரவிறக்கம் செய்து படித்துவிட்டு கிண்டில் ஸ்டோரிடம் ( நூலக புத்தகம் போல) திரும்ப கொடுத்து விடலாம்.
 கிண்டிலில் பட்டாபியின் முதல் புத்தகம்  பகவத்கீதை பன்முககுரல்கள். 138 பக்கங்கள் - 946 KB பைல்  Rs 49.  இரண்டாவது புத்தகமான இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகள் 143 பக்கங்கள்- 1554 KB . பைல்  Rs 99.  Amazon.in   authorதேடலில்  புத்தக விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிச இயக்க முன்னோடிகளுக்கு பட்டாபி எழுதிய எளிய முன்னுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

                     கம்யூனிச இயக்க முன்னோடிகள்
விடுதலை இயக்க காலத்தில் சோவியத்  புரட்சியின் தாக்கத்தில் வெளிநாடுகளில் சென்ற புரட்சிகரவாதிகளும், இந்திய இளைஞர்கள் சிலரும் இந்தியாவில் விடுதலைக்கு பின்னர் சோவியத்வகைப்பட்ட சோசலிச ஆட்சி என்கிற கனவை வைத்திருந்தனர். அதற்கு காங்கிரஸ் பேரியக்கமும், காந்தியும் வாகனமா என்பதில் அவர்கள் கொள்கை, நடைமுறை தெளிவுகளை போதுமான அளவு பெறமுடியாமல் போனது. சோவியத், பிரிட்டிஷ் வகைப்பட்ட சொல்லிக்கொடுப்புகளுக்கும், இந்தியாவில் யதார்த்த வெளியில் அவர்கள் உணர்ந்ததற்கும் ஏராள இடைவெளிகளை   கண்டனர். காங்கிரஸ், காந்தி என்பதுடன் மட்டுமல்லாது இடதுசாரிகள் என பல்வேறு போக்குகளுடன் ராய், போஸ், ஜேபி-லோகியா முரண்பாடுகளை அவர்கள் பார்த்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பணியாற்றிய இளைஞர்கள் தங்கள் மத்தியிலும்  கருத்து போரிட்டுக்கொண்டனர்.
ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களுடன் அரசியல் பயணம் நடத்திவரும் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னோடி தலைவர்கள் பற்றிய சில குறிப்புகள் இங்கு கட்டுரைகளாக தரப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக இங்கு தரப்படுகிறது இதில் சுந்தரையா, ஜோதிபாசு, சர்தேசாய், அதிகாரி, முசாபர், காட்டே போன்ற பலர் இடம் பெறவில்லை., சுந்தரையா, பாசு குறித்த எழுத்துக்கள் கிடைக்கின்றன . தொடர்ந்து முன்னோடிகளை அவர்களது வெற்றிகளை, தடுக்கி தடுமாறிய இடங்களை அனுபவத்திற்காக எடுத்துக் கொள்வது இந்திய அரசியல் பயிலும் மாணவர்களுக்கு அவசியமானதாக இருக்கும். படிக்கவும் கருத்துக்களை செழுமைபடுத்தவும் வேண்டுகிறேன்.

20-5-17                               ஆர்.பட்டாபிராமன்




No comments:

Post a Comment