Skip to main content

மார்க்ஸ் மறைவின் போது…. (At The Time of Death of Karl Marx) 2


                                                  II மார்க்சின் இறுதி சடங்கு

மார்க்ச் ஹைகேட் இடுகாட்டில் மார்ச் 17 1883 அன்று புதைக்கப்படுகிறார்.  ஜார்ஜ் எலியட் போன்றவர் கல்லறைகள்  ஹைகேட்டீல் இருந்தன. ஹெர்பர்ட் ஸ்பென்சர் நினைவு மானுமெண்ட் அங்குதான். மார்க்ஸ், ஜென்னி, மார்க்சின் பேரன், டெமுத் ஆகியவ்ர்களும் அங்குதான் புதைக்கப்பட்டனர். 4வயது பேரன் மார்க்ஸ் இறந்து 6 நாளில் இறக்கிறான். டெமுத் 1890 நவம்பர் 4ல் தனது 67ஆவது வயதில் இறக்கிறார்.
. ஆகஸ்ட் பெபல் மார்க்ஸிற்கு நினைவு சின்னம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றார். குடும்பத்தார்களுக்கு விருப்பமில்லை என எங்கெல்ஸ் தெரிவித்தார். மில்லியன் கணக்கான தொழிலாளர் இதயத்தில் மூளையில்  உயிப்புடன் வாழ்பவர் மார்க்ஸ் - நினைவு சின்னத்தை மார்க்சே விரும்பயதில்லை என்றார் லீப்னெக்ட். 1956ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸ் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இடம் பெற்று 10 அடி உயரத்தில் கிரானைட்டில் அனைத்துபகுதி தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என பொறிக்கப்பட்டு மார்பளவு சிலை வைக்கப்பட்டது.

மார்க்ஸ் புதைக்கப்படுவதற்கு முன்னதாக இறுதியாக அவரை பார்க்க கூடியிருந்தவர்கள் பார்த்திட அனுமதிக்கப்படுகிறார்கள். எங்கெல்ஸ், எலியனார் மார்க்ஸ், சார்லஸ் லாங்கே, பால் லபார்க், வில்லியம் லீப்னெக்ட், பிரடெரிக் லெஸ்ஸனர், கார்ல் ஸ்காரலெம்மர்,எட்வின் ரே லாங்ஸ்டர் வந்தனர். இடுகாட்டில் சோசியல் டெமாக்ரட் பத்த்ரிக்கை சார்பில் சிவப்பு ரிப்பன் கட்டிய இரு மலர் வளையங்களை லெம்கே வைத்தார். லெஸ்ஸனர் கலோன் கம்யூனிஸ்ட் வழக்கில் 1852ல்  5 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டவர்ரே லாங்க்ஸ்டர் விலங்கியல் பேராசிரியர். ஸ்கார்லெம்மெர் வேதியல் பேராசிரியர். இருவரும் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினர்கள்.
பலமுறை பிரசுரமாகியுள்ள எங்கெல்சின் புகழ்வாய்ந்த உரை அங்கு  நிகழ்த்தப்பட்டது. டார்வினுடன் ஒப்பீடு, புரட்சிகர இயக்கங்களுக்கு அளவிடமுடியாத நட்டம், உபரி மதிப்பு குறித்த அவரது கண்டுபிடிப்பு , அவரின் அறிவியல் பார்வை, புரட்சிகர குணம், முதலாளித்துவ முறையை தூக்கி எறிந்து பாட்டாளிகளின் விடுதலைக்கான பாதை.,தொடர்ந்த பத்ரிக்கை பணிகள் குறித்து எங்கெல்ஸ் எடுத்துரைத்தார். நாடுகள் அவரை துரத்தின, கடுமையாக வெறுக்கப்பட்ட மனிதராக அதிகம் பேசப்பட்ட மனிதராகவும் அவர் இருந்தார். அவருக்கு பல எதிராளிகள் இருந்திருக்கலாம் தனிப்பட்ட பகைவன் யாரும் இல்லை என்றார் எங்கெல்ஸ்.


ருஷ்ய சோசலிஸ்ட்களின் இரங்கல் செய்தியை மார்க்சின் மருமகன் லாங்கே பிரஞ்சில் வாசிக்கிறார். மூலதனத்தின் ரஷ்யா மொழிபெயர்ப்ப்பு முடிந்துவிட்டது. ருஷ்ய பல்கலைக்கழக மாணவர்கள் மார்க்சின் மகத்தான கொள்கையை அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் செய்தியாக அங்கு படிக்கப்பட்டது. பிரஞ்சு தொழிலாளர் கட்சி, ஸ்பானிஷ் தொழிலாளர் கட்சி தந்தி வாசிக்கப்படுகிறது.
ஜெர்மன் மொழியில் லீப்னெக்ட் உரையாற்றினார். மார்க்சின் நீண்டகால சகா எங்கெல்ஸ் மார்க்ஸ் பலரால் வெறுக்கப்பட்ட்வர் என்பதை குறிப்பிட்டார். ஆமாம் அதேபோல் பலரின் அன்புக்குரியவராகவும் அவர் இருந்தார். சுரண்டப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் அவரை நேசித்தனர். அவர் மகத்தான இதயமும் மூளையும் கொண்டவராக இருந்தார். அவரை அறிந்தவர்கள் இதை உணர முடியும். அவரின் மாணவராக, நண்பராக மட்டுமில்லாமல் ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பிலும் தான் பேசுவதாக லீப்னெக்ட் குறிப்பிட்டார். விஞ்ஞானம் ஜெர்மனிக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதற்கு தேசியம் என்கிற வரையறை இல்லை. அதேபோல்தான் காபிடல் சர்வதேச தொழிலாளர்க்குரியது. மார்க்ஸ் சோசியல் டெமாக்ரசி என்பதை செக்ட் என்பதிலிருந்து கட்சியாக்கி தந்துள்ளார். அது தோற்காமல் போராடும். இது ஜெர்மனிக்கு மட்டுமானதல்ல. மார்க்ஸ் பாட்டாளிகள் முழுமைக்குமானவராகியுள்ளார். அவரது நினவுகள் மறையாது. அவரது பாடங்கள் பல வட்டங்களை பாதிக்கும் என்றார் லீப்னெக்ட்.
ருஷ்ய பெண் மாணவர்கள் மற்றும் பீட்டர்ஸ்பர்க் மாணவர்கள் சார்பில் மலர் வளையம் வைத்திட பணவிடை எம் ஓ அனுப்பியிருந்தனர். அருகாமை பகுதிகளிலிருந்து மலர் வளையங்கள் வந்து கொண்டிருந்த செய்தியை எங்கெல்ஸ் தருகிறார்.
மார்க்ஸ் இறந்தவுடன் இரு முக்கிய வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஒன்று எலியனார் அவரது மகள் எழுதியது. மற்றது ப்ரடெரிக் ஏ சோர்ஜ். எலியனார் தன் கணவர் எட்வர்ட் ஏவ்லிங்கின்  ப்ராக்ரஸ் பத்ரிக்கையில் மே, ஜூன் 1883ல் எழுதினார்.முதல் இரண்டு சகோதரிகள் (மார்க்சின் பெண்கள்) பிரஞ்சு சோசலிஸ்ட்களான லபார்க், லாங்கேவை மணமுடித்தனர். மூன்று பெண்களுமே மார்க்சுடன் படிப்பது, செய்தித்தாள் படித்துக்காட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்துவந்தனர்..
ப்ரொக்ரஸ் இதழ்களில் தனது தந்தையின் மகத்தான படைப்பான காபிடல் குறித்து எழுத அவரின் உத்தேசம் பற்றி எலியனார் தெரிவித்தார். மார்க்சின் பிறப்பு, பள்ளிக்காலம், ஜென்னி காதல், பத்ரிக்கை பணிகள்- அதன் கசப்பான அனுபவங்கள்,ஹெகல் குறித்த் ஆய்வுகள், சோசலிச எழுத்துக்கள், எங்கெல்ஸ் உடன் புனித குடும்பம் எழுதியது, பிரெளதான் உடன் தத்துவத்தின் வறுமை விவாதம், கம்யூனிஸ்ட் லீக் அமைத்தது.- அதன் மூலம் முதன்முதலாக சர்வதேச சோசலிச இய்க்கம் உருவாக்கப்பட்டது, 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை பின்னர் பல அய்ரோப்பிய மொழிகளில் மொழிமாற்றம் பெறுவது போன்ற பல்வேறு மார்க்சின் பணிகளை எலியனார் தொகுத்து சொல்கிறார். சென்று தங்கிய நாடுகள், அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்படுவது பற்றியும் சொல்கிறார்.
1853 கலோன் வழக்கிற்கு பின்னர் தீவிர அரசியல் நடவடிக்கையிலிருந்து மாறி பொருளாதார ஆய்வுகளை மார்க்ஸ் மேற்கொண்டார் என்கிறார் எலியனார். 1859ல் மதிப்பு கொள்கை பற்றி 1859க்கு வந்தடைகிறார். 1867ல் ஹாம்பர்கில் தனது தலையான படைப்பான காபிடல் வெளியிடுகிறார். முன்னதாக 1864 செப்டம்பரில் சர்வதேச தொழிலாளர் சங்கமைக்கப்பட்டு மார்க்ஸ் துவக்கவுரை ஆற்றுகிறார். 1873ல் ஜெனரல் கவுன்சில் லண்டனிலிருந்து நியுயார்க்கிற்கு அவரது ஆலோசனைப்படி மாற்றப்படுகிறது. அவர் உடல்நிலை பாதிப்பால் தொடர் வேலைகள் நின்று போயின. அவரது இரண்டாவது வால்யூம் அவரின் உண்மையான, பழைய நண்பர் எங்கெல்ஸால் கொணரப்பட இருக்கிறது. அடுத்த வால்யூம்கள் உள்ளன. அவரின் ஆளுமை, மகத்தான அறிவு, நகைச்சுவை உணர்வு, அன்பு, பரிவு அனைத்தும் கலந்த மனிதன் இதோ என இயற்கை எழுந்து நின்று சொல்லும் என எலியனார் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா