Skip to main content

மார்க்ஸ் மறைவின் போது…. (At The Time of Death of Karl Marx) 3

III  அமெரிக்காவில் மார்க்ஸ் மறைவு குறித்து
அமெரிக்க நியுயார்க டிரிப்யூன் வாசகர்களுக்கு மார்க்ஸ் தெரியதவர் அல்லர். 1851-62 களில் அதில் எழுதிவந்தார். அப்பத்ரிக்கை அவரது மறைவை மார்ச் 17 1883 சனி அன்று செய்தியாக வெளியிட்டது. அவரது பத்ரிக்கை தொடர்பு குறித்தோ அவரது பங்களிப்பு குறித்தோ ஏதும் சொல்லவில்லை. அவரது கட்டுரைகள் அப்பத்ரிக்கை விற்பனையான 2 லட்சம் வாசகர்களிடம் சென்றடைந்த காலமது.
மார்க்சின் காபிடல் ஆங்கில பதிப்பு  1887ல் தான் வந்தது. லேபர் ஸ்டாண்டர்ட் பத்ரிக்கை 1876-78ல் சில குறிப்புகளை வெளியிட்டது. அட்டோ வெய்டெமேயர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மகத்தான பங்களிப்பை செய்தார். பாரிஸ் கம்யூன் 1871ல்  காலத்தில் மார்க்ஸ் பெயர் அமெரிக்காவில் நன்றாகவே பரவியது. மார்க்சின் கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்ட நியுயார்க் ஹெரால்ட் மார்க்சின் பதிலாக எழுதிய  விளக்கத்தை போட மறுத்தது. அதே நேரத்தில் நியுயார்க் வேர்ல்ட் எனும் பத்ரிக்கை பாரிஸ் கம்யூன் பற்றிய மார்க்ஸ் பேட்டியை ஜூலை 18 1871ல் வெளியிட்டது. ஜனவரி 5 1879 சிகாகோ டிரிப்யூன் மார்க்சின் பேட்டியை வெளியிட்டது. 1880 ல் நியுயார்க் சன் பத்த்ரிக்கை நிருபர் அவரின் ஆளுமையை வியந்து பேசினார். அமெரிக்காவின் சிறந்த சோசலிச தலைவர்கள் ஜோசப் வெய்டெய்மர், பிரடெரிக் சோர்ஜ் ஆகியவர்களுடன் மார்க்ஸ் எங்கெல்ஸ் தொடர்பு இருந்தது. லாசேல் செல்வாக்கு தொழிற்சங்கங்களில் பெருமளவு இருந்தது. மார்க்சின் கருத்துக்களை கொண்டு செல்வதில் சோசலிஸ்ட் தலைவர்கள் முன்நின்றனர்.
சர்வதேச சிகரட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சாமுவேல் கோம்ஸ் போன்றவர் எஃப் எல் என்கிற சங்கத்தை துவங்கியிருந்தனர். அதே போல் சி எல் யு என்பதும் மார்க்ஸ் மறைந்த காலத்தில் செல்வாக்குடன் நியுயார்க்கில் இருந்தது. இதில் சோசலிஸ்ட்கள் செல்வாக்குடன் இருந்தனர். வர்க்கப் போராட்டத்திற்கு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் அமைப்புகளும்  அவசியம் என்பதையும் மார்க்சின் சிந்தனைகளையும் இவர்கள் கொண்டு சென்றனர். மேதின தியாகிகள் விஷயத்தில் அவர்களது வாழ்க்கை குறிப்புகளை வெளிக்கொணர்ந்த Knights of Labour பத்ரிக்கை குழுவினர் மார்க்ஸ் மறைந்தபோது அவர் குறித்து தலையங்கம் வராமல் பார்த்துக்கொண்ட செய்தியை நாம் காணமுடிகிறது.
Newyork Sun பத்ரிக்கை A vigorous and Fruitful Thinker என்கிற கட்டுரையை மார்ச் 16 1883ல் வெளியிட்டது. பகுனின், லாசேல் என்பவர்களையெல்லாம்விட authentic guide to the workingmen என மார்க்ஸ் பற்றி அது பேசியது. மார்க்சின் மகத்தான காபிடல் படைப்பை பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளை முன்வைத்தது. New Yorker Volkszeitung மார்ச் 15 1883ல் மார்க்ஸ் மறைவு குறித்து எழுதியது. மானுடர்களின் துயரத்திற்கான் சிகிட்சையை கண்டுபிடித்தவர் மார்க்ஸ் என்றது. முழுமையாக காபிடலை முடிப்பதற்கு முன் அவர் கை அசைவற்று நின்றது. ஈடுசெய்யமுடியா பேரிழப்பு. அவர் சிந்தனையாளர் மட்டுமல்ல. போராடுபவர்.  சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்கிற  நடைமுறையை அவர் துவங்கிவைத்த்வர் என்று புகழாரம் சூட்டியது. Embodiment of Modern Socialism என புக்ழ் அஞ்சலி செய்தது.
நியுயார்க்கின் Freiheit பத்ரிக்கை  மார்ச் 24 மற்றும் ஏப் 14 1883. தனது நூற்றாண்டின் மகத்தான சிந்தனையாளர் என எழுதியது. நவீன சோசலிசத்தின் தந்தை என் புகழாரம் சூட்டியது. உலக பாட்டாளிகளே ஒன்றுசேருங்கள் என்பது வலிமையாக பரவி மந்திர சொல்லாகியுள்ளது. அய்ரிஷ் தொழிலாளர் பத்ரிக்கை, கார்பெண்டர் அவரது மறைவு செய்தியை தந்து அவருக்கு புகழ் அஞ்சலி செய்தன.
Progressபத்த்ரிக்கை அவர் தனது நாட்டிற்காக மட்டுமோ, அதன் புகழுக்காக மட்டுமோ நிற்கவில்லை. தாய்மண் அவரை விரட்டியதுஉலகம் அவரது நாடாயிற்று. அவர் எந்த பதவிக்காகவும் ஏங்கவில்லை. அப்பாவி உழைக்கும் ஏழைகளின் விடியலுக்காக நின்றார். இன்று பத்ரிக்கைகள் அவரை கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தின் அடிகள் ஒவ்வொரு பகுதியிலும் புரட்சியின் புயலை ஆரம்பிக்கும். கரை நோக்கி தங்கள் கப்பலை ஆள்பவர்கள் திருப்ப வேண்டியிருக்கும் என்று எழுதியது.
நியுயார்க் Voice of the people  மார்ச் 18 1883ல்  மாபெரும் மார்க்ஸ் மறைந்தார் செய்தியை வெளியிட்டது. கலிலியோ, நியூட்டன், வால்டேர் வரிசையில் மார்க்ஸ் புகழ் எனும் கோயிலில் நிரந்தரமாக இனி இருப்பார் என்றது. Springfield massachusetts Republican மார்ச் 17 1883ல் கற்றல் செயல்பாடுகள் நிறைந்த மனிதர் என மார்க்ஸை சித்தரித்தது. சின்சினாட்டி அமெரிக்கன் இஸ்ரேலியட் பத்ரிக்கை சோசலிஸ்ட்கள் தங்கள் மனிதரை இழந்துவிட்டனர் என்று எழுதியது. Chicago Tribune  Scholar and Thinker மறைவு என்று மார்ச் 17 1883ல்   செய்தி தந்தது.
Chicago Arbeiterzeitung மார்க்ஸ் எனும் சிந்தனையாளர் போராளி என எழுதியது. இக்காலத்தில் அகஸ்டஸ் ஸ்பீஸ் மேதின தியாகிகளுள் ஒருவர் இப்பத்ரிக்கையுடன் தொடர்புள்ளவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். தன் காலத்தின் மிகப்பெரிய வரலாற்று ஆசான் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ, அகிலம் மூலம் பாட்டாளிகளின் விடுதலைக்கு வழிகாட்டியவர். முதலாளித்துவம் வீழ்த்தப்படக்கூடியதே என்ற உறுதியை தந்தவர். உலகத்தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் என்கிற சாவியையும் அவர் தந்துள்ளார் என்றது அப்பத்ரிக்கை. Daily Alta California இதழ் His Life was not Success என்கிற தலைப்பிட்டு மார்ச்18 1883ல் எழுதியது. வாழ்நாள் முழுக்க நாடு பெயர்ந்து கொண்டிருந்ததை அது குறிப்பிட்டது. தனது கடுமையான பணிகள் தன் காலத்தில் வெற்றிபெறாததை அவர் கண்ணுற்றார் என்றது. அகிலத்தில் தலைமை பாத்திரம்  அவரிடத்து வந்தது குறித்த பெருமிதத்தை அது பகிர்ந்துகொண்டது.
மார்ச் 20 1883 கூப்பர் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் சர்வதேச அஞ்சலி கூட்டம் பற்றிய செய்தியை நியுயார்க் சன் ரிபோர்ட் செய்தது. அமெரிக்கர், ஜெர்மானியர், ருஷ்யர், பிரஞ்சுகாரர், பொகிமியர் என கூட்டம் வழிந்தது. ஏராள பெண்கள் வந்தனர். கூட்டம் மார்ச் 19 1883ல் நடந்தது. அனார்க்கிஸ்ட், சோசலிஸ்ட், அமெரிக்கன் பெடெரேஷன் என அனைவரையும் அக்கூட்டம் ஒருங்கிணைத்தது. கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோவை ஆங்கிலத்தில் கொணர்ந்து அதை தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்வது என கூப்பர் சங்கம் முடிவெடுத்தது. மொழிபெயர்ப்பு அவ்வளவு சரியாக இல்லை என எங்கெல்ஸ் தெரிவித்ததாக செய்தியும் உள்ளது. முதல்நாள் புருக்ளின் தொழிலாளர் கொடி இறக்கி அஞ்சலி கூட்டம் நடத்தியிருந்தனர். பாரிஸ் கம்யூன் பங்கேற்ற தோழர்கள் கிளிவ்லாந்து பகுதியில் மார்ச் 18 அன்று இரங்கல் கூட்டம் நடத்தினர்.  Paul Grottakau பாரிஸ் கம்யூன் வீரர் சோசலிஸ்ட் தலைவர் மார்க்சை கெப்ளர், டார்வின் ஆகியோருடன்  ஒப்பிட்டு பேசினார்.
johann Most தீவிர அனாக்க்சிசவாதி. அவர் மார்க்ஸ் இரங்கல் கூட்டத்தில் தான் மார்க்ஸை லண்டனில் சந்த்திது  ஆசி பெற்றதாகவும் அவரது காபிடலை ஜெர்மன் முழுக்க கொண்டு சென்றதாகவும் பேசியது குறித்து அமெரிக்க சோசலிஸ்ட்கள் எங்கெல்ஸ்க்கு கடிதம் எழுதினர். மார்க்ஸ் அனார்க்கிசத்திற்கு ஆதரவாக இருந்தாரா என்பதை தெளிவுபடுத்தக்கோரினர். Van Patten என்பார் அதை எழுதியிருந்தார். கடிதத்திற்கு எங்கெல்ஸ் ஏப்ரல் 18 1883ல் பதில் எழுதினார். அனார்க்கிசத்திற்கும் மார்க்சியத்திற்கும் பொதுவானவை ஏதுமில்லை என்றார் எங்கெல்ஸ். அரசு என்கிற அரசியல் வடிவத்தை ஒழித்துவிட்டுத்தான் பாட்டாளி புரட்சி என்கிற அனார்க்கிசத்தை பகுனின் எழுப்பியபோதே மார்க்ஸ் எதிர்த்து நிராகரித்தார். 1872 செப்டம்பரில் அனார்க்கிஸ்ட்கள் அகிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  அனார்க்கிஸ்ட் என சொல்லிக்கொண்டு மார்க்சிடமிருந்து உதவியை மோஸ்ட் பெற்றிருக்கமுடியாது அவ்வாறு சொல்வது ஏமாற்று. மோஸ்ட் காபிடலின் சில பகுதிகளை பாப்புலர் சம்மரி என மொழிபெயர்ப்பு செய்தபோது அதை சரி செய்ய மார்க்ஸ் ஒப்புக்கொண்டதே தன் பெயரை மோஸ்ட் எங்கும் பயன்படுத்தகூடாது என்கிற நிபந்தனையில்தான் என எங்கெல்ஸ்  குறிப்பிட்டார். இந்த மோஸ்ட் என்பார் அமெரிக்க அனார்க்கிஸ்ட்கள் தங்களுக்கான சர்வதேச அமைப்பை நடத்தியவர்களில் ஒருவர்.. சிகாகோ மே தின தியாகிகள் கூட இவரின் அதிதீவிரத்தை ஏற்காமல் இருந்தனர்.

CLU மத்திய அமைப்பு நியுயார்க்கில் மார்ச் 25 1883ல் கூட்டம் நடத்தி மார்க்ஸிற்கு புகழ் அஞ்சலி செய்ததுபல்வேறு அமைப்புகளின் பல்வேறு தேசிய இனம் சார்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டு உரையாற்றினர். ஜான் ஸ்விண்டன் என்பார் மார்க்சை இங்கிலாந்து சென்றபோது சந்தித்த அனுபவத்தை விவரித்தார். அங்கு இரு தலைமுறைகளுடன் மகிழ்வாக சிந்தை பொங்கிட மார்க்ஸ் வாழ்ந்ததை பற்றி அவர் குறிப்பிட்டார். அவருடன் உரையாடியபோது அவர் சாக்ரடிஸ் போல பேசுவதாக தான் உணர்ந்ததாக ஜான் த்ரிவித்தார். பகுனின், லாசேல் பற்றியும் கூட அவருடன் உரையாட முடிந்தது. கடற்கரையில் உலாவியபோது அங்கு வந்த குழந்தைகளுடன் அவர் குதுகுலமாக பேசினார். குழந்தைகளை  பிடிக்கும்  நேசிக்கிறேன் என்றார் மார்க்ஸ். அமெரிக்க நண்பனாகிய என்னை ரயில்வே நிலையம் வந்து கொண்டுவிட்டு அரைமணிநேரம் காத்திருந்து நகைச்சுவை பொங்கிட உரையாடியதையும் ஜான் நினைவு கூர்ந்தார். மாஜினி ஒன்றுபட்ட இத்தாலி கனவை 40 ஆண்டுகள் கொண்டிருந்து போராடி கண்டார். வெண்டல் பிலிப்ஸ் நீக்ரோக்கள் விடுதலைக்காக 40 ஆண்டுகள் உழைத்து அதை காணமுடிந்தது. விக்டர் ஹ்யுகோ 400 அண்டுகள் பிரஞ்சு குடியரசு கனவை கண்டார். பார்க்கமுடிந்தது. கார்ல் மார்க்ஸ் தேச விடுதலையை தாண்டி சிந்தித்தார். அவர் மாபெரும் மனிதகுல விடுதலைக்காக போராடி வாழ்ந்தார். தனது சொந்த வாழ்க்கையை எதுவும்  எதிர்பார்க்காமல் தொலைத்துக்கொண்டார். அவர் மறைந்திருக்கலாம் மனிதகுலத்தின் மனதில் வாழ்ந்துகொண்டேயிருப்பார் என ஜான் உரை அமைந்தது.

புகழ்வாய்ந்த ஸ்பானிய கவிஞரும் கியுபாவின் அபோஸ்தலர் என சொல்லப்பட்டவருமான ஜோஸ்மார்ர்ட்டி தனது உரையை தந்தார். Labour beatifies.. marx wakenned those were asleep அவர்களின் போராட்டகுணத்தை கண்டெடுத்தவர் அவர் என மார்ட்டி உரையாற்றினார்.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...